Sunday, January 22, 2017

avargal unmaigal
ஹிப் ஹாப் ஆதி மத்திய அரசின் அதிகாரத்தால் மிரட்டப்பட்டரா அல்லது விலைக்கு வாங்கப்பட்டாரா  ?


பயந்தது மோடியா அல்லது ஹிப் ஹாப் ஆதியா?


தமிழகத்தில் நடக்கும் போராட்டம் தமிழக அரசை நோக்கி அல்ல மத்திய அரசை நோக்கி நடக்கும் போராட்டம் .காரணம் தமிழக கலாச்சாரம் பண்பாட்டை அழிக்க மத்திய அரசு சட்டங்கள் உதவியுடன் அதிகார வெறியுடன் செயல்படுகின்றன அதை உடைத்துதெரிய வரலாற்றில் இல்லாத ஒரு போராட்டமாக இந்த போரட்டம்  நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தை மத்திய  அரசு  சற்றும் எதிர்பார்க்கவில்லை. மேலும் உளவுத்துறையில் இருந்து வரும் ரிப்போர்ட்களை பார்த்து அது சொல்லும் செய்திகளை அறிந்து வழக்கத்திற்கும்  அதிகமாகவே பயந்தும் போய் உள்ளது என்பது கண்கூடு  மேலும் மற்ற மாநில மீடியாத்துறையில் உள்ளவர்களோடு தொடர்பு கொண்டவ்ர்களுக்கு இது மிக நன்றாகவே தெரிந்து இருக்கிறது



உளவுத்துறை ரிப்போர்ட் வந்த பின் மோடி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி தமிழக மக்களுக்கு சாதகமாக தமிழக அரசு வேண்டுமென்றால் அவசரசட்டம் இயற்றலாம் அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது என்று பெருந்தன்மையோடு சொல்வது போல நாடகம் ஆடி அதை தமிழக முதல்வரிடம் அந்த பிரச்சனை தள்ளி பிரச்சனையை சுமுகமாக முடிப்பதாக  நாடகம் ஆடி பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்கலாம் என நினைத்து இருக்கிறார்.


ஆனால் தமிழக மக்களுக்கு மோடியின் எண்ணம் புரியாத என்ன? அதனால் அவர்கள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும் மற்றும் நிரந்தரசட்டம் கொண்டு வரப்பட வேண்டும் அது வரை யார் தடுத்தாலும் எங்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்து அதை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள், இந்த செய்தியை அறிந்து மத்திய அரசு மிக அதிர்ந்துதான் போய் இருக்கிறது.காரனம் போராட்டம் தொடர்ந்தால் இறுதியில் போராட்டம் செய்பவர்களின் கோரிக்கையை கண்டிப்பாக நிறைவேற்றுவதை தவிர வேறு வழியில்லை மேலும் பணப்பிரச்சனைக்கு அப்புறம் இது அவருக்கு கிடைத்த மிகப் பெரிய தோல்வியாகிவிடும் அப்படி நடந்தால் அடுத்து வரும் ஐந்து மாநில தேர்தல்கள் பாதிப்பதோடு தமது செல்வாக்கு மேலும் சரியும் அதுமட்டுமல்லாமல் தமிழர்களின் இந்த கோரிக்கைக்கு செவி சாய்த்துவிட்டால் இனிமேல் எல்லா மாநிலங்களிலும் இப்படி பல போராட்டங்கள் புற்று ஈசல் போல ஆரம்பித்துவிடும் என்ற பயம்.


இதனை தடுக்க என்ன செய்யலாம் என்று ம்த்திய அரசு நினைத்து போது அவர்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்தான் ஹிப் ஹாப் ஆதி அவரை வைத்து  அரசியல் சதுரங்க விளையாட்டை ஆரம்பித்துவிட்டார். யார் மாணவர்களோடு இணைந்து போராடி வந்தாரோ அவரை மத்திய அரசின் உளவுத்துறை அணுகி மிரட்டி நாங்கள் சொல்வதுபடி செயல்படாவிட்டால் அவருக்கு மட்டுமல்ல அவரது குடுமப்த்திற்கும் மிக பெரிய ஆபத்து உண்டு என்று எச்சரித்து இருக்கிறது.


மத்திய அரசின்  அதிகாரத்திற்கு தமிழக ஆளும் கட்சி தலைவர்கள் மட்டுமல்ல பெரிய எதிர்கட்சிகளின் தலைவர்களும் பயப்படும் போது இந்த சின்னஞ் சிறுவன் பயந்து சொன்னபடி செயல்பட்டு இருக்கமாட்டான் என்பது பொய்யாகிவிடுமா என்ன?


போராட்டத்தில் தினமும் பல்வேரு இடங்களில் கலந்து கொண்ட ஆதி சில நாட்கள் கலந்து கொள்ளாமல் திடிரென்று வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் தான் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த போது அருகில் போராட்டம் செய்த குழுக்கள் பிரிவினை வாதம் பேசி தேசத்திற்கு எதிராக நடந்தும் தலைவர்களை இழிவாக பேசியும் தலைவர் பிரதமர் மோடியிம் படத்தை அவமதித்தும் வந்ததை கண்டு போராட்டம் வேறு திசை நோக்கி செல்வதால் அந்த போராட்டத்தில் இருந்து விலகி வந்துவிட்டதாக சொல்லி இருக்கிறார்,


இந்த பேச்சை நன்றாக கவனித்தவர்களுக்கு ஒன்று நிச்சயம் புரியும் அதில் அவர் பேசிய  பிரிவினை வாதம் தேசத்திற்கு எதிராக  என்ற சொற்கள் இந்த சொற்க்கள் எல்லாம் பிரச்சனை எங்கே அதிகமாகிறதோ அங்கு எல்லாம் இந்த சொற்க்கள் பாஜக கட்சியினரால் உபயோகப்படுத்தப்பட்டு அது மீடியாக்கள் மூலம் பரப்பபட்டு பிரச்சனையை நீர்த்து போக செய்யும் அந்த வார்த்தைகள் தான் கொண்டையை மறைக்க முடியாமல் வெளியே தெரிகின்றன.


ஆதியின் வாதத்தின் படி அருகில் உள்ள குழுக்கள் தேசவிரோத பிரிவினை வாததங்களை பேசிக் கொண்டிருந்தால் அவரும் சரி அவரது நண்பர்களும் சரி செல்போன் மூலம் ஒரு வீடியோகாட்சிகளை கூட எடுத்து  போலீஸாரிடம் புகார் கொடுத்து இருக்க முடியாதா என்ன அல்லது அப்படி பேசபவர்களை அப்படி செய்யாதீர்கள் என்று தடை செய்து செய்ய ஏன் முயற்சிக்கவில்லை.


அதுமட்டுமில்லாமல் தலைவர்களை அசிங்கமாக பேசுகிறார்கள் மோடி படத்தை அசிங்கப்படுத்துகிறார்கள் என்று கூறுகிறார்கள். போராட்டம் என்று வரும் போது அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை தலைவர்களின் கொடும்பாவிகளை ஏறிப்பது படங்களை அசிங்கப்படுத்துவது என்பது உலகம் முழுவதும்  நடந்து கொண்டு இருக்கும் செயல்கள்தானே மேலும் தலைவர்களை அசிங்கமாக பேசுகிறார்கள் என்று இன்னொரு குற்றம் வாசிக்கிறார் ஏம்மா தமிழர்களை பொறுக்கிகள் என்று தொடர்ந்து எழுதி வருகிறார் சுப்ரமணிய சுவாமி. தமிழ் இளைஞர்களின் அறப்போரை இழிவுபடுத்தினார் ராதாராஜன். மதம் கடந்த மக்கள் எழுச்சியில் மதவெறியை விதைக்கத் துணிந்தார் எச்.ராஜா.இவர்கள் மூவருமே ஆர்.எஸ்.எஸ் காரர்கள். இப்படி அநாகரிகமாக பேசுபவர்களை அந்த கட்சியின் தலைமை கூட கண்டிப்பது இல்லை அதை பார்த்து ரசிக்கிறார்கள்அதனால் தான் மக்கள்  கோபத்தினால் ஆர்.எஸ்.எஸ்ஸையும் அதன் அரசியல் வடிவமான பாஜகவையும் அதன் தலைவரான மோடியையும்  அதுவும் தங்கள் கலாச்சாரத்தை அழிப்பவர்களை கோபத்துடன் பேசுவதுமட்டும் தவறா?


சு.சுவாமியும் ராதா ராஜனும் எச்.ராஜாவும் இந்த போராட்டத்தை இழிவு செய்த போது கொதிக்காத ஹிப் ஹாப் ஆதி, இப்போது ஏன் கொதிக்கிறார்? யாருக்காக கொதிக்கிறார்? எதனால் கொதிக்கிறார் என்று யோசித்து பாருங்கள் அதன் பின் இதன் பின் உள்ள அரசியல் சூழ்ச்சிகள் புரியும்


ஹிப் ஹாப் ஆதி இப்படி பேசினார் என்று அவரை குறை சொல்லவீல்லை அவர் என்ன செய்வார் அதிகார வர்க்கம் மிரட்டும் போது அரசியல்தலைவர்களே பயந்து நடுங்கும் போது இந்த ஹிப் ஹாப் ஆதி மட்டும் விதிவிலக்கா என்ன?


இந்த ஹிப் ஹாப் ஆதி அதிகார வர்க்கத்தினால் மிரட்டப்பட்டதினால் இப்படி  பேசி இருக்கிறார் அதனால் அவரை மன்னித்துவிடலாம் ஆனல் இந்த செய்தியை அறிந்த விவேக் ஹிப் ஹாப் ஆதி பேச்சை ஆதரிக்கிரேன் என்று அவரின் பேச்சு நிறைய யோசிக்க வைக்கிறது என்று சொல்லி இருக்கிறார் என்று செய்திகள் வந்து இருக்கிறது இவரை தொடர்ந்து ஒய்ஜி மகேந்திரன் என்வி சேகர் கிரேஸி மோகன் போன்றவர்கள் கருத்தை சொல்லுகிறேன் என்ற போர்வையில் விஷத்தை கலக்க வருவார்கள் பொறுத்து இருந்து பாருங்கள்


இன்னொரு விஷயம் போராட்டத்தில் மக்கள் மத வேறுபாடுகள் இன்றி போராடி வருவது பாஜக தலைமைக்கு பொறுக்கவில்லை அதனால் மாற்று மத்தத்தினர் ஆதிலும் இஸ்லாமியர்கள் தவறாக செய்திகளை வருகிறார்கள் என்று வாட்சப்பில் வந்த செய்தி என்று பல செய்திகளை போட்டோஷாப் மூலம் தயாரித்து அதனை சமுக வலைதளங்கள் மூலம் வெளியிட்டு மதஒற்றுமையை கலைத்து பிரச்சனைகளை உண்டு பண்ணி அதில் குளிர் காய நினைக்கிறார்கள் . இவர்கள் இப்படி செய்திகள் பரப்புவதெற்கென்றே டில்லியில் ஒரு ஐடி கம்பெனியை வைத்து நடத்துகிறார்கள் என்று பல செய்திகள் வந்து இருக்கின்றது இந்த ஐடி குழுக்கள் லோக்கல் கட்சிகள் இப்படி போராட்டங்களில் கலந்து மக்களை திசை திருப்பு கின்றன என்று பழியை லோக்கல் கட்சிகள் மேல் சுமத்தி அதன் மீது  மக்களுக்கு வெருப்பு ஏற்படுமபடியும் மிக திறமையாக செய்கிறது இப்படி செய்ய காரணம் போராட்டம் வலி விலக்கும் நிலையில் லோக்கல் கட்சிகள் இந்த பிரச்சனையை எடுத்து போராடினால் பிரச்சனை தான் என்று மிக திறமையாக செய்திகளை பரப்புகிறார்கள் பாவம் இந்த லோக்கல் கட்சிகளில் திமுகவின் பெயரைத்தான் அவர்கள் டேமேஜ் பண்ணுகிறார்கள் காரணம் அவர்களை தவிர மற்ற கட்சிகள் எடுத்து போராட வாராது என்ற காரணத்தினால்  இப்படி செய்கிறார்கள்


இதையெல்லாம் யோசிக்காத நமது சமுக வலைதள நண்பர்கள் உடனே ஹிப் ஹாப் ஆதி சொன்னததும் அதன் பின பாஜக ஐடி ஆட்கள் கிரியேட் பண்ணி சமுக தளங்களில் பரப்பும் செய்திகளை பார்த்து போராட்டகுழுவில் தேச விரோத சக்திகள் புகுந்து விட்டார்கள் இனிமே மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் அல்லது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று பேசியும் எழுதியும் வருகிறார்கள் இந்த செய்திகள் போராட்டக்காரர்களை வலுவிலக்க செய்யும். அதைத்தான் இந்த அதிகார வர்க்கம் எதிர்பார்த்தது அதைத்தான் நம் சமுக வலைதள மக்களும் எதையும் ஆராயமல் செய்து கொண்டிருக்கிறார்கள்


இந்த பதிவை எழுதி முடிக்கும் தருவாயில் தமிழகத்தில் இருந்து  வரும் செய்திகள் கவலைக் கொள்ளவே செய்கின்றன. போலீஸ்சாரின் கெடு பிடிகள் அதிகரித்துவிட்டன என்றும் மெரினா பீச்சில் இருந்து போராட்டக்காரர்களை அப்புற படித்துகிறார்கள் என்று புதிதாக வரும் யாரையும் தடை செய்கிறார்கள் என்று அறிந்தேன்


ஒரு தலைவன் இல்லாத இந்த போராட்டம் இறுதியில் அதிகார வர்க்கத்தின் கையில் சிக்கி சின்னப்பின்னாமாகி போகிறது


இனிமேல் மக்கள் அவரவர்கள் வீட்டு வாசலில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தை தொடர வேண்டியதுதான் அதுவும் பலன் அளிக்காவிட்டால் அற்வழியை விட்டுவிட்டு வேறு வழியை கையாண்டு நமது கலாச்சாரத்தை காப்பாற்ற  போராடவேண்டியதுதான்


இது வரை நடந்து வந்தது போராட்டம் அல்ல இனிமேல் வருவதுதான் உண்மையான போராட்டம் ஆகும்

அன்புடன்
மதுரைத்தமிழன் ( டிஜே.துரை)

விஷ விதைகள் விதைக்கப்படுகின்றன – ‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதி கொதித்தெழுகிறார்..
நேற்று முழுவதும் மெரினா போராட்டக்களத்தில் இருந்தேன். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி விட்டேன்.
என்ன பிரச்னை என்று பலரும் கேட்டார்கள்.
பயந்து விட்டீர்களா என்றும் கேட்டார்கள்.
நான் பயப்படவில்லை. மனம் வருந்தி தான் அங்கிருந்து கிளம்பினேன்.
ராஜசேகர் ஐயாவும், சேனாதிபதியும் தான் இந்தப் போராட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து போராடுகிறார்கள் என்று நான் கூற ஆரம்பித்தேன்.
தொடர் போராட்டங்களில் முதல் இரண்டு நாட்கள் நான் அலங்காநல்லூர், சென்னை, கோவையிலெல்லாம் நான் இருந்தேன்.
ஏனென்றால் இது அறப்போராட்டங்களாக நடந்தது.
ஆனால் கோவையில் நடந்த சில சம்பவங்கள் என்னை மனம் வருந்தச் செய்தது.
அங்கே சிலர் திடீரென வந்து எங்க பகுதியில் வந்து பேசுங்க என்றார்கள். என்ன என்று பார்த்தால் அங்கே தேசியக் கொடியை கீழே போட்டு அவமதித்து, இந்தியா என்று கேவலப்படுத்திப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
தேசிய விரோத செயலுக்கு நான் ஒருபோதும் துணை போக மாட்டேன்.
அதை அவர்களிடம் தெளிவா சொல்லி விட்டேன்.
உடனே, “ஹிப்ஹாப் தமிழா நீ உண்மையான தமிழனா இருந்தா இங்கே வந்து போராடு”ன்னு சொல்றாங்க.
இன்னொருத்தர், “மத்திய அரசு ஹிந்துக்களுக்கே முன்னுரிமை தருகிறது. இஸ்லாமியர்களுக்கு தரவில்லை” என்றெல்லாம் பேசுகிறார்கள்.
இதெல்லாம் எனக்கு ஒப்புமை இல்லை.
கடந்த ஒருவருடமாக நான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னை பீட்டாவுடன் இணைத்து கெட்ட வார்த்தைகளைக் கொண்டு எழுத ஆரம்பித்தார்கள்.
குடும்பப் பெண்கள் உள்ள இடத்தில் திடீரென சில கும்பல்கள் வந்து மோடி, தனித்தமிழ்நாடு என்றெல்லாம் பேசி கூடவே தகாத வார்த்தைகளைப் பேசினார்கள்.
மனம் வருந்தி நான் அங்கிருந்து கிளம்பி மதுரைக்கு வந்து விட்டேன்.
அதன் பிறகு பார்த்தால் ஒவ்வொரு இடத்திலும் இதே போல நடந்து கொண்டிருக்கிறது.
“பெப்ஸி, கோக் தடை செய்யவில்லையென்றால் நான் செத்து விடுவேன்” என்கிறான். நீ ஏன் வாங்குற?
எதற்காக போராடுகிறோம் என்று தெரியாமல் திசை திரும்பி விட்டது.
இந்த கூட்டம் எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை.
10 வருட காலமாக கஷ்டப்பட்டு கொண்டு வந்த விஷயத்தை மாணவர்கள் ஒழுங்காக செய்து கொண்டிருந்தார்கள். இதில் திடீரென குட்டியானையில் ஒரு ஆள் ‘தேசியக் கொடியை எரிக்கப் போறேன்” என்று வருகிறார்.
ஜல்லிக்கட்டுக்கு போராடும் ஆட்கள் வ.உ.சி. பூங்காவில் உள்ளே உட்காந்திருக்கிறார்கள். ஆனால் தேசவிரோத சக்திகள் வெளியில் வேறு விதமாக கூச்சல் செய்து கொண்டிருந்தார்கள்.
நான் மிகவும் புண்பட்டு விட்டேன்.
ஜல்லிக்கட்டை நோக்கி தான் இந்த போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதனால் தான் நான் பங்கு பெற்றேன். தமிழர் பிரச்னைக்காக நானும் போராடத் தயார்.
ஆனால் மாணவர்களின் பெற்றோர்கள் அதற்காகத்தான் அனுப்பி வைத்தார்கள்.
“மோடியை அழிக்கணும். ஹிந்த்துதுவா” என்றெல்லாம் பிட் நோட்டீஸ் எல்லாம் போட்டுத் தருகிறார்கள்.
நல்ல விதையை விதைத்த இடத்தில் விஷ விதைகள் விளைவது எனக்கு உடன்பாடில்லை.
இதுவரைக்கும் நன்றாக போய் கொண்டிருக்கிறது. இனிமேல் வேண்டாம் என்று கிளம்பி விட்டேன்.
அந்த அமைப்புகள் தேவை என்றால் தனியாகச் சென்று செய்து கொள்ளலாம்.
யாரையும் திட்டக் கூடாது. இந்தப் போராட்டம் வேறு விதமாக சென்று கொண்டிருக்கிறது என்பதால் நேற்றிலிருந்து நான் போராட்டத்தில் இருந்து நான் வெளியேறி விட்டேன்.
உள்ளுக்குள்ளே ஏதேதோ பாலிடிக்ஸ் நடக்கிறது. தேவையில்லாமல் திசை திருப்பி இன்னும் விஷ விதைகளை விதைக்கிறார்கள்.
போராட்டத்திற்கு வேறு கலர் அடித்து சென்று கொண்டிருப்பது எனக்கு ஒப்புதல் இல்லை.
என்னதான் இருந்தாலும் காவல்துறை, அரசு உதவி இல்லாமல் போராட்டம் நடத்த முடியுமா?
நான் உண்மையில் ஒரு தமிழனா சொல்றேன். என்ன பிரச்னை என்பதை மறந்து விட்டு தீவிரவாதம், மதவாதமாக ஆகிவிட்டது. அவனைக் கொல்லணும், இவனைக் கொல்லணுமென்றெல்லாம் பேசுகிறார்கள்.
இதெல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
நல்லது நடக்க வேண்டும் என்று நானும் வேண்டிக் கொள்கிறேன்.
நேற்று ஒருத்தன் வாட்ஸப்பிலே “என்னை போலீஸ் கூப்பிட்டு தனியா உட்கார வெச்சு விசாரணை செய்யுறாங்க”ன்னு வதந்தி கிளப்புறாங்க.
இந்த பிரச்னைக்குள் வேறு பிரச்னையை கொண்டு வராதீர்கள்.
நீங்க என்னைத் தப்பா நினைச்சு என்னைத்திட்டுவதாக இருந்தால் திட்டலாம்.
முதல் 3 நாட்கள் மக்கள் தெளிவாக இருந்தார்கள். இப்போது என்னென்னவோ நடந்து கொண்டிருக்கிறது.
அரசியல் வரும் அளவிற்கெல்லாம் எனக்கு அறிவு பத்தாது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். இது ஜனநாயக வழிமுறை. பாரதியாரும் இதையே செய்திருக்கிறார்.
எனவே எனக்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்.
நான் எமோஷனலாக பாதிக்கப்பட்டிருக்கிறேன்.
உண்மையான தீர்வு வேண்டுமென்றால் பத்து வருடமாக இந்தப் பிரச்னையை எதிர்கொண்டு வரும் ராஜசேகர் ஐயா, சேனாதிபதி ஆகியோர் சொல்வதைக் கேளுங்கள்.
அன்பான வேண்டுகோள். நன்றி.
– ஹிப்ஹாப் தமிழா ஆதி
#JusticeforJallikattu #RSS #BJP

16 comments:

  1. விரிவாக அலசி சொல்லி இருக்கின்றீர்கள் நண்பரே ஸூப்பர்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி கில்லர்ஜி

      Delete
  2. நீங்கள் சொல்லியிருப்பது சரிதான் சகோ...ஆனால் நான் ஒரு பின்னூட்டத்தில் சொல்லியது போல் நல்ல வழிகாட்டல் இல்லாமல் இப்போது எங்கோ திசை திரும்பி, அமைதியாகப் போராடிய மாணவர்களில் சிலர் சிக்கிவிட்டார்கள். அதனால்தான் நேற்றே பலரும் ஒரு குழுவே இருந்தது அதில் அவர்கள் எல்லோரும் ஏதோ சென்ஸ் பண்ணித்தான் விலகியிருக்கிறார்கள் சகோ.. வன்முறை ஆகிவிட்டது மனம் வேதனைப்படுகிறது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வழிகாட்டலில் இங்கே பிரச்சனை இல்லை கீதா, வழிகாட்டல் இல்லாமல் தங்களுக்கு தாங்களே செம்மையாக திட்டமிட்டு சென்றார்கள். ஆதி, பேதி, என சிலர் உள் நுழைந்ததும் தான் பிரச்சனை ஆரம்பம், அதை விட முதலமைச்சரை அலைய விட்ட கோபமும் சேர்ந்து கொண்டது.

      Delete
    2. அனைத்தையும் அலசி ஆராய்ந்துள்ளீர்கள். நாம் இதைக்குறித்து நிச்சயம் இன்னொரு தடவை விரிவாக உரையாடலாம். உங்கள் பதிவுகள் முற்றும் உண்மையே. இதெல்லாம் பன்னீர்ச்செல்வம் அவர்களுக்கு தெரியுமா என்பது கேள்விக்குறிதான் ஆனால் மோடி தப்பான இடத்தில் தப்பான நேரம் மோதி பார்கக் முயன்றிருக்கின்றார். தமிழர்கள் அன்புக்கு கட்டுப்படுவார்கள் என்பதும் ஆணவத்துக்கு எதிர்த்த்து நிற்பார்களோ என்பதும் புரிந்து கொள்ளாமல் போனார். நெருப்புடன் விளையாட ஆரம்பித்து விட்டார் என்றே நினைக்கின்றேன் /

      Delete
    3. இந்த போராட்டம் பல் வகைவில் வெற்றி பெற்றிருக்கின்றது. பிரிந்து கிடந்த தமிழனை இணைத்ததுடன் தமிழ் தமிழ் என தமிழை வைத்து புகழ் தேடிய பல போலி முகமூடிகளின் சுயத்தினை வெளிப்படுத்தி இருக்கின்றது.

      Delete
    4. கீதா இது ஒரு ஆரம்ப பாடமே சில சறுக்கல்கள் ஆனால் வருங்காலத்தில் இப்ப பெற்ற அனுபவம் காரணமாக இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள். சிலரின் கண் அல்ல உலகத்தாரின் கண்ணே பட்டு இருக்கல்ல அதுதன் விளைவாக ஏற்பட்ட திருஷ்டிதான் இது எல்லாம் சரியாகிவிடும்

      Delete
    5. நிஷா மாணவர்கள் சமுக அக்கறை இல்லாமல் சினிமா மோகத்தால் மேலை நாட்டு மோகத்தால் கெட்டு இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டிருந்த எல்லோருக்கும் மாணவர்கள் நாங்கள் அப்படிபட்டவர்கள் இல்லை என்று நிருபித்து இருக்கிறார்கள் அதுமட்டுமல்ல உலகமெல்லாம் பிரிந்து கிடந்த தமிழர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்த பெருமை மோடி அவர்களுக்கு உண்டு . மோடிக்கு தெரியாத ஒரு தமிழ் பழமொழி கெடுவான் கெடு நினைப்பான் என்பது

      Delete
  3. மிகச் சரியாக நான் நினைத்ததை அப்படியே சொல்லி உள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. காமென் மேனாக நின்று பார்த்தால் நாம் எல்லோரும் நடப்பதை பார்த்தால் இப்படிதான் சிந்திக்க தோன்றும் அதனால் நம் இருவரின் சிந்தனை மட்டுமல்ல பலரின் சிந்தனைகளும் இப்படிதான் ஒத்து போகும்

      Delete
  4. அருமையான அலசல். எவ்வளவு நன்றாக சென்று கொண்டிருந்த போராட்டதை, அழகாக முடிக்க விட்டால், மறுபடியும் துளிர்க்குமோ என்று இப்படி செய்தார்களோ?

    ReplyDelete
    Replies
    1. சந்தேகம் வேண்டாம் துளிர்த்ததை இப்போது அறுத்துவிட்டார்கள் ஆனால் இந்த மண் துளிர்க்கும் மண் என்று தெரிந்துவிட்டது வருங்காலத்தில் துளிர்க்க மட்டுமல்ல நன்றாக வலர்ந்து பலன் நிச்சயம் தரும் பொறுத்து இருந்து பாருங்கள்

      Delete
  5. இது மோடிக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல ,ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமும் கூட !நிச்சயமாய் ஆதி மிரட்டப் பட்டிருக்க கூடும் !ஒரு ஆதியை மிரட்டலாம் .ஆனால் ,பல்லாயிரம் ஆதிக்கள் நிறைந்த இளைஞர்கள் சாதிப்பார்கள் என்று நம்புவோம் :)

    ReplyDelete
    Replies
    1. ஆதிக்கள் போன்றவர்கள் பயந்து ஒதுங்கலாம் ஆனால் பல தைரியமான இளைஞர்கள் இளைஞிகள் களத்தில் இறங்கி இருப்பதை கண்கூடாக பார்த்தோம் இந்த மாதிரியான இளைஞர்கள் இப்போதுதான் முதல் அடி எடுத்து வைத்திருக்கிறார்கள் அடுத்த தடவை போராட்டம் வரும் போது அடி எடுத்து வைத்தவர்கள் ஒட்டப்பந்தயத்தில் வெல்பவர்கள் போல சீறிப்பாயக்கூடும் அந்த நமபிக்கை எனக்கு இருக்கிறது

      Delete
  6. அமெரிக்கக் குடிமகனான உங்களைப் போன்ற கைக்கூலிகளுக்கு, இந்தியாவை விட்டு ஓடிய துரோகிகளுக்கு, இந்தியாவில் எல்லையில்லாப் போராட்டம் வெடிக்க வேண்டும், இந்தியா குட்டிச்சுவர் ஆக வேண்டும் என்பது தவிர வேறு எந்த நல்லெண்ணமும் எப்படி வரும்? கெடுவான் கேடு நினைப்பான்.. அமெரிக்கனே.. இந்தியா பற்றிப் பேசாதே. உமக்கு அந்தத் தகுதி இல்லை. இந்தியா அன்பர் பலர் அர்ப்பணிப்பால் உருவான நாடு. உம் நாடான அமெரிக்கா போல மற்ற நாட்டுக் குருதியில் வயிறு வளர்க்கும் நாடு இந்தியா அல்ல.

    ReplyDelete
    Replies
    1. நாங்க பிழைப்பு தேடி அமெரிக்கா வந்து கடுமையா உழைச்சு வாழ்ந்து சம்பாதித்ததில் கொஞ்சம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்து கொண்டிருக்கிறோம் ஆனால் உங்களை போல உள்ள தேசபக்தர்கள் & தலைவர்கள் இந்தியாவில் செய்யும் வேலைகளுக்கு லஞ்சம் வாங்கி அரசாங்க சொத்தை சுரண்டிக் கொண்டு மேலும் அமெரிக்க போன்ற நாடுகளுக்கு நாட்டின் வளங்களை அள்ளி கொடுத்து நாட்டின் ரகசியங்களை எட்டப்பன் மாதிரி காட்டிக் கொடுத்து அதற்கு கையூட்டு வாங்கி கொண்டு தேசபக்தி பேசும் உங்களுக்கே அருகதை இருக்கும் போது எங்களூக்கு இல்லை என்று சொல்ல ஒரு அருகதையும் இல்லை

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.