Sunday, June 21, 2015



தந்தையர் தின வாழ்த்துக்கள் பேஸ்புக் லைக்குகளுக்காக தந்தையர் தினத்திற்காக அல்ல

இந்த காலத்தில் பிள்ளைகள்  தங்கள் தகப்பானாருக்கு  தந்தையர் தின வாழ்த்தை நேரில் சொல்லாமல் பேஸ்புக்கில் ஸ்டேடஸாக தெரிவிக்கின்றனர். ஆனால் தகப்பானார்கள் யாரும் தங்கள் மகனின் பேஸ்புக்கை பாலோ செய்வதில்லை அல்லது ஸ்டேடஸை படிப்பதில்லை இதுதான் நிதர்சன உண்மை


பெற்ற அப்பனை நேரில் நேசிக்காத ,கவனிக்காத, வாழ்த்து சொல்லாத ஜென்மங்கள் (சிலர் விதிவிலக்கு) இன்று சில பேஸ்புக் லைக்குகளுக்காக அப்பன் படத்தை போட்டு வாழ்த்து தெரிவிக்கின்றனர் காரணம் இன்று தந்தையர் தினமாம்.
அடேய் இப்படி அப்பனின் பழைய படங்களை போடுவதற்கு பதிலாக இன்று உங்கள் அப்பாவிற்கு புதுதுணி வாங்கி கொடுத்து அவருக்கு ஒரு நல்ல விருந்து கொடுத்து பேரப் பிள்ளைகளோடு கொஞ்சி சந்தோஷமாக இருப்பது போல நிகழ்வை புகைப்படம்  எடுத்து போடுங்களேன்.

***************

ஒவ்வொரு அப்பாமார்களையும் சந்தோஷப்பட வைக்கும் வரிகள் . என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது இந்த கவிதை . இந்த கவிதையை விட சிறந்த பரிசு வேறு ஏதும் இல்லை இன்றைய தந்தையர் தினத்தில் .படித்ததில் பிடித்தது எழுதியவர் அகிலா புகழ்

அப்பா..

அப்பாக்கள் எப்போதும்
ஒரே மாதிரிதான்

பிறந்த பொழுதில் கைகளிலும்
வளரும் பொழுதில் தோள்களிலும்
வளர்ந்த பொழுதில் நெஞ்சினுள்ளும்
சுமக்க கடமைப்பட்டவர்கள்

பார்வைகளை
மொழிகளாக்குபவர்கள்
மௌனங்களை
வார்த்தைகளாக்குபவர்கள்
புன்னகையை
சிரிப்பாக்க யோசிப்பவர்கள்
பெற்ற மகவை
பொறுப்பின் கனமாய் உணர்பவர்கள்

அவரை புரிந்துக் கொள்ள,
பெண் மகவுக்கு
அவகாசங்கள் வேண்டாம்
ஆண் பிள்ளைக்கோ
ஆண்டுகள் வேண்டும்

எல்லா அப்பாக்களும் ஒரே மாதிரிதான்,
கண்களில் நிதர்சனமும்
கனவுகளில் நிஜமுமாய்..

Happy Fathers Day

இந்த கவிதையை படைத்தவர் Ahila Puhal https://www.facebook.com/ahila.d


டிஸ்கி :
பெண் குழந்தைகளை பெற்று எடுத்த அப்பாமார்கள் சொர்க்கத்தை இந்த பூவுலகிலே காண்கிறார்கள்.

அன்புடன்
மதுரைத்தமிழன் (டிஜே.துரை)
பேஸ்புக் முகவரி : https://www.facebook.com/avargal.unmaigal

21 Jun 2015

8 comments:

  1. இன்றைய நடைமுறையை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள்.
    த ம 1

    ReplyDelete
  2. // மௌனங்களை வார்த்தைகளாக்குபவர்கள் // என்ன ஒரு வரி...!

    அதை விட :

    டிஸ்கி : ஆகா...!

    ReplyDelete
  3. யதார்த்தம் சொல்லும் அற்புதப் பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. என் கவிதையை பகிர்வு செய்தமைக்கு மிக்க நன்றி உங்களுக்கு..
    தந்தையர் தினம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதை அழகாக சொல்லிவிட்டீர்கள். ரமணி அய்யாவுக்கும் தனபாலனுக்கும் நன்றி..

    ReplyDelete
  5. கவிதை அருமை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. கவிதை நல்லாருக்கு. கருத்தும் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. கவிதை சிறப்பு! தங்கள் கருத்தும் ஏற்கப் படவேண்டியது தான். ஆனாலும் சிலர் இதற்கு விதி விலக்கு தான். என்பதை நான் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். என் பிள்ளைகள் அப்படி இல்லை என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே. நன்றி சகோ! தங்கள் ஆதங்கத்திற்கும் பதிவுக்கும்.

    ReplyDelete
  8. யதார்த்தம் சொட்டும் பதிவு! கவிதை சூப்பர்! மௌனங்களை வார்த்தைகளாக்குபவர்.....கவிதையில் அந்த இறுதி வரிகள் சொல்வதும் அருமை!

    டிஸ்கி ஹைலைட்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.