Sunday, January 15, 2017

jallikattu vs peta
பீட்டாவின் நோக்கம் மிருகவதையை தடை செய்வதா அல்லது கலாச்சாரத்தை அழிப்பதா?


பீட்டா(இந்திய) என்ற அமைப்பு மிருகவதையை  தடை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில்  ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆனால் அது இந்தியாவில் செயல்படும் விதத்தை பார்க்கும் போது அது கலாச்சாரத்தை அழிக்கும் ஒரு அமைப்பாகவே செயல்படுகிறது இதற்கு காரணம் அந்த அமைப்பில் இருப்பவர்களின் தனிப்பட்ட எண்ணங்களே அன்றி பீட்டாவின் நோக்கம் அல்ல



அதனால்தான்  அது இப்போது தமிழனின் கலாச்சாரத்தில் கைவைத்து தமிழகத்தில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது .மிருகவதைக்கு எதிராக  இந்திய பீட்டா அமைப்பு உண்மையாக போராடுகிறது என்றால் அது எல்லா மிருகவதைகளுக்கு எதிராக போராட வேண்டும் ஆனால் இந்த பீட்டா அமைப்பை பொருத்தவரை தமிழக கலாச்சரத்தை அழிக்கமட்டுமே ஜல்லிகட்டுக்கு எதிராக இயங்கி அதற்கு தடை பெற்றி மிக ஆவேஷமாக செயல்படுகிறது



உண்மையாகவே அது மிருகவதைக்கு எதிராக செயல்படுகிறது என்றால் இந்தியாவின் பல  மாநிலங்களில் பல வித மிருகங்கள் பலவிதங்களில் வதைக்கப்படுகின்றன. அதற்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடுத்து அதற்கும் தடை வாங்காலாமே அப்படி செய்யாமல் இப்படி ஜல்லிகட்டுக்கு மட்டும் எதிராக இருப்பதால்தான் அந்த அமைப்பின் செயல்பாடு மீது சந்தேகம் எழுகிறது (ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறுபதம் என்பது போல என் பதிவுலக நண்பர் திரு.வெங்கட நாகராஜ் என்பவர் டில்லியில் இருந்து ஜல்லிகட்டு மிருகவதையா?  வேறு மாநிலத்தில் ஏற்படும் மிருகவதையை படங்களுடன் தன் பதிவில் பகிரிந்து இருக்கிறார் அதையும் பாருங்கள் அதன் பின் பதில் சொல்லுங்கள் )


பீட்டாவின் உண்மையான நோக்கம் மிருகவதையை தடை செய்வது என்று இருந்தால் அது எப்படி செயல்பட்டு இருக்கவேண்டும் என்பதை அறியாத அறிவிலிகளாக கூமுட்டைகளாகத்தான் அந்த அமைப்பின் தலைவர்கள் இருக்கிறார்கள். இப்படி கோர்ட் மூலம் தடை செய்தால் மட்டும் இந்த மிருகவதையை தடை செய்து விட முடியுமா என்ன? எப்போது நாம் தனிநபர் மீதோ அல்லது ஒரு சமுகத்தின் மீதோ தடையைவித்திக்கும் போது அது அதை தாண்டி குதிக்கதான் முயற்சி செய்யும் அது மனித இனத்தின் இயல்பே.


அதனால் பீட்டா அமைப்பு எப்படி செயல்பட்டு இருக்க வேண்டும் என்பதை பார்த்தால் மிருகவதைக்கு தடை செய்வதற்கு பதிலாக மிருகவதை செய்வது தவறு விலங்கையோ அல்லது எந்தஒருவித ஜீவராசியையும் வதை செய்வது தவறு என்பதை மக்கள் மனதில் புரிய வைக்கும் முயற்சியில்தான் அவர்கள் இறங்கி இருக்கவேண்டும் அப்படி செய்வதால்மட்டுமே மிருகவதையை தடை செய்யமுடியுமேயன்றி தடை மூலம் கொண்டு வர முடியாது இதை அறியாத மூட்டாள்  பயல்கள்தான் பீட்டாவின் தலைவர்களாக செயல்படுகிறார்கள்


இதை எப்படி மக்கள் மனதில் புரிய வைக்கவேண்டுமென்றால் பள்ளிகளில் மாணவர்கள் மனதில் இப்படி மிருகவதை செய்வது தவறு என்று புரியவைத்து முடிந்தால் அந்த சிறுமாணவர்களை சிறு விலங்களான நாய் பூனை ஆடு இப்படி பல விலங்குகளை பெட் அனிமல்களாக வளர்க்க தூண்டும் போது அந்த சிறுவர்களுக்கு இயல்பகாவே விலங்குகள் மீதான அன்பு மிகவும் பொங்கும் அதனால் அவர்கள் இந்த மாதிரி விலங்களை துன்புறுத்தி வதை செய்வது என்பதை செய்யமாட்டார்கள் சிறுவர்களின் வீடுகளில் அப்படி பெட் அனிமல்களை வளர்க்க வசதி இல்லையென்றால் பள்ளிகளில் ஒவ்வொருவகுப்பிலும் இப்படி ஒரு பெட் அனிமல்களை வளர்த்து அதற்கு மாணவர்களை பொறுப்பாக்க வேண்டும் அதன் மூலம் விலங்குகளின் மீதான பரிவை அவர்களுக்குள் ஏற்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் நாம் அணியும் கோட்,  ஹேண்ட்பேக் மற்றும் பெல்ட் போன்றவைகள் தயாரிக்க பலவிலங்குகள் வதைக்கப்பட்டு கொல்லப்படுகின்றன. அதனால் இப்படிபட்ட பொருட்களை பயன்படுத்துவத்ற்கு எதிராக மக்களிடம் விழிப்புண்ர்வு ஏற்படுத்தி மிருகவதைகள் நடப்பதை தடுத்து நிறுத்த பெரும் முயற்சிகளில்  இட்டுபடவேண்டும்


இப்படி செய்வதைவிட்டு  ஜல்லிகட்டுக்கு மட்டும் தடை உடை என்றால் மக்கள் அதை  கலாச்சார அழிப்பாக எண்ணி மீறத்தான் முயற்சிப்பார்களே அன்றி அமைதியாக செல்லமாட்டர்கள்


டிஸ்கி:ஆந்திராவில் சந்திராபாபு நாயுடுவின் சொந்த ஊரான ரங்கம்பேட்டையில் ஜல்லிக்கட்டு மக்கள் ஆதரவுடன் நடத்தப்பட்டது. ஆனால் அங்கு ஒரு போலீஸாரும் அதை தடைசெய்யவில்லை. ஆந்திர அரசுக்கு இந்த இந்திய சட்டம் பொருந்தாதா என்ன? அங்கு ஆட்சியை கலைக்க வேண்டியதுதானே?

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் சகோ. வெங்கட்ஜி யின் பதிவிலும் ஒட்டகத்தைப் படுத்துவதைச் சொல்லியிருந்தார் அதனை ஏன் யாரும் தட்டிக் கேட்பதில்லை. நிறைய இருக்கிறது பதிவாக வர இருப்பதால் இங்கு இத்தோடு முடிக்கின்றேன்..நல்ல பதிவு...

    நாங்கள் எங்கள் வீட்டில் தோல் பொருட்கள் விலங்குகளைக் கொன்று செய்யப்படும் ஏன் யானைத் தந்தத்தில் செய்யபடும் பொருட்கள் எதையும் வாங்குவதில்லை...

    கீதா

    ReplyDelete
  2. நல்லதொரு பகிர்வு.

    எனது பதிவு பற்றியும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.