Monday, January 16, 2017

#jallikattu PETA Tamilnadu Political
ஜல்லிகட்டு மட்டும்தான் வதையா அப்படியென்றால் இதையெல்லாம் என்னவென்று சொல்லுவது?


மிருகவதையை தடை செய்ய போராட பீட்டா என்ற அமைப்பு செயல்படுகிறது அதில் மிக பெரிய பிரபங்களும் உறுப்பினர்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சமுக தளங்களிலும் மீடியாக்களிலும் தங்களுது கருத்தை சொல்லி மிருகவதைக்கு எதிராக தாங்கள் செயல்படுவதாக   காட்டிக் கொள்கிறார்கள். அப்படி போன்று மிருகவதைகளுக்காக போரார்டுப்பவர்கலே மிருகவதை மட்டும்தான் உங்கள் கண்ணில் தென்படுகிறதா வே வதைகள் உங்கள் கண்ணில் தென்படுவதில்லையா என்ன?



மும்மையில் சிவப்புவிளக்கு என்ற ஒரு பகுதி அரசாங்கத்தால் அங்ககரிக்கப்பட்டு அங்கு பெண்கள் விபச்சாரம் என்ற பெயரில் வதை செய்யப்படுகிறார்களே அங்கு மட்டும்தான் இப்படி பெண்கள் விபசாரத்தில் ஈர்டுபத்தப்பட்டுவதைக்கப்படுவதில்லையே  நாடு முழுவதும்தான் வதைக்கப்படுகிறார்கள் அதெல்லாம் உங்கள் கண்களில் தென்படுவதில்லையா அல்லது அதெல்லாம் வதைகள் இல்லையா அது வதைகள் இல்லை என்றால் உங்கள் வீட்டு பெண்களை நீங்கள் பணத்திற்க்காக அல்ல ஒரு சமுக சேவையாக அதில் ஈடுபடுதலாமே?



அதுமட்டுமல்ல கல்லூரிகளிலும் பொது இடங்களிலும் பெண்கள் சிறு நீர் கழிக்க அல்லது தாங்கள் மாதவிலக்கு நாட்களில் padகளை மாற்ற முடியாமல் நாள் முழுவதும் அவதிப்படுகிறார்களே அதெல்லாம் வதைகளாக இல்லையா என்ன?


சாலையோர பணியாளர்கள் வெயில் நேரங்களில் வதைபடுகிறார்ளே அவர்களுக்கு அவ்வப்போது சிறிது ஒய்வு எடுக்க எங்காவது டெம்பரவரி ஷெல்டர்கள் அமைக்கபபட்டு இருக்கிறதா அவர்களுக்கு தரமான காலணிகள் கொடுக்கப்படுகின்றனவா வெயில் காலங்களில் அவர்கள் படும் வதை பார்க்கும் நம் கண்களில் இருந்து ரத்தம் வருகிறதுதானே இவையெல்லாம் வதைகள்தானே இப்படி நாம் பலவதைகளை நாம் அடிக்கி கொண்டு செல்லமாம்.


இந்த மாதிரி மனித வதைகளுக்கு போராட ஒரு அமைப்புகளும் இல்லையேமிருங்களைவிட மனிதர்கள் அவ்வளவு கேவலமானவர்களா என்ன?

பீட்டாவின் நோக்கம் மிருகவதையை தடை செய்வதா அல்லது கலாச்சாரத்தை அழிப்பதா?

அன்புடன்
மதுரைத்தமிழன்

16 Jan 2017

2 comments:

  1. நாங்களும் அடிக்கடி இப்படிக் கேட்டு மனதில் ஓடும் கேள்விகளை இங்குத் தொகுத்து சொல்லிவிட்டீர்கள்! நல்ல கேள்விகள். அப்படியெல்லாம் நம்மூரில் எழுச்சி வந்திருந்தால் நம்மூரில் எவ்வளவோ நலல்து நடந்திருக்குமே தமிழா.

    ReplyDelete
  2. கேள்விகள்.... நிறையவே இருக்கிறது நண்பரே... பதில் சொல்லத்தான் எவருமில்லை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.