Sunday, June 21, 2015



யோகாவும் மோடி அரசியலும்.....

ஜூன் 21-ஆம் தேதியை "சர்வதேச யோகா தினமாக" கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானம் 177 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது .யோகா உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் மிகவும் நல்லதுதான்...ஆனால் திடீரென்று  யோகாவிற்கு மோடி அரசு கொடுத்த விளம்பரமும் முக்கியத்துவமும்தான் ஏன் என்று யோசித்து பார்த்தால் அதில் மோடியின் அரசியல் ஒளிந்து இருக்கிறது


லலித்மோடி விவகாரத்தில் உலக அரங்கில் மோடி அரசு அசிங்கபட்டு நாறிக் கொண்டிருக்கிறது அது மட்டுமல்லாமல் இந்திய நாடும் அல்லோலகபட்டு கொண்டு இருக்கிறது. இந்த லலித் மோடி விவகாரம் பற்றி மோடி வாயை திறந்து பதில் அளிக்காமல் இருப்பதும் மக்களின் மனதில் மோடி பற்றிய இமேஜ் குறைந்து அவரது மதிப்பு அகோல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில்தான் டிசம்பர் 2014ல் ல் ஜநாவால் அறிவிக்கப்பட்ட ஜூன் 21-ஆம் தேதி "சர்வதேச யோகா தினம்" என்பதை இப்போதுதான் அறிவித்த மாதிரி கையில் எடுத்து  ஆட்டத்தை ஆரம்பித்தார்.  இது மோடிக்கு கிடைத்த துரும்பாகும்.

ஐநா அறிவிப்பை இங்கே சென்று பார்க்கலாம் http://www.un.org/en/ga/search/view_doc.asp?symbol=A/RES/69/131

The United Nations proclaimed 21 June as the International Day of Yoga.
Yoga is an ancient physical, mental and spiritual practice that originated in India. The word ‘yoga’ derives from Sanskrit and means to join or to unite, symbolizing the union of body and consciousness.Today it is practiced in various forms around the world and continues to grow in popularity.
Recognizing its universal appeal, on 11 December 2014, the United Nations proclaimed 21 June as International Yoga Day by resolution 69/131.
International Yoga Day aims to raise awareness worldwide of the many benefits of practicing yoga.


சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று தமிழில் சொல்வது போல லலித் மோடி விவகாரத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மோடிக்கு இது பெரும் துரும்பாகவே இருந்தது. இதை தனது விளம்பர துணையாளர்களை வைத்து இந்த யோகா செய்தி http://www.un.org/en/events/yogaday/ மிகப் பெரிதாக விளம்பரப்படுத்தப் பட்டு மிக பெரிதுபடுத்தப்பட்டு மீடியாக்களில் இந்த யோகா பற்றி செய்திகள் மிக அதிகம் பேசப்பட வைத்து அதன் மூலம் லலித் மோடி விவகாரம் பெரிதும் அடக்கப்பட்டது என்றே சொல்லாம்..

அடுத்து சில வாரங்களுக்கு இந்த யோகா செய்திகள் மட்டும் பெரிதும் பேசப்படும் அதன்பின்  டெல்லியில் எந்த பெண்ணாவது பலாத்காராம் செய்யபடுவாள் அல்லது கேஜ்ரிவால் அரசு மீது ஏதாவது அவதூறு பரப்பபடும். அல்லது  இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் குல்லா போடுக் கூடாது என்றும் அல்லது கிறிஸ்துவர்கள் காவி உடையைதான் அணிய வேண்டும் என்று எந்த மத்திய அமைச்சாரவது சொல்லுவான் அதன் பின் செய்திகள் வேறு திசை திருப்பபட்டு இந்த லலித்மோடி விவகாரம் அடியோடு இந்தியர்களின் மனதில் இருந்து மறைக்கடிக்கப்படும்,

இதுதான் மோடியின் கேடி அரசியல்....

அன்றாடம் பசி பட்டினியால் இறக்கும் இந்திய மக்களுக்கும் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளுக்கும், தீண்டாமைக் கொடுமையால்  சாகும் மனிதர்களுக்கும், பலாத்கார சாவினால் இறக்கும் பெண்களுக்கும் கருணை காட்ட இந்த மோடி அரசுக்கும், அதனை சார்ந்த அமைச்சர்களுக்கும் பாவம் நேரமில்லைதான். என்ன செய்ய அவர்கள்தான் இந்த நிகழ்வுகள் அவர்களின் மனத்திற்கு அழுத்தத்தை கொடுத்துவிடக் கூடாது என்று யோகா செய்து கொண்டிருக்கிறார்கள்.

மோடி அரசாங்கத்தை பொருத்தவரை ஏழைகள் இந்தியர்கள் அல்ல அவர்கள் இந்தியாவின் அடிமைகள்தான்
 

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : 2016  இப்படியும் செய்திகள் வரலாம்
மோடி அரசு அறிமுகப்படுத்திய யோகா திட்டத்தினால் இந்திய மக்கள் மிக நல்ல மனநலத்துடனும் உடல் நலத்துடனும் வாழ்வதால் இந்திய டாக்டர்களின் நிலை கேள்விக்குரியதாகிவிட்டது. பல டாக்டர் தற்கொலை செய்ய தொடங்கிவிட்டனர். புத்திசாலி டாக்டர்கள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் மீது உள்ள நம்பிக்கையால் தமிழகம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்

மோடிக்கு  "யோகாவின் தந்தை' என்ற பட்டம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

15 comments:

  1. எல்லாவற்றிலும் அரசியல் புகுந்துவிட்டது! கார்பரேட் சாமியார்கள் கையில் யோகா சிக்கியபோதே அதன் பெருமை படுகுழியில் விழுந்துவிட்டது!

    ReplyDelete
    Replies
    1. கார்பரேட் சாமியார்கைகளில் சிக்க வரும் யோகா விஷம் கலந்தது போன்றதே

      Delete
  2. லலித் மோடி விவகாரம் வருமுன்பே யோகாதினம் பற்றி அரசியல் துவங்கி விட்டது என்று நினைக்கிறேன் யோகா உடலுக்கு நல்லது . அது பற்றிய அரசியல் ஆட்டம் ஊறு விளைவிக்கும்

    ReplyDelete
    Replies
    1. காய்கறிகள் உடம்புக்கு நல்லதுதான் ஆனால் அதில் அதிக அளவில் இராசயன உரங்கள் கலந்தால் எப்படி நல்லது கிடையாதோ அது மாதிரிதான் யோகாவும். யோகா மிக நல்லதுதான் அதில் இவர்கள் கலக்கும் அரசியல் மற்று மத சாயங்கள் அதை வேறுக்க செய்து விடுகின்றனவே

      Delete
  3. "கேடி அரசியல்" என்பது கொஞ்சம் டூ டூ மச். எல்லா அரசியல்வாதிகளும் செய்வதுதானே. அரசியல்வாதிகளின் குறிக்கோள் பதவி. பம்மாத்து வேலை பண்ணாமல், நல்லது மட்டும் செய்தால், காமராசருக்கும், ஜீவாவுக்கும் கக்கனுக்கும் நேர்ந்த கதிதான் ஆகும் என்பது அவர்களுக்குத் தெரியாதா?

    கட்டுரையின் நகைச்சுவை உணர்வு நன்றாக வந்துள்ளது

    ReplyDelete
    Replies
    1. மோடி தன்னை விவேகனந்தர் போல காண்பித்து கொண்டு ஏமாற்று வேலை பண்ணினால் கேடி என்று கூறுவதில் தப்பே இல்லைங்க...காமரசர் கக்கன் போன்றவர்கள் கஷ்டப்பட்டு இருக்கலாம் ஆனால் அவர்களால் எத்தனை கோடி மக்கள் பலன் அடைந்து இருக்கிறார்கள் அதை பாருங்கள் பலர் நன்றாக இருக்க ஒருவர் கஷ்டப்படுவதில் தவறு இல்லை ஆனால் ஒருத்தன் நல்லா இருக்க கோடி பேர் கஷ்டப்படுவதுதான் தவறு

      Delete
  4. அரசியலில் இவை இயற்கையே. நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும். வேறு வழி?

    ReplyDelete
    Replies
    1. பொறுத்தது போதுமுங்க இதுனால பாதிக்கப்படுவது நமது வாரிசுங்க....அதுனால இதை எதிர்க்க நம் வீட்டு குழந்தைகளுக்கு சொல்லி தரணுமுங்க... இதனால உங்க குழந்தை பாதிக்கலாம் ஆனால் எதிர்கால வாரிசுகள் நல்லபடியாக இருக்கும்

      Delete
  5. அவாள ஒன்னும் செய்ய முடியாதுன்னா...
    நாட்டில் பாதிப் பயல் முட்டாள் மீதிப்பயல் சுயநலமி இதுல எங்க இருந்து...

    ReplyDelete
    Replies
    1. நம்ம நாட்ல மூட்டாள் பசங்களை விட சுயநலக்காரர்கள் மிகவும் அதிகரித்துவிட்டாகள் அது மிக ஆபத்தானதுங்க

      Delete
  6. 2016 செய்தி செம்ம. யோகா சரியான நேரத்தில் மோடியின் கையில் சிக்கியுள்ளது. எங்கும் யோகா பற்றிய பேச்சுதான். லலித் மோடி பற்றிய பேச்சு தன்னாலேயே புதைந்துவிட்டது

    ReplyDelete
    Replies
    1. புதைந்துவிட்டது என்பதற்கு பதிலாக புதைத்துவிட்டார் மோடி என்று சொல்லாம்

      Delete
    2. அதுதான் சரி!. புதைத்துவிட்டார்.

      Delete
  7. அரசியல் எதில்தான் என்பதற்கு வரைமுறை இல்லாமல் ஆகிவிட்டது....டிஸ்கி சூப்பர்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.