(கருக்கலைப்பு ) கருவறையை
கல்லறையாக்கலாமா? பெண்கள் அவசியம் படிக்க வேண்டியது
ஒரு பெண், டாக்டரிடம் சென்று
டாக்டர் எனது பிரச்சனையை நீங்கள் தீர்க்க வேண்டும். உங்கள் ஒருவரால் மட்டும்தான் எனக்கு
உதவ முடியும்.உங்களைத்தான் கடவுள் போல நம்பி வந்திருக்கிறேன். நீங்கள் மட்டும் முடியாது
என்று சொல்லிவிடக்கூடாது என்றாள்.
அதை கேட்ட டாக்டர் உனக்கு
என்னம்மா பிரச்சனை அதனை முதலில் சொல். என்னால் முடிந்த உதவிகளை நான் செய்கிறேன் என்றார்.
டாக்டர் என் முதல் குழந்தைக்கு
ஒருவயது கூட முடியவில்லை. மீண்டும் நான் உண்டாகியிருக்கிறேன்.
குழந்தைகளுக்கு இடைவெளி அதிகம் இல்லை.
அதை கேட்ட டாக்டர் சொல்லும்மா அதற்கு நான் என்ன பண்ண வேண்டும்.
அதற்கு அந்த பெண் என்னால்
இந்த இரண்டு குழந்தைகளையும் கவனிக்க முடியாது. நீங்கள்தான் எனக்கு அபார்ஷன் செய்வதற்கு
உதவ வேண்டும் உங்களைத்தான் மலைபோல நம்பியிருக்கின்றேன். என்று சொன்னாள்
டாக்டரோ சிறிது நேரம் அமைதியாக
இருந்து பின் யோசித்து சொன்னார். நான் உனக்காக நல்ல தீர்வு ஒன்று யோசித்துள்ளேன். இது அதிகம் ஆபத்து
குறைந்த ஐடியாவாகும் என்றார். உனக்கு ஒகேவானால் நான் சொல்லுகிறேன் என்றார்
அந்த பெண்ணோ சொல்லுங்க டாக்டர்
என்று மிகுந்த புன்னைகயுடன் தான் விரும்புவதை டாக்டர் நிறைவேற்றுவார் என்ற ஆவலோடு அவர்
மேலும் சொல்லப்போவதை கூர்ந்து கவனித்தாள்
டாக்டர் தொடர்ந்து சொன்னார்.
உன்னால் ஒரே சமயத்தில் இரண்டு குழந்தைகளை பார்க்க முடியாததால் உன் கையில் உள்ள ஒரு
வயது குழந்தையை கொன்று விடு...இதனால் அடுத்த குழந்தை பிறக்கும் வரை உனக்கு நிறைய ஒய்வூ
கிடைக்கும். குழந்தையை கொல்வது என்ற முடிவு எடுத்த பிறகு எந்த
குழந்தையை கொன்றால் என்ன? கையில் உள்ள குழந்தையை கொல்வதனால் உன் உடம்புக்கு
எந்தவித ஆபத்துமில்லை. என்ன நான் சொல்லுது மிக நல்ல ஐடியாதானே என்றார்
அந்த பெண் நோ டாக்டர் ..இது பயங்கரமானது..கொடுமையானது. குழந்தையை
கொல்வது க்ரைம். என்று கதறினாள்.
அதை கேட்ட டாக்டர் புன்முறுவலோடு....
நீ சொல்வதை முழுவதும் நான் ஒத்து கொள்கிறேன்..
ஆனால் நீ முதலில் வயிற்றில் உள்ள குழந்தையை அபார்ஷன் மூலம் கொல்ல நீ வேண்டிய போது,
கொல்வது உனக்கு ஒகே போலதான் போலிருக்கிறது என நான் நினைத்தேன் அதனால்தான்
உனக்கு இது பெட்டர் ஐடியா இருக்கும் என்று நினைத்து சொன்னேன் என்றார் . அதை
கேட்ட அந்த பெண் கதறினாள்.
கடைசியில் பிறந்த
குழந்தையையும் அல்லது பிறக்க போகும் குழந்தையையும்
கொல்வது சரி சமமான க்ரைம்தான் அதனால் பிறந்தது பிறக்கப் போவது என்ற இரண்டுக்கும் வித்தியாசம்
இல்லை என்று அவளுக்கு டாக்டர் உணர்த்தினார்.
மூன்றே வாரத்தில் கண்கள்,
முதுகெலும்பு மற்றும் மூளையும் செயல்படத் தொடங்கி
நான்காவது வாரத்தில் இதயம்
துடிக்கத் துவங்கி,
ஏழாவது வாரப் பயணத்தில் சதைகளோடு
நரம்புகள் சேர்ந்து இயங்க ஆரம்பிக்க
எட்டு வாரத்தில் ஓரிடம் எட்டிப்பிடித்து,
ஒன்பது வாரத்தில் 90 சதவிகித
மனித வளர்ச்சியை அடைந்து
பத்தாவது வாரத்தில் தொடு
உணர்ச்சிகளையும் முகபாவங்களை வெளிப்படுத்தும் முழு மனிதானாக மாறிவிடுமாம்.
இதை உணராமல் கருச்சிதைவு
செய்வது நியாமா?
இருவர் காணும் மோக சுகத்திற்காக
கருவறைக்குள் வைத்து கொல்கிறோமே
ஒரு பாவமும் அறியாத சிசுவை
அது நியாம்தானா?
.
டாக்டர் சொன்னது சரிதானே...
இதைப் படித்த உங்களுக்கு
மாற்று கருத்து இருந்தால் கிழே பதிலிடுங்கள்.
அன்புடன்
மதுரைத்தமிழன் (டி.ஜே.துரை)
(இது ஒரு திருத்தி எழுதப்பட்ட எனது
மறுபதிவு )
மிகச் சிறப்பான பகிர்வு.
ReplyDeleteடாக்டர் சொன்னது அருமை...
படங்கள்தான் மனதை பதைபதைக்க வைக்கிறது.
டாக்டர் செய்த அதிர்ச்சி வைத்தியம் சூப்பர். இந்தப் படங்களைப் பார்த்தால் நிச்சயம் அபார்ஷன் செய்ய மனம் வராது
ReplyDeleteஅனைவரும் உணரவேண்டிய விஷயம்தான்! அருமையான பகிர்வு! நன்றி!
ReplyDeleteஇப்படி உணர வைக்கும், சேவை உள்ள கொண்ட மருத்துவர்கள் இருக்க வேண்டும்...
ReplyDeleteஇதை ஆண்களும் படிக்கவேண்டும் என்பதை தவிர வேறு மாற்றுக்கருத்தில்லை சகா:)
ReplyDeleteரணமானது மனம்
ReplyDeleteஎத்தனை பேர் சாதாரணமாக கருக்கலைப்பு செய்கிறார்கள் :(
ReplyDeleteசிறப்பாகப் புரிய வைக்கிறீர்கள். வாழ்த்துக்கல்
ReplyDeleteஐயோ ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை டாக்டர் சொன்னது எல்லோரையும் நன்றாக சிந்திக்க வைக்கும். தேவையான பதிவு இத்தனை விபரங்கள் தெரியாமல் தான் இப்படி தவறு செய்கிறார்கள். இதை யறிந்தால் நிச்சயம் குறைய வாய்ப்புள்ளது. நன்றி வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteகொலை செய்ய எப்படி மனம் வருகிறது.... :(
ReplyDelete