அட்வைஸ் ப்ளீஸ் ! இப்ப நான் என்ன செய்ய வேண்டும்
அடிக்கடி பேஸ்புக்கில் எங்களுக்கு திருமணமாகி இன்றோடு 5 அல்லது 10, 20 ,25 ஆண்டு ஆகிவிட்டது. எனது கணவர்/மனைவிதான் எனது பெஸ்ட் பார்ட்னர் என சொல்லி பதிவிட்டு எங்களை வாழ்த்துங்கள் நண்பர்களே என்று சொல்லும் போது உண்மையிலே அவர்களை வாழ்த்துவதா வேண்டாமா என சந்தேகம் எனக்கு நேருகிறது காரணம் அவர்களை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் போது அல்லது பேசும் போது இன்னும் எத்தனை நாளுக்குதான் இவரோட/இவளோட குப்பை கொட்டுகிறததோ என்று கரித்து கொட்டுகிறார்கள் பல பேர். அவர்களிடம் நீங்கள் நீண்ட நாட்கள் இன்று போல என்று வாழுங்கள் என்று வாழ்த்தினால் அவர்கள் நம்மை அல்லவா மனதிற்குள் சாபம்மிடுவார்கள்?# இப்ப நான் என்ன செய்வது
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஹா ஹாங் :) பிரச்சினை பெரிசா இருக்கே ..இதுக்கு புலாலியூர் பூசானந்தா தான் சரியான பதில் தருவாங்க ..அவங்களை கூட்டிட்டு வரேன் ஈவ்னிங் :)
ReplyDeleteஎனது அட்வைஸ் இப்போ சொல்லிடறேன்
தனிப்பட்ட முறையில் கரித்து ..கொட்டினால் அதை பத்திரமா வித் proof அள்ளி கூட்டி வச்சி அவங்க அடுத்த திருமண நாள் பரிசா கொடுத்திடுங்க :) மறுபடியும் தொல்லை இருக்கவே இருக்காது :)
ReplyDelete
Deleteநீங்க சொன்ன மாதிரி திருப்பி கொடுத்தா மிக எளிதில் டைவார்ஸ் வாங்கிகிட்டு மனுஷங்க ஜாலியாக இருப்பாங்க நான் கஷ்டப்படுக்கிட்டு இருக்கும் போது அவங்க சந்தோஷமா இருக்கலாமா?
இப்படி குண்டக்க மண்டக்க யோசிக்க கூடாது
ReplyDeleteதமிழக அரசியலை பார்த்தால் மண்டை இப்படி காஞ்சு குண்டக்க மண்டக்க யோசிக்க சொல்லுது நான் என்ன செய்யட்டும்
Deleteநியாயமான விசயம்தான் தமிழரே....
ReplyDeleteஆஹா நீங்கள் ஒருத்தராவது என் பிரச்சனையில் நியாயம் இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களே அதற்கு நன்றி நண்பரே
Deleteஹா ஹா ஹா மிக நல்ல சந்தேகம்.. நீங்க நல்லா இருப்பீங்க:))..
ReplyDeleteநல்ல்லாஆஆஆஆஆஆஆஆஆ நீங்க இன்னும் பல100 ஆண்டுகள் இப்படியே இதே கணவன்/மனைவியோடயே இருக்கோணும் என வாழ்த்துங்கோ:))...
பின்ன “எனக்குப் பிடிக்கவில்லை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் குப்பை கொட்டுவது” எனச் சொல்லி எஸ்கேப் ஆகுவோரை விட்டிடுவமா நாங்க:).. அப்படியானவர்களைத்தான் நேர்த்திக்கடன் வச்சு வச்சு வாழ்த்து வாழ்த்தென வாழ்த்தி.. கடசிவரை ஒன்றாகவே இருக்கப் பண்ணிட வேணும்:) எப்பூடி என் ஐடியா?
அஞ்சுதான் அவசரமா ஐடியா தேவையாம்ம் அவர்கள் உண்மைக்கு.. ஐடியாவைக் கையில எடுத்துக் கொண்டு ஓடுங்கோ எனச் சொன்னவ:))... நான் சொல்வதெல்லாம் உண்மை:)
ஆம் ஆம் நானேதான் சொன்னேன் ..அதெப்படி இவர் மட்டும் உங்க தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கலாம் :)
Deleteயான் பெற்ற துன்பம் இவருக்கும் கிடைக்கட்டும்னுதான் உங்களை இழுத்திகிட்டு வந்தேன்
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவர்கள் உண்மைக்கு அட்டமத்துச் சனி ஆரம்பமாக்கும்:)
Delete@ அதிரா உங்க ஐடியாபை பின்பற்றினால் 100 வருஷமும் இன்று போல் என்றும் வாழ்க என்று
Deleteகாப்பி பேஸ்ட் பதிவு போடனும் ஹூம் ஐடியா சரியில்லையே
இங்கு தமிழ் மணத்துக்காக, அவர்கள் உண்மைகள் ஓனர் கூட வோட் போடுவதில்லை.. நான் மட்டும்தேன் வோட் பண்ணுறேன்ன் ஏன்ன்ன்ன்ன்ன்?:)).
ReplyDeletegarrr நானும் வாக்களித்து விட்டேன் ..இங்கே மட்டுமே இவ்ளோ ஈஸியா வோட் செய்ய முடியுது ..மற்ற இடத்தில எல்லாம் சுற்றும் அதுவும் புலாலியூர் பூசானந்தா தளத்தில் உலகையே சுத்தும்
Deleteஇதிலிருந்து புரியுதோ அதிராவின் பக்கம் எதுவும் ஈசியில்லை என்பது:) ரொம்பக் கோஸ்லியாக்கும்..க்கும்..க்கும்..:)
Deleteஎன்னது வோட்டு போட்டீங்களா அப்படின்னா என்ன?
Delete.உங்க ஹேர்ஸ்டைல் நல்லா இருக்கு :) இப்போ புரியுது எவ்ளோ அடி வாங்கினாலும் பூரிக்கட்டை skull மேலே படாது :) ..
ReplyDeleteஅதிரா நீங்க சொல்ல சொன்னதை அப்டியே சொல்லிட்டேன்
அஞ்சூஊஊஊஉ கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு வரமுடியுமோ?:)) ச்சூஉம்மா நிலவில் நடக்கலாமே என்றுதான்ன்:)
Deleteபிறர் பதிவுகளில் இவர்கள் பின்னூட்டமே பதிவின் நீளத்தையும் அகலத்தையும் தாண்டி விடுகிறது
ReplyDeleteபதிவு சின்னதாக இருந்து பின்னுட்டம் நீளமாக இருந்தால் பரவாயில்லை பின்னொரு காலத்தில் வந்து மீண்டும் படிக்கும் போது சுவராஸ்யமாக இருக்கவே செய்யும்.
Deleteஜி எம் பி ஸார் பரவாயில்லை சார். It makes the blog world vibrating in a positive sense. Good Humour is the best exercise that keeps us live and enthusiastic keeping us away from all worries. Its an art!மிகப் பெரிய கலை!! எல்லோராலும் பிறரைச் சிரிக்க வைக்க முடியாது. ஒரு சிலருக்கு மட்டுமே அந்தக் கலை வாய்க்கப்பெற்றவர்களாக இருப்பார்கள். எனவே நாம் அதை வரவேற்று எஞ்சாய் பண்ணூவோம் சார்...ப்ளாகையே லைவ்லியாக்குது! நம்மால் பிறரைச் சிரிக்க வைக்க முடியாவிட்டாலும் இது போன்ற நகைச்சுவை லூட்டிகளை எஞ்சாய் செய்வோமே என்பதுதான்...உலகத்தை விட்டுப் போகும் போது என்ன சார் கொண்டு போகப் போறோம்..வாழும் வரை, சீரியஸ் சிந்தனைகளுக்கு இடையில் நன்றாகச் சிரித்து வாழ்வோமே.சரிதானே சார்!!!?
Deleteகீதா
இரு வேறுபட்ட மனங்கள் இணைந்து ஐந்து வருடங்கள் சண்டை போட்டாலும் சேர்ந்திணைந்து வாழ்ந்தலே பெரிய விடயம். இதில் பத்தும், இருபத்தியைந்தும் கடந்தவர்களை இன்று போல் என்றும் வாழ்க என வாழ்த்துவதில் என்ன தப்பிருக்க முடியும்?
ReplyDeleteஇம் என்றால் கோட் படியேறி விவாகரத்து பெறும் இக்காலத்தில் தாங்கள் இத்தனை வருடம் சேர்ந்தே வாழ்கின்றோம் என பதிவிடவும்,என்னவர் அல்லது என்னவள் தான் பெஸ்ட் என பலருக்கு முன் அறிவிக்கவும் செம தைரியம் வேண்டும். அந்த தைரியத்துக்காக வாழ்த்தலாம்.
அவர்கள் வீட்டு அடுப்படியை ஆராயாமல் வரவேற்பறையில் நின்று மண நாள் நல்வாழ்த்துகள் என நல்மனதோடு வாழ்த்துங்கள். உங்கள் நல்வாழ்த்து அவர்களிடையே இருக்கும் வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையை விதைக்கும்.
அந்த நாளில் நாங்கள் சேர்த்திருக்கின்றோம், எங்களுக்கு திருமணமாகி இத்தனை வருடங்கள் என நினைத்து உங்களிடம் வாழ்த்த சொன்னால் இதோ இன்றிருக்கும் இதே மன நிலையில் நூறாண்டு வாழுங்கள் என வாழ்த்துங்கள்.
துளசி: தமிழரே! சும்மா ஃபேஸ்புக்ல எல்லாரும் பண்ணுவதை நீங்களும் செய்துவிட்டு அதாவது வாழ்த்திவிட்டுச் செல்ல வேண்டியதுதான்!!
ReplyDeleteகீதா: ஐயோ தமிழா இதென்ன உங்களுக்குமா கன்ஃப்யூஷன்! எனக்குத்தான் இப்படி வரும் நு பார்த்தா ஹும்.ஃபேஸ்புக்ல இல்லை நேரிலேயே...முதல் நாள்தான் குழாயடிச் சண்டை மாதிரி நடந்துருக்கும்.இனி வாழவே போறதில்ல..... பிரியத்தான் போறோம்னு சொல்லி பஞ்சாயத்துக்கு வேற வந்திருப்பாங்க...அடுத்த நாளே...மணநாள் பாயாசம் செஞ்சேனு வரும்,,கோயிலுக்குப் போனோம்னு பிரசாதம் வரும்....நான் தலைய பிச்சுக்கிட்டு..ஹிஹிஹி .அது சரி உங்களுக்குமா.அப்ப நீங்களும் தலைய பிச்சுக்கிட்டு!!!?? அஹஹஹ்ஹ் சூப்பர் தமிழா..எனக்கு கம்பெனி ஆச்சு....
அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணா சேந்துக்கறா
ReplyDeleteஅடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவையா வாங்கிக்கறா
பட்டு பொடவையா வாங்கிக்கறா...அடுத்தாத்து அம்புஜத்தப் பார்த்தேளா பாட்டுதான் தமிழா...ஹஹஹ
கீதா
நல்ல சந்தேகம்..... :) ஏடாகூடமா எதாவது சொல்லி மாட்டிக்காதீங்க!
ReplyDelete