Friday, January 27, 2017

avargal unmaigal
உண்மையிலே கண்ணியம் மிக்க விவேகனந்தரா   தமிழக இளைஞர்களா ? 

மெரினா பீச்சில்  மாணவர்களும் இளைஞர்களும் ஜல்லிகட்டு விஷயமாக போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதோடு தமிழ் நாட்டிற்கு பெருமையும் சேர்த்தனர் இறுதியில் யார் கண்ணுபட்டதோ பெற்ற பெருமையை சிறிது இழக்க தொடங்கி கடைசியாக போராட்டம் முடிவிற்கு வந்தது இப்படி குழப்பமாக முடிந்தற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதை பற்றி இந்த பதிவில் நாம் பேசப் போவதில்லை. இங்கு பேசப் போவது மாணவர்கள் போராட்ட நேரத்தில் நடநு கொண்ட கண்ணியமான  நடத்தையை பற்றியே



இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள் அதில் பெண்களும் குழந்தைகளும அடங்கும் இப்படி கூடிய கூட்டத்தில் பெண்கள் அந்த மாணவர்களாலும் இளைஞர்களாலும் பாலியியல் சீனண்டல்கள் அல்லது பலாத்காரங்கள் நடை பெறவே இல்லை என்றும் இது போல உலகில் நடந்த எந்த போராட்டத்திலும் நடந்தது இல்லை என்று சற்று அதிகமாகவே பில்டப் கொடுத்து சமுக வலைதளங்களில் பலரால் எழுதப்பட்டு & பரப்பபட்டு வந்தது . சமுக வலைதளங்களில் பிரதிபலிப்பதையே மீடியாக்களும் எடுத்து சொல்லி பெருமைபட்டன.


ஆனால் சற்று அழமாக சிந்தித்து பார்த்தால் இதில் பெருமைபட ஒன்றுமே இல்லைதான் என்பது உண்மையாக இருக்கும், இந்த மெரினா பீச்சில் நடந்த போராட்டம்மட்டுமல்ல உலகில் சமுக பிரச்சனைகளுக்காக நடந்த  போராட்டதில் எந்த விதமான பாலியல் சீண்டல்கள் நடை பெறவில்லை & பெற்றிருக்காது என்பதுதான் உண்மை இதற்கு காரணம் இங்கு எல்லோரும் கூடுவது போராட்டத்தில் வெற்றி பெறுவது மற்றும் அது பற்றி சிந்திப்பது பேசுவது என்ற ஒரே குறிக்கோளை கொண்டு இருப்பதால் மட்டுமே இது சாத்தியாமகிறது. இந்த மெரினா பிச்சு கூட்டத்தில் மட்டுமல்ல தமிழக கட்சிகள் நடத்திய எந்தவிதமான போராட்டங்களிலும் அல்லது கூட்டங்களிலும் பெண்கள் கலந்து கொண்ட போதிலும் எந்த விதமான சீண்டல்களும் நடந்தது இல்லை( விதிவிலக்காக கலைஞர் நடத்திய பொதுக் கூட்டத்தில் கூட்ட மேடையில் குஷ்புவின் இடையை கிள்ளியதை தவிர)


நிலைமை  இப்படி இருக்க யாரோ ஒருவர் டில்லியில் ஒரு பெண் பத்து பேரால் பலாத்காரம் செய்யப்படதை இதனோடு ஒப்பிட்டு தலை நகர் டில்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ஆனால் இரவு நேரத்தில் இந்த போராட்டத்தில் பெண்கள் பலர் கலந்து கொண்ட போதிலும்  எந்த விதமான சீண்டல்களும் இல்லை அதனால் எங்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மிக மிக யோக்கியமானவர் என்று பேச ஆரம்பிக்க உடனே ப்லர் சமுக வளைத்தள்ங்களில் பார்த்தியா தமிழனின் பண்பாட்டை கலாச்சாரத்தை என்று ஈயடித்தான் காப்பி போல எல்லோரும் ஒரே ராகத்தில் பாடி அதை ஊடகங்களுக்கும் எடுத்து சொல்லினர். நல்ல கவனிங்க மக்களே டில்லியில் போராட்டத்தின் போது எந்த பெண்ணும் கற்பழிக்கபடவில்லை.


மெரினா பிச்சில் இளைஞர்கள் இப்படி பண்பாடாக  நடக்க என்ன காரணம் என்று பார்த்தோமானால் நான் பேஸ்புக்கில் போராட்டத்தின் போது இட்ட கருத்து அதற்கான பதிலை சொல்லும் அது இங்கே

 ////பாலியல் சீண்டல்கள் ஏதும் செய்யாமல் இருந்ததால் பெண்களும் கலந்து கொண்டார்கள் அது  பெருமையக உள்ளது என்று பலரும்  சொல்லி கொண்டு இருக்கிறார்கள் இப்படி பாலியல் சீண்டல்கள் இளைஞர்களிடம் வெளிப்படாதற்கு காரணம் அவர்கள் விவேகனந்தர்களாக மாறிவிட்டார்கள் என்பதால் அல்ல ஒரு நல்ல நோக்கில் கூடி இருக்கும் கூட்டத்தி இப்படி பாலியல் சிண்டல்கள் நடந்தால் தம்மை தூக்கி போட்டு மிதி மிதியென்று மிதித்துவிடுவார்கள் என்ற பயத்தினால்தான் இளைஞர்கள் அமைதிகாத்தார்கள் எனலாம் அதுதான் உண்மை உதாரணமாக் பஸ் கூட்டத்தில் செல்லும் பெண் மீது யாரவது சீண்டும் போது அந்த பெண் தைரியமாக  தீடும் போது பஸ்ஸில் உள்ள மற்ற "யோக்கியர்கள்: அந்த சீண்டும் இளைஞரை எப்படி போட்டு உதைப்பார்களோ அது போல இங்கும் நடக்கும் என்ற பயம் காரணமாகத்தான் இங்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை . போராட்டம் முடிந்து சில நாட்களுக்கு பின்னால் பாருங்கள் வழக்கம் போல பாலியில் சிண்டல்கள் தொடரத்தான் செய்யும்/////



போராட்டத்தின் போது பெண்கள் ஆண்களை அண்ணா அல்லது தம்பி என்றும் அது போல ஆண்கள் பெண்களை அக்கா தங்கச்சி அம்மா என்று அழைத்து மிகவும் சகோதரத்துவதுடன் நடந்து கொண்டாதாக பெருமைபடுகிறார்கள். உண்மையில் அவர்கள் சகோதரதுவத்துடன் பழகி இருந்தால் போராட்டம் முடிந்த பின் சிலகாலம் கழித்து அதே போல பொது இடங்களில் சகோதரத்துவதுடந்தான் பழகுவார்களா? இனிமேல் பஸ்ஸில் திரையரங்குகளில் கோயில் திருவிழா கூட்டங்களில் யாரும் எந்த பெண்னையும் சீண்ட மாட்டார்கள்தானே அப்படி சீண்டினால் இந்த சகோதத்துவ முறை எப்படி  அழைக்கப்படும்?

இந்தியாவில் மற்ற மாநிலங்கள் எப்படி என்று தெரியவில்லை ஆனால் தமிழகத்தில் நான் சிறுவயதில் இருந்து இப்போது வரை பல இடங்களில்  அண்ணன் தங்கை உறவு முறை தகாத உறவு முறையை மறைக்கவே பல இடங்களில் அப்படி அழைக்கப்படுகிறது சில இடங்களில் அண்ணா என்று அழைக்கப்பட்டவர் அத்தானக மாறியதையும் நான் மட்டுமல்ல பலரும் பார்த்திருக்கிறோம் இந்த அண்ணா தங்கை உறவு முறை இரத்த சொந்தத்தை தவிர பல இடங்களில் அது தவறாகவே இருக்கிறது என்பது கண்கூடு.



இது மாணவர்களை மற்றும் இளைஞர்களை குறை கூறும் பதிவல்ல ஆனால் நான் மேற் சொன்னபடிதான் நடக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை எது எப்படி இருந்தாலும் மாண்வர்கள் மற்றும் இளைஞர்கள் எந்த நோக்கத்திற்காக நடத்தினார்களோ அந்த நோக்கத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் அதற்காக நான் அவர்களை பாராட்டுகிறேன் & வாழ்த்துகிறேன் வருங்காலத்தில் இது போல பல சமுக பிரச்சனைகளில் மாணவர்கள் கண்டிப்பாக இறங்கி போராட வேண்டும் தமிழகத்திற்கு மற்றும் இனத்திற்கு பெருமை தேடி தர வேண்டும்


கண்ணியத்தை வார்த்தையில் அல்ல, வாழ்க்கையில்  தொடர்ந்து வெளிப்படுத்துவோம்



டிஸ்கி : மாணவர்கள் & இளைஞர்கள் தமிழ் இனத்திற்கு பெருமை தேடி தந்த சமயத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒரு பெரியவர் மேகலாய மாநிலத்தில் கவர்னராக் இருந்து பாலியில் சீண்டல்கள் பலாத்காரம் பண்ணி இன்று பதவியை ராஜினாமா செய்து இருப்பதாக செய்திகள் வந்து இருக்கின்றன. இது தமிழர்களுக்கு பெரிய அவமதிப்பாகும் இந்த வயதில் அவர் இப்படி நடக்க காரணம் என்ன என்பது பற்றி வேரு இரு பதிவில் பேசலாம்


அன்புடன்
மதுரைத்தமிழன்(டிஜே.துரை)








--------------------------------
போராடி பெற்ற வெற்றியை சந்தோஷமாக கொண்டாட முடியாத மனநிலையில்தான் எல்லோரும் இருக்கிறோம் அதற்கு காரணம் சில இன துரோகிகளான கள்ள ஆடுகளே

3 comments:

  1. தங்கள் கருத்தை முழுமனதோடு ஆதரிக்கிறேன்! பொதுவாகவே சென்னை நகரம், பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் அல்ல என்பது ஜெயலலிதா காலத்தில் இருந்தே நிலவும் உண்மையாகும். மெரீனா இளைஞர்களின் போராட்டத்தில் வழக்கமான ரவுடி elements அனுமதிக்கப்படாததும் அங்கு நிலவிய கண்ணியத்திற்குக் காரணமாக இருக்கலாம். - இராய செல்லப்பா நியூஜெர்சி.

    ReplyDelete
  2. "தமிழகத்தை சேர்ந்த ஒரு பெரியவர்"
    ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழர்கள் அல்ல

    ReplyDelete
  3. உங்களுக்கு முன்பே நான் இங்கு வந்தேன்:), ஜல்லிக்கட்டு போய்க்கொண்டிருந்துது அதில் என்ன கருத்திடுவதெனத் தெரியாமல், எதுவும் பேசாமல் தமிழ்மண வோட் போட்டுவிட்டுப் போயிட்டேன்..

    இன்றும் அதே அதே:))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.