Thursday, June 18, 2015



எந்த டிவி நல்ல டிவி? சன் Vs  விஜய்?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெர்சனல் வேலை காரணமாக மிக குறுகிய கால பயணமாக தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தது. அந்த பயண நாட்களில் பலரை சந்திக்க வேண்டி இருந்தது.சேல்ஸ்மேன் வேலைதான் எனது தொழிலாக இருப்பாதால் பலரிடம் பேசும் போது பல விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு அதிகம் அதனால் நான் பேசுவதை விட அடுத்தவர்கள் பேசி அதை கேட்பதில்தான் எனக்கு ஆர்வம்..

அதனால் பல விஷயங்களை அறியும் போது தமிழகத்தில் எந்த டிவி அதிக பேமஸ் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் நான் சந்தித்த பலரையும் கேட்டு தெரிந்து கொள்ளும் போது பலர் சன் டிவிதான் அதிகம் பேமஸ் என்றார்கள் வேறு பலரும் விஜய் டிவிதான் அதிக பேமஸ் என்றார்கள். இவர்களின் பதிலால் நான் மிகவும் குழம்பிதான் போனேன். எனவே அதை நானே நேரில் பார்த்து முடிவு செய்துவிடலாம் என்று நினைத்து அருகில் இருந்த டிவிகள் விற்கும் எலக்ட்ரானிக் கடையை நோக்கி சென்று அங்கே அமர்ந்து அங்கு விற்பனை செய்யும் தொழிலாளியிடம் சார் எனக்கு தெரிந்தவரிடம் எல்லாரிடமும் எந்த டிவி நன்றாக இருக்கும் என்று கேட்டேன் ஆள் ஆளுக்கு ஒன்று சொல்லுகிறார்கள் நீங்க சொல்லுங்க எந்த டிவி நன்றாக இருக்கும் என்று கேட்டேன் அதற்கு அவர் சார் விஜய் டிவி நன்றாக இருக்கும் என்றார். நான் உடனே அப்படியா அப்படியானால் அதை எனக்கு காண்பிக்க முடியுமா என்று கேட்டேன்.


அதற்கு அவர் நோ ப்ராப்ளம் என்று சொல்லி அருகில் இருந்த ரிமோட்டை எடுத்து ஆன் செய்து இப்போ பாருங்கள் என்றார். அதை பார்த்த நான் சார் நான் கேட்டது விஜய்டிவி ஆனால் நீங்கள் காண்பிப்பதோ வேறு டிவி நான் வெளிநாட்டில் இருந்துதான் வருகிறேன். ஆனால் நான் ஏமாளி அல்ல அதனால் எனக்கு விஜய்டிவியை காண்பியுங்கள் என்றேன் அந்த தொழிலாளி சார் இதுதான் விஜய்டிவி என்று காண்பித்து அடித்து சொன்னான்.

இனிமே இவங்கிட்டே பேசி புண்ணியம் இல்லை என்று கருதி சரி உன் மேனேஜரை கூப்பிடு நான் அவரிடமே பேசிக் கொள்கிறேன் என்று சொன்னேன். நான் இதை சத்தமாக சொல்லியதும் அருகில் இருந்த மேனேஜர் உடனே வந்தது என்ன சார் பிரச்சனை என்று கேட்டார் நான் சார் உங்க ஸ்டாபிடம் விஜய் டிவியை காட்டச் சொன்னால் இதை காண்பித்து இதுதான் விஜய்டிவி என்று அடம் பிடிக்கிறான் என்றேன். உடனே அவரும் அந்த டிவியை பார்த்துவிட்டு சார் இது விஜய்டிவிதான் என்று சொன்னார்.

எனக்கு வந்ததே கோபம் யோவ் உன்னை எல்லாம் யாருய்யா மேனேஜராக போட்டான் உனக்கு படிக்ககிடிக்க ஏதாவது தெரியுமா இங்க பாருய்யா... இந்த டிவியில் சாம்சங் டிவி என்று ஆங்கிலத்தில் போட்டு இருக்கிறான் ஆனால் அதை நீங்க இரண்டு பேரும் விஜய்டிவி என்று சொல்லுறீங்க என்றேன்

அவர் உடனே சார் உங்களுக்கு என்ன வேணும் என்றார் நான் டிவி வாங்க வந்தேன் உங்கள் கடைக்காரரிடம் எந்த டிவி நன்றாக இருக்கும் என்று கேட்டேன் அதற்கு அவர் விஜய் டிவி நன்றாக இருக்கும் என்று சொன்னார் அதனால் அதை பார்த்து வாங்கலாம் என்று இருக்கிறேன் என்றேன்

அதற்கு அவர் சார் நீங்க விஜய் டிவியை வாங்குறதுன்னா அந்த ஒனரை பார்த்து பேசுங்க சார் எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றார். என்னங்க நீங்க என்ன சொல்லுறீங்க டிவியை வாங்குறதுன்னா அதன் ஒனரை பார்த்து பேசனனுமா என்ன சொல்லுறீங்க காலையிலே டாஸ்மாக் பக்கம் போய்விட்டு வந்துதான் நீங்க கடையையே திறப்பிங்களோ என்று கேட்டடேன் அதற்கு அவர் சரியான சாவுகிராக்கிடா நீ காலங்காத்தால நீ டாஸ்மாக் பக்கம் போய்விட்டு இங்க வந்து உசிரை வாங்க வந்துட்டானய்யா என்று எங்கிட்ட பேச ஆரம்பித்தார்

கடைசியில எங்க இரண்டு பேருக்கும் இடையில கைகலப்பு வந்துடுச்சு அதன் பின் அருகில் இருந்தவர்கள்தான் எங்களை பிரித்து என்னை அனுப்பி வைத்தார்...

அதன் பின் நடந்த விபரத்தை நண்பர் விசுவாசத்திடம் கூறிய போது அவர் சொன்னார் மதுரைத்தமிழா நாம் ஊர்காரங்க சன் சேனல் விஜய் சேனல் என்று சொல்லமாட்டாங்க அதற்கு பதிலாக சன்டிவி விஜய்டிவி என்றுதான் சொல்லுவாங்க... அதனாலதான் இந்த குழப்பம் உங்களுக்கு வந்து இருக்கு...... என்று சொல்லி சிரித்தார்...

இதுக்குதானுங்க தமிழ்நாட்டு பக்கம் அடிக்கடி போகணும் என்கிறது இல்லைன்னா அவங்க பேசுறது ஒன்றும் நமக்கு புரியமாட்டேங்கிறது

டிவிக்கும் சேனலுக்கும் வித்தியாசம் தெரியாம இருக்கிறாங்க நம்ம மக்கள் ஹும் என்னத்த சொல்லுறது


அன்புடன்
மதுரைத்தமிழன்( டி.ஜே.துரை)
18 Jun 2015

20 comments:

  1. அட போங்க துரை... நீங்க டிவி பத்தி கேட்ட அதே நேரத்தில் நான் அருகில் இருந்த ஒருவரிடம் ஸ்டேசன் (ரயில்) எங்கே இருக்குன்னு கேட்டேன். அந்த ஆள் என்னை வேற ஒரு ஸ்டேசனுக்கு அனுப்ப அங்கே போய் வேலூர்க்கு ஒரு ரவுண்டு ட்ரிப் டிக்கட்ன்னு நான் கேக்க... அவங்க ,... வேலூருக்கு ஒன்லி ஒன் வே டிக்கட்ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க..

    டிவி மற்றும் சேனல் ... இருந்தாலும் உங்கள் லொல் கொஞ்சம் டூ மச் தான் ..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் நண்பராக இருந்தால் லொல்லு இல்லாமலா இருக்கும்

      Delete
  2. கர்ண கொடூர மொக்கை!
    இப்படி எல்லாம் ஏதாவது வெளிநாட்டுல பொறந்து வளர்ந்தவன் சொல்லுவான்!!

    ReplyDelete
    Replies
    1. என் பதிவுகளில் மொக்கைதான் இருக்கும் சார்... நல்ல விஷயம் ஏதும் எழுதுவது இல்லை ஏன்னா நல்ல விஷயம் எழுதி அதை படித்து யாராவது திருந்த போறாங்களா என்ன?

      Delete
  3. ஹா... ஹா... சிரிப்பு சகவாசம் உங்களுக்கும் தொற்றிக் கொண்டது....

    ReplyDelete
    Replies
    1. விசுவாசம் கூட சேர்ந்தால் சிரிப்பு சகவாசம் தொற்றிக் கொள்வது சகசம்தானே நண்பரே

      Delete
  4. ஹாஹா! பொதிகை சேனல் இருந்த வரை சேனல் இருந்தது இந்திச்சேனல் தமிழ் சேனல்னு சொன்னாங்க! கலைஞரும் மாறனும் சன் சேனலை சன் டீவின்னு தமிழார்வத்தோட சொல்லி மக்கள் மனதில் பதியவைச்சிட்டாங்க தமிழா! ஹாஹாஹா! நல்ல நகைச்சுவை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக சரியாக சொன்னீர்கள் சுரேஷ்

      Delete
  5. வணக்கம், உண்மைதான் உங்கள் வரிகள் படி அப்பப்ப உங்க ஊருக்கு வந்து போங்க, சரியா? அருமையான பதிவு, நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக அடிக்கடி ஊருக்கு வந்து போகிறேன் நீங்கள் எனக்கு ஊருக்கு வந்து போக மாதாந்திர பாஸ் எடுத்து கொடுத்தால்....ஹீஹீ

      Delete
  6. நேர்மறையான முடிவு காணமுடியாத ஒரு விவாதம என நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (19/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/


    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  8. என்ன சகோ ஊருக்கு போனது தான் போனீங்க கைகலப்பு வருமட்டுமா நின்று வாதாடுவீங்கள் நீயும் வேண்டாம் டிவி யும் வேண்டாம் என்று வரவேண்டியது தானே. பூரிக் கட்டை ஞாபகம் வந்திருக்குமோ. ம்..ம்..ம் ரசித்தேன் சகோ வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. சேல்ஸ்மேனாக இருந்ததனால்தான் வாதம் ஆனால் வுமனாக இருந்து இருந்தால் வழிந்து கொண்டு அந்த விஜய்டிவியை வாங்கி வீட்டுக்கு வந்து வீட்டம்மாவிடம் பூரிக்கட்டையால் வாங்கி கட்டிக் கொண்டு இருப்பேன்

      Delete
  9. சூப்பர். சினிமால காமெடி சீனா வைக்கலாம் .வடிவேலு காமெடிக்கு பொருத்தமா இருக்கும்

    ReplyDelete
  10. நல்ல கற்பனைத்திறன் . மேலே முரளிதரன் சொன்னது போல அடுத்த வடிவேலு படத்தில் இதை நகைச்சுவை காட்சியாக வைக்கலாம். BTW... நாங்களும் பல வருடங்களாக வெளிநாட்டில்தான் இருக்கிறோம்.. நான் மட்டுமல்ல எல்லோரும் விஜய் டிவி, சன் டிவி என்றுதான் சொல்வோம்.. :-)

    ReplyDelete
  11. அட, அருமை.

    http://newsigaram.blogspot.com

    ReplyDelete
  12. ஹஹஹஹ மிகவும் ரசித்தோம்...வாசிக்கும் போதே நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று தெரிந்து விட்டது.......ஏனென்றால் நாங்களும் இதை யோசிப்பதுண்டு.....சேனல் என்பதுதான் சரி...அப்படித்தான் சொல்லப்பட்டு வந்தது....நாங்கள் வீட்டில் அப்படித்தான் சொல்லுவதுண்டு....ஆனால் நம்ம ஊர்ல தமிழ்நாட்டை மோனோபொலி செய்யும் பிசினெஸ் காந்தங்கள் தான் இப்படி டிவி என்று மாறியதற்கு காரணம்.....அதைப் பார்த்து எல்லோரும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்...எல்லாம் சோதனை மேல் சோதனை வேதனை....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.