வருங்கால தமிழகம் எப்படி இருக்கும்?
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஒயின்ஷாப்பை மூடினால் எப்படி மறைந்த முதல்வர் எம்ஜியார் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து மக்கள் மனதில் நிலைத்து இருந்தாரோ அது போல் மக்கள் நிலைத்து இருப்பார். அவர் செய்வாரா இல்லை இல்லையா என்பதை பொறுத்து பார்ப்போம்,
ஒருவேளை அப்படி அவர் ஒயின் ஷாப்பை மூடவில்லையென்றால் அவர் ஆட்சி முடியும் போது தமிழகம் எப்படி இருக்குமென ஒரு சிறு கற்பனை. மக்களே சிரிப்பு வந்தால் சிரிக்கவும் வராதவர்கள் அப்படியே ஒரு ஒயின் ஷாப் பக்கம் போய் 2 பாட்டில் வாங்கி அடித்துவிட்டு எங்காவது ஒரு ரோட்டில் படுத்து தூங்கி செல்லவும்
பஸ்டாண்டில் குடிகாரன் : ஐயா சாமி தர்மம் பண்ணுங்கய்யா.... சரக்கு அடிச்சு 2 நாளாகிறது ....
தமிழகசெயலகத்தில் இருந்து தமிழகம் மூழுவதும் டீக்கடைகள் அகற்றப்பட்டு பீர் கடை திறந்திருக்கும்
ஆபிஸ்களில் காபி பிரேக்குக்கு பதிலாக சரக்கு பிரேக்கு இருக்கும்
காலையில் பால்காரன் கதவை தட்டுவதற்கு பதில் ஒயின் காரன் கதவைதட்டுவான்.
என்னங்க நாம் வேற ஒயின்காரனை மாத்தனும் வர வர இவன் அதிகம் தண்ணி கலந்து விக்குறான்
பொண்ணு பார்க்க வருகையில் இது எங்க பொண்ணு மிக்ஸ் பண்ண ட்டிரிங்க். அதை குடித்த மாப்பிள்ளை பேஸ் பேஸ் ரொம்ப நன்னாயிருக்கு என்ற சம்பாஷணைகள் நடக்கும்.
பிரின்சபால் மாணவனின் பெற்றொர்களிடம்..உங்க பையன் நேற்று கல்லூரிக்கு வரும் போது காபி குடிச்சுட்டு வந்திருக்கிறான் அவனுக்கு புத்தி சொல்லுங்க...இவனைப் பார்த்து மத்த மாணவர்கள் கெட்டு போய்விடுவார்கள். இந்த மாதிரி இவன் இன்னொரு முறை காபி குடிச்சிட்டு வந்தா இவனை கல்லூரியை விட்டு நீக்குறதை தவிர வேற வழி எங்களுக்கு இல்லை என்று சொல்லுவார்கள்.
நீங்க பார்த்த மாப்பிள்ளைக்கு என்ன குறைங்க நல்லா சம்பாதிக்கிறார் அழகாக இருக்கிறார்.
அதெல்லாம் சரிங்க ஆனா அவன் தினமும் டீ குடிக்கிறாங்க. அப்படிப்பட்டவனை நம்பி பொண்ணை எப்படி கொடுக்குறதுங்க
ராமதாஸ் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் காபிகடைகள் முதலில் மூடப்படும் என அறிவிப்பார்.
டீக்கடை காபி கடை நடத்த பெர்மிட் இருக்க வேண்டும்.
பள்ளி மற்றும் கோயிலுக்கு அருகில் டீக்கடை நடத்த அனுமதியில்லை.
டீகாபி குடித்து வண்டி ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும்
சமையல் குறிப்பு எழுதும் பதிவாளர்கள் காபி டீ போடுவது என்று குறிப்பு எழுதி பதிவு வெளியிட்டால் அவர்கள் மதவாதம் பண்ணும் பதிவாளர்கள் ஒதுக்கப்படுவார்கள்
டிஸ்கி : உங்களுக்கும் இது மாதிரி ஏதும் ஐடியா தோன்றினால் பின்னுட்டம் மூலம் சொல்லி செல்லவும்.
அன்புடன்,
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்
ரொம்ப (குடிகாரத்தனமா) நல்லா இருக்கு.
ReplyDeleteஉங்கள் கருத்துக்கூட நகைச்சுவையாக உள்ளதே
Deleteகற்பனை உண்மையாகிவிடவும் வாய்ப்புள்ளது. கனிம நீர் புட்டிகளை(mineral water)புட்டிகளை விட்டுவிட்டீர்களே.
ReplyDeleteகற்பனை நகைச்சுவை என்று நாம் இன்று சிரித்து கொண்டு போய்விடுவோம் ஆனால் அது வருங்கால உண்மைகளாக மாறி இருப்பதை காலம் கடந்துதான் புரிந்து கொள்வோம்.
Deleteஇப்போ மூடச் சொல்வதாகச் சொல்வது ஒயின் ஷாப்புகளை அல்ல டாஸ்மாக் கடைகளை. ஒயின் உடம்புக்கு அவ்வளவு கெடுதி இல்லை, டாஸ்மாக் சாராயம்தான் ரொம்ப டேஞ்சர், ஆனால், அதில் தான் அரசுக்கு கொழுத்த வருமானம். அது இல்லாவிட்டால் அரசு எந்திரமே முடங்கி விடும். டப்புக்கு வேறு வழியே இல்லை. சூரியன் மேற்க்கே உதித்தாலும் இது நடக்குமா என்பது சந்தேகம்தான்.
ReplyDeleteஅப்போ டீடோட்லர் எல்லாம் டீ குடிக்கக் கூடதுன்ன்ற நிலைமை வரும்னு சொல்றீங்க... எப்ப இப்ப தான் நிம்மதியா இருக்கு எவ்ளோ நாளைக்கு தான் டீடோட்லராவே இருக்காது. ஹா ஹா ஹா
ReplyDeleteநல்ல கற்பனை! பாராட்டுக்கள்!
ReplyDeleteமதுரைத்தமிழரே.... இப்படியெல்லாம் நடந்தால்...
ReplyDeleteநாம் பிற்காலத்தில் புதுமையான உலகத்தில் மிதப்போம் என்று நினைக்கிறேங்க....
அந்தக்காலம் எப்போ வரும்.... ம்ம்ம்....
ஆமாம்... முதலமச்சருக்கும் மக்களுக்கும் என்னங்க சம்மந்தம்...? என்னவோ போங்க. எனக்கு ஒன்னுமே புரியமாட்டேங்கிறது.
ரேஷன் கடைல சரக்கை அரசாங்கமே சப்ளை பண்ணும்.
ReplyDeleteஸ்கூல்ல மதிய உணவோடு ஒரு பாட்டில் சரக்கை குடுப்பாங்க.
நல்ல சிந்தனை....?!@
ReplyDelete