சட்டமன்றத்தில் எடப்பாடி VS ஸ்டாலின் ப்ளஸ் இது என்னாங்கடா நியாயம்...??
ஜெயலலிதா தன் வாழ்வில் செய்த ஒரு நல்ல காரியம் அவர் சாவின் மூலம் தமிழக மக்களை அதிலும் குறிப்பாக பெண்களையும் அரசியல் பற்றி அறிந்து பேச செய்ததுதான்
மேலை நாடுகளை போலவே இந்தியாவும் வளர்கிறது வக்கிரங்களில்.#ஹாசினி
--------------------------------------------------------
இது என்னாங்கடா நியாயம்...?? இதை பேஸ்புக்கில் எழுதி பகிர்ந்தவர் எஸ்.ஆர்.எஸ். கண்ணன் ( நன்றி )
பொதுத் தேர்தலின் போது வாக்காளர்களை வாகனத்தில் அழைத்து வரக்கூடாது, உணவு வழங்கக் கூடாது , பணப் பட்டுவாடா செய்யக் கூடாது என்று சொல்லும் தேர்தல் கமிஷன்
இப்போ மட்டும் சட்டமன்ற உறுப்பினர்களை 2 பஸ் வாகனத்தில் கூட்டிக்கொண்டு போய் 8 நாள்கள் சோறு போட்டு வைத்து, அவர்களை சுதந்திரமாக செயல்பட விடாமல், அதை வைத்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதை எப்படி அனுமதிக்கலாம்..
மக்கள் பணம் வாங்கிட்டு ஓட்டுப் போடா குற்றம்...ஆன கோடிக்கணக்கில் பணம் வாங்கிட்டு ஒரு முதலமைச்சரை தேர்ந்தெடுத்தால் குற்றமில்லையாம்.
இது என்னாங்கடா நியாயம்...??
இந்த அநியாத்தை தட்டிக் கேட்பது யார்..??
-------------------
அன்புடன்
மதுரைத்தமிழன்
நிலக்கோட்டை எம் எல் ஏ அதற்குள் தினகரன் ஐயா பெயரை முன் மொழிந்து விட்டார். இன்றைய செய்தித்தாள் செய்தி.
ReplyDeleteமிகச் சரி
ReplyDeleteஅவர்கள் வாங்கினால் அன்பளிப்பு
சாமனியர்கள் வாங்கினால் லஞ்சம்
என்பதுமாதிரி
அப்படித்தான் இருக்கிறது இந்தக்
கடத்தல் விவகாரமும்...
படம் ஹஹஹஹஹ் செமை நக்கல்!! நையாண்டி! சிரித்துவிட்டோம்...
ReplyDeleteகீதா: நல்ல கேள்விகள்! ஆனா, மமா குடும்பத்து ஆள்தான் வரணுமாமே!! அப்படினு யாரோ சபதம் எல்லாம் எடுத்துருக்காங்களாமே!!!