Monday, February 20, 2017

122 எம்.எல்,ஏக்களை குற்றம் சொல்லுவதற்கு முன் சற்று யோசிங்களேன்

எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை துரோகம் செய்யவரவில்லை. அவர்கள் எம்.எல்.ஏக்களாக ஆனதற்கு சசிகலாதான் காரணம்  சசிகலா வாய்ப்புக்கள் கொடுத்தால் மட்டுமே அவர்கள் வேட்பாளர்காக ஆக முடிந்தது மக்கள் அந்த எம்.எல்.ஏக்கள் நல்லவரா கெட்டவரா என்று நினைத்து ஒட்டுப் போடவில்லை அவர்கள் ஜெயலலிதாவிற்காக மட்டுமே ஒட்டு போட்டார்கள் அதனால் மக்களுக்கு இந்த எம்.எல்.ஏக்களை தட்டிக் கேட்க அதிகாரம் இல்லை. எம்.எல்.ஏக்கள் நன்றி உணர்வோடு தங்களுக்கு வாய்ப்பு அளித்த  சசிகலாவிற்கு நன்றிக் கடன் செலுத்தி இருக்கிறார்கள். இதுதான் உண்மை நிலை.

சசிகலாவை எதிர்த்து வெளியே வந்தவர்களுக்கு மக்கள் ஆதரவு தருவார்களா என்று பார்த்தால் இந்த போட்டியில் தோல்வியுற்ற பன்னிரையும் அவரை சார்ந்தவர்களையும் மக்கள் ஊக்கப்படுத்தாமல் இப்போது அவர்களை பார்த்து கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.


தேர்தல் நேரத்தில் கலைஞர் ஆட்சியில் என்ன நடந்தது என்று தெரியும் அதன் பின் ஆண்ட ஜெயலலிதா ஆட்சியில் என்ன நடந்தது அதுவும் வெள்ள நேரத்தில் எப்படி ஒடோடி வந்து மக்களுக்காக உழைத்தார் என்று தெரியும் அப்படி தெரிந்திருந்தும் அவரை அமோகமாக தேர்ந்தெடுத்தது எதற்க்காக?

அவருக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்தானே அவர்கள் என்ன ஜெயலலிதா அல்லது கலைஞரை விடவா அதிகம் மோசம் செய்து இருக்கிறார்

சரி இவர்கள் எல்லாம் மோசம் எங்களுக்கு ஒரு நல்ல தலைவர் இல்லை இருந்திருந்தால் இப்படி எல்லாம் நாங்கள் செய்து இருக்க மாட்டோம் என்கீறீர்களா? அதுவும் சரிதான் நல்ல தலைவர்கள் என்பவர்கள் வானத்தில் இருந்தா குதிப்பார்கள் அவர்களை நாம்தானே உருவாக்க வேண்டும். அதை செய்யாதது ஏன் மக்களே?


மேலை நாடுகளை போலவே இந்தியாவும் வளர்கிறது வக்கிரங்களில். #ஹாசினி


தமிழக அதிகாரி சகாயம் அரசியல் தலைவர்களுக்கு அஞ்சாமல் நியாமாக செயல்படக் கூடியவர் என்று அநேகருக்கு தெரிந்தும் அவரை தலைவாராக ஒரு இயக்கதிற்கு ஆக்கி ஒரு தொகுதிக்கு எம் எல் ஏக்களாகவது ஆக்கி இருக்கலாமே அப்படி பலர் கோரிக்கை வைத்தும் அவரையே தமிழக முதலவராக ஆக்கலாம் வாருங்கள் என்ற போது ஏளனமாக சிரித்து இந்த எம்.எல்.ஏக்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் ஏறகனவே நாட்டை நாசம் செய்யும் தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு இப்போ அம்மா அப்பா அய்யோ என்ரு குரல் கொடுக்கிறீர்களே அப்படி குரல் கொடுக்கும் நீங்கள் யோக்கியமானவர்களா என்ன?


வைகோ என்ற ஒருவர் கைகளில் ஜெயலலிதா  கலைஞர் போல கரங்களில் கைபடாதவராகத்தான் இருந்தார் அவர் என்றும் எந்த பதவிக்கும் ஆசைப்படாமல்தான் அரசியல் செய்து வந்தார் அவர் ஒரு சிறந்த எம்பியாக இருந்து பாராளுமன்றத்தில் தமிழர்களுக்காக குரல் கொடுத்துதானே வந்தார். பாராளுமன்றத்தில் இதுவரை தமிழகம் சார்பாக சென்ற எம்பிக்கள் தமிழர்களுக்காக பேசி பதிந்ததையும் வைகோ பதிந்ததையும் அறிவு உள்ள எவரும் ஒப்பிட்டு பார்த்துவிட்டு மனசாட்சியோடு சொல்லட்டும் அவர் தமிழர்களுக்காக ஒன்றும் செய்யவில்லை என்று. அப்படி இருந்தவரை இன்று நாம் கேலிக்குரிய தலைவர் ஆக்கியது யார் செயல்? கடந்த தேர்தலில் ஜெயலலிதாவிடம் 1500 கோடி வாங்கிவிட்டு அரசியல் செய்தார் என்று எந்த வித ஆதாரம் இல்லாமலும் ஸ்டாலின் மருமகன் சபரிஷன் சமுக வலைததளங்களில் ஐடி டீமை வைத்து சொன்ன பொய்களை அப்படியே நம்பி  வாய்க் கூசாமல் குறை சொன்னோமே அது சரியா? அவர் அவ்வள்வு கோடி வாங்கினார் என்றால் இந்திய வருமானத்துறை என்ன செய்தது? அது உன்மையா என்று ஆராய்ந்து அந்த பணம் எப்படி வந்ததது என்று விசாரனை செய்யாமல் ஏன் இருந்தது அந்த துறையின் அதிகாரம்  வைகோவாவின் கையிலா இருந்தது.


இப்படி மக்களுக்காக குரல் கொடுக்கும் நபர்களையும் கேலி செய்து வரவிடாமல செய்துவிட்டு இப்போ மக்களின் குரலை இந்த எம்.எல்,ஏக்கள் கேட்கவில்லை என்று குறை சொல்லுவது ஏன்? உங்கள் பேச்சை கேட்டால் அவர்களின் வாழ்வும் நாசமாகத்தானே போகும். உங்களின் பேச்சை கேட்பதற்கு பதிலாக தங்களுக்கு வாழ வாய்ப்பு கொடுப்பவர்களுக்குதானே அவர்கள் ஆதரவு தருவார்கள். உங்களைப் போல உள்ள முட்டாள்களா அவர்கள் நல்லது செய்பவர்களை விட்டுவிட்டு கெடுதல் செய்பவர்களுக்கு ஆதரவு அளிக்க?

அன்புடன்
மதுரைத்தமிழன்.

என்னடா கலைஞர்  ஜெயலலிதா வைகோ சகாயம் போன்றவர்களை சுட்டிக்காட்டிவிட்டு ஸ்டாலினை பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்கிறீர்களா? அதுவும் சரிதான். ஸ்டாலின் என்ன தான் நீண்டகாலம் அரசியல் பாடத்தை கலைஞரிடம் கற்றாலும் அவர் இன்னும் பாஸ் ஆகாமல் சப்ரிசனிடம்தான் இன்னும் டியூசனுக்கு போய்கொண்டிருக்கிறார் அதனால்தான் என்னவோ  ஸ்டாலினுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்று மிகவும் வேகமாக செயல்படும் திறன் இல்லை அதுமட்டுமல்லாமல் அவருக்கு சரியான ஆலோசனை சொல்லவும் அருகில் முக்கிய ஆட்களும் இல்லை, அதுனால்தான் கடைசிவரை அமைதியாக இருந்துவிட்டு எடப்பாடிக்கு எதிராக வாக்கு அளிக்காமல் சட்டைகிழி நாடகத்தோட வெளிவந்து இருக்கிறார்.ஹும்ம் இந்த புள்ளை என்னைக்கு அரசியல் பாடம் கற்றுக் கொண்டு என்னைக்கு  முதல்வராவது?

4 comments:

  1. உண்மை.. உண்மை... வேறென்ன சொல்ல!

    ReplyDelete
  2. அதுவும் இலவச பேன் மிக்சி, கிரைண்டர். எல்லாம் வாங்கிக் கொண்டு ஓட்டுக்கு பணமும் பெற்றுக் கொண்டு..........

    ReplyDelete
  3. நல்லா உண்மையைச் சொல்லியிருக்கீங்க. நம்ம தமிழக மக்களை நம்பினால், எம்.எல்.ஏக்களுக்கு பைசா பிரயோசனம் கிடையாது. இதை, உங்களின் ஊரான திருமங்கலம் (வைட்டமின் ப) சார்பில் ஆதரிக்கிறேன்.

    ReplyDelete
  4. அட சூப்பர்! செமையா சொல்லியிருக்கீங்க. சகோ!!

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.