தமிழகத்தின் மிகப் பிரபலபதிவாளரிடம் பேட்டி ( யார் அந்த பிரபலம்?)
பிரபலபதிவாளாரின் மனம் திறந்த பேட்டி. பேட்டி காண்பவர்கள் பிரபலபதிவாளார் கணேஷ் & பிரபலபதிவாளார் சசி . இடம் : சென்னை
இவர்கள் இருவரைப் பற்றிய சிறு அறிமுகம். சசி. சிறந்த குடும்பத்தலைவி மட்டுமல்ல நல்ல தரமான கவிதைகளை படைப்பதில் வல்லவரும் கூட...அவரது கவிதையை சுவைக்க இங்கே க்ளிக் செய்யவும். கணேஷ் இவர் தமிழக புகழ் பெற்ற பிரபல எழுத்தாளர்களின் பின்னால் மறைந்து நிற்கும் மற்றுமொரு பிரபலம். இவரின் வலைதளத்தில் யாரும் அறியாத பொக்கிஷங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட்டு ஆச்சிரியம் விளைவிப்பவர். அவர் பல வலைதளங்களை நடத்தி வருகிறார். அவரது எழுத்தைசுவைக்க இங்கே க்ளிக் செய்யவும்.
பிரபலபதிவாளார் மதுரைதமிழன் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்( பிரபலபதிவாளர் என்றால் என்னங்க என்று கேட்பவர்களுக்கு...அது பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை... எனக்கு தெரிஞ்சதலாம் நாலு அஞ்சு பதிவு எழுதின பின் நம் பெயருக்கு முன்னாள் பிரபலம் என்ற பெயரை போட்டுக் கொள்ள வேண்டும் என்பது தமிழக் ஃப்ளாக்கர்களின் எழுதாத சட்டம் என்றுதான்.)
மதுரைத்தமிழனின் வீட்டிற்கு பேட்டி எடுக்க வருகைதரும் கணேஷ் & சசியை மதுரைத்தமிழன் வரவேற்கிறார்.
வணக்கம்...வாங்க சார்...வாங்க மேடம் செளக்கியமா நீங்க இருவரும்....ஏதாவது சாப்பிடுகீறிர்களா? அவர்கள் இருவரும் பதில் சொல்லும் முன் மதுரைத்தமிழன் ஹீ.ஹீ. நீங்க ரெண்டு பேரும் குளிச்சிகிழிச்சி “டிப்டாப்பா” இந்த காலை வேலையில் வரும் போதே சுறுசுறுப்பா காலை உணவை முடித்து விட்டு வந்திருப்பீர்கள் எனவே நாம நேரா பேட்டிக்கு போய்விடுவோமா?
கணேஷ் & சசி : ஙே....என்று ஒருவரை ஒருவர் பார்த்து முழிக்கிறார்கள். இறுதியாக தன் நிலை வந்ததும் அவர்கள் மதுரைத்தமிழனிடம் உங்கள் பெயர் என்ன என்று கணேஷ் கேட்கிறார்.
அதற்கு மதுரைத்தமிழன் : என்ன சார் விளையாடுறீங்களா? பெயர்தெரியாத ஒருவனிடாமா இண்டர்வியூ பண்ண வந்திறிக்கிங்க?
மதுரைத்தமிழன் சொல்லவதை இடை மறித்த சசி அதில்ல சார் உங்க “குட் நேம்”(Good Name) என்ன என்று தெரிஞ்சுகலாமே என்று தான் கேட்கிறோம்
மதுரைத்தமிழன் : என்ன நீங்க சொல்லறதை பார்த்தா எனக்கு வெளி உலகத்துல பேட் நேம்(Bad Name) இருக்குறமாதிரி இல்ல இருக்கு
கணேஷ்& சசி...சரி வுடுங்க கோச்சுகாதிங்க நாங்க உங்களை மதுரைத்தமிழன் என்றே கூப்பிடுகிறோம்.
சசி : சார்...... உங்க சொந்த ஊர் எது சார்?
மதுரைத்தமிழன்: என்னங்க நீங்க விவகாரம் புடிச்சா ஆளா இருப்பிங்க போல இருக்கே நான் என்ன திமுக தலைவர்களா சொந்த ஊர் வைச்சிருக்கிறதுக்கு. எனக்கு சொந்த வீடு மட்டும்தான் இருக்குது ஊர் எல்லாம் கிடையாது. எங்கிட்ட கேட்டதை வெளிய சத்தமா ஜெயலலிதா காதுலை கேட்குற மாதிரி பண்ணிபுடாதிங்க. அப்புறம் குண்டர் தடை சட்டத்தில என்னை கைது பண்ணிப்பூடுவாங்க..
கணேஷ் சசியிடம் நீங்க பேசமா இருங்க நான் மதுரைத்தமிழனிடம் எப்படி கேள்வி கேட்டு அவரை இப்ப மடக்குறேன்ணு பாருங்க/
சார் உங்களுக்கு குடிப்பழக்கம் உண்டா? ( மனதுக்குள் நல்லா மாட்டிகிட்டாண்டா)
மதுரைத்தமிழன் : ஆமாம் எனக்கு குடிபழக்கம் உண்டு சார்.
கணேஷ் ; (சரியான குடிகாரனா இருப்பான் போலிருக்குதே) அதை யாரு உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் எந்த வயதில் இருந்து அந்த பழக்கம் உங்களிடம் உள்ளது.
மதுரைத்தமிழன் : அதை எனது தாயார் நான் பிறந்ததில் இருந்து எனக்கு அறிமுகப்படுத்தி பழக்க்கிவிட்டார்.
கணேஷ் & சசி : ஙே என்றவாறே நீங்க என்ன சொல்லுகிறிர்கள் உங்கள் தாயார் உங்களுக்கு குடிக்க பழக்கிவிட்டாரா?
மதுரைத்தமிழன் : என்ன சார் இதை ரொம்ப ஆச்சிரியமா கேட்குறீங்க? எல்லா தாயாரும் சிறுவயதில் இருந்து எல்லா குழந்தைகளுக்கும் பால் குடிக்க பழக்கிவிடுகிறார்கள்தானே இதில் என்ன ஆச்சிரியம்..
சசி உடனே இடை மறித்து சார் நாங்க நீங்க பால் குடிக்கிறதை பற்றி கேட்கல நீங்க “தண்ணி” அடிப்பிங்களா என்றுதான் கேட்டோம்.
மதுரைத்தமிழன் : ஓ..அதுவா சாரி நான் தப்பா புரிஞ்சுகிட்டேன். மன்னிக்கவும் . நான் கல்லூரி படிக்கும் போது தண்ணி அடிச்சிருக்கேன்...அப்ப மதுரைல கொஞ்சம் தண்ணிப் பஞ்சம் அதுனால வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி இருக்கிற போரிங்க் பைப்புல போய் தண்ணி அடிச்சு பிடித்து வந்து அம்மாவிற்கு உதவுவேன்...
கணேஷ் & சசி : உஷ்...இப்பவே தலையை சுத்துதே....சார் குடிக்க கொஞ்சம் தண்ணி அதுதாங்க வாட்டர் தரிங்களா?
மதுரைத்தமிழன் : என்ன வாட்டரா....அது உடம்புக்கு கெடுதல் சார் அதுனால நான் வீட்டுல அதை வைச்சுகிறது இல்ல. பீர்,ரம் ,வோட்கா தான் வைச்சுருக்கேன்.
கணேஷ் & சசி : என்னது வாட்டர் உடம்புக்கு கெடுதாலா??????
மதுரைத்தமிழன் : என்னது நீங்க இரண்டு பேரும் விவரம் தெரியாத பச்சை புள்ளையாட்டம் இருக்கிங்க? சென்னையில வாட்டர் குடிச்சா காலரா டைபாய்டு. அல்லது பேதி போன்றவை வந்துடுமுங்க...வாட்டர் குடிப்பது உடல் நலத்திற்கு கெடுதலுங்க..நீங்களே சொல்லுங்க பீர் ரம் எல்லாவற்றையும் மிகவும் சுத்தகரிக்கப்பட்டு மிகவும் சுகாதாரமாக தயாரிக்கிறாங்க..அதுனாலதான் தமிழகத்தில் யாரு ஆட்சிக்கு வந்தாலும் போட்டி போட்டு கொண்டு தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை அதிக அளவு திறக்குறாங்க..
கணேஷ் & சசி : சார் உங்க பதிலை கேட்டு எங்களுக்கு கண்ணை சுத்துதே நிஜமாவே இந்த ஆல்ஹாலைத்தவிர குடிக்க வேற ஏதுமில்லையா சார்???????
மதுரைத்தமிழன் : ஹும்ம்ம்ம்ம்ம். சார் பிளைய்ன் சோடா இருக்கு & லெமன் இருக்கு இரண்டையும் மிக்ஸ் பண்ணி தரட்டா?
கணேஷ் & சசி: சீக்கிரம் கொடுங்க சார் கொடுங்க நீங்க மகாராஜானா இருப்பிங்க...அதன் பின் சோடா குடித்து முடித்தவுடன்,
கணேஷ் & சசி இருவரும் ரகசியாமாக ஏதோ பேசுகிறார்கள்(இவனை சாக அடிக்கிற மாதிரி கேள்வி கேட்டனும்.)இன்னும் சில கேள்விகள் இருக்கின்றன சார் பேட்டியை தொடர்வோமா?
மதுரைத்தமிழன் : ம்ம்ம் தொடருங்கள்:
சசி : சார் நீங்க பூரிக்கட்டையால உங்க மனைவியிடம் அடி வாங்கி இருக்கீறிர்களா?
மதுரைத்தமிழன் : அதற்கு வாய்ப்பே இல்லை காரணம் எங்க வீட்டுல பூரி இடுறதே நாந்தானே அதுனால பூரி இட்டதும் ஒழித்து வைத்துவிடுவேன். எப்படி என் திறமை ஹீ.ஹீ.ஹீ
கணேஷ் : சார் உங்களுக்கு குழந்தை குட்டி ஏதும் உண்டா?
மதுரைத்தமிழன் ; சார் எனக்கு குழந்தை ஒன்று உண்டு. ஆனா குட்டி ஏதும் கிடையாது. ஆனா வைச்சுக்க ஆசைதான். ஒரு புறம் ஆசை அதே சமயத்தில் மனைவியை நினைச்சா பயம்.. இருந்தும் குட்டியை பேஸ்புக்குல தேடினா குட்டி பேருல நிறைய ஆணகள் தான் ஒளிந்து இருக்கிறார்கள். அதனால் அந்த ஆசையை கைவிட்டுவிடேன் சார்( உஷ் இதை பத்திரிக்கை போட்டுடாதீங்க)
சசி : உங்க மனைவி உங்களை பற்றி என்ன நினைப்பாங்க?
மதுரைத்தமிழன் : தன் கணவருக்கு மிகவும் நல்ல மனசு என்றுதான்.
கணேஷ்: அதை எப்படி இவ்வளவு உறுதியாக சொல்லுகிறிர்கள்?
மதுரைத்தமிழன் : சமையல் செய்றதுமில்லாம அவருக்கு ஊட்டியும் விடுவதும் நாந்தேனே அத வச்சு தான் தைரியமா சொல்லுறேன்."
கணேஷ் : சார் உங்களுக்கு இசையில் ஆர்வம் உண்டா?
மதுரைத்தமிழன் ; ஹும்ம்ம் எனக்கு சிறிது உண்டு. ஆனால் என் நணபர்கள் அடிக்கடி சொல்லுவார்கள் நான் இளையராஜா அல்லது ரஹ்மான் குருப்பில் இருந்தால் இந்நேரம் உலகப் புகழ் பெற்று இருப்பேன் என்று சொல்லுவார்கள்
சசி : (வாயைப்பிளந்தவாறே..)அப்படியா....எதை வைச்சு உங்கள் நண்பர்கள் இதை சொல்லுகிறார்கள்?
மதுரைத்தமிழன் : இல்லைங்க நான் எப்போதும் என் மனைவி சொல்லுவதை கேட்பதால் என் மனைவிக்கு நான் எப்போது ஜால்ரா போடுவதால் இப்படி சொல்லுகிறார்கள் போல////
கணேஷ் & சசி : ஙே.........என்று முழிக்கிறார்கள்
சசி : சார் நீங்க வைச்ச நடத்துற வெப்சைட் பற்றி உங்க மனைவிக்கு தெரியுமா?
மதுரைத்தமிழன் : அம்மா தாயே என்னை வம்புல மாட்டிவிடுற எண்ணத்திலதானே நீங்க இந்த மாதிரி கேள்வி கேட்குறீங்க?நல்லா கேட்டுங்குங்க எனக்கு வெப்ல எந்த சைட்டும் கிடையாது. நான் வைச்சிருக்கிறது வலைத்தளம் மட்டும்தான்..புரிஞ்ச்சா. இப்ப நீங்க ரெண்டு பேரும் இடத்தை முதலில் காலி பண்ணுகிறிர்களா உங்களுக்கு புண்ணியமா இருக்கும்...
அன்புடன்,
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழனின் 'கடிகள்" உங்கள் பார்வைக்காக
சுவரஸ்யமான பேட்டி
ReplyDeleteரசித்துபடித்தேன்
வாழ்த்துக்கள்
உங்களின் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துக்கும் நன்றி
Deleteஅருமையான பேட்டி
ReplyDeleteநோன்பு நேரத்திலும் வருகைதந்து உற்சாகமூட்டும் கருத்தை சொன்னதற்கு எனது நன்றி
Deleteஎன்னய்யா இது அக்கிரமம். பிரபல பதிவரின் பேட்டி அப்படீங்கறீங்க. எங்கிட்ட ஒரு பயலும் இது வரைக்கும் வரல்லயே? யாரு கிட்ட போயி புகார் கொடுக்கிறது? பதிவுலக நாட்டாமை யாரய்யா?
ReplyDeleteசார் நீங்க எல்லாம் பிரபலபதிவர் இல்ல 'சூப்பர் ஸ்டார் பதிவர்" உங்ககிட்ட பேட்டி எடுக்கவந்தா நீங்க ரொம்ப பிஸின்னு சொல்லி உங்க வீட்டு வாசலிலேயே அனுப்பிவிடுறாங்க அப்பறும் எப்படி உங்க பேட்டி வரு
Deleteதமிழனின் தனி அடையாளத்தோடு பேட்டி அளித்த மறதி தமிழன் சாரி மதுரத் தமிழன் வாழ்க!
ReplyDeleteபிரபல பதிவாளாருக்காக நல்ல கோஷம் போடுறீங்க நான் கட்சி ஆரம்பிச்சா நீங்கதான் கொள்கை பரப்பு செயலாளர்.. ஒகேவா
Deleteஇப்படில்லாமா பதிவு தேத்துவீங்க ஆனா கூட சிரிக்க முடிஞ்சது.
ReplyDeleteஎன்ன என் பதிவை படிச்சு சிரியா சிரிச்சீங்களா? நா என்ன அப்படி மோசமாவா எழுதுறேன்
Delete// தமிழக் ஃப்ளாக்கர்களின் எழுதாத சட்டம் என்றுதான்.// ஓ அப்போ நான் கூட பிரபல பதிவரா
ReplyDeleteஹா ஹா ஹா ஏன் சார் ஏன், ஏன் இப்படி, உலக பிரச்சனைல இருந்து இருந்து உள்ளூர் பிரச்னை வரைக்கும் அலசியசு பாவம் அவங்க ரெண்டு பேரும்.. ஆனா செம காமெடி
கணேஷாரின் பேட்டியை காமடி பேட்டியாக்கிட்டீங்களே இனிமே நீங்க அவரை சந்திக்க உங்களுக்கு அப்பாய்யிண்மெண்ட் இல்லை இல்லை
Deleteஅடாடா... சந்திச்ச விவரத்தை இவ்வளவு விவரங்களோட வெளியிடுவீங்கன்னு நினைக்கவே இல்லைங்க... அதுலயும் நீங்க ‘குடிக்க’ கத்துக்கிட்ட விதம் பத்தி எங்களுக்கு சொன்னது... ஸஸ்ஸபப்பா.. முடியலைடா சாமி...
ReplyDeleteஎன்ன நீங்களும் தண்ணி அடிச்சீங்களா உஷ்ன்னு சொல்லுறீங்க
Deleteஹா.. ஹா. நல்ல பேட்டி... வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteஅடடே என்னங்க இப்படி பண்ணிட்டிங்க போட்டது தான் போட்டிங்க அழகான பொம்மையா போடக்கூடாது (சசிக்கு மட்டும்).
ReplyDeleteஉங்க அழகுக்கு ஏத்த பொம்மை கிடைக்கலைங்க...
Deleteகிண்டல் பண்ற மாதிரி இருக்கு.
Deleteமிகவும் அருமை நண்பரே.
ReplyDeleteசமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே..
http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html
கண்டிப்பாக வருகிறேன் நண்பரே
Deleteபிரபல பதிவரின் பேட்டி பிரமாதம்! பேஷ்! பேஷ்! ரொம்ப நன்னாருக்கு!
ReplyDeleteஅண்ணா எப்படி இருக்கேள் ?அப்போ அடிக்கடி நம்ம ஆத்துபக்கம் வந்துட்டு போங்கோண்ணா
Deleteபடித்தேன் சிரித்தேன்
ReplyDeleteசிரித்து முடியலே
ReplyDelete