உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, July 31, 2012

வருங்கால தமிழகம் எப்படி இருக்கும்?


வருங்கால தமிழகம் எப்படி இருக்கும்?


தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஒயின்ஷாப்பை மூடினால் எப்படி மறைந்த முதல்வர் எம்ஜியார்  சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து மக்கள் மனதில்  நிலைத்து இருந்தாரோ அது போல் மக்கள் நிலைத்து இருப்பார். அவர் செய்வாரா இல்லை இல்லையா என்பதை பொறுத்து பார்ப்போம்,


ஒருவேளை அப்படி அவர் ஒயின் ஷாப்பை மூடவில்லையென்றால் அவர் ஆட்சி முடியும் போது தமிழகம் எப்படி இருக்குமென ஒரு சிறு கற்பனை. மக்களே சிரிப்பு வந்தால் சிரிக்கவும் வராதவர்கள் அப்படியே ஒரு ஒயின் ஷாப் பக்கம் போய் 2 பாட்டில் வாங்கி அடித்துவிட்டு எங்காவது ஒரு ரோட்டில் படுத்து தூங்கி செல்லவும்


பஸ்டாண்டில் குடிகாரன் : ஐயா சாமி தர்மம் பண்ணுங்கய்யா.... சரக்கு அடிச்சு 2 நாளாகிறது ....

தமிழகசெயலகத்தில் இருந்து தமிழகம் மூழுவதும் டீக்கடைகள் அகற்றப்பட்டு பீர் கடை திறந்திருக்கும்

ஆபிஸ்களில் காபி பிரேக்குக்கு பதிலாக சரக்கு பிரேக்கு இருக்கும்

காலையில் பால்காரன் கதவை தட்டுவதற்கு பதில் ஒயின் காரன் கதவைதட்டுவான்.

என்னங்க நாம் வேற ஒயின்காரனை மாத்தனும் வர வர இவன் அதிகம் தண்ணி கலந்து விக்குறான்

பொண்ணு பார்க்க வருகையில் இது எங்க பொண்ணு மிக்ஸ் பண்ண ட்டிரிங்க். அதை குடித்த மாப்பிள்ளை பேஸ் பேஸ் ரொம்ப நன்னாயிருக்கு என்ற சம்பாஷணைகள் நடக்கும்.

பிரின்சபால் மாணவனின் பெற்றொர்களிடம்..உங்க பையன் நேற்று கல்லூரிக்கு வரும் போது காபி குடிச்சுட்டு வந்திருக்கிறான் அவனுக்கு புத்தி சொல்லுங்க...இவனைப் பார்த்து மத்த மாணவர்கள் கெட்டு போய்விடுவார்கள். இந்த மாதிரி இவன் இன்னொரு முறை காபி குடிச்சிட்டு வந்தா இவனை கல்லூரியை விட்டு நீக்குறதை தவிர வேற வழி எங்களுக்கு இல்லை என்று சொல்லுவார்கள்.

நீங்க பார்த்த மாப்பிள்ளைக்கு என்ன குறைங்க நல்லா சம்பாதிக்கிறார் அழகாக இருக்கிறார்.

அதெல்லாம் சரிங்க ஆனா அவன் தினமும் டீ குடிக்கிறாங்க. அப்படிப்பட்டவனை நம்பி பொண்ணை எப்படி கொடுக்குறதுங்க

ராமதாஸ் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் காபிகடைகள் முதலில் மூடப்படும் என அறிவிப்பார்.

டீக்கடை காபி கடை நடத்த பெர்மிட் இருக்க வேண்டும்.

பள்ளி மற்றும் கோயிலுக்கு அருகில் டீக்கடை நடத்த அனுமதியில்லை.

டீகாபி  குடித்து வண்டி ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும்

சமையல் குறிப்பு எழுதும் பதிவாளர்கள் காபி டீ போடுவது என்று குறிப்பு எழுதி பதிவு வெளியிட்டால் அவர்கள் மதவாதம் பண்ணும் பதிவாளர்கள் ஒதுக்கப்படுவார்கள்


டிஸ்கி : உங்களுக்கும் இது மாதிரி ஏதும் ஐடியா தோன்றினால் பின்னுட்டம் மூலம் சொல்லி செல்லவும்.


அன்புடன்,
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்

Monday, July 30, 2012

சட்டம் எல்லோருக்கும் சமம் என்றால் அந்த சட்டம் ஜெயலலிதாவை கைது செய்யுமா?
சட்டம் எல்லோருக்கும் சமம் என்றால் அந்த சட்டம் ஜெயலலிதாவை கைது செய்யுமா?

தாம்பரத்தில் பலியான சிறுமி ஸ்ருதியின் துயர மரணம் மனதை சங்கடபடுத்தி வேதனையுறச் செய்தன என்பதில் யாருக்கும் எந்த வித மாற்றமில்லை அந்த சம்பவம் என்னையும் வேதனையுறச் செய்தது. அந்த குடும்பதாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.


இந்த நிகழ்ச்சி தொடர்பாக என் மனதில் எழுந்த எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த நிகிழ்ச்சிக்கு யார் காரணம் பள்ளி உரிமையாளரா அல்லது பழுதடைந்த பஸ்ஸுக்கு உரிமம் வழங்கிய அரசாங்க ஆபிஸர்களா அல்லது பெற்றோர்களா?குழந்தையின் உயிர் இழப்பு காரணமாக நாம் உணர்ச்சிவசப்பட்டு பள்ளி உரிமையாளரயோ அல்லது அரசாங்க ஆபிஸர்களையோ மட்டும் நாம் குறை கூறுகின்றோம்.


ஆனால் இதற்கு காரணம் குழந்தையின் பெற்றோர்களும் இந்த சமுகமும்தான் காரணம் என்று கூற்றை நாம் ஏற்க முன்வருவதில்லை. அப்படி ஏற்றுகொண்டால் நாம் தான் அந்த தவறுகளுக்கு காரணம் ஆகி விடுவோம் என்று கருதி அதை மற்றவர்கள் மீது பழி போட்டு நாம் தப்பித்து கொள்ள முயற்சிக்கிறோம்.

முதலில் பெற்றோர்களை பார்த்து நான் கேட்கும் முதல் கேள்வி?, "என்றாவது ஒரு நாள் உங்கள் குழந்தை செல்லும் பஸ் பாதுகாப்பானதா என்று அறிய முயற்சி செய்தீர்களா? உங்கள் குழந்தையின் பாதுகாப்பு உங்களுக்கு முக்கியம் என்றால் அதை நீங்கள் செய்து இருக்க வேண்டுமே அதை நீங்கள் ஏன் செய்யவில்லை. உங்களுக்கு உண்மையான அக்கரை இருந்தால் நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் பஸ் பயணம் பாதுகாப்பாக இருக்கிறதா? பஸ்ஸை ஒட்டும் டிரைவர் எப்படி என்று என்றாவது ஒரு நாள் விசாரித்தீர்களா? அல்லது குழந்தை செல்லும் பஸ் டிரைவரிடம் நட்பாக பழகி பஸ் எந்த கண்டிஷ்னில் உள்ளது என்று ரகசியமாக விசாரித்தது உண்டா? பஸ்ஸில் செல்லும் எந்த குழந்தைகள் மூலம் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதா என்றுதான் விசாரித்தீர்களா? இதையெல்லாம் பொறுப்போட செய்யாமல் சம்பவம் நடந்த பின் மற்றவர்களை குற்றம் சுமத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது சொல்லுங்களேன்.

எனது அடுத்த கேள்வி சமுகத்தை பார்த்து கேட்கும் கேள்வி. பணம் கறக்கும் இந்த கல்வி நிலையத்திற்கு போட்டி போட்டு பணத்தை அள்ளிவாரி அந்த பள்ளிக்கூடங்கள் செய்யும் சிறு தவறுகளை கூட தட்டி தைரியமில்லாத சமுகமாகவே நம் சமுகம் காணப்படுகிறது. நாம் வசிக்கும் வீட்டிற்கு அருகில் நல்ல பள்ளிகூடங்கள் இல்லையா அல்லது நாம் ஆபிஸ் போகும் வழியில் இல்லையா என்ன? நாமெல்லாம் அப்படி நம் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில் படித்தவர்கள்தானே? அப்துல்காலாமிலிருந்து இன்று அமெரிக்காவில் வேலை பார்க்கும் டாக்டர் எஞ்சீனியர்கள் எல்லாம் இப்படி புகழ் பெற்ற பள்ளியில் படித்தா வந்தார்கள். அவரவர் வீட்டிற்கு அருகில் உள்ள ஏதோ ஒரு பள்ளியில் படித்துதானே முன்னேறியுள்ளார்கள்.

வெளிநாடுகளைப் பார்த்து வாழ்க்கைக்கு உதவாத எல்லாவற்றையும் பார்த்து காப்பி அடிக்கும் நீங்கள் அங்கு எப்படி பள்ளிகூடங்கள் செயல்படுகின்றன என்பதை பார்த்து காப்பி அடிப்பதுதானே? இங்கு நான் வசிக்கும் அமெரிக்காவில் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில்தான் குழந்தைகளை படிக்க வைக்க முடியும். நமக்கு அந்த பள்ளி பிடிக்கவில்லை சிறிது தூரத்தில் இருக்கும் பள்ளியில்தான் நல்லா சொல்லி தருகிறார்கள் என்று அங்கு நம்மால் சேர்க்க முடியாது. வேண்டுமென்றால் அந்த பள்ளி இருக்கும் இடத்திற்கு அருகில்தான் நாம் வீடு மாறி செல்லவேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்றவாறு அரசாங்கமே பள்ளிகளை மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் திறக்கிறது. இந்த மாதிரி சட்டதிட்டங்களை கொண்டு வர வேண்டுமென்று ஏன் நம் சமுக மக்கள் ஒட்டு கேட்க வரும் தலைவர்களிடம் கேட்பதில்லை. அது போல தெருவுக்கு தெரு ஒயின் ஷாப்களை திறக்கும் அரசாங்கம் ஏன் அதிக அரசாங்க பள்ளிகளை திறந்து நல்ல திறமையான ஆசிரியர்களை நியமிக்க கூடாது.


தமிழ் சமுகமே உன்னிடம் இறுதியாக சில கேள்விகளை கேட்கிறேன்? ஒரு குழந்தையின் உயிர் இழப்பபை கண்டதும் கொதித்து எழுந்து பள்ளி உரிமையாளரையும் அரசாங்க அதிகாரிகளையும் எதிர்த்து போராடுகிறீர்களே... ஒயின் ஷாப்பை திறந்து வைத்து அதற்கு அடிமையாகி எத்தனே பேர் உயிர் இழக்கிறார்கள் அந்த உயிர்கள் உங்களுக்கு இழப்பாக தோன்றவில்லையா? அல்லது எத்தனை அரசாங்க பஸ்ஸுக்கள் இந்த பஸ்சை போல பாதுகாப்பாக இல்லாமல் ஒடி எத்தனை உயிர் இழப்புகளை ஏற்படுகின்றன அது உங்களுக்கு இழப்பாக தோன்றவில்லையா?பஸ்ஸில் ஒட்டை இருக்கிறதா இல்லையா என்பது பள்ளி உரிமையாளருக்கு எப்படி தெரியும் அவர் என்ன தினமும் எல்லாவற்றையும் சோதித்து கொண்டா இருக்கமுடியும்.அதற்கு காரணம் பள்ளி மேனேஜ்மெண்ட் டீம்தான் அதானல் அந்த டீம் மேனேஜரைத்தான் கைது செய்ய வேண்டும். ஒருவேளை அந்த மேனேஜர் உரிமையாளரிடம் சொல்லி அவர் அதை கண்டு கொள்ளமல் இருந்திருந்தால் அவரை கைது செய்வதுதான் சரி.இல்லையென்றால் அது தவறுதான். இதே போல் தமிழக அரசு பஸ்ஸுக்கள் பல இது போல ஒட்டை உடைசலாக ஒடி பல விபத்துக்கள் ஏற்படுகின்றனவே அதற்காக இதே சட்டம் தைரியமாகா ஜெயலலிதாவை கைது செய்யுமா என்ன?

பள்ளி உரிமையாளருக்கு எதிராகா போராடும் சமுகமே நீ ஏன் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எதிராகவும் இப்படி கட்சி பேதமின்றி போராடக் கூடாது.


நீ முட்டாளா இருந்தது போதும் இப்போதாவது உன் உரிமைக்காக போராடு..


என்னால் இதை உங்களுக்கு சொல்லத்தான் முடியும். இந்த உரிமைக்காக போராடுவது என்பது  உங்களால்தான் முடியும் காரணம் நீங்கள்தான் பாதுகாப்பற்ற தமிழகத்தில் வாழ்கிறீர்கள்அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog