Thursday, June 18, 2015



படுக்கை அறையில் வெற்றி பெற படுக்கை அறை ரகசியங்கள்  (பெண்களும் படித்து பயன் பெறலாம்)

ஆண்கள் ஆனாலும் சரி பெண்கள் ஆனாலும் சரி படுக்கை அறையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்காத ஆட்களே இல்லை எனலாம். அப்படி வெற்றி பெற சில பயனுள்ள ஆலோசனைகள் இங்கே உங்களுக்காக தரப்பட்டுள்ளன.



முதலில் கடை பிடிக்க வேண்டியது மது, சிகரெட், மற்றும் காஃபின்(காபி,கோக்)  பானவகைகளை  தவிர்ப்பது நல்லது. மேலும் இரவில் அதிக உணவு கூடாது. மசாலா அதிகம் உள்ள உணவு இரவில் உண்ணக்கூடாது. ஏனெனில் அதிகப்படியான உணவு மற்றும் மசாலா உணவு வகைகள் நமது உடலின் ஜீரண வேலையை அதிகமாக்குகிறது. இதனால் உடல் ஓய்வு பெறுவது தடுக்கப்படுகிறது.

அடுத்தாக வேலைப்பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தம் தூக்கமின்மைக்கு காரணமாகிறது. . நாளை என்ன வேலைகளை செய்ய வேண்டும்? என்ற சிந்தனை நமக்கு  மன அழுத்தத்தை தருகிறது. மன அழுத்தம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதனால் உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. அதுவே தூக்கமின்மை பிரச்சினைக்கு வழிவகுக்கிறது. அதனால் நாளை என்ன செய்ய வேண்டும் என்பதை அலுவலகம் முடிந்து வரும்  போதே என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து கொள்ளுங்கள்.

இர்வு சாப்பிட்ட பின் படுக்கைக்கு செல்லும் முன் இடைப்பட்ட நேரத்தை இளைப்பாறுதலாக பயன்படுத்தலாம். உதாரணமாக புத்தகங்கள் படித்தல், நண்பர்களுடன் உரையாடுதல் போன்றவற்றை செய்யலாம். உங்கள் மனதில் உள்ள கவலை தரும் பிரச்சினைகளை டைரியில் வரிசையாக எழுதுவது கூட உங்களை அமைதிப்படுத்தலாம். பிரணாயாமம், தியானம் மற்றும் எளிய யோகப் பயிற்சிகளை செய்யலாம்.


வேலையில் இருந்து வந்ததும் தினம்  அரை மணி நேரம் ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுவது அல்லது நீச்சல் பயிற்சி செய்வது நல்லது. அவ்வாறு செய்தால் உடலுக்கு அதிக தூக்கம் தேவைப்படும். எனவே தூக்கம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதே சமயத்தில்  இரவில் செய்யப்படும் உடற்பயிற்சிகள் உடலை உற்சாகப்படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. அதனால் தூக்கம் வருவதில்லை.

படுக்கை அறையில் மிக மிக முக்கியமாக கவனிக்கவேண்டியவை:
    
படுக்கை அறை மிக அமைதியாக இருக்க வேண்டும். காற்றோட்டமாக இருக்க படுக்கைக்கு செல்வதற்கு முன் அனைத்து ஜன்னல்களையும், கதவுகளையும் திறந்து வைக்கலாம் அல்லது படுத்த பின் இரவில் ஜன்னலை லேசாக திறந்து வைக்கலாம்.

அறையில் ஏசி இருந்தால்  உடலுக்கு பொருத்தமான, இதமான வகையில் வைத்து  கொள்ளவும்.

தலையணை உறை மற்றும் பெட்சீட்களை 2 நாட்களுக்கு ஒரு முறை துவைத்து உபயோகிக்கவும் அதனால் ஒவ்வொருத்துவருக்கும் குறைந்தது 2 செட் வைத்திருக்கவும்

    
படுக்கும் போது படுக்கை அறையினை முடிந்த அளவு   ஸ்க்ரீன் துணிகளை பயன்படுத்தி இருட்டாக்கிக் கொள்ளவும்.  வெளிச்சமான அறையிலும், சத்தம் உள்ள அறையிலும் தூங்குவதை தவிர்க்கவும்.
    
அறையினை கொசு மற்றும் பூச்சி தொல்லை இல்லாதவாறு அமைத்து கொள்ளவும்.

அறையில் சத்தமில்லாத அதிக வெளிச்சத்தை தராத அலாரம் க்ளாக்குகளை வைத்து கொள்ளுங்கள்.

படுக்கை அறையில் டிவி வேண்டாம்.. படுக்கை அறையில் அதிக பொருட்களை அடைத்து வைக்க வேண்டாம்

அறையில் சுவர்கலர்கள் கண்ணுக்கு குளிர்ச்சி இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள்

ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில் தூங்கி, சரியான   நேரத்தில் எழுந்திருங்கள். ஒவ்வொரு நாளும் குறுப்பிட்ட நேரத்தில் தூங்கி எழும் பழக்கம்  நமது உடல் கடிகாரத்தை குழப்பாது. அது நமது உடலின் சமச்சீர் தன்மையை பாதுகாக்கும். ஒரு நாளின் அதிகப்படியான தூக்கம் அடுத்த நாளின் குறைவான தூக்கத்தை நிவர்த்தி செய்யாது.

.படுக்கைக்கு செல்லும் முன் இதமான வெந்நீரில் குளிப்பது நல்லது. குளிக்கும் நீரில் லாவேண்டர் ஆயில் சேர்க்கலாம். அல்லது தலையணையில் லாவண்டர் ஆயில் ஸ்ப்ரே செய்யலாம்.

வாழைப்பழம்  அல்லது தேன் கலந்த பால் சாப்பிடலாம். இவற்றில் உள்ள L-tryptophan தூக்கத்தை வரவழைக்க மூளையை ஊக்கப்படுத்துகிறது.

இதை எல்லாம் செய்தால் படுக்கை அறையில் வெற்றி கிட்டி நிம்மதியாக தூங்கலாம்.

டிஸ்கி: படுக்கை அறைக்கு போகும் முன் உங்கள் துணை அங்கு முழித்து கொண்டு இருந்தால் போக வேண்டாம் அவர்கள் தூங்கிய பின் செல்லவும் இல்லையென்றால் அனாவசிய பேச்சினால் தூக்கம் மட்டும் இல்லை நிம்மதியும் போய்விடும்


அன்புடன்
மதுரைத்தமிழன் (டி.ஜே.துரை)

16 comments:

  1. இவ்வளவா...? நினைக்கும் போதே தூக்கம் வருது சாமி...! ஆனாலும் பயன் தரும் பயனுள்ள கருத்துகள்...

    ReplyDelete
    Replies
    1. படிக்கும் போதே தூக்கம் வருகிறதா....அப்ப நீங்க அதிர்ஷட சாலிதான் அப்ப உங்களுக்கு இந்த குறிப்புகள் பயனில்லைதான்

      Delete
  2. தலைப்ப பார்த்தவுடனே .. என்ன வில்லங்கமா இருக்கே..நண்பர் விசுவாசம் தான் சொன்னார் ஏதாவது எழுதி விட்டீர்களா என்று பயந்து கொண்டே படித்தேன். என் வீட்டில் நான் கடைபிடிக்கும் அனைத்தையும் அப்படியே சொல்லிவிட்டீர்கள்.
    டிஸ்கியில் மட்டும் ஒரு வித்தியாசம். நான் 8 மணிக்கே ஓடி சென்று படுத்துவிடுவேன். 8 மணிக்கும் மேல் விளித்து இருந்தால் அதனால் வருவது. இதை கூட்டு.. அதை பெருக்கு.. இதை மடி ..அதை துடை...

    ReplyDelete
    Replies

    1. என்னது எட்டு மணிக்கே படுத்துவிடுவீர்களா? பச்ச புள்ளையாய நீங்கள்?

      Delete
  3. கடைசித் தகவலே அனைத்திலும்
    அருமையானது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கடைசியில பெண்களை கிண்டல் செய்யவில்லை என்றால் நமக்கு தூக்கம் வாராதுங்க ரமணி சார் அதுனாலதான் அந்த பஞ்ச்

      Delete
  4. வணக்கம்! உங்கள் வலைத்தள (தமிழ்மணம்) வாசகர்களில் நானும் ஒருவன்

    நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (19.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
    நினைவில் நிற்போர் - 19ம் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/06/19.html

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிகவும் நன்றி இளங்கோ சார்......

      Delete
  5. பயனுள்ள தகவல்கள்! நன்றி!

    ReplyDelete
  6. இங்க பாருங்க இவ்ளோ தத்து வங்கள் கொட்டிக் கிடக்குது நான் வேறு எங்கோ பார்த்து கிட்டு இருக்கேன் .... உண்மையில் சிறப்புதான் பாராட்டுகள்

    ReplyDelete
  7. பெண்களும் பயனடையலாம் என்று போட்டிருந்தாதனால் வந்தாலும். பயமாகவே இருந்தது.
    நல்ல விடயங்கள் சொல்லியிருக்கிறீர்கள். பலரும் தூக்கமின்மையால் அவதிப்படுவது உண்மையே.நல்லதோர் பதிவு. இரவு லேட் ஆக சாப்பிடுவதும் தூக்கத்தை கெடுக்கும் அத்துடன் multi வைட்டமின் ஐ இரவு போடுவதும் தவறு அது என் தூக்கத்தை பலகாலம் கெடுத்திருக்கிறது அதை விட்ட பின்னர் சரியாகி விட்டது. பதிவுக்கு நன்றி !

    ReplyDelete
  8. டிஸ்கிலபஞ்ச் வச்சிங்களே அதுதான் நாம ஊரு குசும்புங்க

    ReplyDelete
  9. பயனுள்ள தகவல்கள்.

    ReplyDelete
  10. மிக மிக நல்ல தகவல்கள்.....தலைப்பைப் பார்த்து ஏமாறலைங்க....

    டிஸ்கி ரொம்ம்ம்ம்பவே ரசிச்சோம்.....ரெண்டு பேரும்தான்....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.