Sunday, July 22, 2012





ப்ளீஸ் சைலன்ஸ்....என் மனம் கவர்ந்தவளை தொந்தரவு செய்யாதீர்கள்

இவள் இல்லாமல் எனது வாழ்வே இல்லை.
நான் பிறந்தது முதல் இவள் என்னை தொடர்கிறாள்
அவள் என்னை விட்டு பிரிவதும் இல்லை
அவளால்தான் என் கற்பனைகள் கடல் ஆழத்தைவிட மிக ஆழத்திற்கும்
இமயமலையைவிட மிக உயரத்திற்கும் செல்லுகின்றன.
சோகத்திலும் துக்கத்திலும்
மனதில் வலி ஏற்பட்டால் இவள்தான் மருந்தாக இருக்கிறாள்
சொந்த உறவுகள் சில சமயங்களில் தராத மகிழ்ச்சியை இவள் மிக அதிகம் தருகிறாள்
உறவுகள் நம்மைவிட்டு செல்லும் போதும் இவள் மட்டும் நம்மைவிட்டு போகாமல் நமது கடைசி மூச்சுவரைக்கும் வருகிறாள்
இவள் என்னை சிந்திக்க வைப்பது மட்டுமல்லாமல் முன்னேற்ற பாதைக்கும் அழைத்து செல்கிறாள்.

அவள் யாரென்று அறிய வேண்டுமா?
அவள்தான் அமைதி(சைலன்ஸ்)

என்ன உங்களுக்கும் அவளை பிடிக்குமா?


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

16 comments:

  1. பல சமயங்களில் காணாமல் போய்
    நம்மைத் தேடி தேடி தெருத் தெருவாய்
    அலையவிட்டுனோக அடித்துவிடுகிறாள்
    அவளிடம் எனக்கு பிடிக்காத அம்சம்
    அது ஒன்றுதான்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தேடி தேடி அலையவிடுவதானால்தான் என்னவோ அதை நமக்கு அதிகம் பிடிக்கிறது. எதுவும் எளிதில் கியடித்துவிட்டால் நமக்கு அதின் அருமை தெரியாது

      Delete
  2. ஸ்ஸ்ஸ்ஸ் அமைதி...அமைதி...!

    ReplyDelete
    Replies
    1. என்ன மனோ அருவாளை எடுத்து வருகிறாரா?

      Delete
  3. நிச்சயம் எல்லாருக்கும் அவளை பிடிக்கும்...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கவி

      Delete
  4. Replies
    1. அமைதியாக வந்து படித்து கருத்திட்டதற்கு நன்றி

      Delete
  5. ம் எனக்கு மிகவும் பிடித்தவள் என்னை மிகவும் பிடித்தவள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கவிதையை போலவே அவளையும் எல்லோருக்கும் பிடிக்கும் என்பது உண்மையே

      Delete
  6. அமைதியை பிடிக்கும் அவளை பிடிக்காது

    ReplyDelete
    Replies
    1. ///அமைதியை பிடிக்கும் அவளை பிடிக்காது//


      அவளை என்பது மனைவியையா அல்லது காதலியையா?

      Delete
  7. அமைதி தொலையுமிடத்தில் அவஸ்தை பிறக்கிறது! நல்ல பகிர்வு!

    ReplyDelete
  8. உங்களுக்குச் சொந்தமான அவள்
    எல்லோரிடமும் தங்குவதில்லையே... ஏன் ஐயா?

    ReplyDelete
  9. அமைதி
    உயிரின் பிறப்பிடமும் அவளே...
    உயிரின் உறைவிடமும் அவளே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.