Monday, February 13, 2017

avargal unmaigal
தமிழக அரசியல் பரமபத விளையாட்டில் ஸ்டாலினுக்கு இறங்குமுகமா அல்லது ஏறுமுகமா?



ஸ்டாலின் தன் கட்சியில் நீண்டகாலமாக இருந்து கட்சியோடு சேர்த்து பொதுநலப் பணியை செய்துவந்தாலும் இப்போது இருக்கும் பல புதிய கட்சிதலைவர்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது பல நேரங்களில் தடுக்கி விழுந்துதான் இருக்கிறார் என்பதோடு இன்னும் தடுக்கி விழுந்து கொண்டே இருக்கிறார் அதுமட்டும்ல்ல நீண்ட கால முயற்சியின் விளைவாக இப்போதுதான் அவரால் கட்சிக்குள்ளே தலைவர் பதவிக்கு ஈடாக செயல்தலைவர் பதவியை  பெற முடிந்து இருக்கிறது. இப்படி கட்சிக்குள்ளே ஒரு பதவியை இவ்வளவு கடினப்பட்டு பிடித்த இவருக்கு பொதுமக்களிடம் இருந்து ஆதரவை பெற்று முதலமைச்சர் பதவியில் உட்காருவது அவ்வளவு எளிதல்ல.


கடந்த முறை கலைஞர் பதவியில் இருந்து இறங்கிய பின் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாமல் இருந்த போது  ஸ்டாலின் கட்சியில் தலைவர் பதவியை பிடிக்க முயற்சித்து கொண்டு இருந்ததால் வெளியே என்ன நடக்கிறது என்பதை அறியாமல் உடன் பிறந்தவர்களை அணுசரித்து போகாமல் அவர்களுடன் மல்லுக்கட்டிக்  கொண்டு பாராளுமன்ற தேர்தலில் தன் அதிகாரத்தை பயன்படுத்தி தோல்வியை தழுவினார்


அதன் பின் வந்த சட்டமன்ற தேர்தலில் நல்ல வாய்ப்புக்கள் இருந்தும் அதனை சரியாக பயன்படுத்த தெரியாமல் மாற்று கட்சியினரை அரவணைத்து போகாததால் முதல்வர் பதவியை கோட்டை விட்டு இருக்கிறார். இந்த நேரத்தில் கலைஞர் மட்டும் முன்பு போல ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால் சென்னையில் வெள்ளம் வந்த போது ஜெயலலிதா  செயல்பாடமல் இருந்து மக்களிடம் கெட்ட பெயர் வாங்கியதை பயன்படுத்தி  மற்ற சிறுகட்சிகளுக்கு மக்களிடம் செல்வாக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களையும் தன் கட்சியில் சேர்த்து அரவணைத்து மக்களிடம் தான் மிகவும் பல பொருந்திய ஆளாக இருப்பது போல ஒரு இமேஜை க்ரியேட் பண்ணி முதல்வர் பதவியில் எளிதில் அமர்ந்திருப்பார். ஆனால் கலைஞரிடம் சிறுவயதில் இருந்தே அரிச்சுவடி கற்ற ஸ்டாலின் மற்றவர்களை அரவணைத்து போகாமல் கோட்டையை விட்டு இருக்கிறார்,


இப்போது தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் கூட்டதில் பெற்றோர்களை தவறவிட்ட குழந்தை போல தன்னந்தனியாக நிற்கிறார். அதுமட்டும்ல்ல  தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைக்கும் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை அதனால்  தம்மை நல்லவனக  காட்டிக் கொண்டு அப்பாவியாக நின்றால் அதிமுகவின் ஆட்சி மீது வெறுப்படையும் மக்கள் தன்னை அடுத்த தேர்தலில் ஜெயிக்க வைத்து தன்னை முதல்வாரக அழகு பார்க்க தொடங்கிவிடுவார்கள் என்று மனப்பால் குடித்து கொண்டிருக்கிறார்.


ஆனால் இதே சமயத்தில் தமிழகத்தில் நேரடியாக கால் ஊன்ற முடியாத பாஜக பின்புறம் வழியாக உள்ளே நுழைய முயற்சிகள் மேற்கொண்டு களத்தில் ஒரு புதிய ஹீரோவாக  பன்னீர் செல்வத்தை இறக்கிவிட்டது இந்த புதிய ஹூரோ மக்களின் மனதில் பதிய ஆரம்பித்துவிட்டார் இதையும் பார்த்து கொண்டு கண்ணை மூடிக் கொண்டு   இருக்கிறார் ஸ்டாலின். தமிழகத்தில் ஆளுனர்  ஜனநாயகபடு கொலையை செய்து கொண்டிருக்கிறார் , ஆளுநரின் கை ஓங்குவதை 98 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பது  ஸ்டாலினுக்க மட்டுமல்ல திமுகவிற்கும் நல்லதல்ல ஆனால் அதை எதிர்த்து குரல் கொடுக்க முடியாத பலவீனத்தில் இருக்கிறார்


ஸ்டாலின் இப்படி இருக்க மோடி தன்னை ஒதுக்கி தள்ளிய தமிழகத்தில் அதிமுகவை இரண்டாக உடைக்க முயற்சிப்பதுடன் எதிர்காலத்தில் திமுகவும் மிக ஸ்ட்ராங்கான கட்சியாக  ஆகவிடாமல் இருக்க பன்னிரை ஹீரோவாக்கி திமுகவை பலவீனமாக்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும், இப்படி ஹீரோவான பன்னிர் மிகவும் எளிமையானவராக தன்னை முன்னிலைப்படுத்தி தன் வீட்டிற்கு எளியமக்களும எளிதில் வந்து சகஜமாக உரையாடி செல்லும்படி மக்களோடு மக்களாக இணைந்து செய்லபட ஆரம்பித்துவிட்டார் அதுவும் ஒரு அரசியல்வாதியின் வீட்டிற்குள்  அதுவும் முதல்வரின் வீட்டுக்குள்  இவ்வளவு சுதந்திரமாக உள்ளே நுழைந்து புழங்க முடியும் என்பதும் மக்களிடையே ஒரு  மாற்றத்தை ஏற்படுத்தி பன்னீர்செல்வத்திற்கு ஒரு பெருத்த மாஸ்  உண்டாகிவருகிறது. எதிரியின் இந்த அசுர வளர்ச்சியை ஸ்டாலின் அமைதியாக ரசிப்பது அவருக்கு அரசியல் பரம பதத்தில் இறங்குமுகத்தையே கொடுக்கிறது.

மேலும் ஸ்டாலின் மக்களிடையே ஏற்பட்டுள்ள சமுக மாற்றத்தை புரிந்து கொள்ளாமல் ஜெயலலிதா போல தனக்குள் ஒரு வட்டத்தை போட்டு அதற்குள் யாரும் எளிதில் நுழையாதபடி பழைய அரசியலை  இதன் பின்னும் செய்து கொண்டிருந்தால் அவரது முதல்வர் கனவு என்பது என்றும் கனவாகே இருக்கும்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி :  எனது அடுத்த பதிவு ஸ்டாலின் மக்களின் மனதில் இடம் பிடிக்க என்ன செய்யலாம்?

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.