உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, January 29, 2017

தமிழக எம்பிக்களை மோடி சந்திக்காதற்கு இதைவிட காரணம் எதுவும் வேண்டுமா?

தமிழக எம்பிக்களை மோடி சந்திக்காதற்கு இதைவிட காரணம் எதுவும் வேண்டுமா?

டொனல்ட் ட்ரம்பை பார்க்க அமெரிக்க செல்லும் போது அணிந்து செல்வதற்காக புதிய கோட்சூட்டை தைப்பதற்கு டெய்லருக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்த காரணத்தினால்தான் தமிழக எம்பிகளை சந்திக்க மோடியால் முடியவில்லை


குஜராத் கலவரத்தை மறந்து மோடியை பிரதமாராக்கிய மக்களா ஜல்லிக்கட்டு போராட்ட முடிவில் ஏற்பட்ட கலவரங்களையா நினைவில் வைத்திருக்கிற போகிறார்கள். # போங்கடே போய் நாலு காசு சம்பாதிக்க வழியை பாருங்க

Friday, January 27, 2017

பாவம் இவர்கள் என்ன செய்வார்கள்?

பாவம் இவர்கள் என்ன செய்வார்கள்?

பாவம் ஒரிடம் பழி ஒரிடம் என்று சொல்வது போல மோடியும் பன்னீரும் ஜல்லிகட்டு விவகாரத்தில் பலி ஆடாக ஆக்கப்பட்டு இருக்கிறார்கள் ஜல்லிகட்டு பிரச்சனைகளுக்கும் சரி அதன் பின் எழுந்த பிரச்சனைகளுக்கும் சரி இவர்கள் இருவரும் பொறுப்பல்ல

உண்மையிலே கண்ணியம் மிக்க விவேகனந்தரா தமிழக இளைஞர்களா ?

avargal unmaigal
உண்மையிலே கண்ணியம் மிக்க விவேகனந்தரா   தமிழக இளைஞர்களா ? 

மெரினா பீச்சில்  மாணவர்களும் இளைஞர்களும் ஜல்லிகட்டு விஷயமாக போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதோடு தமிழ் நாட்டிற்கு பெருமையும் சேர்த்தனர் இறுதியில் யார் கண்ணுபட்டதோ பெற்ற பெருமையை சிறிது இழக்க தொடங்கி கடைசியாக போராட்டம் முடிவிற்கு வந்தது இப்படி குழப்பமாக முடிந்தற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதை பற்றி இந்த பதிவில் நாம் பேசப் போவதில்லை. இங்கு பேசப் போவது மாணவர்கள் போராட்ட நேரத்தில் நடநு கொண்ட கண்ணியமான  நடத்தையை பற்றியே

Thursday, January 26, 2017

இந்திய குடும்பம் ஒரு இனிய பல்கலைகழகம்

avargal unmaigalஎப்படி அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி என்று தனித்தனியாக பல்வேறு மனக் கசப்புடன் வாழ்ந்து வந்தாலும்  வீட்டில் விஷேசம்  என்றவுடன் மனக் கசப்புகளை மறந்து எப்படி குழந்தை குட்டிகளுடன் வந்து பெற்றோர் தலைமையில் கூடி சந்தோஷமாக இருப்ப்போமோ அப்படிதான்  இந்தியாவில் மக்கள் பல மாநிலங்களாக பிரிந்து மனக் கசப்புடன் வாழ்ந்து வந்தாலும் சுதந்திர தினம் & குடியரசு தினம் என்று வந்துவிட்டால் பிரதமர் மற்றும் குடியரசு   தலைவர் தலைமையில் ஒன்று கூடி கொண்டாட வேண்டும் இந்த சமயத்தில் மனக் கசப்புகளை மறந்து கூடி கொண்டாடி நாம் இந்தியர்கள் என்று பெருமை கொள்ளவேண்டும்.

Sunday, January 22, 2017

பயந்தது மோடியா அல்லது ஹிப் ஹாப் ஆதியா?

avargal unmaigal
ஹிப் ஹாப் ஆதி மத்திய அரசின் அதிகாரத்தால் மிரட்டப்பட்டரா அல்லது விலைக்கு வாங்கப்பட்டாரா  ?


பயந்தது மோடியா அல்லது ஹிப் ஹாப் ஆதியா?


தமிழகத்தில் நடக்கும் போராட்டம் தமிழக அரசை நோக்கி அல்ல மத்திய அரசை நோக்கி நடக்கும் போராட்டம் .காரணம் தமிழக கலாச்சாரம் பண்பாட்டை அழிக்க மத்திய அரசு சட்டங்கள் உதவியுடன் அதிகார வெறியுடன் செயல்படுகின்றன அதை உடைத்துதெரிய வரலாற்றில் இல்லாத ஒரு போராட்டமாக இந்த போரட்டம்  நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தை மத்திய  அரசு  சற்றும் எதிர்பார்க்கவில்லை. மேலும் உளவுத்துறையில் இருந்து வரும் ரிப்போர்ட்களை பார்த்து அது சொல்லும் செய்திகளை அறிந்து வழக்கத்திற்கும்  அதிகமாகவே பயந்தும் போய் உள்ளது என்பது கண்கூடு  மேலும் மற்ற மாநில மீடியாத்துறையில் உள்ளவர்களோடு தொடர்பு கொண்டவ்ர்களுக்கு இது மிக நன்றாகவே தெரிந்து இருக்கிறது

தமிழர்களைப் பற்றி மோடி மனதில் தோன்றுவது என்ன?

ஜல்லிக்கட்டு, அரசானை,பன்னீர் செல்வம்,மோடி
தமிழர்களைப் பற்றி மோடி மனதில் தோன்றுவது என்ன?


தமிழகத்தை  இந்தியாவில் இருந்து பிரித்து கொடுத்திட வேண்டியதுதான் இல்லையென்றால் இந்த தமிழர்கள் ஒட்டு மொத்த இந்தியாவையும் மாற்றிடுவார்கள் இவ்வளவுநாள் தமிழக தலைவர்கள் மாதிரி தமிழக மக்களும் அடிமையாக இருப்பார்கள் என்று நினைத்தோம் ஆனால்  தமிழக தலைவர்கள் மாதிரி தாங்கள் கேவலமான பிறவி இல்லை என்று தமிழக மக்கள் நிருபித்துவிட்டார்கள்


ஸ்டாலின் தலைமையில் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சரித்திரம் உண்டு ஆனால் மக்களுக்காக ரயில் மறியல் போராட்டம் நடத்தி அதிலும் தோல்வி அடைந்து ஒரு கேலிக்குரிய தலைவாரக ஸ்டாலின் இருக்கிறார். பாவம் மனுஷனுக்கு நேரம் சரியில்லை,ஸ்டாலின் கலைஞரிடம் அரசியல் பாடம் கற்று இருக்கலாம் ஆனால் அந்த பாடங்கள் எல்லாம் அந்தகால பழைய பாடங்கள்  அது இந்த கால அரசியல் வாழ்க்கைக்கு உதவாது அதனால் ஜல்லிகட்டு பிரச்சனை முடியும் வரை புதுபுது பாடங்களை கற்று வர வேண்டும் இல்லையென்றால் வயதான உறுப்பினர்களை வைத்துமட்டும் காலம் கடத்த வேண்டும்

Saturday, January 21, 2017

விஜய் டிவியை நோக்கி இளைஞர்கள் போராட்டம் திரும்புமா?

#rjbalajiofficial
விஜய் டிவியை நோக்கி இளைஞர்கள் போராட்டம் திரும்புமா?


தமிழ் கலாச்சரத்தை காக்க ஜல்லிகட்டுக்காக போராடும் இளைஞர்களை மற்றும்  பொது மக்களை பார்க்கும் போது மிகப் பெருமிதமாக இருக்கிறது , இப்படி போராடும் இளைஞார்களுக்கும் பொது மக்களுக்கும் அரசியல்தலைவர்கள்  மீதும் நடிகர்கள் நடிகைகள் மீதும் கடும் கோபம் இருக்கிறது என்பது வெளிபடையாக தெருகிறது காரணம் தங்களின் அர்சியல் அல்லது பட வெற்றிகளுக்காககவே இவர்கள் மக்களை கறுவேப்பிலை மாதிரிதான் பயன்படுத்தி தூக்கி ஏறிகிறார்கள் என்பதால்தான்  அதன் காரணமாகவே இந்த போராட்டத்தில் எங்களோட  தேவை எதுவோ அதை நிறைவேற்ற தான் உங்களுக்கு  அதிகாரம் கொடுத்தோம் அதையே உங்களால் தர முடிவில்லையென்றால் பேசமா மூடிட்டு கிளம்பு என்று சொல்லி அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்களை விரட்டி அடித்துள்ளனர்

Friday, January 20, 2017

பன்னீர் செல்வமும் மோடியும் சந்தித்த போது

avargal unmaigal
பன்னீர் செல்வமும்  மோடியும் சந்தித்த போது


மோடி : வாய்யா பன்னீர் எப்படி இருக்கிறே?


பன்னீர் : உங்க தயவில் நல்லா நடிச்சுக்கிட்டு இருக்கிறேன் அடுத்த வருஷம் விஜய்டிவி அவார்ட் நிகழ்ச்சியில் எங்க்கு சிறந்த சோக நடிகருன்னு  விருது தருப் போவதாக எனக்கு சொல்லி இருக்காங்க


மோடி :  சிரித்து கொண்டே சரி சரி இப்படி பக்கத்தில் வந்து இந்த சேரில் உட்காரு


பன்னீர் : எஜமான் எனக்கு நிற்க அல்லது யாரவது காலடியில் விழுந்து கிடக்கமட்டும் தெரியும்  பெரியவங்க முன்னாள் சேரில் உட்காரக் கூடாதுன்னு எங்க அம்மா சொல்லி என்னை வளர்த்து இருக்கிறாங்க

Thursday, January 19, 2017

ஜல்லிகட்டு விஷயத்தில் அமெரிக்க தமிழ்சங்கங்கள் மெளனம் காப்பது ஏன்?

support-jallikattu avargal unmaigal
ஜல்லிகட்டு விஷயத்தில் அமெரிக்க தமிழ்சங்கங்கள் மெளனம் காப்பது ஏன்?

தமிழகத்தில் ஜல்லிகட்டு விவகாரம் காட்டுத்தீயாக பரவி தமிழகமே ஒரு உணர்ச்சி மயமான ஒரு விதமான உணர்வோட  சிறுகுழந்தைகள் முதல் கல்லூரி மாணவ மாணவிகள் இளைஞர்கள் மற்றும் மக்கள்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வருகிறார்கள் .அதுமட்டுமல்லாமல் உலக நாடுகளில் வசிக்கும் அனைத்து தமிழ் மக்களும் அவர்கள் வசிக்கும் ஊர்களில் ஒன்று கூடி  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து  போராட்டம் நடத்தினர்கள் சில இடங்களில் ஈனும் நடத்தி வருகிறார்கள் அது போல அமெரிக்காவில் உள்ள் பல மாநிலங்களிலும் வசிக்கும் மக்களும் ஜல்லிகட்டிற்கு ஆதரவு தெரிவித்து கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் போராட்டம் நடத்தினார்கள்.

Tuesday, January 17, 2017

அலங்காநல்லூர் போராட்டகாரர்களுக்கு ஆதரவாக வர அரசியல் தலைவர்களுக்கு மனம் இல்லையா?


avargal unmaigal
அலங்காநல்லூர் போராட்டகாரர்களுக்கு ஆதரவாக  வர அரசியல் தலைவர்களுக்கு மனம் இல்லையா?


அலங்காநல்லூரில்  நடை பெறும் ஜல்லிகட்டு போராட்டாத்திற்கு தலைவர்கள் ஆதரவு இல்லை போலிருக்கிறதே முக்கியமாக ஸ்டாலின் திருநாவுகரசு தமிழிசை?
மதுரைத்தமிழன் பதில்: அலங்காநல்லூருக்கு சென்று போராட்டகாரர்களுக்கு ஆதரவு தராமல சென்னையில் இருந்து கொண்டே பேட்டி தரும் தமிழக அரசியல் தலைவர்களை இனம் கண்டு கொண்டு அவர்களை புறக்கணிக்க கற்றுக் கொள்ளுங்கள். போராடும் உங்களுக்கு துணை நிற்காதவர்கள் உங்களுக்கு எந்தவிதத்திலும் உதவ முன் வரமாட்டார்கள்
#AmWithAlanganallur #supportjallikattu

Monday, January 16, 2017

ஜல்லிகட்டு மட்டும்தான் வதையா அப்படியென்றால் இதையெல்லாம் என்னவென்று சொல்லுவது?

#jallikattu PETA Tamilnadu Political
ஜல்லிகட்டு மட்டும்தான் வதையா அப்படியென்றால் இதையெல்லாம் என்னவென்று சொல்லுவது?


மிருகவதையை தடை செய்ய போராட பீட்டா என்ற அமைப்பு செயல்படுகிறது அதில் மிக பெரிய பிரபங்களும் உறுப்பினர்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சமுக தளங்களிலும் மீடியாக்களிலும் தங்களுது கருத்தை சொல்லி மிருகவதைக்கு எதிராக தாங்கள் செயல்படுவதாக   காட்டிக் கொள்கிறார்கள். அப்படி போன்று மிருகவதைகளுக்காக போரார்டுப்பவர்கலே மிருகவதை மட்டும்தான் உங்கள் கண்ணில் தென்படுகிறதா வே வதைகள் உங்கள் கண்ணில் தென்படுவதில்லையா என்ன?மும்மையில் சிவப்புவிளக்கு என்ற ஒரு பகுதி அரசாங்கத்தால் அங்ககரிக்கப்பட்டு அங்கு பெண்கள் விபச்சாரம் என்ற பெயரில் வதை செய்யப்படுகிறார்களே அங்கு மட்டும்தான் இப்படி பெண்கள் விபசாரத்தில் ஈர்டுபத்தப்பட்டுவதைக்கப்படுவதில்லையே  நாடு முழுவதும்தான் வதைக்கப்படுகிறார்கள் அதெல்லாம் உங்கள் கண்களில் தென்படுவதில்லையா அல்லது அதெல்லாம் வதைகள் இல்லையா அது வதைகள் இல்லை என்றால் உங்கள் வீட்டு பெண்களை நீங்கள் பணத்திற்க்காக அல்ல ஒரு சமுக சேவையாக அதில் ஈடுபடுதலாமே?

Sunday, January 15, 2017

பீட்டாவின் நோக்கம் மிருகவதையை தடை செய்வதா அல்லது கலாச்சாரத்தை அழிப்பதா?

jallikattu vs peta
பீட்டாவின் நோக்கம் மிருகவதையை தடை செய்வதா அல்லது கலாச்சாரத்தை அழிப்பதா?


பீட்டா(இந்திய) என்ற அமைப்பு மிருகவதையை  தடை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில்  ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆனால் அது இந்தியாவில் செயல்படும் விதத்தை பார்க்கும் போது அது கலாச்சாரத்தை அழிக்கும் ஒரு அமைப்பாகவே செயல்படுகிறது இதற்கு காரணம் அந்த அமைப்பில் இருப்பவர்களின் தனிப்பட்ட எண்ணங்களே அன்றி பீட்டாவின் நோக்கம் அல்லஅதனால்தான்  அது இப்போது தமிழனின் கலாச்சாரத்தில் கைவைத்து தமிழகத்தில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது .மிருகவதைக்கு எதிராக  இந்திய பீட்டா அமைப்பு உண்மையாக போராடுகிறது என்றால் அது எல்லா மிருகவதைகளுக்கு எதிராக போராட வேண்டும் ஆனால் இந்த பீட்டா அமைப்பை பொருத்தவரை தமிழக கலாச்சரத்தை அழிக்கமட்டுமே ஜல்லிகட்டுக்கு எதிராக இயங்கி அதற்கு தடை பெற்றி மிக ஆவேஷமாக செயல்படுகிறது

Saturday, January 14, 2017

ஆஸ்கர் அவார்ட் அல்ல விகடன் அவார்டாவது இவருக்கு கொடுக்காதது ஏன்

ஆஸ்கர் அவார்ட் அல்ல விகடன் அவார்டாவது இவருக்கு கொடுக்காதது ஏன்


Thursday, January 12, 2017

இன்று நம்மில் பலரது நிலைமை இப்படிதான் இருக்கிறதுஇன்று நம்மில் பலரது நிலைமை இப்படிதான் இருக்கிறது

ஒரு சிறு குருவிக்கு  ஒரு அழகிய கனவு வந்தது.  கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.

இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.  , அழகான நதிகள், மரங்கள்,   செடி கொடிகள் எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது.எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும்.  அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.

அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது..காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன.  அவரிடம் குருவி வழி கேட்டது.எனக்கு முழு விபரம் தெரியாது.  தெரிந்த வரை சொல்கிறேன்.அதற்கு விலையாக நீ உன் றகுகளில் ஒன்றைத் தர வேண்டும் என்றார் ஜோதிடர்.

Wednesday, January 11, 2017

கபோதிகளா மாட்டை விட மனுஷிகள் முக்கியம்டாகபோதிகளா மாட்டை விட மனுஷிகள் முக்கியம்டா


ஜல்லிக்கட்டுக்கு மோடி அரசு கோர்ட் மூலம் தடைவித்தித்தால் தமிழ்நாட்டில் மனித உருவில் இருக்கும் எருமை மாடுகளான தமிழிசை ஹெச். ராஜா பொன்.இராதா அவர்களை தெருத்தெருவாக விரட்டி அடியுங்கள்

தமிழ்நாட்டில் ஜல்லிகட்டுக்கு தடை செய்வதைவிட மும்பையில்  நடக்கும் ரெட்லைட் பகுதிக்கு தடை கொண்டுவாருங்கள் கபோதிகளா மாட்டை விட மனுஷிகள் முக்க்கியம்டா

Sunday, January 8, 2017

கலைஞர் பாணியில் கேள்வி பதில்கள்கலைஞர் பாணியில் கேள்வி பதில்கள்

கலைஞருக்கு உடல் நிலை சரியில்லாததால் அவரின் கேள்வி பதில்கள் இப்போது வெளிவருவதில்லை அதனால் அவரது பாணியை பின்பற்றி இங்கே கேள்விக்கு பதில்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

கேள்வி : ஜல்லிகட்டு தடைக்கு எதிர்ப்பு இல்லாமல் மக்களை இருக்க என்ன மோடி செய்ய வேண்டும்?

மதுரைத்தமிழன் பதில் : மனைவியை அடக்குகிறவன் மட்டும்தான் ஜல்லிகட்டுவில் கலந்து கொள்ளனும் என்று சட்டம் கொண்டு வந்துவிட்டால் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள ஆளே இருக்கமாட்டார்கள்

Wednesday, January 4, 2017

ஆள்காட்டி விரலின் அரசியல்
பல்கலைகழக பேராசிரியரான .ராமசாமி  அவர்கள் எழுதி வெளியிட்ட ஆள்காட்டி விரலின் அரசியல் என்ற பதிவு தமிழகத்தின் இன்றைய இரு பெரிய அரசியல் கட்சியின் செயல்பாட்டை தோல் உரித்து சொல்லி இருக்கிறார். மிகவும் மாறுப்பட்ட கோணத்தில் சிந்தித்து வெளியிட்ட பதிவு என்னை கவர்ந்தது அதனால் அவரின் அனுமதியுடன் இங்கே வெளியிட்டு இருக்கிறேன்...ராமசாமி அவர்களுக்கு எனது நன்றிகள்ஆள்காட்டி விரலின் அரசியல்


தமிழ்நாட்டின் அரசியல் சமூகப் பொருளியல் பண்பாட்டுத்தளங்களின் இருப்புபற்றி இவ்விரு கட்சிகளுக்கும் வேறுபாடுகள் இல்லை.

இப்படி இருக்கும் தமிழகத்தை எப்படி மாற்றவேண்டும் என்பதைப் பற்றிய பார்வையிலும் வேறுபாடுகள் இல்லை.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog