உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்களேன்?
யார் வாழ்த்துகிறார்களோ இல்லையோ ஆனால் உலகத்தில் உள்ள எல்லா மதத்தினரும் அவரவர்கள் அவர்கள் கிறிஸ்துவர்களாகளாக , முஸ்லீம்களாக ,சீக்கியர்களாக , ஜைனர்களாக ஏன் பெளதிஸ்டுகளாக கூடஇருக்கட்டும். அவர்கள் தங்களது மதப் பண்டிகைகளை தங்கள் குடும்பத்தினர் உறவினர் மற்றும் நண்பர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள்.. அவர்கள் யாரும் எங்கள் மதவிஷேசங்களுக்கு அவர் வாழ்த்து சொல்லவில்லை இவர் வாழ்த்துக் கூறவில்லை என்று குற்றமும் சொல்லுவதில்லை மேலும் அவர்கள் அப்படி சொல்லாதது எங்களது மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது என மல்லும் கட்டுவதில்லை. ஆனால் இந்து மதத்தில் உள்ள எல்லோரும் அல்ல அதில் உள்ள சங்கிகள் மட்டும் ஒப்பாரி வைக்கிறார்கள் அது ஏன் என எனக்கு புரியவில்லை. உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்கள்
பிள்ளையார் சதுர்த்தி அன்று டாஸ்மாக் கடையைத் திறந்து அதற்குக் குடிகாரர்களை சமூக இடைவெளியை மெயிண்டன் பண்ணி வர ஏற்பாடு செய்த மாதிரி தமிழகத்தில் உள்ள பிள்ளையார் கோவில்களைத் திறந்து பக்தர்கள் வழி பட எடப்பாடி அரசு வழி வகைகளைச் செய்து இருக்கவேண்டும். அப்படி அவர் செய்யாத போது பாஜக தலைவர்கள் அதற்கு வற்புறுத்தி இருக்க வேண்டும். அப்படி எல்லாம் செய்யாமல் இரண்டு கட்சிகளும் அக்கப்போர் செய்து கொண்டிருக்கிறார்கள் அதிலும் ஸ்டாலின் வாழ்த்து சொல்லவில்லை என்று குற்றச் சாட்டு வேற... அடேய் கடவுள் நம்மை வாழ்த்தி ஆசிர்வதித்தால் போதாதா ஸ்டாலின் வாழ்த்தினால்தான் வாழ்வு நல்லபடியாக இருக்குமா என்ன?
அன்புடன்
மதுரைத்தமிழன்
முதல் நோக்கம் கலவரம் செய்ய...
ReplyDeleteபண்டிகை கொண்டாட்டத்திற்கு இதற்கும் சம்பந்தமே இல்லை இது அரசியல் சீண்டல்.
ReplyDeleteபிள்ளையார் Birthdayக்கு நமக்கு ஏன் வாழ்த்தி சொல்லணும்??
ReplyDelete