Saturday, July 21, 2012




உங்க மனைவியும் இப்படிதானா??

இலையுதிர்காலத்தில் மரம் செடி கொடியில் உள்ள இலைகள் கலர் மாறுவதை ரசித்து மகிழ்ந்த என் மனைவிக்கு நான் வாங்கி கொடுத்த சேலையின் நிறம் மாறியதும்  அதை ரசிக்காமல் என்னை துரத்தி துரத்தி அடிக்கிறாங்க.....எனக்கு ஒண்ணுமே புரியலைங்க...

நான் என் மனைவிக்கு கடந்த மாதம் என் திருமணநாள் அன்று அவளை ராயல் பிளேஸுக்கு  கூட்டி செல்வதாக நான்   வாக்கு கொடுத்தபடி அவளை அழைத்து சென்றேன். அதிலிருந்து இன்று வரை எனக்கு வீட்டில் சாப்பாடு கிடையாதுங்க...அப்படி எந்த ராயல் இடத்திற்கு கூட்டி போனேன் என்று நினைக்கிறீர்களா..அதுதாங்க சாப்பிட Burger King  க்கும் இனிப்பு சாப்பிட Dairy Queen க்கும் அழைத்து என்றேன் அதில் என்ன தப்புங்க...னக்கு ஒண்ணுமே புரியலைங்க...


இன்னொரு பொண்ணு வீட்டுக்கு வேணும் என்று என் மனைவி சொல்லிக்கிட்டே இருந்தாங்க...நானும் கடந்த 10 மாசமா பேஸ்புக்குல நூல் விட்டு  கடைசியில ஒரு பொண்ணை வீட்டுக்கு கூட்டி வந்த விரட்டி விரட்டி அடிக்கிறாங்க..எனக்கு ஒண்ணுமே புரியலைங்க... என்னடி நீதானே கேட்டே என்றால் அவள் கேட்டது இன்னொரு குழந்தை வேண்டுமென்று சொன்னாளாம். எதுவும் புரியும்படியா சொல்லைன்னா நான் என்னங்க பண்ணுறது...

அன்புடன்.
உங்கள் அபிமானதிற்குரிய
அப்பாவிகணவனாகிய "மதுரைத்தமிழன்"
21 Jul 2012

25 comments:

  1. படமும் பதிவும் அருமை
    மனைவி என்றாலே அப்படித்தான் என
    ஆகிப்போய்விட்டது
    காரணம் நம்மைப்பற்றி முழுவதும்
    அவர்களுக்கு தெரிந்து தொலைத்துவிடுகிறது\
    ரஸனையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நமக்கு பிடித்தவர்களைத்தான் அதுவும் நன்கு புரிந்து கொண்டவர்களைத்தான் கிண்டல் பண்ண முடியும். என் மனைவி என்னை விரும்பியதே நான் அடிக்கும் நக்கலினால்தான் அதனால் தான் இப்படியெல்லாம் எழுதமுடிகிறது

      Delete
  2. சே!சே! என் மனைவி இப்படி எல்லாம் இல்ல தமிழன் சார்!
    (மனைவி பக்கத்தில இருக்கும்போது வேற எப்படி சொல்லமுடியும்:)

    ReplyDelete
    Replies
    1. மனைவி பக்கத்தில் இருக்கும் போதே தைரியமாக சொல்லுங்கள் என்ன வழக்கம் போல கிடைக்கும் அர்ச்சனைதான் கொஞ்சம் கூட கிடைக்கும் போக போக அது பழகி போகிவிடும்

      Delete
  3. ஹா ஹா ஹா ஏன் பாஸ் ஏன் இப்படி

    ReplyDelete
    Replies
    1. பதிவு போடவில்லையென்றால் தூக்கம் வர மாட்டேங்குதே எதாவது எழுத வேண்டி இருக்கிறதே கொஞ்சம் நகைச்சுவையாக அதனால்தான்

      Delete
  4. Replies
    1. என்ன நீங்களும் என்ன மாதிரி ஆளுதானா? சிரிப்பு பலமாக இருக்கிறதே

      Delete
  5. ஓவரா தான் வீட்ல என் சகோவ கொடுமை படுத்துறிங்க கேட்க ஆள் இல்லைனு தைரியமா நான் இருக்கேன்க.

    ReplyDelete
    Replies
    1. நீங்க எனக்கு ஆதரவு தரீங்களா அல்லது எனது மனைவிக்கா? புரியலையே

      Delete
    2. கண்டிப்பா உங்க மனைவிக்கே . அவர்களை நலம் விசாரித்ததாக சொல்லுங்க.

      Delete
  6. அடியோட போச்சே...
    வீட்டை விட்டு துரத்தலையே... ஹா.. ஹா..

    ReplyDelete
    Replies
    1. அடி மட்டும்தான் வீட்டை விட்டு துரத்திட்டா அப்புறம் பாத்திரமெல்லாம் அவங்கதான கழுவனும் அதனால வீட்டை விட்டு எல்லாம் துரத்தமாட்டாங்க இந்த புத்தி சாலி மனைவிங்க

      Delete
  7. \\நான் என் மனைவிக்கு கடந்த மாதம் என் திருமணநாள் அன்று அவளை ராயல் பிளேஸுக்கு கூட்டி செல்வதாக நான் வாக்கு கொடுத்தபடி அவளை அழைத்து சென்றேன்.\\ எங்கள் திருமண நாள் என்று சொல்லாமல் என் திருமண நாள் என்கிறீர்களே......... அப்பவே புரிஞ்சுபோச்சு...... அந்த அளவுக்கு அந்தமா கொடுமை படுத்தியிருக்காங்க...........

    ReplyDelete
    Replies
    1. நீங்க ஒருத்தர்தான் நல்லா புரிஞ்சுகிட்டீங்க நண்பரே...நன்றி

      Delete
  8. இன்னொரு பொண்ணு வேணும்னா, அதுக்கு பேஸ்புக்ல தேடுனா அடி விழாம என்ன விழும்....வேணும்னே புரிஞ்சிகாத மாதிரி நடிக்கிறதே உங்களுக்கு எல்லாம் வழக்கமா போச்சு....என்ன செய்ய...

    ReplyDelete
    Replies
    1. பேஸ்புக்ல தேடுனா "தர்மபத்தினி"கிட்ட இருந்துதான் அடிவிழும் ஆனா ரோட்டுல தேடுனா எல்லா மக்களிடம் இருந்துல" தர்ம அடி"கிடைக்கும்.

      இது நகைச்சுவையான ஒரு கற்பனை பதிவுதான் அதனால ரொம்ப சீரியஸா ஆகாதீங்க

      Delete
  9. ஒன்னுமே தெரியாத பச்சை குழந்தைங்க நீங்கள்...

    ReplyDelete
    Replies
    1. அட அட நீங்களும் என்னை நல்லா புரிஞ்சுகீட்டிங்க நண்பா?

      Delete
  10. ஹி ஹி 10 மாச உழைப்பு வீனா போச்சே பாஸ்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பாஸ் வீணாப் போச்சுதான் என்ன பண்ணுறது.

      Delete
  11. உங்க மேல தப்பே இல்ல பாஸ். எல்லாம் மிஸ் அன்டர்ஸ்டேன்டிங் தான் காரணம். :) :)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.