புதிய மனிதாபிமான
கொள்கையும் அதன் ஆதரவு நோக்கி எதிர்பார்த்து இருக்கும் தலைவர்களும்
தற்போது இந்தியாவை
ஆளும் பாஜக கட்சி ஒரு புதிய மனிதாபிமான கொள்கையை
மத்திய அமைச்சர் சுஷ்மா மூலம் அறிமுகப்படுத்தி உள்ளது அதன்படி இந்தியாவில் கோடிக்கணக்கான
அளவில் மோசடி செய்தவர்கள் அல்லது மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஒடியவர்கள். இவர்களில்
எவருக்கேனும் ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால்
அவர்கள் மத்திய அமைச்சர்களை அணுகலாம். உடனே மத்திய அமைச்சர்கள் அவர்களுக்கு
வேண்டிய உதவிகளை செய்து தருவார்கள்... இந்த திட்டம் கோடிக்கணக்கான அளவில் மோசடி செய்தவர்களுக்கு
மட்டும்தான் செல்லுபடியாகும் மற்ற பஞ்ச பரதேசி இந்தியர்களுக்கு அல்ல
மனிதாபிமான ஆதரவை
எதிர் நோக்கி காத்திருக்கும் பட்டியலில் இருப்பவர்கள் இவர்கள்தான் தாவூத் இப்ராகிம்,
சுரேஷ் கல்மாடி, ஜெயேந்திரர், ஜெயலலிதா, சோட்டாராஜன், கனிமொழி, தாயாளு அம்மா,சஞ்சய்
தத், மாறன் சகோதரர்கள் மற்றும் பலர்.....
அன்புடன்
மதுரைத்தமிழன்( டி.ஜே.தமிழன்)
கிறுக்கு பசங்க ஊரில் கேனை பையன் நாட்டாமை. ஆடு நனைந்ததுன்னு ஒணான் அழுததாம்.
ReplyDeleteஇதுல ஒரு விஷயம் பாருங்க... நம்ம ஊர் பெரும்பாலான அரசியல்வாதிகளுடைய கணவன் -மனைவி மற்றும் பிள்ளைகள் இந்த மாதிரி ஆட்களுடைய வக்கீல்கள்.
நீ அடிக்கிற மாதிரி அடி .. நான் அழுவுற மாதிரி நடிக்கின்றேன். ஒட்டு மொத்தமா 100 கோடிக்கும் மேலான பொது மக்களை ...
டே.. அப்பரன்டிஸ் ...உங்க தலை எழுத்து நாங்க தான் உங்கள ஆளவேண்டும் என்று எழுதி இருக்கு.. YOU CANT CURE US... SO ENDURE US... என்று சொல்வது போல் இருக்கு.
லலித் மோடிங்கிறது
ReplyDeleteஅவங்க காதுல நரேந்திரமோடின்னு
விழுந்திருக்கும்
பாவம் அதைச் சொல்லமுடியாம
பேசத் தெரியாம பேசிட்டாங்க
"இந்த திட்டம் கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்களுக்கு மட்டும்தான் செல்லும் , மற்ற பஞ்ச பரதேசி இந்தியர்களுக்கு இல்லை" , அப்ப எனக்கு ஒண்ணும் இல்லைன்னு சொல்லுங்க .
ReplyDelete