Monday, July 9, 2012


கடவுளுக்கு என்மேல் பொறாமைதான்




வானூர் : புதுவையை அடுத்த விழுப்புரம் பகுதியான ஆரோவில் அருகே உள்ள இடையஞ்சாவடி கிராமத்தில் வர்ணமுத்து மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.  5ம் நாள் விழாவாக அம்மனுக்கு 108 அபிஷேகம் நடைபெற்றது. காப்பு கட்டிய 3 பெரியவர்கள் தங்களது மொட்டை தலையில் எண்ணெய், வாசனை திரவியங்கள், பழ வகைகள், அபிஷேகப்பொருட்கள், விபூதி, சந்தனம், சிகப்பு உள்ளிட்டவைகளால் ஒன்றன்பின் ஒன்றா£ அவர்களின் தலையில் 108 அபிஷேகப்பொருட்களும் ஊற்றப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டது. கடைசியாக மிளகாய் தூள் கரைசல் அவர்களுக்கு மூன்று கைகள் கொடுக்கப்பட்டது. அதனை அவர்கள் வாங்கி குடித்தவுடன் அவர்களின் தலையில் அக்கரைசல் ஊற்றப்பட்டது. அதனை பக்தர்கள் அனைவரும் தரிசித்தனர். பிறகு அவர்கள் கோயிலுக்கு அழைத்துவரப்பட்டு அங்கிருந்து செடல் உற்சவத்தை துவக்கி ஊர்வலம் வந்து அதன்பின் தீமிதித்தனர்.


என்ன ஒரு மூடப் பழக்கம் ?
இப்படி வதைத்தால் தான் கடவுள் ஆசிர்வதிப்பார் எனில் எனக்கு கடவுள் என்ற அரக்கனின் ஆசிர்வாதம் வேண்டாம்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காதலி: "இதோ பாருங்க! உங்க கையை வச்சிக்கிட்டு என்கிட்டே எந்த சில்மிஷமும் பண்ணக் கூடாது. எல்லாம் கல்யாணத்துக்கப்புறம்தான்."

காதலன்: "சரி, அப்போ உனக்கு கல்யாணம் ஆனதும் எனக்குச் சொல்லி அனுப்பு."

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நம்ம ஊரு மசாலா தோசை, உலகில் ருசித்தே தீரவேண்டிய உணவுகள் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் ஒன்றாக தேர்வாகி உள்ளது...

தேர்தெடுத்தது ஒரு அமெரிக்க பத்திரிக்கை 'ஹஃபிங்டன் போஸ்ட்'

India: Masala dosa
If one subcontinental meal could persuade a committed carnivore to order vegetarian, my vote would go to a masala dosa in South India. The plate-covering, paper-thin pancake is made from rice and lentils, cooked to lacy perfection on a hot griddle. What creates the flavor is a spiced concoction of mashed cooked potatoes and fried onions, served with a liberal dose of garlicky

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒவ்வொரு முறை என் காதலியுடன் கோயிலுக்கு செல்லும் போது என் "அழகிய கடவுளை" கண்டகோயில் கடவுளுக்கு என்மேல் சற்று பொறாமைதான்'.

காதலியை கடவுள் என்று ஒப்பிட்டது அவளும் கடவுள் போலத்தான் வரம் தருவதற்கு முன்பு என்னை மிகவும் சோதிக்கிறாள்..

என் அழகிய  கடவுளிடம் பணத்தால் அபிஷேகம் பண்ணி அன்பு வார்த்தையால் நாள் முழுவதும் அர்ச்சனை பண்ணி அவளிடம் கிடைக்காத வரத்தை பெற முயற்சிக்க வேண்டும் என நினைக்கிறேன் அது சரிதானே

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உங்களுக்கு தெரியுமா?

ஒரு வருடத்திற்கு எத்தனை நொடிகள் உள்ளன தெரியுமா? 31,557,600 நொடிகள் (seconds )உள்ளன.

பாம்புக்கு பயப்படுபவர்களா நீங்கள் அப்ப நீங்க நீயூஸிலாந்துக்கு(New Zealand)  போங்க அங்க ஒரு பாம்பு கூட கிடையாது.

10 comments:

  1. எதை கரைக்க இந்த கரைசல்!

    ReplyDelete
  2. கடவுளுக்கு என்மேல் பொறாமை...ஹா ஹாஹ் ஹா ஹா

    ReplyDelete
  3. // கடவுள் என்ற அரக்கனின் // அப்படிச் சொல்லாதீங்க சார் மனிதன் செய்யும் தவறுக்கு பாவம் கடவுள் என்ன செய்வார்

    பல நல்ல தகவல்கள். நம்ம ஊரு மசாலா தோசைக்கு அவ்ளோ பான்ஸ் ஆ

    புத்தகம் போன்ற வடிவமைப்பு சூப்பர்

    ReplyDelete
  4. கனடாவிலும் பெரும்பாலான இடங்களில் பாம்புகள் இல்லை !!!

    அத்தனையும் இரசிக்கும்படியாக இருந்தது .. அருமை

    ReplyDelete
  5. என்ன ஒரு மூடப் பழக்கம் ?
    இப்படி வதைத்தால் தான் கடவுள் ஆசிர்வதிப்பார் எனில் எனக்கு கடவுள் என்ற அரக்கனின் ஆசிர்வாதம் வேண்டாம்//

    அவர் அப்படிச் சொன்னதாகத் தகவல் இல்லை
    இவர்கள்படுத்துகிற கொடுமைக்கு அவர் என்ன செய்வார்
    வழக்கம்போல நகைச்சுவைத் துணுக்கு
    மிக மிக அருமை.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மெலிதான நகைச்சுவையுடன் அறியாத பல தகவல்களைச் சொல்லி வியப்பூட்டியது பகிர்வு. நன்றி நண்பா.

    ReplyDelete
  7. என்ன ஒரு மூடப் பழக்கம் ?
    இப்படி வதைத்தால் தான் கடவுள் ஆசிர்வதிப்பார் எனில் எனக்கு கடவுள் என்ற அரக்கனின் ஆசிர்வாதம் வேண்டாம்.
    எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது இவர்களை.

    ReplyDelete
  8. ஓட்டுப் பட்டையகள் ஒன்னு கூட வேலை செய்ய மாட்டேங்குதே? ஆடிவேட் பண்ணி வுடுங்க, ஓட்டு போட்டுட்டு போறோம்.

    தவறான வழிபாட்டு முறைகள் கொண்டவர்களைப் போட்டு கடவுள் அரக்கன் என்று கடவுளைச் சாடுவது நியாயமா? அழகானப் பெண், அறிவான பெண், குடும்பப் பாங்கான பெண் என்று ஒரு பெண்ணைச் சொன்னால் நியாயம், ஆனால் ஒரு பெண்ணைப் போய் கடவுள் என்று சொல்லலாமா? ரெண்டுமே தவறு, தயவு செய்து திருத்திக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  9. நகைச்சுவை மற்றும் குறிப்புகள்,செய்திகள் சிறப்பு..

    ReplyDelete
  10. சுவையான பதிவு! உங்களின் இன்றைய பதிவு என் டேஷ் போர்டில் ஓப்பன் ஆகமாட்டேன் என்கிறது. நேற்றும் அப்படித்தான்! என்ன காரணம் தெரியவில்லை! பாருங்கள்! நன்றி!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.