லலித் மோடி விவகாரத்தில்
மோடியின் மெளனத்திற்கு காரணம், மோடி ப்ளாக்மெயில் செய்யப்படுகிறாரா அல்லது மெளனமாக
இருப்பதுதான் சாமார்த்தியம் என்று நினைக்கிறாரா என்பதுதான் இப்போது மக்கள் மனதில் எழுந்துள்ள
ஐயம்.
மோடியின் இந்த மெளனம் அவரின்
மேலுள்ள இமேஜை படுபாதாளத்திற்குள் தள்ளிக் கொண்டு இருக்கிறது என்பதை அவர் அறிந்துதான்
இருக்கிறார என்பதுதான் புரியதா புதிராக இருக்கிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்
மெளனத்திற்கும், மோடியின் மெளனத்திற்கும் பெரிய வித்தியாசம் உண்டு.
மன்மோகன் சிங்கிற்கு சோனியாவால்
பிரதமர் பதவிமட்டுமே அளிக்கப்பட்டது. ஆனால்
அந்த பதவிற்கான அதிகாரம் அவருக்கு இல்லை. அதனால்தான் அவர் தன்னுடைய அமைச்சரவையில் யாரையும்
கட்டுப்படுத்த முடியாத பிரதமராக இருந்தார் . அதுமட்டுமல்லாமல் கூட்டணி ஆட்சி வேறு என்பதால் அவரால் யாரையும் கண்டிக்க
முடியவில்லை. மன்மோகனின் மொத்த செயல்பாடும் சோனியாவின் ஆணையில்தான் அடங்கி இருந்தது.
மன்மோகன்சிங்கிற்கு என தனிப்பட்ட முறையில்
மக்கள் செல்வாக்கும் இல்லை , காங்கிரஸ் கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை. கட்சியிலும்
தனக்கு பவர் இல்லை என்கிற போது மன்மோகனின் செயல் படாத தன்மையையும், அதிகாரம் செலுத்த
இயலாத சூழ்நிலையையும் மக்களால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த செயல்படாத சிங்க் ஆட்சியையும் அதனால் ஏற்பட்ட ஜனநாயக
கூத்தையும் பார்த்து வெறுத்துப்போன மக்கள்தான் தேர்தலில் காங்கிரஸுக்கு மரண அடி கொடுத்து
மோடிக்கு பதவியையும் கொடுத்தனர் .அதோடுமட்டுமல்லாமல் முழு அதிகாரத்தையும் மக்கள் மிக
அமோகமாக அள்ளிக் கொடுத்தனர்.
இப்படி அமோக வெற்றி பெற்று
நாட்டின் முழு அதிகாரத்தை தன் கைவசம் வைத்திருக்கும் பிரதமர் மோடியின் வாயை அடைக்கும்
அளவுக்கு லலித் மோடி என்ன செய்து இருப்பார் என்று நினைத்து பார்த்தால் ஆச்சிரியம்தான்
எழுகிறது. அளவிற்கு அதிகமான மெஜாரிட்டியும் அலைகடலென அதிகாரமும் அவர் வசம் குவிந்திருந்தும்
சுஷ்மா மற்றும் வசுந்தரா மேல் ஆக்ஷன் இல்லை. இந்த விவகாரத்தில் தனது இமேஜ் மட்டுமல்ல
கட்சியின் இமேஜ் நொறுங்குவது மோடிக்கு நன்கு தெரிந்தும் அமைதியாக இருக்கிறார் என்றால்.
ந,ரேந்திர மோடிக்கும் லலித் மோடி விவகாரத்தில் மிகவும் பங்கு இருக்கிறது என்ற சந்தேகம்
பொது மக்கள் ஏற்படும் என்பதில் அதிசயம் ஒன்றுமில்லைதானே, இந்த சந்தேகத்தை மக்கள் மனதில்
விதைத்தது மோடிதானே
அவ்வளவு வானாளவிய அதிகாரங்கள்
இருந்தும் மோடி மெளனமாக இருப்பது மக்களிடையே மிகவும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்திய
பிரதமரைப் பொருத்தவரை லலித் மோடி விவகாரம் மிக சிறியதுதான். ஆனால் அதற்கு அவர் நடவடிக்கை
கூட எடுக்க வேண்டாம் .ஆனால் அதற்கு பதில்கூட சொல்லாமல் மெளனமாக இருப்பதால் அதில் அவரின்
கைகளும் படர்ந்துதான் இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை
லலித் மோடி விசா விவகாரத்தில்
பிரதமர் மோடிதான் மிக முக்கிய ஆளாக இருக்கவேண்டும் ஆனால் அவரின் அமைச்சர்கள் அதற்கு
உடைந்தையாக இருக்க வேண்டும் எனதான் கருத வேண்டி இருக்கிறது. எனவேதான் அவர்களின் மேல்
நடவடிக்கை எடுக்க தனக்கு முழு அதிகாரம் இருந்தும் தயக்கம் கொள்கிறார்.
லலித் மோடி என்ற தனி மனித
குற்றவாளிக்காக ஒரு பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா, ராஜஸ்தான் முதல்வர்
வசுந்தரா ராஜே போன்றவர்கள் குற்றவாளிக்கூண்டில்
நிற்கிறார்கள். நாட்டின் இமேஜையும் கட்சியின் இமேஜையும் பலி கொடுக்கிறார்கள் என்றால்
அதற்கு பின்னால் நடக்கும் காரியங்கள் என்னவாக இருக்கும் என்று யாராலும் ஊகிக்க முடியாது.
மேலும் இது தொடர்பாக பிரதமர்
மோடி கட்சியின் சீனியர் தலைவரிகளிடம் ஆலோசனை நடத்தினார். 'சட்டத்திற்கு புறம்பாக வசுந்தரா
எதையும் செய்யவில்லை; வசுந்தரா பதவி விலகினால், அடுத்து சுஷ்மாவும் ராஜினாமா செய்ய
வேண்டி வரும். இந்த விவகாரம் அனைத்தும் கிரிக்கெட் மற்றும் அரசியல் தொடர்புள்ளதால்,
வரிசையாக மேலும் பலர் பதவி இழக்க வேண்டி இருக்கும் எனவே ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை
என மோடி தலைமையில் கட்சி முடிவெடுத்துள்ளது. தவிர மீடியா சொல்படி
நாம் ஏன் நடந்து கொள்ள வேண்டும்? குஜராத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு எதிராக
மீடியாக்கள் பிரசாரம் செய்து என் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்ட பார்த்தன. ஆனால்
அந்த மீடியாவையே நான் எனக்கு ஆதரவாக இருப்பதாக ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி நம்பவைத்து
நான் வெற்றி பெற வில்லையா எனவே அதே முறையை இப்போதும் நாம் செயல்ப்படுத்தி வெற்றிக்
காண்போம் என்று சொல்லி கூட்டத்தை முடித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
உலகில் பல தலைவர்கள் தங்கள்
கையில் அதிகாரம் கிடைத்ததும் தாங்கள் ஆடிய ஆட்டங்கள் என்ன? ஆனால் இறுதியில் அவர்களின்
சாவு எப்படி இருந்து இருக்கிறது என்பதை இந்த தலைவர்கள் அதிகாரம் வந்ததும் மறந்து விடுகிறார்கள்,
இதை மோடி கொஞ்சமாவது சிந்தித்து பார்க்க வேண்டும். விவேகானந்தர் போல வேஷம் போட்டு இந்துத்துவா
மட்டும் பேசினால் மட்டும் போதாது அவர் போல பல நல்ல செயல்களை செய்து வரலாற்றில் தடம்
பதிக்க வேண்டும். ஆனால் விவேகானந்தர் போல பேசி சாதாம் ஹுசைன் போல நடந்தால் சாதாமை போலதான்
அழிய வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஈராக் அழிந்தது போல இந்தியாவும் அழிந்து சிரழியும்
டிஸ்கி : 'க்ளீன்' இந்தியா என்ற திட்டத்தை ஆரம்பித்த மோடி அந்த திட்டத்தை செயல்படுத்தி
தமது அமைச்சரவையை சுத்தம் செய்யலாமே
அன்புடன்
மதுரைத்தமிழன்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteசுரேஷ் தவறுதலாக உங்கள் கருத்தை டெலீட் செய்துவிட்டேன் மன்னிக்கவும். அதனால் நீங்கள் சொன்ன கருத்தை மீண்டும் நான் பதிவிடுகிறேன்
Delete""க்ளீன் இந்தியா திட்டத்தால் அமைச்சரவையை சுத்தமாக்கினால் அமைச்சரவை காலியாகிவிடுமே?!...! "
ஸ்மிருதி இரானிதான் ஆரம்பச் சறுக்கல். மோடி இரும்பு மனிதர் என்ற இமேஜை மேற்கொள்ளவேண்டுமானால் (கிரெடிபிலிடி), சுஷ்மா, ராஜே கும்பலைக் களையவேண்டும். ஆனால், இப்போது நடப்பதைப் பார்த்தால், தவறு தலைவனிடம் உள்ளதா என்று கேட்கும் நிலைமை. நல்ல பதிவு. ஆனால், மீட்டிங்கில் நடந்ததை எழுதியுள்ளது இடிக்கிறது.
ReplyDelete