இதுதான் காதல் என்பதா.....
காதலர் தினம் என்பது காதலித்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக பலஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும், திருமணம் செய்து அதன் பின் காதலித்து கொண்டிருப்பவர்களுக்கு மட்டும்தான். இது கள்ளக்காதலர்களும் கல்லூரி காதலர்களும் கொண்டாடுவதற்கு அல்ல...இவர்களின் காதலில் கிஃப்ட்தான் மாற்றிக் கொள்வார்கள். ஆனால் உண்மையான காதலர்கள் இதயங்களை மாற்றிக் கொள்வார்கள்..
காதல் கெட்டவனையும் ஒரு நொடியில் நல்லவனாக மாற்றிவிடும். பாலைவனத்தையும் சோலைவனம் ஆக்கிவிடும். காதல் இல்லாத வாழ்க்கை இது எல்லாவற்றையும் தலை கீழாக மாற்றிவிடும் .எதற்கு இந்த காதல் புராணம் என்று கேட்கிறீர்களா? இன்று காதலர் தினம் என்பதற்காக மட்டுமல்ல வெவ்வேறு மதங்களை சார்ந்த நானும் எனது மனைவியும் திருமணம் செய்து மதங்களை மாற்றாமல் மனங்களை மட்டும் மாற்றி பல்லாண்டுகளாக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என் குழந்தையும் நாங்களும் எம்மதமும் சம்மதம் என்று நட்புடன் அனைவருடன் அன்புடன் பழகி வாழ்ந்து வருகிறோம். சரி மேலும் மேலும் என் புராணம் படாமல் இங்கே வருகை தந்த பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியாக காதல் கதைகளை தந்துள்ளேன், இதை படித்தால் உண்மையான காதல் என்றால் என்னவென்று புரிந்து கொள்ளலாம்.படிக்கும் முன்பு பெண்களுக்கு ஒரு அட்வைஸ் இதை பொது இடத்த்ல் இருந்து படிக்க வேண்டாம்.. காரணம் இதை படித்த பின் உங்கள் கண்ணில் இருந்து கண்ணிர் வரும் அதை பார்க்கும் ஆண்கள் என்னங்க உங்க புருஷன் உங்களை கொடுமை படுத்துகிறாரா அல்லது காதலன் கைவிட்டுவிட்டாரா அதற்கு எல்லாம் கவலைப்படாதீர்கள் என்று கல்யாணம் ஆகி பேரபுள்ளையை பார்த்துகிட்டு இருப்பரவர்கள் வருவார்கள் அதனால்தான் சொன்னேன் ஹீஹீ சரி சரி என்னை திட்டாமல் மேலே படியுங்கள்
பெண்களுக்கு :
காதலித்து கொண்டிருந்த இரண்டு வண்ணத்து பூச்சிகள் (Butterfly) தோட்டத்தில் கண்ணா மூச்சி (Hide&Seek) விளையாடிக் கொண்டிருந்தன.அப்போது ஆண் வண்ணத்து பூச்சி சொன்னது நாம் இருவருக்குள்ளும் ஒரு பந்தயம் வைத்து கொள்வோமா என்றது.
பெண் வண்ணத்து பூச்சி சரி என்று ஒத்துக்கொண்டு பந்தயம் என்ன வென்று கேட்டது
ஆண் வண்ணத்து பூச்சி சொன்னது. நாளை காலையில் யாரு சிக்கிரம் வந்து, இந்த பூவிற்குள் அமர்கிறார்களோ அவர்கள்தான் ரொம்ப அதிகமாக மற்றவர்களை காதலிக்கிறார்கள் என்று கருதப்படுவார்கள்,
பெண் வண்ணத்து பூச்சியும் சரி என்று சொல்லி பறந்து சென்றது.
அடுத்தநாள் அதிகாலையில் ஆண் வண்ணத்து பூச்சி குளிரையும் பொருட்படுத்தாமல் பூ திறப்பதற்காக பெண் வண்ணத்து பூச்சி வந்து உட்காரும் முன் தாம் உட்கார்ந்து தன் அதிகப்படியான காதலை காண்பித்து விடவேண்டுமென்று காத்து இருந்தது`
கடைசியில், பொழுதும் விடிந்தது பூவும் மலர்ந்தது. ஆண் வண்ணத்து பூச்சி விரைந்து உட்காரச் சென்றது. ஆனால் அது கண்ட காட்சி பெண் வண்ணத்து பூச்சி இறந்து கிடந்த காட்சியைதான்.
அந்த பெண் வண்ணத்து பூச்சி இரவு முழுவதும் குளிரில் உட்கார்ந்து இருந்து..காலையில் காதலனை பார்த்ததும் அதனுடன் பறந்து சென்று தான் எந்தளவுக்கு காதலனை நேசிக்கிறோம் என்று சொல்ல காத்திருந்தது.
இந்த கதை இங்கே வரும் பெண்களுக்காக எழுதப்பட்டது. .காதலிகளே (பெண்களே) நீங்கள் உங்கள் காதலை எண்ணி பெருமைபட்டு கொண்டு உங்கள் கண்ணில் வடியும் கண்ணிரை துடைத்து கொண்டு இதோடு படிப்பதை நிறுத்தி கொள்ளுங்கள். காரணம் பின் வரும் கதை ஆண்களூக்கு மட்டுமே...
காதலர்களே வருத்தபடாதீர்கள். நம் காதல் பெண்களின் காதலுக்கு எந்த அளவும் குறைந்தது கிடையாது. பின் வரும் காதல் கதையை படியுங்கள் பின் அதன் படி நடங்கள்.....
ஆண்களுக்கு :
ஒரு பிஸியான காலை நேரத்தில் 8 மணியளவில் 80 வயதான ஒரு பெரியவர் மருத்துவமனைக்கு வந்தார். கையில் உள்ள கட்டுகளை அவிழ்த்து தையலை பிரிப்பதற்காக வந்த அவர் 9 மணியளவில் இன்னொரு அப்பாயிண்ட்மெண்ட் இருப்பதாகவும் சீக்கிரம் செல்ல வேண்டும் என்று கேட்டு கொண்டார்.டாக்டருக்கு பார்க்க வேண்டிய பேஷண்ட்கள் அதிகம் இருந்தாலும் பெரியவர் மேல் இரக்கம் கொண்டு அவர்காயங்களை பரிசோதனை செய்து அதற்கு வேண்டிய மாற்று ஏற்பாடுகளை செய்துகொண்டவாறே அவரிடம் பேச்சு கொடுத்தார்.
கடிகாரத்தை மாறி மாறி பார்த்து கொண்டிருந்த பெரியவரை பார்த்து டாக்டர் கேட்டார் பெரியவரே உங்களுக்கு வேறு ஏதும் டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட இருக்கிறதா என்று . அதற்கு அந்த பெரியவர் இல்லை டாக்டர் ஆனால் நான் நர்ஸிங் ஹோமுக்கு போய் என் மனைவி கூட காலை உணவு சாப்பிட வேண்டும் என்றார்.
டாக்டர் அவர் மனைவிக்கு என்ன ஆயிற்று என்று விசாரித்தார் . அதற்கு அந்த பெரியவர் சொன்னார் என் மனைவிக்கு ( Alzheimer’s disease) ஞாபக மறதி வியாதிக்கு அந்த நர்ஸிங் ஹோமிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்றார். உடனே டாக்டர் கேட்டார் நீங்கள் கரெக்ட்னா நேரத்திற்கு போகவில்லை என்றால் உங்கள் மனைவி அப்செட் ஆகிவிடுவாரா என்று?
பெரியவர் சொன்னார் இல்லை டாக்டர் என் மனைவிக்கு நான் யாரு என்று கூட கடந்த ஐந்தாண்டுகளாக தெரியாது. அந்த அளவிற்கு ஞாபக மறதி என்றார்.
டாக்டருக்கு ரொம்ப ஆச்சிரியம் கலந்த வியப்புடன் அவரை பார்த்து உங்கள் மனைவிக்கோ நீங்கள் யாரு என்று தெரியாத போதும் தினசரி அவர்களுடன் சேர்ந்து சாப்பிட விரும்புகிறீரகளா என்று கேட்டார்.
அதற்கு அந்த பெரியவர் சிரித்தவாறே டாக்டரை தட்டிக் கொடுத்து கொண்டே சொன்னார். டாக்டர் அவளுக்கு வேண்டுமென்றால் நான் யாரு என்று தெரியாது ஆனால் எனக்கு அவள் யாரு என்று தெரியுமே...அவள்தான் என் காதல் மனைவி என்று.
அதை கேட்ட டாக்டரின் கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் வழிந்தோடின.
That is the kind of love I want in my life.”
True love is neither physical, nor romantic.
True love is an acceptance of all that is, has been, will be, and will not be.
ஹலோ பெண்களே உங்களை யாரு இது வரை வந்து படித்துவிட்டு தேம்பி தேம்பி அழுக சொன்னது
என்ன நாமும் இந்த ஜோடிகள் மாதிரி வாழ்ந்து காட்டுவோமா.. உங்களுக்கு நேரம் இருந்தால் பதில் எழுதுங்களேன் நீங்கள் என்ன நினைகிறீர்கள் என்று???
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி: இது ஒரு மீள் பதிவு http://avargal-unmaigal.blogspot.com/2011/02/blog-post_14.html
இரண்டுமே நான் ஏற்கனவே படித்த கதைகள்தான் என்றாலும், இன்று என்னை மீண்டும் படிக்க வைத்து ’காதலர் தினம்’ என்ற நல்ல நாளும் அதுவுமா, என்னைத் தேம்பித்தேம்பி ஒரேயடியாக அழ வைத்து விட்டீர்கள். !
ReplyDeleteஎனினும் நல்ல கதைகளை மீண்டும் இன்று படிக்க வைத்த தங்களின் இந்தப் பதிவுக்கும், பகிர்வுக்கும் என் அன்பு நன்றிகள்.
உண்மைக் காதல் வாழ்க !
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Deleteவாழ்த்துக்கள் மதுரைத் தமிழன். உங்கள் புராணம் அன்புமயமானது, வாழ்க வளமுடன்.
ReplyDeleteஇரண்டு கதைகளும் அன்பின் ஆழத்தை சொன்னது.
கண்கள் கசியத்தான் செய்தது.
எங்கள் வீட்டிற்கு வந்தவர்களும் எங்களை நேரில் பார்த்து பழகியவர்களுக்கும் இது எப்படி சாத்தியம் ஆனது என்று வியக்கிறார்கள். எதிரும் புதிருமாக உள்ள மதத்தை சார்ந்தவர்கள் இப்படி இணையாக இத்தனை ஆண்டுகள் சேர்ந்து வாழ்கிறார்களே என்றும் ஆச்சிரியப்படுகிறார்கள்
Deleteஆச்சிரியம் தொடர வாழ்த்துக்கள்.
Deleteஹா ஹா ஹா ஏதோ நீங்களாகவே முடிவெடுக்கிறீங்க, பெண்கள் எப்பவும் தேம்பித் தேம்பி அழுவோர் என:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. எங்களுக்கு காதலிக்கவே நேரம் போதவில்லையே எனத்தான் அழுகிறோமே தவிர:) இப்பூடிக் கதை படிச்செல்லாம் அழமாட்டோம்:)..
ReplyDelete
Deleteஒகோ நீங்கள் உள்ளுக்குள் அழும் ரகமோ?
இரண்டு குட்டிக் கதைகளுமே அழகான உதாரணங்கள், உண்மைதான் என்னைப் பொறுத்தும் வாழ்வில் எதுவும் இல்லாமல் போகலாம் ஆனா கணவன் மனைவிக்குள் அன்பு-காதல் இல்லையெனில், அதன்பின்பு ஊருக்காக வாழ்வதில் ஏதுமில்லை... காசா பணமா காதல்தானே..
ReplyDeleteஇருப்பினும் கல்லூரிக் காதலர்கள் கொண்டாடக்கூடாதென திட்டிட்டீங்க பாருங்க:)... அப்போ நீங்க லவ் பண்ணித்தானே கல்யாணம் கட்டினனீங்க? வந்த பாதையை மறக்கலாமோ? கர்ர்:))..
இன்றைய கல்லூரிக்காதல்கள் 99 சதவிகிதம் போலியானது இனக் கவர்ச்சியால் வருவது என்பதால் சொன்னேன் எனது காதல் கல்லூரிக்காதல் அல்ல படிப்பு முடித்து வேலை பார்க்கும் போது வந்த காதல்... கல்லூரி பருவத்தில் நான் காதலித்தேன் ஆனால் அதை நான் காதல் செய்த பெண்னிடம் வாய் திறந்து கடைசி வரை சொல்லவில்லை நான் காதலிக்கிறேன் என்று அந்த பெண்ணிற்கும் நன்றாக தெரியும் ஆனால் அவளும் வாய் திறக்கவில்லை அவள் என் வாயில் இருந்து சொல்ல பல வகையில் முயற்சித்தாள் ஆனால் வேலைக்க்கு போகும் வரை நான் வாய் திறக்க கூடாது என்று இருந்தேன் ஆனால் சென்னை வந்ததும் எல்லாம் மாறிப் போனது... அந்த பெண் ஆங்கிலோ இண்டியப் பெண்
Deleteஅருமை
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Deleteவழக்கமாக இளைமையான கருத்துக்களைச் சொல்லிவரும் நீங்கள், காதலர் தினத்தில் எழுதியிருப்பதைப் படிக்கும்போது உங்களுக்கு வயதாகிக்கொண்டு வருகிறதோ என்ற கவலையை ஏற்படுத்துகிறது. - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
ReplyDeleteஅப்புறம் வெல்கம் டூ நீயூஜெர்ஸி. நம்ம குரு ரமணிசார் மார்ச் மாதம் நீயூஜெர்ஸி வருவதாக சொல்லி இருக்கிறார் அவர் வந்த பின் நாம் கண்டிப்பாக சந்திப்போம்.
Deleteகனம் கோர்ட்டார் அவர்களே இந்த மதுரை தமிழன் .. பெண்களை காதலர் தினமுமதுவுமா அழ வைச்சிட்டார் நல்ல தீர்ப்பா சொல்லுங் இங்கே வந்து ..
ReplyDeleteஅந்த பட்டாம்பூச்சி கதை படிச்சி ஐ ஆம் ஸ்டில் க்ரையிங் :(
நீங்க இந்த கதையை படிச்சுதான் காதலர் தினத்தில் அழுதீங்க அந்த மதுரைதமிழனோ காதலி இல்லை என்பதால் அழுததால் சோகத்தில் இப்படி ஒரு பதிவை எழுதி இருக்கிறார். யாரவது மாமி இருக்கிறாங்கலே என்று கேட்க வேண்டாம் மாமிக்கு காதலி என்பதில் இருந்து மனைவி என்ற ஸ்தானத்திற்கு புரோமமோஷன் கொடுத்துவிட்டதால் காதலி போஸ்டிங்க் ஸ்டில் காலியாக இருக்கிறது
Deleteமிகவும் சந்தோஷமா இருக்கு சகோ உங்க ரெண்டுபேரையும் நினைச்சா ..எங்கள் குடும்பத்திலேயே இரண்டு பேரை மதம் மாற வைச்சாங்க உறவினர் ..எனக்கு அது ரொம்ப கஷ்டமா இருந்தது ..காதலுக்கு மதம் குறுக்கே வரக்கூடாது ..அப்படி வரும் பட்சத்தில் அது காதலுக்கு மரியாதையை இராது .உண்மை காதல் மதம் மாற வற்புறுத்தாது .. இருவருக்கும் அன்பு மட்டுமே போதும்
ReplyDeleteஎங்கள் காதலில் எங்க குடும்பத்தை தலையிட நாங்கள் அனுமதிக்கவில்லை அதனால் எந்த பிரச்சனையும் எழவில்லை
Deleteநீங்க சொன்ன அந்த வயதான Alzheimer ஜோடிஸ் இங்கே நிறைய உண்டு ..எங்க ஆலயத்துக்கு ஒருத்தர் அவர் மனைவியின் கையை பிடிச்சி கூட்டிட்டு வருவார் 3 வருஷமா பார்க்கிறேன் கண்ணில் நீரை வரவழைக்கும் அவர்களின் அன்பு
ReplyDeleteநானும் அந்த மாதிரி ஜோடிகளை பார்த்து இருக்கிறேன் அதுமட்டுமல்ல கடந்த வாரத்தில் எனது கஸ்டமராக வந்த ஒரு தம்பதிகள் வியக்க வைத்தார்கள் அவர்களுக்கு கல்யாணம் ஆகி 63 வருடங்கள் ஆகிவிட்டது என்று சொன்னார்கள் அதுமட்டுமல்ல அவர்கள் இருவரும் நகைச்சுவௌ உணர்வோட இன்னும் இருக்கிறார்கள் என்பதுதாம் மிக மிக ஆச்சிரியம் தருவதாக இருந்தது,
Deleteநம்ம ஊரில் பலருக்கு வெளிநாட்டவர்கள் என்றாலே இளப்பமாக இருக்கும் காரணம் அவர்களின் திருமண வாழ்க்கை காலம் மிக குறுகியது என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள் அதுமட்டுமல்ல நம்ம முறை வாழ்க்கைதான் பெஸ்ட் என்றும் நினைக்கிறார்கள் ஆனால் நான் இங்கு வந்த பார்தத போது பல பேரின் வாழ்க்கை நம்மைவிட மிக அற்புதமாக இருக்கிறது. ஆனால் இன்றைய தலைமுறையில் அது இங்கும் மாறிக் கொண்டிருக்கிறது எனப்து மறுக்க முடியாத உண்மை
பெண்களை மட்டும் தேம்பி அழ வைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்
ReplyDeleteஆண்களும் அழுவார்கள் ஆனால் அவர்கள் பெண்கள் பார்க்காத போது அழுவார்கள்
Deleteஉங்கள் தளத்தில் வித்தியாசமான பதிவு. ரசனை.
ReplyDeleteஇப்படிதாங்க ஸ்ரீராம் ஆரம்ப காலங்களில் என் பதிவுகள் வந்தன ஆனால் அதை படிக்கதான் ஆட்கள் குறைவு அதனால் என் வழியை மாற்றிக் கொண்டிருக்கிறேன் அதன் பிறகு நான் பதிவுகள் போடவில்லையென்றாலும் தினமும் கணிசமான அளவு பார்வையாளர்களின் எண்ணிக்கை வந்து கொண்டிருக்கிறது
Deleteநல்ல பதிவு மதுரைத் தமிழன்! உங்கள் இருவரையும் நினைத்துப் பெருமையாக இருக்கிறது! கதைகள் மனதை நெகிழ்த்தி விட்டது! ஆங்கில வாசகம் சூப்பர்!
ReplyDeleteகீதா: மேலே சொன்ன கருத்துடன், அந்த பட்டர்ஃப்ளை கதை கண்ணில் நீர் வரவழைத்துவிட்டது. பாவம்! அந்த வயதானவர்கள்! ஆனால் அந்த அன்பு க்ரேட்!!!
ஆங்கில வாசகம் இணையத்தில் சுட்டது ஹீஹீ
Deleteஇங்கு ஆண்களே வரமாட்டார்களா!!ஹிஹிஹி! இங்கு வரும் ஆண் மக்களே உங்களுக்கு இளகிய மனசு இல்லை என்று மதுரைத் தமிழன் சொல்லுகிறார் பொங்கி எழுங்கள்!! தட்டிக் கேளுங்கள்!! ஹிஹிஹி
ReplyDeleteஆண்களே வரமாட்டார்கள் என எங்கும் நான் சொல்லவில்லை இரண்டாவது கதையை பெண்கள் படிக்க வர வேண்டாம் அது ஆண்களுக்குரிய கதை என்றுதான் சொல்லி இருக்கிறேன்
Delete