உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, June 29, 2015

அட இந்தியாவில் இப்படி எல்லாமா நடக்குது ? பேஸ்புக் ஸ்டேடஸுக்கள்avargal unmaigal
ஹெல்மேட்

கணவன் தலைக்கு ஹெல்மேட் மாட்டிய பின்தான் மனைவி கையிலே பூரிக்கட்டையை தொட வேண்டும் என்று தமிழக அரசு முதலில் சட்டம் கொண்டு வர வேண்டும் # அப்பாவி கணவனின் ஆசை

டூவிலரில் போகும் போது ஹெல்மேட் போடணும் என்று சட்டம் போடும் தமிழக அரசு ஏன் #"சென்னை ஏர்போர்ட்டுக்கு" போகும் போது கண்டிப்பாக ஹெல்மேட் போடணும் என்று சட்டம் இயற்றவில்லை

கட்டாயம் ஹெல்மேட் என்று சட்டம் கொண்டு வந்ததை போலவே கட்டாயம் 'காண்டம்' என்று சட்டம் கொண்டு வந்தால் பல  உயிர்களை காப்பாற்றலாமே( எயிட்ஸில் இருந்தும் புதிய உயிர்கள் பிறப்பதிலிருந்தும்)

என் தேசம்! என் மக்கள்! நான் !என் தேசம்! என் மக்கள்! நான் !

எனது கடந்த பதிவான இந்தியர்கள் இப்போதுதான் இப்படியா அல்லது எப்போதுமே இப்படியதானா  என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதி வெளியிட்டு இருந்தேன். அதைப்படித்த ஒரு நண்பர் சார் நீங்கள் வெளிநாட்டில் வசிப்பதால் இந்தியாவை பற்றி இப்படி குறைகளை சொல்லி பதிவு இட்டு இருக்கிறீர்கள் என்று சொல்லி ஆதங்கப்பட்டார். மேலும் இது போன்ற இந்தியாவில்தானே நீங்கள் படித்து வளர்ந்தீர்கள் ஆனால் இப்ப குறை சொல்லி பதிவு இடுகிறீர்களே இது நியாமா என்று கேட்டார். அதற்கு நான் சொன்னது நம் நாட்டில்  வசிக்கும் போது அது குறைகளாக என் கண்ணிற்கு தெரியவில்லை ஆனால் மேலை நாட்டிற்கு வந்த பின் இங்குள்ள சூழலை பார்த்த பின்தான் நாம் செய்பவைகளில் எந்த அளவிற்கு தவறுகள் இருக்கின்றன என்பது நம் கண்களுக்கு தெரிகின்றது அதனால் என்னுள் எழுந்த ஆதங்கமே அந்த பதிவிற்கு காரணம் அதை தவிர இந்தியாவை எந்த வகையிலும் தரம் தாழ்த்தி பேசுவதில்லை  காரணம் இன்னும் இந்தியா என் பிறந்த தேசமே என்று அவருக்கு விளக்கம் அளித்தேன் அதன் பின் என் பதிவிற்கு கருத்து சொன்ன விமல் ராஜ் தானும் அது போல ஒரு பதிவிட்டு இருப்பதாக சொன்னார் . அதுதான் என் தேசம்! என் மக்கள்! நான் !  அதை எழுதிய விமல் இந்தியாவில்தான் வசிக்கிறார்.வெளிநாட்டில் அல்ல. இவரின் பதிவிற்கு என்ன பதில் சொல்லப் போகிறீங்க நண்பரே அவருக்கும் என்னைப் போலவே இந்தியாவைப் பற்றிய ஆதங்கம்தான்... அதை அவரின் அனுமதியுடன் இங்கே பதிகிறேன்... படித்து கருத்து சொல்லுங்கள்

Sunday, June 28, 2015

லலித் மோடி விவகாரமும் குற்றவாளி கூண்டில் நிற்கும் மோடியும்avargal unmaigal

லலித் மோடி விவகாரத்தில் மோடியின் மெளனத்திற்கு காரணம், மோடி ப்ளாக்மெயில் செய்யப்படுகிறாரா அல்லது மெளனமாக இருப்பதுதான் சாமார்த்தியம் என்று நினைக்கிறாரா என்பதுதான் இப்போது மக்கள் மனதில் எழுந்துள்ள ஐயம்.

மோடியின் இந்த மெளனம் அவரின் மேலுள்ள இமேஜை படுபாதாளத்திற்குள் தள்ளிக் கொண்டு இருக்கிறது என்பதை அவர் அறிந்துதான் இருக்கிறார என்பதுதான் புரியதா புதிராக இருக்கிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க் மெளனத்திற்கும், மோடியின் மெளனத்திற்கும் பெரிய வித்தியாசம் உண்டு.

Saturday, June 27, 2015

கருக்கலைப்பு : கருவறையை கல்லறையாக்கலாமா? பெண்கள் அவசியம் படிக்க வேண்டியது
avargal unmaigal
(கருக்கலைப்பு ) கருவறையை கல்லறையாக்கலாமா? பெண்கள் அவசியம் படிக்க வேண்டியது

ஒரு பெண், டாக்டரிடம் சென்று டாக்டர் எனது பிரச்சனையை நீங்கள் தீர்க்க வேண்டும். உங்கள் ஒருவரால் மட்டும்தான் எனக்கு உதவ முடியும்.உங்களைத்தான் கடவுள் போல நம்பி வந்திருக்கிறேன். நீங்கள் மட்டும் முடியாது என்று சொல்லிவிடக்கூடாது என்றாள்.

அதை கேட்ட டாக்டர் உனக்கு என்னம்மா பிரச்சனை அதனை முதலில் சொல். என்னால் முடிந்த உதவிகளை நான் செய்கிறேன் என்றார்.

டாக்டர் என் முதல் குழந்தைக்கு ஒருவயது கூட முடியவில்லை. மீண்டும்  நான் உண்டாகியிருக்கிறேன். குழந்தைகளுக்கு இடைவெளி அதிகம் இல்லை.

அதை கேட்ட  டாக்டர் சொல்லும்மா  அதற்கு நான் என்ன பண்ண வேண்டும்.

அதற்கு அந்த பெண் என்னால் இந்த இரண்டு குழந்தைகளையும் கவனிக்க முடியாது. நீங்கள்தான் எனக்கு அபார்ஷன் செய்வதற்கு உதவ வேண்டும் உங்களைத்தான் மலைபோல நம்பியிருக்கின்றேன். என்று சொன்னாள்

Thursday, June 25, 2015

இந்தியர்கள் இப்போதுதான் இப்படியா அல்லது எப்போதுமே இப்படிதானா?இந்தியர்கள் இப்போதுதான் இப்படியா அல்லது எப்போதுமே இப்படிதானா?

1.அமெரிக்க கலாச்சாரம் மிக அசிங்கமானது என்று சொல்லிக் கொண்டே அவங்க கலாச்சராத்தை பாலோ பண்ணுபவர்கள்.

2. ஆஸ்திரேலியா நாட்டுக்கு அதிநவின ரயில் தாயாரித்து அனுப்புவார்கள் ஆனால் உள்ளுர்களுக்காக விடும் ரயிலை பிரஞ்சுகாரர்களிடம் இருந்து அதிகவிலை கொடுத்துவாங்குவார்கள்.

3. ஒன்றும் இல்லாத பாகிஸ்தான்காரர்கள் இந்திய இராணுவ ஆட்களை சுட்டுக் கொல்லுவார்கள் பதிலுக்கு நாங்கள் தாக்கினால் அந்த நாடே இருக்காது என்று உதார்விட்டுக் கொண்டிருப்பார்கள்.

ரொட்டி சுடக் கத்துக்குங்க மோடி அழைக்க போகிறார் ரொட்டி சுடரொட்டி சுடக் கத்துக்குங்க MAKE in INDIA project of MODI in full force

இதுவரை கேள்வியேபடாத அளவுக்கு கோதுமையை 5 லட்சம் டன் அளவிற்கு மோடி அரசாங்கம் ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. இந்த கோதுமை மிக ஹைபுரோட்டின் உடைய கோதுமையாகும் ஒரு டன் கோதுமைக்கு நிர்ணயக்கப்பட்ட விலை டாலர் $255 to $275 a tonne.

the sources, who declined to be identified because they are not allowed to discuss trade-sensitive issues publicly.

Industry and government officials estimate this year's wheat output at about 90 million tonnes, nearly 5 percent lower than the 2014 harvest but still exceeding domestic demand of about 72 million tonnes

Wednesday, June 24, 2015

நவீனகால திருவிளையாடல் (சிவபெருமானேயே கலாய்த்த மதுரைத்தமிழன் )Thiruvilayadal
நவீனகால திருவிளையாடல் (சிவபெருமானேயே கலாய்த்த மதுரைத்தமிழன் )

சிவபெருமானும் பார்வதியும் பேஸ்புக்கில் யாருக்கு அதிக லைக் வருகிறது. அது எதனால் வருகிறது என்று விவாதித்து கொண்டிருந்தனர். அப்போது பார்வதி சொன்னார் நான் சொல்லும் கருத்துகள் மிக நன்றாக இருப்பதால்தான் எனக்கு அதிக பாலோவர்களும் லைக்ஸும் கிடைக்கிறது என்று சொன்னார்

அதை கேட்ட சிவபெருமான் சிரித்தவாறே உனது கருத்துக்கு அல்ல. நீ பெண் என்பதால்தான் உனக்கு இவ்வளவு பாலோவர்களும் லைக்ஸும் கிடைக்கிறது. நான் போடும் சிறந்த கருத்துகளுக்கு சில லைக்ஸ்மட்டுமே கிடைக்கின்றது. இருந்தாலும் எனது கருத்துக்கள் மிக சிறப்பாக இருக்கின்றது என்று பலரால் பாராட்டப்பட்டு இருக்கிறது என்றார். மேலும் தொடர்ந்த சிவபெருமான் நான் ஒரு ரகசியம் சொல்லுகிறேன். சிவன் என்ற பெயரை ஷிவானி என்று பெயர் மாற்றம் செய்து ஒரு பேக் ஐடி வைத்து இருக்கிறேன். அதன் பாலோவர்கள் உனக்கு இருக்கும் பாலோவர்களை விட அதிகம். அதுமட்டுமல்ல அந்த பாலோவர்களில் நீயும் ஒருத்திதான் என்று சொல்லி சிரித்தார். அதை கேட்ட பார்வதி உங்களுக்கு ஏன் இந்த விளையாட்டு என்று கேட்கும் போது யாரோ ஒருவர் வரும் சத்தம் கேட்டு பேச்சை நிறுத்தி பார்க்கும் போது அங்கே மதுரைத்தமிழன் வருகை தந்து கொண்டிருந்தான்..

Sunday, June 21, 2015

யோகாவும் மோடி அரசியலும்.....யோகாவும் மோடி அரசியலும்.....

ஜூன் 21-ஆம் தேதியை "சர்வதேச யோகா தினமாக" கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானம் 177 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது .யோகா உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் மிகவும் நல்லதுதான்...ஆனால் திடீரென்று  யோகாவிற்கு மோடி அரசு கொடுத்த விளம்பரமும் முக்கியத்துவமும்தான் ஏன் என்று யோசித்து பார்த்தால் அதில் மோடியின் அரசியல் ஒளிந்து இருக்கிறது

அமெரிக்க மக்களுக்கு மிக குழப்பமான நாள் எது தெரியுமா?அமெரிக்க மக்களுக்கு மிக குழப்பமான நாள் எது தெரியுமா?

தந்தையர் தினம்தான்

காரணம் அன்றுதான் 80 சதவிகித குழந்தைகள் யாருக்கு தந்தையர் தின வாழ்த்து சொல்லுவது என்பதில் குழப்பமாக இருப்பார்கள்

அது போல 20 சதவிகித ஆண்கள் முகம் தெரியாத குழந்தைகள் யாரவது தன்னை தந்தை என்று சொல்லி வாழ்த்தை தெரிவித்துவிடுமோ என்றி அஞ்சி குழப்பத்தில் இருப்பார்கள்.

சரி அமெரிக்காவை கிண்டல் பண்ணினால் மட்டும்தான் சிரிப்பிங்களா? அப்ப இதை படியுங்க

தந்தையர் தினவாழ்த்துகள் பேஸ்புக் லைக்குகளுக்காக மட்டுமே தந்தையர்களுக்கு அல்லதந்தையர் தின வாழ்த்துக்கள் பேஸ்புக் லைக்குகளுக்காக தந்தையர் தினத்திற்காக அல்ல

இந்த காலத்தில் பிள்ளைகள்  தங்கள் தகப்பானாருக்கு  தந்தையர் தின வாழ்த்தை நேரில் சொல்லாமல் பேஸ்புக்கில் ஸ்டேடஸாக தெரிவிக்கின்றனர். ஆனால் தகப்பானார்கள் யாரும் தங்கள் மகனின் பேஸ்புக்கை பாலோ செய்வதில்லை அல்லது ஸ்டேடஸை படிப்பதில்லை இதுதான் நிதர்சன உண்மை

Thursday, June 18, 2015

படுக்கை அறையில் வெற்றி பெற படுக்கை அறை ரகசியங்கள் (பெண்களும் படித்து பயன் பெறலாம்)படுக்கை அறையில் வெற்றி பெற படுக்கை அறை ரகசியங்கள்  (பெண்களும் படித்து பயன் பெறலாம்)

ஆண்கள் ஆனாலும் சரி பெண்கள் ஆனாலும் சரி படுக்கை அறையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்காத ஆட்களே இல்லை எனலாம். அப்படி வெற்றி பெற சில பயனுள்ள ஆலோசனைகள் இங்கே உங்களுக்காக தரப்பட்டுள்ளன.


எந்த டிவி நல்ல டிவி? சன் Vs விஜய்?எந்த டிவி நல்ல டிவி? சன் Vs  விஜய்?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெர்சனல் வேலை காரணமாக மிக குறுகிய கால பயணமாக தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தது. அந்த பயண நாட்களில் பலரை சந்திக்க வேண்டி இருந்தது.சேல்ஸ்மேன் வேலைதான் எனது தொழிலாக இருப்பாதால் பலரிடம் பேசும் போது பல விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு அதிகம் அதனால் நான் பேசுவதை விட அடுத்தவர்கள் பேசி அதை கேட்பதில்தான் எனக்கு ஆர்வம்..

அதனால் பல விஷயங்களை அறியும் போது தமிழகத்தில் எந்த டிவி அதிக பேமஸ் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் நான் சந்தித்த பலரையும் கேட்டு தெரிந்து கொள்ளும் போது பலர் சன் டிவிதான் அதிகம் பேமஸ் என்றார்கள் வேறு பலரும் விஜய் டிவிதான் அதிக பேமஸ் என்றார்கள். இவர்களின் பதிலால் நான் மிகவும் குழம்பிதான் போனேன். எனவே அதை நானே நேரில் பார்த்து முடிவு செய்துவிடலாம் என்று நினைத்து அருகில் இருந்த டிவிகள் விற்கும் எலக்ட்ரானிக் கடையை நோக்கி சென்று அங்கே அமர்ந்து அங்கு விற்பனை செய்யும் தொழிலாளியிடம் சார் எனக்கு தெரிந்தவரிடம் எல்லாரிடமும் எந்த டிவி நன்றாக இருக்கும் என்று கேட்டேன் ஆள் ஆளுக்கு ஒன்று சொல்லுகிறார்கள் நீங்க சொல்லுங்க எந்த டிவி நன்றாக இருக்கும் என்று கேட்டேன் அதற்கு அவர் சார் விஜய் டிவி நன்றாக இருக்கும் என்றார். நான் உடனே அப்படியா அப்படியானால் அதை எனக்கு காண்பிக்க முடியுமா என்று கேட்டேன்.

Wednesday, June 17, 2015

புதிய மனிதாபிமான கொள்கையும் அதன் ஆதரவு நோக்கி எதிர்பார்த்து இருக்கும் தலைவர்களும்புதிய மனிதாபிமான கொள்கையும் அதன் ஆதரவு நோக்கி எதிர்பார்த்து இருக்கும் தலைவர்களும்

தற்போது இந்தியாவை ஆளும் பாஜக கட்சி ஒரு  புதிய மனிதாபிமான கொள்கையை மத்திய அமைச்சர் சுஷ்மா மூலம் அறிமுகப்படுத்தி உள்ளது அதன்படி இந்தியாவில் கோடிக்கணக்கான அளவில் மோசடி செய்தவர்கள் அல்லது மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஒடியவர்கள். இவர்களில் எவருக்கேனும் ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால்  அவர்கள் மத்திய அமைச்சர்களை அணுகலாம். உடனே மத்திய அமைச்சர்கள் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருவார்கள்... இந்த திட்டம் கோடிக்கணக்கான அளவில் மோசடி செய்தவர்களுக்கு மட்டும்தான் செல்லுபடியாகும் மற்ற பஞ்ச பரதேசி இந்தியர்களுக்கு அல்ல

Monday, June 15, 2015

பிரிட்டிஷார் பாணியில் செயல்படுகிறதா மோடி அரசாங்கம்பிரிட்டிஷார் பாணியில் செயல்படுகிறதா மோடி அரசாங்கம்

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிஷார் இந்தியாவை எப்படி ஆண்டார்களோ அப்படிதான் இப்போது மோடி அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்போது குறுநிலமன்னர்களை பிரிட்டிஷார் தங்கள் கைக்குள் போட்டு அதிகாரம் செலுத்தி வரி வசூலித்து நாட்டை ஆண்டார்கள் அதாவது குறுநிலமன்னர்கள் பிரிட்டிஷாருக்கு கப்பம் கட்டி வந்தனர் அப்படி செய்யாதவர்கள் ஒடுக்கப்பட்டார்கள்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog