ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கும் திமுகவினரின் பில்டப்பும்
ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை கேட்டு அது தங்களின் வெற்றியாக கொண்டாடி பெருமிதம் கொள்கின்றனர் திமுகவினர்.
என்னவோ திமுக இதை பொது நலனுக்காகவும் மோசடியை வெளிப்படுத்துவதற்காகவும் செய்தது போல மிகவும் பில்டப் பண்ணுவதுதான் மிகப் பெரிய நகைச்சுவை.
இப்படி ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கிற்காக போராடிய அன்பழகன் தன் கட்சியை சார்ந்தவர்கள் ஈடுபட்டு இருந்த 2 ஜி வழக்கிலும் இப்படி போராடாமல் அமைதி காப்பது எதனால் 2ஜி வழக்கு பொது நல வழக்கு இல்லையா அல்லது அதில் மோசடிதான் ஏதும் இல்லையா . அப்படிதான் என்றால் அதை நிறுபித்து தங்கள் கட்சியினர் மீது இருக்கும் களங்கத்தை துடைப்பதுதானே கட்சியின் பொது செயலாளருக்கு கடமை...
அய்யா இந்த மதுரைத்தமிழன் சொன்னதற்காக வழக்கு ஏதும் தொடர்ந்துவிடாதிர்கள் அப்படி செய்தால் உங்களை அப்போலவில் சேர்த்து சிகிச்சை ஆரம்பித்துவிடுவார்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : திமுகவின் தலைமை மிக உஷார் வழக்கு தொடுக்க அன்பழகனை பயன்படுத்தியது, தீர்ப்பு ஜெயலலிதாவிற்கு எதிராக வந்தால் அதை தங்கள் கட்சியின் சாதனையாகவும் அல்லது ஜெயலலிதாவிற்கு ஆதரவாக வந்து இருந்தால் இந்த அன்பழகனுக்கு வேற வேலை இல்லை சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தார் என்று பழி சுமத்தி இருப்பார்கள்
ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்கிற கதைதான்
ReplyDeleteநீங்கள் சொல்வது சரிதான்
Deleteஎல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்! இதில் என்ன கெக்கரிப்போ ஹும்
ReplyDeleteநீங்கள் சொல்வது சரிதான்
Delete