தமிழக எம்பிக்களை மோடி சந்திக்காதற்கு இதைவிட காரணம் எதுவும் வேண்டுமா?
டொனல்ட் ட்ரம்பை பார்க்க அமெரிக்க செல்லும் போது அணிந்து செல்வதற்காக புதிய கோட்சூட்டை தைப்பதற்கு டெய்லருக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்த காரணத்தினால்தான் தமிழக எம்பிகளை சந்திக்க மோடியால் முடியவில்லை
குஜராத் கலவரத்தை மறந்து மோடியை பிரதமாராக்கிய மக்களா ஜல்லிக்கட்டு போராட்ட முடிவில் ஏற்பட்ட கலவரங்களையா நினைவில் வைத்திருக்கிற போகிறார்கள். # போங்கடே போய் நாலு காசு சம்பாதிக்க வழியை பாருங்க
பெப்சி கோக் எல்லாம் அமெரிக்க தயாரிப்பு அதெல்லாம இனிமேல் குடிக்க மாட்டோம் என்று சொல்லும் சமுக வலைதள பேராளிகள் எல்லாம் அப்படியே இனிமேல் பேஸ்புக் யூடியுப் எல்லாம் நாங்க உபயோக்கிக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு அந்த அக்கவுண்டை டெலீட் பண்ணினால் உங்களின் தேச பக்தியை மெச்சலாம்
பிரதமர் மோடியை எதிர்த்துப் பேசுபவர்கள் தேச விரோத சக்திகள் : மத்திய பிஜேபி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
அப்ப இந்தியாவில் வசிக்கும் மக்களில் 90 சதவிகித்தினர் தேச விரோதிகளா?
பன்னீர் செல்வத்தை காமராஜர் அவர்களோடு ஒப்பீட்டு சில படங்களை பேஸ்புக்கில் பார்த்தேன் ஏண்டா நல்லது செஞ்ச தலைவர் காமராஜரை நீங்கள் இழிவுபடுத்துகிறீர்கள்
பன்னீர் ஆட்சியில் தமிழகத்தில் RSS சுதந்திரம் அடைந்தது என்று வரலாறு சொல்லும் இதுக்குதான்யா தமிழன் முதல்வராக வரக் கூடாது என்கிறது
நாம் வாழும் போது செய்யப்படும் நல்ல செயல்கள்தான் நாம் மறைந்த பின்னும் நம் பெயர் சொல்லி மக்கள் மனதில் நிலையாக நிற்க கூடும் ஆனால் ஜெயலலிதாவின் மரணம் மிக விரைவில் மக்கள் மனதில் இருந்து மறைந்துவிட்டது .அது போல மறைவிற்கு முன்பே கலைஞரை பற்றிய நினைவுகள் மக்கள் மனதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு இருக்கிறது. இதற்கு உபயம் ஸ்டாலின்
அன்புடன்
மதுரைத்தமிழன்
அவ்வாறும் இருக்கலாம் போலத்தான்
ReplyDeleteஇருக்கிறது. கோபத்தை இப்படி
கிண்டலும் கேலியுமாக தீர்த்துக்
கொள்ளவேண்டியதுதான்
வேறு வழி ?
முடிவில் சொன்னது மிகவும் உண்மையானது தமிழரே...
ReplyDeleteஎன்ன சொல்ல என்று தெரியவில்லை..சிவப்பு வரிகள் மிக மிகச் சரியெ!! உண்மையானதும் கூட
ReplyDeleteஐயா, உங்களைப் போன்ற அந்நியர்கள், குறிப்பாக இந்தியக் குடியுரிமையை உதறிவிட்டு அந்நியக் குடியுரிமை பெற்றோர், இந்தியாவில் அமைதி நிலவுவதை, இந்தியா முன்னேறுவதை விரும்புவதில்லை என்பது தெளிவு.
ReplyDeleteபெண்களைக் கீழ்த்தரமாக நடத்துபவரை, நிறவெறி பிடித்தவரை எல்லாம் ஜனாதிபதி ஆக்கி, உலகை வறுத்தி, வயிறு வளர்க்கும் உங்களைப் போன்ற அமெரிக்கர்கள் எல்லாம் இந்தியாவைப் பற்றி இழிவாகப் பேசுவது சோகமான முரண்நகை. இந்தியரின் பிரச்னையை இனி இந்தியர் பார்த்துக்கொள்வர். நீங்கள் உங்கள் நாடான அமெரிக்காவின் குப்பையை (மட்டும்) அள்ளவும். நன்றி.
நீங்கள் இப்படி சொன்னால் மோடி அரசை நாங்கள் விமர்சிக்காமல் போய்விடுவோம் என்று நினைத்தீர்களா?? ஹீஹீ நீங்கள் என்ன சொன்னாலும் நான் விமரசிப்பத்தை நிறுத்த போவதில்லை
Deleteசற்றே இடைவெளிக்குப் பிறகு இன்று தான் இத்தொகுப்பை படிக்க முடிந்தது.... மற்ற பதிவுகளும் படிக்க தொடர்ந்து வருகிறேன்...
ReplyDelete