காப்பி பேஸ்ட் பண்ணும் பதிவாளர்களுக்கு மிகவும் கடுமையான எச்சரிக்கை
பதிவாளர் கூட்டம் தமிழகத்தில் நடந்தது அப்போது மிகவும் கண்ணியமான வயதில் மூத்த பதிவாளர் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசும் போது சொன்னார் என் வாழ்க்கையில் மிகவும் சிறந்த நாட்களாக நான் கருதும் நாட்களில் ஒரு பெண்ணின் அரவணைப்பில் இருந்தது வந்தேன் ஆனால் அந்த பெண் என் மனைவி அல்ல என்று சொன்னார். அதை கேட்ட அனைத்து பதிவாளர்களும் ஷாக் அடித்தார் போல ஆகி மிகவும் மெளனாமாகிவிட்டனர். அந்த பதிவாளர் பேச்சை மீண்டும் தொடங்கி சொன்னார் அந்த பெண் வேறுயாருமல்ல என் அம்மாதான் என்று சொன்னதும் அரங்கமே சிரித்து கைதட்டி மகிழ்ந்தனர்.
ஒரு வழியாக பதிவாளர் கூட்டம் முடிந்ததும் வழக்கம் போல சரக்கு அடிக்கும் பதிவாளர்கள் கூட்டம் அப்படியே ஒதுங்கி சரக்கு அடித்து விட்டு அவரவர் வீட்டிற்கு சென்றனர். அதில் ஒரு பதிவாளர் வீட்டிற்கு சென்று மேலே சொன்ன ஜோக்கை மனைவியிடம் சொல்ல விரும்பினார். ஆனால் போதை கொஞ்சம் அதிகமாக இருந்ததினால் கொஞ்சம் சத்தமாக என் வாழ்க்கையில் மிகவும் சிறந்த நாட்களாக நான் கருதும் நாட்களில் ஒரு பெண்ணின் அரவணைப்பில் இருந்தது வந்தேன் ஆனால் அந்த பெண் நீ அல்ல என்று சொல்லி சிறிது நிறுத்தினான்.
அவன் சொன்னதை கேட்டதும் சமைத்து கொண்டிருந்த அவரின் மனைவி ஆத்திரமும் கோபமும் கொண்டாள்...
20 நொடிகள் அமைதியாக இருந்த அந்த பதிவாளர் ஜோக்கின் இரண்டாம் பகுதியை நினைவுக்கு கொண்டு வரமுயற்சித்தார் ஆனால் வரால் அதை நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை....அதனால் அவள் யாரு என்று எனக்கு நினைவு இல்லை என்று கூறினார்.
இதுதான் நடந்ததுங்க...அதன் பின் அவர் கண் முழித்து பார்த்த போது அவர் ஹாஸ்பிடல் பெட்டில் இருந்தால் அவர் மூஞ்சியில் கொதிக்கும் வெந்நீர் பட்டு முகம் வெந்து அதற்கான சிகிச்சை நடந்து கொண்டிருந்ததை அறிந்தார்
நீதி (MORAL) : இதிலிருந்து நாம் கற்று கொள்ளும் நீதி என்னவென்றால் உன்னால் எதையும் ஒழுங்காக பேஸ்ட்(Paste) பண்ணமுடியவில்லை என்றால் எதையும் காப்பி(Copy) அடிக்காதே என்பதுதான்.
யாரு அந்த பதிவாளர் என்று உங்களால் ஊகிக்க முடியும் என்றால் பின்னுட்டத்தில் சொல்லுங்கள்
அருமை அருமை
ReplyDeleteநீங்கள் சொல்வது மிகச் சரி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்
Deleteபதிவுகளை காப்பி அடிக்கறதை பத்தி பொங்கி எழப்போறீங்கன்னு பார்த்தா பொசுக்குன்னு முடிச்சுட்டீங்க! :D
ReplyDeleteநம்மையும் ஒருத்தன் காப்பி அடிக்கிறான்னா அவன் ஒரு மிகப் பெரிய முட்டாள் என்று சந்தோஷப்ப்படவேண்டும்
Deleteஅட நீதானா அந்தக் குயில்............
ReplyDeleteஅவனா நீ..........????
சத்தம் போட்டு என்னை காட்டி கொடுத்துடாதீங்க நண்பரே
Deleteகலக்கல் பகிர்வு. நிஜத்துல அப்படி பதிவர் யாரும் இருக்காங்களா என்ன..?
ReplyDeleteகாப்பி பேஸ்ட் பதிவர்கள் நிறைய பேர் உண்டு என் பதிவுகளை காப்பி பண்ணி பதிவிடுபவர்கள் அனேகம் அது ஏன் குமுதம் ரிப்போர்ட்டரில் எனது பதிவை அப்படியே ஈ அடிச்சான் காப்பி போல அடிச்சு என் பெயரை போடாமல் வெளியிட்டு இருக்கிறார்கள்
Deleteகடுமையான எச்சரிக்கை என்னனு பார்க்க வந்தேன். ம்ம் சரிதான்.
ReplyDeleteஎவ்வளவு எச்சரிக்கை பண்ணினாலும் திருடுறாவன் திருடிக் கொண்டே இருப்பான். அவர்கள் ஈனப்பிறவிகள்
Deleteஹா ஹா ஹா நான் கூட எதோ எச்சரிக்கையோ என்று நினைத்தேன்... அந்தப் பதிவர் யார் என்று தெரியவில்லை சொல்லுங்களேன்
ReplyDeleteபடித்துப் பாருங்கள்
தல போல வருமா (டூ) பில்லா டூ
http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_13.html
உங்கள் பதிவுகளை நான் படித்து கொண்டுதான் வருகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பின்னுட்டம் போடுகிறேன்
Deleteavarukku kaliyaaname aakaliye!!!
ReplyDeleteஅப்படியா யாரு அவருன்னு என் கிட்ட சொல்லிடுங்க நான் ரகசியமா பதிவு போட்டு காப்பத்துறேன்
Deleteஉங்கள் தலைப்புக்கு ஏற்ற பதிவு இங்கே இருக்கிறது: http://tamilcomputercollege.blogspot.com/2012/06/google-analytic-2.html
ReplyDeleteகண்டிப்பா வந்து படிச்சு பாக்குறேன்....முடிந்தால் காப்பிபேஸ்ட் பதிவு போட்டுட வேண்டியதுதான் ஹீ.ஹீ
Deleteநல்லாவே காமெடி பண்றீங்க! நானும் என்ன்மோ ஏதோன்னு நினைச்சேன்! ஹிஹி!
ReplyDeleteநன்றிங்க
Deleteஆஹா, அருமையான, அதே சமயம் வருத்தமான அனுபவம். இனிமேல் ஜாக்கிரதையாக இருங்கள்.
ReplyDeleteநன்றிங்க ஜாக்கிரதையாதாங்க இருக்குகிறேன்
Deleteயாருங்க அந்தப் பதிவர்?
ReplyDeleteஅதை நீங்கதாங்க கண்டு பிடிச்சு சொல்லனும்
Deleteஏதோ சொல்லபோரிங்கனு நினச்சா கலாசிடிங்களே!
ReplyDeleteநாம மதுரைக்காரங்கதானே அப்புறம்....
Deleteneenga thaana adhu
ReplyDeleteஉண்மையை இப்படியா டப்புன்னு போட்டு உடைக்கிறது
Deletehaa haa!
ReplyDeleteyaarunga antha yokkiyaru...
அதை நீங்கதாங்க கண்டு பிடிச்சு சொல்லனும்
Deleteyou are a super man
ReplyDeleteநன்றிங்க.....அப்ப அடுத்த தேர்தல நிக்கலாமுன்னு சொல்லவறீங்க சரிதானே
Deleteபூரிக்கட்டை போயி சுடுதண்ணி வர ஆரம்பிச்சுருச்சா.. நடத்துங்க :D
ReplyDeleteசாதத்திற்கு தண்ணி கொதிச்சதால அப்படி இல்லைன்னா வழக்கம் போல பூரி கட்டைதான்
Deleteபால கணேஷ்July 13, 2012 1:30 AM
ReplyDeleteகலக்கல் பகிர்வு. நிஜத்துல அப்படி பதிவர் யாரும் இருக்காங்களா என்ன..?//
அண்ணே, சொம்பை தண்ணியோடு தூக்கி எரிஞ்சி, தலையில் அடியோடும், கம்பியூட்டர் நாசமா போன பதிவர்கள் உண்டு, எனக்கு நல்லா தெரியும், தனியா வரும்போது கேளுங்க யாருன்னு உங்களுக்கு மட்டும் சொல்றேன்.
யாரு அதுன்னு எனக்கு இமெயில் பண்ணுங்க அல்லது உங்கள் தளத்தில் பதிவாக போட்டு இடுங்க
Deleteஎன்ன ஆபீஸர் சார் கருத்து சொன்னிங்க அதுக்கு நன்றி ஆனா நெல்லைக்காரர் ஆன நீங்க அல்வா தர மறந்ததிட்டிங்களே சார்? நியாமா?
ReplyDeleteசரக்கடித்தால் எல்லா உண்மையும் வந்துவிடும். பாதி உண்மை மட்டும் வந்தால் இது மாதிரி ஆஸ்பத்திரிதான். உங்களுக்கு அடி பலமோ?
ReplyDeleteஅந்த பதிவாளர் ஒரு ம.தமிழன் தானே!( ம.தமிழன்னு சொன்னது உங்களை இல்ல. மறத் தமிழன்னு சொன்னேன்.ஹி..ஹி..ஹி..)
ReplyDeleteபெரிய எச்சரிக்கையாக இருக்குமோ என எண்ணி வந்தேன்... கடைசியில் இப்படி இலை மறைக் காயாக கூறிவிட்டீர்கள்... நல்லது...
ReplyDeleteஹ.. ஹ.. ஹ.. ஹ.. ஹா.. மிகவும் அருமை.
ReplyDelete