அடப்பாவிங்களா?
இவ்வுலகில் இருந்தும் மறையவில்லை இணையத்தில் இருந்தும் மறைந்து கொள்ளவில்லை
வாழ்க்கை மிகவும் பிஸியாக போய் கொண்டிருப்பதால் இணைய தளங்களுக்கு வர நேரமில்லை அதனால்தான் இப்பொழுது பதிவுகள் ஏதும் வெளியிடுவதில்லை..
இன்று வேலையில் இருக்கும் போழுது லஞ்ச டயத்தில் பேஸ்புக் பக்கம் வந்த போது எனது பெரும் மதிப்பிற்குரிய நண்பர் ஆல்பிரட் செளக்கியமா என்று கேட்டார்... ஆமாம் நான் செளக்கியம் நீங்கள் செளக்கியமா என்று கேட்டேன்... அப்போது அவர் சொன்னார் உங்களை பற்றி இணையத்தில் வதந்திகள் வந்து இருக்கின்றன என்று சொல்லி சிறிது வெயிட் பண்ணுங்க என்றார் நானும் சிறிது நேரம் வெயிட் பண்ணி பார்த்துவிட்டு அவரிடம் இருந்து உடனே பதில் வராததால் வேலையை பார்க்க சென்றுவிட்டேன்...