பரிட்சையில் வெற்றி பெற செலவில்லாத டியூசன் ...(படிக்கும் குழந்தைகள் உள்ள பெற்றோர் கவனத்திற்கு)
ஹோம்வொர்க் செய்யும் போது பாடத்தில் சந்தேகமா யாரிடம் கேட்பது? அப்பா வேலையில் மூழ்கி இருப்பார், அம்மா டீவி சீரியலில் மூழ்கி இருப்பார்கள். சகோதர சகோதரிகள் ஃபேஸ் புக்கில் லைக் பண்ணி கொண்டிருப்பார்கள். நம் கூட இருக்கும் நண்பர்கள் நம்மைவிட சூரப்புலிகள் .மதுரைத்தமிழனிடம் கேட்கலாம் என்றால் அவனுக்கு போன் என்றாலே அலர்ஜி போனை எடுக்கவேமாட்டான் அதுமட்டுமல்லாமல் படிப்பில் அவன் ஒன்றும் பெரிய அறிவு ஜீவி இல்லை. அப்ப யாரிடம்தான் சந்தேகத்தை கேட்டு தீர்ப்பது? அதற்குதான் இந்த உலகில் ஒருவர் அவதரித்து வந்திருக்கிறார். அவர் பெயர் சல்மான் கான். அவரது வலைதளத்தில் பல்வேறு பாடங்களுக்கான வீடியோ விளக்க பாடங்கள் மிக எளிமையாகவும் இலவசமாகவும் தந்து இருக்கிறார்.
பள்ளிகளுக்கு டொனேஷனை லட்சகணக்கில் அள்ளி கொடுத்து 100 % ரிசல்ட் காண்பிக்கும் மிகச் சிறந்த பள்ளிகளில் சேர்த்தும் நம் பிள்ளைகள் அதிகம் மார்க்கு எடுக்க மேலும் அதிக பணம் செலவழித்து சிறப்பு டியூசனுக்கு அனுப்பும் பெற்றோர்கள் பலர் அவர்களுக்கு உதவுவதற்காகவும், பணம் இல்லாததால் பிள்ளைகளை சிறப்பு டியூசனுக்கு அனுப்ப முடியாத பெற்றோர்கள் பலர் அவர்களுக்கு உதவுவதற்காகவும், ஆசிரியராக இருந்தாலும் அவர்கள் எடுக்கும் பாடங்களில் சந்தேகம் இருந்தும் மற்றவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள தயக்கம் இருப்பவர்களுக்கு உதவுவதற்காகவும்,வயதானாலும் மேலும் மேலும் கற்க ஆர்வம் உள்ளவர்களுக்கும் உதவும் மிகச் சிறந்த வலைத்தளம் ஓன்று உண்டு இங்கு Math, Banking and Money, Biology Chemistry,Computer Science,Cosmology and Astronomy ,Current Economics.Finance,GMAT,IIT JEE Questions, Physics,SAT Preparation பல பாடங்கள் மிக விளக்கமாக வீடியோ க்ளிப் மூலம் மிக எளிமையாக ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலில் படித்த ஒருவர் மூலம் ஆரம்பித்து இலவச சேவையாக கொடுக்கப்பட்டு வருகிறது. அவரைப்பற்றிய விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
http://www.khanacademy.org/ Watch. Practice.Learn almost anything for free. With over 3,200 videos on everything from arithmetic to physics, finance, and history and hundreds of skills to practice, we're on a mission to help you learn what you want, when you want, at your own pace.
Prior to the Khan Academy, Salman was a senior analyst at a hedge fund and had also worked in technology and venture capital. He holds an MBA from Harvard Business School, an M.Eng and B.S. in electrical engineering and computer science from MIT, and a B.S. in mathematics from MIT.
The Khan Academy is an organization on a mission. We're a not-for-profit with the goal of changing education for the better by providing a free world-class education to anyone anywhere.
All of the site's resources are available to anyone. It doesn't matter if you are a student, teacher, home-schooler, principal, adult returning to the classroom after 20 years, or a friendly alien just trying to get a leg up in earthly biology. The Khan Academy's materials and resources are available to you completely free of charge.
அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன் பகிரும் ஒரு பயனுள்ள வலைத்தளம் உங்கள் பார்வைக்காக
நல்ல பகிர்வு
ReplyDeleteநல்லதொரு வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி !
பயனுள்ள நல்ல பதிவு, நன்றி நண்பா....!
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனம் மார்ந்த நன்றிகள்.
Deleteசிறப்பான தகவல் பகிர்வு! நன்றி!
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனம் மார்ந்த நன்றிகள்.
Deleteஉபயோகமான தகவல் . நன்றி
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனம் மார்ந்த நன்றிகள்.
DeleteSuperb site Boss, Thank you!!
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனம் மார்ந்த நன்றிகள்.
Deleteநல்ல தகவலாய் இருக்கிறது. இதை படிக்கும் குழந்தைகளுக்கு சொல்கிறேன் நன்றி.
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனம் மார்ந்த நன்றிகள்.
Deleteதப்பு பண்ணிட்டியே மதுரை.. தப்பு பண்ணிட்டியே .. நான் பள்ளிக்கூடம் போகும் காலத்தில் இந்த மாதிரி ஏதாவது சொல்லி இருந்தா.. நானும் எங்கேயோ போய் இருப்பனே...
ReplyDeleteஎன் பிள்ளைகள் சில வருடங்களாக இந்த வலை தளத்தின் மூலம் பயன் பெற்றி வருகின்றார்கள்.அருமையான தளம் இதை மற்றவர்களுக்கும் அறிமுக படுத்திய தங்களிடம் அருமையான குணம்.
கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க. இது எல்லாம் வேலைக்கு ஆகாது. சமஸ்க்ரிதம் தான் படிக்கனும்ன்னு ஏதாவது சொல்லிட போறாங்க.
படிப்பு தொடர்பான விசயம் என்று நிறயப்பேர் அப்பீட் ஆகிருபாங்களோ
ReplyDelete