Thursday, February 2, 2017

இந்த காலத்து பெண்கள்?


இந்த காலத்தில் பெண்களுக்கு நல்லா சமைக்க தெரிகிறதோ இல்லையோ ஆனால் எப்படி நன்றாக சமையல் குறிப்பு எழுதி பதிவாக போடத் தெரிகிறது.


இப்படி சமையல் குறிப்பு போடுபவர்கள் சமைத்து முடித்துவிட்டு அதை சாப்பிட சொல்லி கணவருக்கோ குழந்தைகளுக்கோ கொடுத்து அதை அவர்கள் உண்மையிலேயே ரசித்து சாப்பிடுகிறார்களா என்பதை வீடியோவாக எடுத்து போட்டால் நன்றாக இருக்குமே/


டிஸ்கி : அப்படி வீடியோ எடுக்கும் போது கணவரையும் குழந்தைகளையும் மிரட்டி நன்றாக இருப்பது போல நடிக்க சொல்லக் கூடாது



அன்புடன்
மதுரைத்தமிழன்

32 comments:

  1. சரி, நாளைக்கே fb ல லைவ் போடுறேன்

    ReplyDelete
    Replies
    1. ஹலோ நான் சொன்னடு இந்த காலப் பெண்களை நீங்க எல்லாம் அந்த காலத்து ஆட்கள் ஹீஹீ

      Delete

    2. அப்படியே நீங்கள் போட்டாலும் நீங்கள் அவர்களை முன்பே மிரட்டி இருக்க மாட்டீர்கள் என்பதற்கு சாட்சி உண்டா?

      Delete
    3. ஒரு வேளை அவர்கள் ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள் என்றால் அந்த உணவு தயாரிக்கும் முறையை அண்ணன் என்னிடம் இருந்து கற்று கொண்டாதாகவே இருக்கும் ஹீஹீ நான் வரட்டா இனிமேல் இங்கே இருந்தால் தலைக்கறி ஆக்கினாலும் ஆக்கிவிடுவீர்கள்

      Delete
    4. இருபத்திரெண்டு வருசமா குப்பை கொட்டுறேனே சுமாரா கூடவா சமைக்க முடியாதா

      Delete
  2. ஒரு விஷயம் தெள்ளத்தெளிவா பயாஸ்கொப்பில கண்ணு முன்னாடி தெரியுது :)
    அதாகப்பட்டது உங்களுக்கு எதிரிகளின் எண்ணிக்கை மும்மடங்கா அதிகரிக்கப்போகுது அதுவும் பெண்கள் :)
    எங்க வீட்ல தட்ல போடறது நான் காமராவா ஆன் பண்றதுக்குள்ள முடிஞ்சிடும் அதனால் வீடியோ எடுக்க சான்ஸ் இல்லை

    ReplyDelete
    Replies
    1. என்னை பார்க்காத வரையில் தான் அவர்கள் எதிரிகள் பார்த்த பின் அவர்கள் என் நட்பாக மாறிவிடுவார்கள்

      Delete
  3. உங்க ஆத்து மாமியை வைத்து இப்படி ஒட்டுமொத்தமாக பெண்கள் குலத்தை கேலி செய்யக்கூடாது.இதுக்காகவே நாங்கல்லாம் ஒன்று கூடி மெரினாவில் சமைத்து போட நீங்க மட்டும் சாப்பிடும் தர்ணாவை ஆரம்பித்து விடுவோம். பார்த்து பத்திரமா இருந்துக்கோங்கப்பூ

    ReplyDelete
    Replies
    1. நிஷா நோ நோ....மதுரைத் தமிழன் சமைச்சுப் போட நாம எல்லாரும் சாப்பிடனும் அதை லைவ் டிவி ஷோ!!! இதெப்புடி....ஏன்னு கேட்டிங்கனா மதுரை சகோ நல்ல சமைப்பாரு...இல்லையா மதுரை சகோ நான் சொல்லறது கரீக்டுதானே??!!!

      கீதா

      Delete
    2. மதுரை சகோ நாம் கேக்கற டிஷ் எல்லாம் செய்து கொடுப்பாரு தெரியுமா..!!!அவர்கிட்டருந்துதான் ராஜியே கத்துக்கிட்டுருக்காங்களாம்!!!!! ஸோ ஏஞ்சலினுக்கு பேலியோ டயட்....ராஜி, நிஷா (நீங்க கூட மதுரை சகோகிட்ட கத்துக்கிட்டுத்தானே ஸ்விஸ்ல உணவகம் நடத்துறீங்க!!!!) உங்கள் மெனு சொல்லிடுங்க...எனக்கு இலங்கை இடியாப்பம் அண்ட் சொதி!!!! அதிரா வருவாங்க இப்ப...அவங்களும் சேர்ந்துக்குவாங்க...மதுரை சகோ...பி ரெடி...ஹிஹிஹி

      கீதா

      Delete
    3. /மதுரை சகோ நாம் கேக்கற டிஷ் எல்லாம் செய்து கொடுப்பாரு தெரியுமா..!!!அவர்கிட்டருந்துதான் ராஜியே கத்துக்கிட்டுருக்காங்களாம்!!!!! ஸோ ஏஞ்சலினுக்கு பேலியோ டயட்..//

      யெஸ் ..எனக்கு வெஜ் stir fry ,அவோகேடோ சாலட் .க்ரில்ட் அஸ்பாரகஸ் ,காலிப்ளவர் ரைஸ் வல்லாரை கேல் ஸ்மூத்தி ..அதிராக்கு பனங்கிழங்கு 10 கட்டு 4 பிளேட் பிரியாணி 2 பிளேட் சிக்கன் டிக்கா அப்புறம் 1பிளேட் மட்டன் சிந்தாமணி ..ஒரு falooda வேற நினைவு வந்தா சொல்றேன்னு சொன்னாங்க

      Delete
    4. ஹாஹா! நல்லா மாட்டிகிட்டாருப்பா.கீதா நீங்க சொல்வது தான் சரி. நாம மகளிர் படையெல்லாம் அவங்கவங்க குடும்பத்தோடு ஒன்று கூடினாலே மெரினா அதிர்ந்திரும்ல. அதில் மதிரைத்தமிழன் நாங்க கேட்டும் மெனுவெல்லாம் சமைத்து தர வேண்டும். இல்ல எனில் அவரிடம் ஒரு வாளியைக்கொடுத்து கலல்ல இருக்கும் ஆயிலை அள்ளி சுத்தம் செய்ய அனுப்பித்து விடலாம்.

      Delete
    5. நீங்க சொல்வதெல்லாமே சரிதான் கீதா. இனிமேல் இப்படி ஒரு பதிவு போட கனவில் கூட நினைக்க மாட்டார். ஹாஹா

      Delete
    6. நிஷாவின் டீல் எனக்கு பிடிச்சிருக்கு அண்ணல் அதில் ஒரு சிறு திருத்தம் மெரினாவில் வைத்து சமைத்து போடுவதற்கு பதில் என்வீட்டில் வைத்து போட்டால் நன்றாக இருக்கும்

      Delete
    7. ஏன்பா இந்த பிளாக் பதிவில் ரிப்ளை எழுத்துப்பிழை வந்தால் அதை திருத்த ஏதேனும் வழி இல்லையா? முழு பின்னூட்டத்தையும் ஒரு எழுத்துப்பிழைக்காக அழிக்க வேண்டி இருக்கின்றது. மேலே கீதாவுக்காக என் பதிலில் கல்ல்ல்ல்ல்ல்லல்ல இருக்கும் ஆயில் இல்லை. கடலில் இருக்கும் ஆயில் என திருத்திப்படிங்க..

      இந்த மதுரைத்தமிழன் இந்த விடயம் தெரிந்து தான் எனது டீலுக்கு ஒக்கே என சொல்லிட்டாரா? என்னோட டீல் கீதா பேச்சுக்கு பின் மாறிப்போச்சு. ஷோ கீதாவோட டீலிங்க் தான் என்னோடதும்.ஓக்கேயா சார்? ஆனாலும் செம்ம்ம்ம தைரியம் தான் சார். சாருக்கு ரிஸ்ட் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல என இப்பத்தான் புரிந்தது.

      அமெரிக்காவில் இருக்கும் உங்கள் வீட்டு கிச்சனுக்கு வர ராஜி பேமிலி,ஏஞ்சல் பேமிலி, கீதா பேமிலி, நிஷா பேமிலி, கிரேஸ்பேமிலி, அதிரா பேமிலி என எல்லா பேமிலிக்கும் விமான டிக்கட் பார்சல் பண்ணுங்க,டிக்கட் கையில் கிடைச்சதும் உடனே கிளம்பிருவோம்ல!

      Delete
    8. ஏஞ்சல் இத்தனையும் உங்களுக்கேவா!? அம்மாடியோவ். பாவம் மதுரைத்தமிழன்.
      இனி இப்படி பதிவு போடுவியா போடுவியா என மதுரைத்தமிழன் தன் தலையில் தானே அடிச்சிக்குவதா என் கண்ணுக்கு முன் காட்சி ஓடுதேப்பா!உங்களுக்கு தெரியவே இல்லையா?

      Delete
    9. கீதா நீங்க எப்போதுமே எனக்கு சப்போர்ட் பண்ணுவிங்க இன்று பார்த்தால் எல்லாம் மாறி இருக்குதே இதுக்குதான் சொல்லுறது மேலை நாட்டு பெண்கள் கூட சகவாசம் வைச்சுக்க கூடாது நான் ஒரு பதிவை போட்டுட்டு வேலைக்கு போய்டிட்டு வருகிறதுக்குள்ள உங்களை மாற்றிவிட்டார்களே

      Delete
    10. ஏஞ்சல் நான் சமைப்பது எல்லாம் மனுஷங்க சாப்பிடுகிற ஐட்டங்களை மட்டுமே நீங்க கொடுத்த லிஸ்ட் எல்லாம் அதில் வாராது

      Delete
    11. நிஷா உங்களை எல்லாம் அமெரிக்க அழைக்க ஏற்பாடு பண்ணலாம் என நினைத்தேன் ஆனால் ஏஞ்சலின் & அதிராவின் அண்ணன் டொனல்ட் ட்ர்ம்ப் ரொம்ப எதிர்பூ தெரிவிக்கிறார் அதனால நானே உங்கள் வீடுகளில் கண்டிப்பாக வந்து தங்குகிறேன்

      Delete
    12. நிஷா என்னையை நானே தலையில் அடிச்சு கொள்ள மாட்டேன் அப்படியே எனக்கு தலையில் அடித்து கொள்ளனும் போல இருந்தால் என் மனைவியிடம் சென்று வழக்கமாக நீ எனக்கு தருவாயே அதில் இரண்டை எனக்கு இப்போ தாயேன் என்று கேட்பேன் அட்கு அவள் இரண்டு என்ன நாலா தருகிற்ன் என்று சொல்லி கொடுத்துவிடுவார்கள்

      Delete
    13. சரி யாரெல்லாம் என் சமையலை சாப்பிட ஆசைப்படுகிறிர்களோ அவர்கள் எல்லாம் வருகிற சண்டே ஈவினிங்க் என் வீட்டிற்கு வரலாம் அன்று தான் இங்கு அமெரிக்க புட்பால் மேட்ஸ் பைனல் நடக்கிறது அமெரிக்காவே திருவிழா போல எல்லார் வீட்டிலும் பார்ட்டி இருக்கும் என் வீடும் விதிவிலக்கு அல்ல நான் ஐந்து குடும்பங்களை அழைத்து இருக்கிறேன் அதனால் நீங்களும் அவர்களோடு சேர்ந்து வரலாம்

      Delete
  4. Replies
    1. கில்லர்ஜி இது உங்களுக்கு நல்ல யோசனையா தெரியுது இங்கு பாருங்க பெண்கள் என்னம்மா வரிந்து கட்டிக் கொண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் போல இங்கு போராடுறாங்க

      Delete
  5. 'சொந்த மனைவி' சமைச்சிப் போடறதை சாப்பிடறதுதான் கஷ்டம்.

    ReplyDelete
    Replies
    1. என்னையவிட நீங்க ரொம்ப தைரிய சாலியாக இருக்கீங்க விஸ்வநாத் அது தான் உண்மையை அப்படியே பூடு உடைத்துவிட்டீங்க

      Delete
    2. உங்க வீட்டம்மா விலாசம் வேண்டாம் போன் இலக்கம் எனக்கு அனுப்பி வையுங்களேன் சாரே

      Delete
    3. விஸ்வநாத் இந்த அம்மா உங்கவீட்டு அம்மாவின் போன் நம்பரை கேட்க்கிறார் ஹீஹீ இப்படிதான் கோர்த்துவிட்டுவிட்டு நாம் எஸ்கேப் ஆகணும்

      Delete
  6. சே சே நான் இல்லாத நேரமாப் பார்த்துப் போஸ்டைப் போட்டு, அதுவும் நம்போன்ற கேள்சை:) தப்புத் தப்பாகப் பேசிய அவர்கள் உண்மைகள்(கொஞ்சம் குட்டிப் பெயராக்கினால் ரைப் பண்ண ஈசியா இருக்குமெல்லோ) மீது பிரித்தானியப் பெண்கள் ஒன்றியம் ஒன்றிணைந்து மானநஷ்ட வழக்குப் போடுறோம்ம்ம்ம் ... உடனடியா ஆயராகுங்கோ:) ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ஸ்ச்ஸ் கூலா ஒரு கப் மோர் கிடைக்குமோ பிளீஸ்ச்:)

    ReplyDelete
    Replies
    1. அதிரா என் மேல் மான நஷ்ட வழக்கு போட முடியாது அப்படியே நீங்கள் போட்டாலும் கோர்ர்ட் மானம் சூடு சுரணை இல்லாதவன் மேலே நம்மால் கேஸ் போட முடியாது என்று சொல்லி வழக்கை தள்ளு படி பண்ணிடும்

      Delete
  7. குட்டி பெயர்தானே ஒதோ இங்கே உங்களுக்காக


    மதுர, ம.தமிழன், மதுரைத்தமிழன் என்றும் விளிக்கலாம்

    ReplyDelete
  8. @Geetha, Nishaa , Athira HI FIVE 😃😄😃😄

    ReplyDelete
  9. நல்ல விஷயம்.... பல வீடுகளில் ஆண்களும், குழந்தைகளும் சோதனை எலிகள்! பாவம்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.