Monday, June 15, 2015



பிரிட்டிஷார் பாணியில் செயல்படுகிறதா மோடி அரசாங்கம்

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிஷார் இந்தியாவை எப்படி ஆண்டார்களோ அப்படிதான் இப்போது மோடி அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்போது குறுநிலமன்னர்களை பிரிட்டிஷார் தங்கள் கைக்குள் போட்டு அதிகாரம் செலுத்தி வரி வசூலித்து நாட்டை ஆண்டார்கள் அதாவது குறுநிலமன்னர்கள் பிரிட்டிஷாருக்கு கப்பம் கட்டி வந்தனர் அப்படி செய்யாதவர்கள் ஒடுக்கப்பட்டார்கள்.


ஆனால் மோடி ஆட்சியில் அப்போது இருந்த குறுநிலமன்னர்கள் இடத்தை  இப்போது உள்ள பிஸினஸ் முதலாளிகள் கைப்பற்றி உள்ளனர். இந்த பிஸினஸ் முதலாளிகள்தான் மோடிக்கு மறைமுக கப்பம் செலுத்தி வருகிறார்கள்.அப்படி கப்பம் கட்டுமாறு 'நெஸ்லே' நிறுவனத்திற்கு மறைமுக உத்தரவு இட்டு இருக்கலாம் அதற்கு அந்த நிறுவனம் கட்டபொம்பன் பாணியில் எங்கள் நிறுவினத்தில் நீ கூட்டி துடைத்தாயா அல்லது உற்பத்திக்கு உழைத்தாயா அல்லது லோடிங்க பண்ணுவதற்கு உதவினாயா அல்லது விற்பனைக்குதான் உதவினாயா அப்படி ஏதும் செய்யாத மானம் கெட்ட உனக்கு நாங்கள் ஏதற்கு மறைமுக கப்பம் கட்டம் வேண்டும் என்று கேள்விகேட்டதால்தான் இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்து இருக்க வேண்டும். மேலும் இதுபோல வேறு யாரும் அப்படி கேட்டுவிடக் கூடாது என்பதால்  நெஸ்லேக்கு மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்கும் பாடம் கற்பிக்கவே  'நெஸ்லே' நிறுவனம் தயாரித்த மேகி நுாடுல்ஸ் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை .இது ஒரு ஆரம்பம்மட்டுமே.....

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எல்லா தரப்பு மக்களும் உபயோகித்து வந்த ஒரு உணவுப் பொருளில் இப்போதுதான் அதில் மக்களுக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் கலந்து இருக்கின்றன என்று சொல்லி தடை செய்ய்யப்பட்டு இருக்கிறது. பல ஆண்டுகளாக மேகி போன்ற உணவுப் பொருட்கள் மக்களின் உடல்நலத்திற்கு நல்லது அல்ல என்று பல டாக்டர்கள் நாளிதழ்கள் போன்றவை மக்களுக்கு தெரிவித்து வந்தன, அப்போது எல்லாம் அரசாங்கம் தூங்கி கொண்டிருந்ததா என்ன?


'நெஸ்லே' நிறுவனம் தயாரித்த உணவுப் பொருட்களில் மட்டும்தான் மக்களுக்கு கேடுவிளைவுக்கும் மூலப் பொருட்கள் கலந்து இருக்கிறதா? மேகியில் கலந்து இருக்கும் வேதிப் பொருட்கள் வேறு எந்த இந்திய உணவுகளிலும் கலந்து இருக்கவில்லையா ?அப்படியானால் இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் எல்லாப் பொருட்களும் பாதுகாப்பானவைகள்தானா? மோடி அரசாங்கம் இதற்கு பதில் சொல்லுமா ?

இந்தியாவில் விற்பனையாகும் கோக் உடல் நலத்திற்கு நலம் விளைவிக்க கூடியதுதானா? அதை தொடர்ந்து குடிப்பவர்கள் உடல் நலம் பாதிக்காது என்று மோடியால் உத்திரவாதம் தரமுடியுமா?

அதுபோல இந்தியாவில் விற்கும் KFCசிக்கன் பீட்ஸா போன்ற உணவுவகைகள் மக்களுக்கு கேடுவிளைவிக்காது என்பதற்கு உத்தரவாதம் தரமுடியுமா?

சரி வெளிநாட்டுக்காரன் தாயாரித்து விற்பனை செய்யும் உணவுவகைகளை விட்டுவிடுவோம் உள்நாட்டில் விளைவிக்கப்படும் பொருட்களுக்கு அப்படி கட்டுபாடு ஏதும் உண்டா இல்லையா?

அப்படி உண்டு என்றால் இதற்கு பதில் சொல்லுங்கள் மோடி அவர்களே?

பல மேலைநாடுகளால் தடைசெய்யப்பட்ட ராசயன உரங்களை உபயோகித்து விளைவிக்கப்படும் உணவு பொருட்கள் உண்பதற்கு ஏற்றவைதானா அதனால்  இந்திய மக்களுக்கு கேடு ஏதும் இல்லையா என்ன?

பல நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்து மாத்திரைகள் இந்தியாவில் விற்கப்படுகின்றனவே அது இந்திய மக்களின் உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்காதா?

இந்தியாவில் ஒடிக் கொண்டிருக்கும் கோடிகணக்கான வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைகளை கட்டுபடுத்த மேலை நாடுகளில் கையாளப்படும்  தரக்கட்டுபாடுகள் போன்ற கட்டுப்பாடுகள் உண்டா? அந்த வாகனங்களில் இருந்து வெளிவரும் புகைகளினால் மக்கள் நலம் காக்கப்பட வேண்டாமா அதனால் தீங்குகள் ஏற்படாதா என்ன?

இறுதியாக எல்லோராலும் விரும்பி உண்ணப்படும் மாம்பழங்கள் இராசாயனத்தை பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகிறதே அதற்கு ஏதும் தடை உண்டா அல்லது அரசாங்கத்தால் நடத்தப்படும் மதுக்கடைகளுக்கு தடை உண்டா என்ன?

இதற்கெல்லாம் தடை போடாமல் 'நெஸ்லே' நிறுவனம் தாயரிக்கும் உணவுப் பொருட்களுக்கு மட்டும் தடைவித்தது எந்த விதத்தில் நியாயம் மோடி அவர்களே


மோடி அவர்கள் கமிஷனுக்காக அல்லாமல் உண்மையிலே மக்களின் நலன் கருதிதான் இந்த தடையை வித்தித்து இருந்தால் நிச்சயம் அவருக்கு நம் பாராட்டை தெரிவித்து ஒரு கோயில் கட்டித்தான் கும்பிட வேண்டும். அவர் மக்கள் நலன் கருதி செயல்பட்டால் அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட 217 க்கும் மேற்பட்ட இந்திய உணவுப் பொருட்களையும் இது போல சோதித்து தடைவிதிக்க வேண்டும் அது போல மாநில அரசாங்கத்திற்கும் கட்டளை பிறப்பித்து உணவுப் பொருட்கள் விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும்


டிஸ்கி: 'நெஸ்லே' நிறுவனம் மோடிக்கு கப்பம் கட்டத தயாரானால்  'நெஸ்லே' நிறுவனம் தொடர்ந்த வழக்கிற்கு  நீதிபதியாக குமாரசாமி நியமிக்கப்பட்டு அந்த ரசாயனங்கள் மக்களுக்கு ஒரு ஊட்டச்சத்து தான் என்று சொல்லி விதிக்கப்பட்ட தடையை நீக்கிவிட்டு 'நெஸ்லே' நிறுவனத்திற்கு (சாதகமான) நியாயமான நீதி கிடைக்க வாய்ப்புகள் உண்டு

Data on the website of the U.S. Food and Drug Administration show that it rejected more snack imports from India than from any other country in the first five months of 2015. In fact, more than half of all the snack products that were tested and then blocked from sale in the U.S. this year were from India. Indian products led the world in snack rejects last year as well.

Most Indian snacks rejected by the FDA this year were from the Nagpur-based food company Haldiram’s.  The FDA said on its website that it rejected the Haldiram’s products because it found pesticides in them.


So why did the Indian snacks fail the U.S. FDA tests?

The reasons vary from problems in packaging and labeling to alleged contamination. The FDA website says Indian products have been found to contain high levels of pesticides, mold and the bacteria salmonella.

In one colorful description this February of a product from the western state of Gujarat, which the FDA identified only as “snack foods not elsewhere mentioned,” it said it blocked the import as it “appears to consist in whole or in part of a filthy, putrid, or decomposed substance or be otherwise unfit for food.”

While India’s national food-safety watchdog doesn’t monitor exports, it has been rushing to test everything from soups to pastas to instant noodles sold domestically in the wake of the Nestlé findings.


http://www.accessdata.fda.gov/scripts/importrefusals/ir_months.cfm?LType=P U.S. Food and Drug Administration Import Refusal Reports

அன்புடன்
மதுரைத்ததமிழன்( டி.ஜே. துரை )

5 comments:

  1. என்னமோ போ . .தமிழா...போன வாரம் ஒரு சூறாவளி சுற்றுபயணம் போல் இந்திய போகையில்... இந்த குருநிலமன்னர்களின் வளர்ச்சியை அதிகமாக காண முடிந்தது. இது எங்கே போய் முடியும் என்று எனக்கு தெரியவில்லை. பல நாட்களுக்கு பிறகு தங்கள் பதிவு..அதே ருசி .. அதே காரம்..

    ReplyDelete
  2. நல்லாவே அலசி ஆராயறிங்க.. எப்ப ஊருக்கு போனிங்க? உண்மையில் நீங்க இங்கயே இருந்தா உங்கள பெரிய தலைவராக்கி மோடி சீட்ல உங்கள உட்கார வச்சிருப்போம் அம்புட்டு அறிவு உங்களுக்கு... நெசமாத்தாங்க..!

    ReplyDelete
    Replies
    1. வீட்டுல துணி துவைத்து அலசி போடும் அனுபவம் இருப்பதால்தான் இப்படி கொஞ்சம் அரசியலையும் அலச முடிகிறது நான் மோடி சீட்ல உட்கார்ந்தா உங்களுக்கு சுஷ்மா சுவராஜ் சீட்டு நிச்சயம்

      Delete
  3. நியாயமான கேள்விகள்...இன்னொண்ணும் விட்டுட்டீங்களே ! இந்த அரசு பிடி (பயோடெக்) காய்கறிகள், பழங்கள் கேடல்ல என்று சொல்லி இருப்பது....அதை ஆதரிப்பது......

    ReplyDelete
  4. விழிப்புணர்வூட்டும் பதிவு! ஆனால் நம்மவர்கள் விழித்துக் கொள்ளாமல் தூங்கியேதான் இருப்பார்கள்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.