Monday, July 30, 2012




சட்டம் எல்லோருக்கும் சமம் என்றால் அந்த சட்டம் ஜெயலலிதாவை கைது செய்யுமா?

தாம்பரத்தில் பலியான சிறுமி ஸ்ருதியின் துயர மரணம் மனதை சங்கடபடுத்தி வேதனையுறச் செய்தன என்பதில் யாருக்கும் எந்த வித மாற்றமில்லை அந்த சம்பவம் என்னையும் வேதனையுறச் செய்தது. அந்த குடும்பதாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.


இந்த நிகழ்ச்சி தொடர்பாக என் மனதில் எழுந்த எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த நிகிழ்ச்சிக்கு யார் காரணம் பள்ளி உரிமையாளரா அல்லது பழுதடைந்த பஸ்ஸுக்கு உரிமம் வழங்கிய அரசாங்க ஆபிஸர்களா அல்லது பெற்றோர்களா?குழந்தையின் உயிர் இழப்பு காரணமாக நாம் உணர்ச்சிவசப்பட்டு பள்ளி உரிமையாளரயோ அல்லது அரசாங்க ஆபிஸர்களையோ மட்டும் நாம் குறை கூறுகின்றோம்.


ஆனால் இதற்கு காரணம் குழந்தையின் பெற்றோர்களும் இந்த சமுகமும்தான் காரணம் என்று கூற்றை நாம் ஏற்க முன்வருவதில்லை. அப்படி ஏற்றுகொண்டால் நாம் தான் அந்த தவறுகளுக்கு காரணம் ஆகி விடுவோம் என்று கருதி அதை மற்றவர்கள் மீது பழி போட்டு நாம் தப்பித்து கொள்ள முயற்சிக்கிறோம்.

முதலில் பெற்றோர்களை பார்த்து நான் கேட்கும் முதல் கேள்வி?, "என்றாவது ஒரு நாள் உங்கள் குழந்தை செல்லும் பஸ் பாதுகாப்பானதா என்று அறிய முயற்சி செய்தீர்களா? உங்கள் குழந்தையின் பாதுகாப்பு உங்களுக்கு முக்கியம் என்றால் அதை நீங்கள் செய்து இருக்க வேண்டுமே அதை நீங்கள் ஏன் செய்யவில்லை. உங்களுக்கு உண்மையான அக்கரை இருந்தால் நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் பஸ் பயணம் பாதுகாப்பாக இருக்கிறதா? பஸ்ஸை ஒட்டும் டிரைவர் எப்படி என்று என்றாவது ஒரு நாள் விசாரித்தீர்களா? அல்லது குழந்தை செல்லும் பஸ் டிரைவரிடம் நட்பாக பழகி பஸ் எந்த கண்டிஷ்னில் உள்ளது என்று ரகசியமாக விசாரித்தது உண்டா? பஸ்ஸில் செல்லும் எந்த குழந்தைகள் மூலம் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதா என்றுதான் விசாரித்தீர்களா? இதையெல்லாம் பொறுப்போட செய்யாமல் சம்பவம் நடந்த பின் மற்றவர்களை குற்றம் சுமத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது சொல்லுங்களேன்.

எனது அடுத்த கேள்வி சமுகத்தை பார்த்து கேட்கும் கேள்வி. பணம் கறக்கும் இந்த கல்வி நிலையத்திற்கு போட்டி போட்டு பணத்தை அள்ளிவாரி அந்த பள்ளிக்கூடங்கள் செய்யும் சிறு தவறுகளை கூட தட்டி தைரியமில்லாத சமுகமாகவே நம் சமுகம் காணப்படுகிறது. நாம் வசிக்கும் வீட்டிற்கு அருகில் நல்ல பள்ளிகூடங்கள் இல்லையா அல்லது நாம் ஆபிஸ் போகும் வழியில் இல்லையா என்ன? நாமெல்லாம் அப்படி நம் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில் படித்தவர்கள்தானே? அப்துல்காலாமிலிருந்து இன்று அமெரிக்காவில் வேலை பார்க்கும் டாக்டர் எஞ்சீனியர்கள் எல்லாம் இப்படி புகழ் பெற்ற பள்ளியில் படித்தா வந்தார்கள். அவரவர் வீட்டிற்கு அருகில் உள்ள ஏதோ ஒரு பள்ளியில் படித்துதானே முன்னேறியுள்ளார்கள்.

வெளிநாடுகளைப் பார்த்து வாழ்க்கைக்கு உதவாத எல்லாவற்றையும் பார்த்து காப்பி அடிக்கும் நீங்கள் அங்கு எப்படி பள்ளிகூடங்கள் செயல்படுகின்றன என்பதை பார்த்து காப்பி அடிப்பதுதானே? இங்கு நான் வசிக்கும் அமெரிக்காவில் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில்தான் குழந்தைகளை படிக்க வைக்க முடியும். நமக்கு அந்த பள்ளி பிடிக்கவில்லை சிறிது தூரத்தில் இருக்கும் பள்ளியில்தான் நல்லா சொல்லி தருகிறார்கள் என்று அங்கு நம்மால் சேர்க்க முடியாது. வேண்டுமென்றால் அந்த பள்ளி இருக்கும் இடத்திற்கு அருகில்தான் நாம் வீடு மாறி செல்லவேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்றவாறு அரசாங்கமே பள்ளிகளை மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் திறக்கிறது. இந்த மாதிரி சட்டதிட்டங்களை கொண்டு வர வேண்டுமென்று ஏன் நம் சமுக மக்கள் ஒட்டு கேட்க வரும் தலைவர்களிடம் கேட்பதில்லை. அது போல தெருவுக்கு தெரு ஒயின் ஷாப்களை திறக்கும் அரசாங்கம் ஏன் அதிக அரசாங்க பள்ளிகளை திறந்து நல்ல திறமையான ஆசிரியர்களை நியமிக்க கூடாது.


தமிழ் சமுகமே உன்னிடம் இறுதியாக சில கேள்விகளை கேட்கிறேன்? ஒரு குழந்தையின் உயிர் இழப்பபை கண்டதும் கொதித்து எழுந்து பள்ளி உரிமையாளரையும் அரசாங்க அதிகாரிகளையும் எதிர்த்து போராடுகிறீர்களே... ஒயின் ஷாப்பை திறந்து வைத்து அதற்கு அடிமையாகி எத்தனே பேர் உயிர் இழக்கிறார்கள் அந்த உயிர்கள் உங்களுக்கு இழப்பாக தோன்றவில்லையா? அல்லது எத்தனை அரசாங்க பஸ்ஸுக்கள் இந்த பஸ்சை போல பாதுகாப்பாக இல்லாமல் ஒடி எத்தனை உயிர் இழப்புகளை ஏற்படுகின்றன அது உங்களுக்கு இழப்பாக தோன்றவில்லையா?



பஸ்ஸில் ஒட்டை இருக்கிறதா இல்லையா என்பது பள்ளி உரிமையாளருக்கு எப்படி தெரியும் அவர் என்ன தினமும் எல்லாவற்றையும் சோதித்து கொண்டா இருக்கமுடியும்.அதற்கு காரணம் பள்ளி மேனேஜ்மெண்ட் டீம்தான் அதானல் அந்த டீம் மேனேஜரைத்தான் கைது செய்ய வேண்டும். ஒருவேளை அந்த மேனேஜர் உரிமையாளரிடம் சொல்லி அவர் அதை கண்டு கொள்ளமல் இருந்திருந்தால் அவரை கைது செய்வதுதான் சரி.இல்லையென்றால் அது தவறுதான். இதே போல் தமிழக அரசு பஸ்ஸுக்கள் பல இது போல ஒட்டை உடைசலாக ஒடி பல விபத்துக்கள் ஏற்படுகின்றனவே அதற்காக இதே சட்டம் தைரியமாகா ஜெயலலிதாவை கைது செய்யுமா என்ன?

பள்ளி உரிமையாளருக்கு எதிராகா போராடும் சமுகமே நீ ஏன் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எதிராகவும் இப்படி கட்சி பேதமின்றி போராடக் கூடாது.


நீ முட்டாளா இருந்தது போதும் இப்போதாவது உன் உரிமைக்காக போராடு..


என்னால் இதை உங்களுக்கு சொல்லத்தான் முடியும். இந்த உரிமைக்காக போராடுவது என்பது  உங்களால்தான் முடியும் காரணம் நீங்கள்தான் பாதுகாப்பற்ற தமிழகத்தில் வாழ்கிறீர்கள்



அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

13 comments:

  1. இந்த கோரமான நிகழ்வுக்கு
    சமூகமும் பங்க்கேற்க வேண்டும் எனச் சொல்லிப்போனது
    மிகச் சரி.அதற்காக முதல்வர் அவர்களையும் கைது செய்ய
    வேண்டும் என முடித்திருப்பது கொஞ்சம் கூடுதல்
    எனப் பட்டதுஇதுபோன்று எழுதுவது மிகச் சரியான்
    காரணத்திற்கு மிகச் சரியாக எதிர்ப்பு தெரிவிக்கையில்
    நம்முடைய நடு நிலைமை குறித்து. சந்தேகம் கொள்ள்
    வைத்துவிடும் என்பது எனதுதாழ்மையான கருத்து
    சிந்திக்கச் செய்துபோகும் அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இங்கு பள்ளி பஸ்ஸில் உள்ள ஒட்டைக்கு பள்ளி உரிமையாளர் பொறுப்பேற்க வேண்டுமென்றால் தமிழக அரசு பஸ்ஸுக்கு எல்லாம் தமிழக முதல்வர்தானே(இப்போது ஜெயலலிதா முதல்வர் அவர் இல்லாமல் கலைஞர் இருந்து இருந்தால் அவர் பெயர்தான் இங்கு வந்திருக்கும்) பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற வாதத்தை சொல்லுகிறேன்.

      Delete
  2. நீங்கள் என் பதிவை தொடர்ந்து படித்து வருவதால் சொல்லுகிறேன் நான் எல்லா அரசியல் தலைவர்களையும் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் சம்பவங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் ஏற்ப. என் மனதில் பட்டதை இங்கு சொல்லிவருகிறேன். நடுநிலையை நான் தவறுவதில்லை

    ReplyDelete
  3. த்ன் பிள்ளை பாதுகாப்பாக பள்ளி சென்று வருகிறதா என்பதை விசாரிக்க மறந்த வகையில் சமூகமும் பொறுப்பேற்க வேண்டும் என்ற கருத்து மிகச் சரி. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் நெரிசல் மிகுந்த தமிழ்நாட்டில் பள்ளிக்கு அருகிலேயேதான் குடியிருக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு மிகக் கடினமானது. ஆனால் அதிகம் பணம் பறிக்கும் பள்ளியில்தான் கல்வி நன்றாக இருக்கும் என நினைக்கும் மக்களின் மனப்பாங்கில் கண்டிப்பாக மாற்றம் தேவை. உரத்துக் குரல் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துச் சொல்லத்தான் என்னால் முடிகிறது.

    ReplyDelete
  4. Tell us some ideas how to avoid accident like this issues. Don't try to say only to take as public public. Do something for public not only written. Arivurai mattum sonnaal pothaathu athai cheyalpaduththuvatharku neengalum muyarchi cheyya vendum. Abbhas from Chennai.

    ReplyDelete
    Replies
    1. //முதலில் பெற்றோர்களை பார்த்து நான் கேட்கும் முதல் கேள்வி?/// இங்கு நான் கேட்ட கேள்விகளை நன்கு படித்து பின்பற்றினாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடுமல்லவா ?

      அடுத்தாக வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க வேண்டும்

      Delete
  5. உங்கள் கோபம் நியாயமானதே மக்கா...!

    போது மக்களும் இனி கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது...!

    ReplyDelete
    Replies
    1. உயிரின் மதிப்பை ஒவ்வொருத்தரும் உணரணும். உணர்ந்தால் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கலாம்

      Delete
  6. பாத்து எழுதுங்க
    அம்மா பற்றி தெரியுமில :)


    நன்றி,
    http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. நான் ஒண்ணும் அம்மாவை குறை சொல்லவில்லை கவனமாக படித்து பார்த்தால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது விளங்கும். ஒரு உயிர் போனவுடன் அதற்கு சம்பந்தாமானவர்கள் யாரு என்று முழுமையாக விசாரிக்காமல் கைது செய்வது தவறு என்று தான் சொல்கிறேன். கிழ் உள்ளவர்கள் செய்யும் தவறுக்கெல்லாம் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பாக முடியுமா அதுமாதிரிதான் ஜெயலலிதா எல்லாவற்றிற்கும் பொறுப்பாக முடியாது என்பது என்னுடைய வாதம். இல்லை உரிமையாளர்கள்தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டுமென்றால் ஜெயலலிதாவும் தமிழக அரசில் எந்த துறையில் உயிர் இழப்பு ஏற்பட்டாலும் அவரும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றுதான் சொல்ல வருகிறேன்

      Delete
  7. பஸ்ஸில் ஓட்டை இருந்திருக்கிறது.. அதைத் தெரிந்த ஓட்டுனர் வண்டியை இயக்காமல் தடுத்திருக்கிலாம்.. அவர் lethargicஆக கண்டும காணாமல் விட்டிருக்கிறார.. ஆக அவர் பதில் சொல்லக் கடமைப் பட்டவர்.. அந்த வண்டி 15 நாட்களுக்கு முன்னர் FC க்கு வந்திருக் கிறது.. வண்டியின் கோளாறைப் பார்க்கமல் அதற்கு FC அளித்த அநத வாகன ஆய்வாளர் பதில் சொல்லக் கடமை பட்டவர்கள்.. அதற்கு மேல் பள்ளி அதன் நிர்வாககம் அதன் முதல்வர தாளாளர் என்று போவது மக்கள் கோபத்திலிருந்து தம்மை காத்துக் கொள்ள அரசு இயந்திரம் செய்யும் extra மெனக்கெடல்

    ReplyDelete
  8. நீங்கள் சொன்ன கருத்துக்கு உடன்படுகிறேன் நான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எனது குழந்தைகளை எனது வீடருகில் உள்ள பள்ளியில் சேர்த்து விட்டேன்
    காலை நெரிசலில் நேரத்துக்கு செல்லவேண்டும் என்று பாதுகாப்பற்ற அதிவேக பயணம் செய்கிறது பள்ளி வாகனங்கள்
    இன்று காலை ஆர்டிஒ சோதனைகளை பார்தேன்

    ஓட்டுனர்களுக்கு 60% குடிபழக்கம் உள்ளது

    ReplyDelete
  9. இந்தம்மா மேல ஆதாரத்துடன் பதியப்பட்ட வழக்குகள் அத்தனையுமே புஸ் வானமாகிட்டாங்க, நீங்க hypothetical கேச சொல்றீங்க. அது எங்க நடக்கப் போவுது??

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.