Tuesday, July 24, 2012





அழகாக தோன்ற மிக எளியமையான வழிகள்( ஆண்கள் பெண்கள் ஏன் முதியோர்கள் கூட கடைபிடிக்கலாம்)

யாருதான் அழகாக இருக்க ஆசைபடமாட்டார்கள்.அப்படி ஆசைபடுபவர்கள் நான் சொல்லும் முறையை கடைபிடித்து வாருங்கள் .அப்படி பின்பற்றினால் நீங்கள் முதியவர் ஆனால் கூட மிக அழகாக மற்றவர்களுக்கு தோன்றுவிர்கள். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மிக எளிதான வழிகள்தான்.

முதலில் உங்கள் உதடு மிக அழகாகவும் கவர்ச்சியாக இருக்க அதிலிருந்து வரும் வார்த்தைகள் மிக கனிவாகவும் கடுஞ்சொல் இல்லாமலும் பண்பட்ட வார்த்தைகளாக இருக்க வேண்டும்.

அடுத்தவதாக கண்கள். உங்கள் கண்கள்  உங்களை சுற்றி உள்ளவர்களிடம் உள்ள நல்ல தன்மைகளை மட்டும் பார்க்க பழக்குங்கள்.

அடுத்து நாம் கவனம் செலுத்த வேண்டியது நமது உடலை எப்படி ஸ்லிம்மாக வைப்பது என்பதைத்தான் அதை செய்வது மிக எளிது நீங்கள் சாப்பிடும் உணவில் பாதியை பசிக்கும் மனிதர்களுக்கு கொடுத்து பாருங்கள் நீங்கள் வெகு விரைவில் ஸ்லிம்மாக ஆகிவிடுவிர்கள்.

உங்கள் தலை முடியை கோதிவிட குழந்தைகளுக்கோ அல்லது காதலன்/காதலி கணவன்/மனைவிக்கு அனுமதி கொடுங்கள்.

இறுதியாக தன்னம்பிக்கையுடன் நிமிர்ந்து கம்பீரமாக நடக்க அறிவை வளர்த்து நடந்து பாருங்கள். அதன் பின் நீங்கள் தனியாக நடக்கும் எண்ணமே உங்களுக்கு இருக்காது. ஒரு ராஜாவை போல படை சூழ நடந்து செல்லும் எண்ணம் உங்களுக்கு இருக்கும்.(அறிவை வளர்க்க வேறு எங்கும் செல்ல வேண்டாம் தவறாமல் என் வலைதளம் வந்து செல்லுங்கள்...ஹீ.ஹீ)

மேலே நான் சொன்ன வழிகளை பின்பற்றி வாருங்கள் அதன் பின் நீங்கள் எப்போதும் மிக அழகாக மற்றவர் கண்களுக்கு தோன்றுவிர்கள்

அது யாருப்பா சவுண்டுறது நான் அழகாக என்று கேட்டு?

நான் ரொம்ப அழகு நீங்கள் எல்லாம் கண் திருஷ்டி போட்டு விடுவீர்கள் என்பதால் தான் நான் என் படத்தை இங்கு வெளியிடவில்லை.

நான் சொன்ன வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் மிக அழகாக ஆகி எனக்கு உங்கள் போட்டோவை அனுப்பி வையுங்கள் ( பெண்கள் மட்டும் அனுப்பவும் ஆண்களே உங்கள் போட்டோவை உங்கள் வீட்டு வாசலில் மாட்டி வைக்கவும் நான் இந்தியா வரும் போது பார்த்துக்கிறேன்..( இந்தியாவுக்கு இப்ப வரப்பல ஐடியா ஏதும் இல்லை ஹா.ஹா...)

அப்ப வாறேனுங்க...

அன்புடன்
உங்கள் அபிமானதிற்குரிய செல்ல கிறுக்கன்
மதுரைத்தமிழன்

15 comments:

  1. அழகாக மாற மிக மிக எளிதான் அருமையான
    செலவில்லாத வழியைச் சொன்னமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இலவசமனா தமிழக மக்களுக்கு புடிக்கும் என்பதால்தான் இந்த செலவில்லாத அழகு குறிப்பு

      Delete
  2. வழிமுறைகளை பின்பற்றி அழகாக மாறி போட்டோ அனுப்புகிறேன்..(அழகாக மாறிடுவேனா)

    பிரபல பதிவர்கள் சங்கமிக்கும் சென்னை பதிவர் சந்திப்பு

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஏற்கனவே மிக அழகு இதை மேலும் கடைபிடித்தால் உலக அழகனாக மாறிவிடுவீர்கள் அப்ப நம்ம சக பதிவாலர்கள் சசி ராஜி உங்களை பார்த்து பொறாமை பட போகிறார்கள் பார்த்துங்க

      Delete
  3. எல்லாமே சரியா சொன்னிங்க அது என்ன அறிவை வளர்க்க மட்டும் தவறா சொல்லிட்டீங்க போல ம்ம்.

    ReplyDelete
    Replies
    1. மொக்கை போடுறதுக்கு மிக அறிவு வேண்டும் அதனாலதான் அப்படி சொன்னேன். அது தவ்று இல்லை என்பதை இப்போ நீங்க புரிஞ்சு இருப்பிங்கனு நினைக்கிறேன்

      Delete
  4. //// ஆண்களே உங்கள் போட்டோவை உங்கள் வீட்டு வாசலில் மாட்டி வைக்கவும் ///

    ஐயோ .... ஆண்கள் நீங்கள் சொன்னதை செய்தால்....
    மேலே சொன்ன மாதிரியா ஆகி விடும்....?
    ஹா.ஹா..


    நன்றி..
    திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
    Replies
    1. என்ன சார் நீங்கள் நம்ம கட்சின்னு நினைச்சா ஒரே தவ்வா பெண்கள் கட்சியில் தாவிட்டடிங்ககேளே நண்பா

      Delete
  5. என்னடா நம்ம சகோ புதுசா அழகுகுறிப்புலாம் போட்டு பயனுள்ள பதிவை போட்டுட்டாரேன்னு நினைச்சேன். கடைசில இதுவும் மொக்கை பதிவுதானா? இதுல அறிவை வளர்த்துக்க வேறெங்கும் போக வேணாம்ன்னு அட்வைஸ் வேற...

    ReplyDelete
    Replies
    1. நான் உங்க சகோ என்பதை மறந்திட்டீங்களா ?அதனாலதான் மொக்கை பதிவு

      Delete
  6. பெண்கள் மட்டும் அனுப்பவும் ஆண்களே உங்கள் போட்டோவை உங்கள் வீட்டு வாசலில் மாட்டி வைக்கவும்//

    அருவாளை இங்கே எங்கேயோ வச்சேனே எங்க வச்சேன்......? எலேய் சண்முகபாண்டி நீ பாத்தியா அருவாளை...? இன்னைக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. எலேய் சண்முகபாண்டி அருவாளை இனி நீ தேட வேண்டாம்டா மணோ அண்ணணுக்கு எனக்கு வர போட்டோவுல பாதியை அவருக்கு அனுப்புரேன்னு சொன்னதும் என்னை வாழ்த்தி கவிதை எழுதி சரக்கு வாங்கி அனுப்பிச்சிருகாருடோய்

      Delete
  7. அழகுக் குறிப்புகள்! அற்புதம்! நன்றி!
    இன்று என் தளத்தில் தெருக்குடிமக்கள்! கவிதை! http://thalirssb.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வந்து படிக்கிறேன் நண்பா.. உங்கள் கவிதைகளை சசி, ரமணி சார் மதுமதி சாரின் பார்வையில் படும்படி செய்யுங்கள்.அவர்களின் விமர்சனம் உங்களுக்கு மிக உற்சாகம் த்ரும். தரமான கருத்துக்களை அவர்கள் தருவார்கள்

      Delete
  8. இறுதியாக தன்னம்பிக்கையுடன் நிமிர்ந்து கம்பீரமாக நடக்க அறிவை வளர்த்து நடந்து பாருங்கள். அதன் பின் நீங்கள் தனியாக நடக்கும் எண்ணமே உங்களுக்கு இருக்காது. ஒரு ராஜாவை போல படை சூழ நடந்து செல்லும் எண்ணம் உங்களுக்கு இருக்கும்.(அறிவை வளர்க்க வேறு எங்கும் செல்ல வேண்டாம் தவறாமல் என் வலைதளம் வந்து செல்லுங்கள்.//

    தன்னம்பிக்கையுடன் நிமிர்ந்து கம்பீரமாக நடக்க ஆசை எனக்கு. அதனால் உங்கள் வலைதளம் வர முடிவு செய்து விட்டேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.