Sunday, July 1, 2012




ஆண்கள் மனதை மாற்றும் பெண்கள் ( ஆண்கள் ஜாக்கிரதை)


எங்கிருந்தோ ஒரு சிறு புள்ளியாய் வந்த 'அவள்' என்மனதை  தொட்டவுடன் என் உலகமாய் மாறி விட்டாள்.அவள் எப்படியெல்லாம் என் மனதில்  மாறி இருக்கிறாள் என்ற என் எண்ணத்தின் விளைவே இந்த பதிவு!! எனது கற்பனையில்........


உன்னுடன் பழக ஆரம்பித்த  பொழுது வர்ணமாக எனக்கு தெரிந்த நீ
பழகிய பின் ஒவியமாக மாறிவிட்டாயே

உன்னுடன் பழக ஆரம்பித்த  பொழுது செடியில் உள்ள சிறுமுள்ளாக எனக்கு தெரிந்த நீ
பழகிய பின் செடியில் மலரும் ரோஜாவாக மாறிவிட்டாயே

உன்னுடன் பழக ஆரம்பித்த  பொழுது விதையாக எனக்கு தெரிந்த நீ
பழகிய பின் இதயத்தில் பூத்து குலுங்கும் மரமாய் மாறிவிட்டாயே!

உன்னுடன் பழக ஆரம்பித்த  பொழுது சிறு குளமாக எனக்கு தெரிந்த நீ
பழகிய பின் அன்பு கடலாக மாறிவிட்டாயே!

உன்னுடன் பழக ஆரம்பித்த  பொழுது சிறு புள்ளியாய் எனக்கு தெரிந்த நீ
பழகிய பின் உலகமாய் மாறிவிட்டாயே

உன்னுடன் பழக ஆரம்பித்த  பொழுது தோழியாக எனக்கு தெரிந்த நீ
பழகிய பின் காதலியாக மாறிவிட்டாயே

உன்னுடன் பழக ஆரம்பித்த  பொழுது கசப்பான மருந்தாக எனக்கு தெரிந்த நீ
பழகிய பின் நோயை தீர்க்கும் ஒரு தீர்வாகவே  மாறிவிட்டாயே

உன்னுடன் பழக ஆரம்பித்த  பொழுது தென்றல் காற்றாக எனக்கு தெரிந்த நீ
பழகிய பின் சுவாசக் காற்றாக மாறிவிட்டாயே



"ஆண்களின் மனதில் பெண்கள் எப்படியெல்லாம் மாறுகிறார்கள்" என்ற தலைப்பை முதலில் வைத்தேன் அப்படி வைப்பதைவிட "ஆண்கள் மனதை மாற்றும் பெண்கள் ( ஆண்கள் ஜாக்கிரதை) "இப்படி வைத்தால் மற்றவர்களின் கவனத்தை கவற முடியும்  என்று கருதினேன். அது சரிதானே?



அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனின் கிறுக்கல்கள் உங்கள் மதிப்பீட்டிற்காக

2 comments:

  1. ஆண்கள் மனதை மாற்றும் பெண்கள் - ம் நல்லாவே மாத்துறாங்க

    ReplyDelete
  2. எப்படியெல்லாம் போஸ்ட்ட பிரபல படுத்த வேண்டியிருக்கு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.