ஜல்லிகட்டு விஷயத்தில் அமெரிக்க தமிழ்சங்கங்கள் மெளனம் காப்பது ஏன்?
தமிழகத்தில் ஜல்லிகட்டு விவகாரம் காட்டுத்தீயாக பரவி தமிழகமே ஒரு உணர்ச்சி மயமான ஒரு விதமான உணர்வோட சிறுகுழந்தைகள் முதல் கல்லூரி மாணவ மாணவிகள் இளைஞர்கள் மற்றும் மக்கள்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வருகிறார்கள் .அதுமட்டுமல்லாமல் உலக நாடுகளில் வசிக்கும் அனைத்து தமிழ் மக்களும் அவர்கள் வசிக்கும் ஊர்களில் ஒன்று கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினர்கள் சில இடங்களில் ஈனும் நடத்தி வருகிறார்கள் அது போல அமெரிக்காவில் உள்ள் பல மாநிலங்களிலும் வசிக்கும் மக்களும் ஜல்லிகட்டிற்கு ஆதரவு தெரிவித்து கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் போராட்டம் நடத்தினார்கள்.
இப்படி மக்கள் ஒன்று சேர்ந்து ஆர்பாட்டங்களில் இறங்கினாலும் இன்றைய( ஜனவரி 18 2017 ) தேதி வரை புதன் கிழமை இரவு 12 மணிவரை எந்த ஒரு அமெரிக்க தமிழ் சங்கமும் (பெட்னாதவிர )அமைப்பும் ஒரு சிறிய ஆதரவு அறிக்கைகளை கூட வெளியிடவில்லை அவர்களின் இணையதளங்களிலும் இன்றைய தேதி வரை பார்த்துவீட்டேன் கூகுலிலும் தேடி பார்த்துவீட்டேன் ஒரு செய்தியும் கூட அவர்களால் வெளியிடப்படவில்லை.அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில பெயரைக் கொண்டு தமிழ் சங்கங்கள் உண்டு .
இந்த சங்கங்கள் மற்றும் அமைப்புகள் இங்கு கூட்டம் கூட்டி தமிழை, தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை வளர்ப்பதாக சொல்லிக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் சினிமாத்துறையில் வாய்ப்பு இழந்த நடிகர்கள் நடிகைகளை கூப்பிட்டு அல்லது ஊரில் உள்ள பேச்சாளர்களை கூப்பீட்டு அல்லது டிவியில் புகழ் பெற்ற அல்லது சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டவர்களை கூப்பிட்டு பாட்டு பாடி இங்குள்ள வயதான ஆண்டிகள் சேலையை கட்டிக் கொண்டு ஆட்டம் போட்டு தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் வளர்ப்பார்கள் அப்படி தமிழை பேணும் கலாச்சாரத்தை மற்றும் பண்பாட்டை காக்கும் இந்த சங்கங்கள் தமிழனின் கலாச்சாரத்தை சேர்ந்த ஜல்லிகட்டுவிற்க்காக இந்த சங்கங்கள் அறிக்கைவிடாமல் மெளனம் காக்கின்றன
இந்த சங்கங்களுக்கு தலைவர் செயலாளர் பொருளாளர் என்று பலர் இருந்தும் ஒருத்தர்கூட அறிக்கைவிடவில்லை. ஒரு வேளை இந்த சங்க தலைவர்களுக்கு சின்னம்மாவிடம் இருந்து அனுமதி வரவில்லையா என்ன?
இந்த சங்கங்கள் உருப்படியான செயல்களை செய்வதாக இருந்தால் அந்த சங்க தலைவர்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பி எல்லோரையும் வரவழைத்து அருகில் இருக்கும் இந்திய தூதரகம் முன்னாடி ஆர்ப்பாட்டம் நடத்தி தூதரக தலைமை அதிகாரிகளிடம் தங்கள் கண்டணத்தை தெரிவித்து இருக்கலாம் அப்படி செய்வதன் மூலம் ஜல்லிக்கட்டிற்கான தங்கள் ஆதரவுகளை தெரிவிப்பதோடு அமெரிக்க மீடியாக்களிடம் செய்திகளை கொண்டு சேர்த்து இருக்கலாம்.
ஆனால் அப்படி செய்யாமல அவர்கள் மெளனம் காப்பதால் அவர்களும் மத்திய அரசிற்கு ஆதரவாகவும் ஜல்லிக்கட்டிற்கு எதிராகவும் செயல்படுகிறார்கள் என்று சந்தேகம் வரத்தான் செய்கிறது
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : பெட்னாவின் தலைவர் செந்தாமரை பிரபாகர் ஒருவர் மட்டும் பெட்னாவின் இணையதளத்தில் ஜல்லிகட்டுப்பற்றி இப்படி ஒரு பதிவை பகிர்ந்து இருக்கிறார், https://fetna.org/support-jallikattu/
அந்த கட்டுரையின் இறுதியில் இப்படி சொல்லி முடித்திருக்கிறார்********** "மத்திய அரசாங்கம் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கவேண்டும். இல்லையென்றால், ‘ஏறுதழுவுதல்’ என்றபெயரில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தமுடியுமா? என்பதைச் சட்டரீதியாக ஆராய்ந்து , எவ்வித விரும்பத் தகாத செயல்களும் நடக்காமல் தகுந்த முன்னேற்பாடுகள், மருத்துவவசதிகளுடன் இந்தப்போட்டியை நடத்த சட்டநிபுணர்களுடன், மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் ஆலோசனை நடத்தி உடனடியாக அறிவிக்கவேண்டும் என்பது வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆவா.
முழுக்கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்யவும் https://fetna.org/support-jallikattu/
கொசுறு :
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் அனைத்து கட்சியை சார்ந்த தலைவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து டில்லி சென்று மோடியையும் குடியர்சு தலைவரையும் சந்தித்து தமிழக மக்களின் கோரிக்கைகளை எடுத்துரைக்க வேண்டும் அப்படி அவர்கள் அப்பாயீன்மென்ட் தரமறுத்தால் டெல்லியிலே உண்ணாவிரத போராட்டத்தை நடத்த வேண்டும் அப்படி அதில் கலந்து கொள்ளாத யாரையும் தமிழகத்தில் இருந்தே ஒதுக்கி வைக்க வேண்டும்
போராட்டத்தின் அடுத்த கட்டமாக தமிழச்சிகள் மோடிக்கு தங்கள் வீட்டில் உள்ள சேலைகளை அவரது விலாசத்திற்கு அனுப்பி வைக்கலாம்
மாணவர்களும் இளைஞர்களும் மட்டுத்தான் போராட வேண்டுமா? தொழிலாளர்களும் வரிந்துகட்டி இறங்கலாமே#jallikattu #JusticeforJallikattu #SaveOurCultureJALLIKATTU
( இந்த தகவல் பதிந்த் அடுத்த நாளில் தொழிலாளிகள் மற்றும் ஐடி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள்)
அறவழிப் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் நீதிபதி கவுல் அப்படி போராடுவது தவ்று என்று சொல்லி இருக்கிறார் அதனால் அதை தடுக்க அடக்குமுறை ஏவப்படலாம் அப்படி ஒன்று நடந்தால் மக்கள் செய்ய வேண்டியது எம்.எல்.ஏ எம்.பிக்கள் அல்லது தமிழக பாஜக தலைவர்களை கடத்தி ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வைத்து போராட வேண்டும் #jallikattu #JusticeforJallikattu #SaveOurCultureJALLIKATTU
மதுர... சுனா சானா விற்கு தமிழ் ரத்னா விருது கொடுத்தாங்களே அந்த சங்கடத்தை தவிர மற்ற சங்கங்கள் எல்லாம் ஏதாவது ஒரு வழியில் தங்களின் ஆதரவை தெரிவித்தார்கள்.
ReplyDeleteதலைவரே இந்த சங்கங்கள் ஜல்லிகட்டு விஷயத்தில் ஒன்றுமே செய்யவில்லை அந்தந்த பகுதிமக்கள்தான் ஆர்பாட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள் அந்த மக்கள் இந்த சங்கத்தில் உறுஊய்பர்களாக கூட இருக்கலாம் ஆனால் சங்கம் சார்பாக யாரும் போராட்டம் அல்லது அறிக்கைகள் வெளியிடவில்லை அல்லது போராட்டத்தில் சங்கங்களின் சார்பாக ஒரு பேனர் கூட எடுத்து செல்லவில்லை அதுதான் உண்மை
Deleteஅந்தப் பொறுக்கி பயலுக்கு அவார்டு கொடுத்தது வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (பெட்னா) இல்லை. பெட்னாவுக்கு எதிரனான ஒரு ஒற்றை தமிழின எதிரியால் கொடுக்கப்பட்டது. அறியாமை தவிர்க்கவும்.
DeleteBATM போராட்டம் சென்றவாரம் முடிந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களை குழுவாக எடுத்து அனுப்பி இருக்க. சங்கம் சார்பில் காவல் துறை அனுமதி பெற்று வீதியில் போராடிய ஒரே தமிழ்ச்சங்கம் BATM
ReplyDeletehttps://m.facebook.com/story.php?story_fbid=1830163760593410&id=100007994108102
சான் பிரான்சிஸ்கோ வில் பொது தமிழ் சங்கம் (BATM) மற்றும் இந்துக்களுக்கு மட்டுமேயான சங்கம் (Bharati Tamil sangam) என்று இரண்டு சங்கங்கள் உள்ளன.
ReplyDeleteஜல்லிக்கட்டு - புரட்சி மலராது - புரட்சி வெடிக்கும்
ReplyDeletehttp://sekar-thamil.blogspot.com/2017/01/blog-post.html
Madhuraith thamizhaa,
ReplyDeleteAs far as I know protests are going on in several "state tamil sangam". They get together and make protest by saying "slogans supporting "jallikkattu". They publish in facebook and youtube.
I dont know it is considered "legal" in America or not.
As you know these guys are serious about animal harassment and although killing for eating are acceptable here and not considered illegal (only if those animals are allowed to kill).
FeTnA may be very careful controlling their "emotions" for not getting into legal trouble. Moreover Trump is going to become President in couple of days. Nobody knows how Trump would react to such things. So, they are careful I guess.
நீங்க வேணா ஒரு ஜல்லிக்கட்டு நியு ஜேர்ஸில நடத்திப் பார்க்கலாம். இங்கே இருக்க தமிழ் சமூகத்தை ஒண்ணு சேர்த்து.
இங்கே மோடி ஆட்சி, ஃபீட்டாலாம் ஒண்ணும் செய்ய முடியாது பாருங்க.
நம்ம விசுவும், ஆல்ஃபியும் நிச்சயம் ஏறு தழுவ களத்தில் இறங்குவாங்க. :))
ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) பற்றிய
ReplyDeleteதீர்வு கிட்டும் வரை
எழுச்சி ஓயப்போவதில்லையாம்...
காலம் பதில் சொல்லுமே!
அட! அவர்கள் சொல்லியிருக்கும் டிஸ்கியில் குறிப்பிடப்பட்டதைத்தான் எங்கள் அறிவிற்கு எட்டியவரையில் பதிவில் குறிப்பிட்டுள்ளோம்...
ReplyDeleteகீதா
ம்ம்ம்ம்...
ReplyDeleteWashington Tamil Sangam is protesting in front of Indian Embassy tomorrow.
ReplyDelete