வடை எங்கே போச்சு?
என் மனைவியும் குழந்தையும் வடை சாப்பிட ஆசையாக இருக்கு என்றார்கள். நானும் வேலையில் இருந்து வந்ததும் வடைக்கு ஊறப் போட்டு அதை அரைத்து , குறைந்தது 20 வடைகளை செய்யது வைத்துவிட்டு நண்பன் கூப்பிட்டான் என்று வெளியே சென்றேன். மனைவி வேலையை முடித்து விட்டு அப்படியே குழந்தையை கூப்பிட்டு ஷாப்பிங்க் போய்விட்டு விட்டுக்கு வந்தாள். நான் அவர்கள் வந்த 5 நிமிடத்திற்கு பிறகு வீட்டிற்கு வந்தேன். வந்த நான் தட்டில் ஒரே ஒரு வடை மட்டும் இருப்பது கண்டு, கோபத்துடன் மீதி வடைகள் எங்கே என்று கேட்டேன்.. அந்த வடைகளை அவளும் குழந்தையும் சாப்பிட்டு விட்டதை மனைவி சொன்னாள். அதற்கு நான் எப்படிடா அவ்வளவு வடைகளையும் குறுகிய நேரத்தில் சாப்பிட்டீர்கள் என்றுதான் கேட்டேன். அதற்கு என் குழந்தை மீதியிருந்த ஒரு வடையையும் எடுத்து தன் வாயுக்குள் போட்டு சாப்பிட்டு இப்படிதான் என்று கையை துடைத்தவாறே சொன்னாள்..
ஒழுங்கா கேள்வி கேட்காமல் இருந்திருந்தால் அந்த ஒரு வடையாவது கிடைச்சிருக்கும். இப்ப அதுவும் போச்சே மக்கா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
இனி வடையை கண்டால் மதுரையை காணோம்....மதுரையை கண்டால் வடையை காணோம்னு சொல்லலாம்ல ஹி ஹி....
ReplyDeleteமனோ நீங்கதான் இன்று வந்து முதல் வடையை எடுத்தா? எடுத்தும் இல்லாமல் நக்கல் வேற? வடையை எடுத்துக்குங்க பரவாயில்லை ஆனால் சர்க்கை அது மாதிரி எடுத்துடாதீங்க
Deleteஆஹா... வட போச்சே..!
ReplyDeleteவடையை வைத்து எலி பிடிப்பார்கள் ஆனால் வடை பற்றிய பதிவைப் போட்டுதான் உங்களை போல உள்ள பிரபலங்களை நம்ம வலைப்பக்கதிற்கு இழுக்க வேண்டியிருக்கு..ஹூம்ம்ம்ம்
Deleteஅடடா... இருந்த வடையும் போச்சே....
ReplyDelete(ஏங்க... இப்பவெல்லாம் ஆண்கள் தான் வடை சுடுகிறார்களா...? கல்யாணம் பண்ணவே பயம்ம்ம்ம்மா இருக்குதுங்க)
ஒரு சின்ன கேள்வி.. இதனால் என் கமெண்ட்ஸ்சை எடுத்தாலும் பரவாயில்லை.
ரொம்ப நாட்களாக உங்களிடம் கேட்க நினைத்த கேள்வி ... இது தான்
”அவர்கள் உண்மைகள்” என்று தலைப்பு வைத்திருக்கிறீர்களே... அப்போ...
அவர்கள் மட்டும் தானா...?
உங்கள் பதில்களிலிருந்தே புரிஞ்சி போச்சி.
Delete///கல்யாணம் பண்ணவே பயம்ம்ம்ம்மா இருக்குதுங்க)///
Deleteநாங்க எல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டு அனுபவிக்கலையா... நீங்க மட்டும் ஜாலியாக இருக்கலாமா? அப்புறம் கல்யாணம் பண்ணினாதான் இந்த மாதிரி மொக்கை பதிவு எல்லாம் போட முடியும்
ஹா..ஹா. இதுக்குத் தான் சில நேரங்களில் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது.... நன்றி !
ReplyDeleteஎன் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?
ஆஹா ..இனி கேள்வி கேட்கும் போது
ReplyDeleteமிகவும் ஜாக்கிரதையாகத் தான்
இருக்கவேண்டும் போலிருக்கிறதே
சுவாரஸ்யமன பதிவு
தொடர வாழ்த்துக்கள்
உங்களின் சுறுசுறுப்பு என்னை வியக்க வைக்கிறது அதிகாலையில் எழுந்ததுமில்லாமல் பதிவையும் படித்து கருத்திடும் உங்கள் செயல் என்னை வியக்க வைக்கிறது. நன்றி சார்
Deleteஆகா! வடை இழந்து தவிக்கும் நண்பருக்கு அனுதாபங்கள்!
ReplyDeleteகதை படிதான் வடை போச்சு,,,ஆனால் வடையால் எனக்கு ஒரு பதிவு தேறுச்சு...புரியவில்லை என்றால் தருமி சாருக்கு சொன்ன பதிலை படிக்கவும்
Deleteமுன்னெ ஒரு கதை சொல்வாங்க சுவத்துக்கீரைஅயை வழிச்சு போடடின்னு. இதே போலத்தான் .
ReplyDeleteதெரியாத பழமொழியை உங்கள் கருத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.. நன்றி அம்மா!!!
Deleteசமைச்சவனுக்கு சட்டியும், பானையும்தான் மிச்சம்ன்னு எங்க ஊர் பக்கம் பழமொழி இருக்கு. உங்க விசயத்துல அது உண்மைதான்னு தெரிஞ்சு போச்சு சகோ.
ReplyDelete//சமைச்சவனுக்கு சட்டியும், பானையும்தான் மிச்சம்ன்னு எங்க ஊர் பக்கம் பழமொழி//
Deleteஉங்க ஊர்பழமொழியா அல்லது உங்கள் வீட்டு பழமொழியா?
ஆகா என் நிலமைதான் உங்க வீட்டுகாரருக்கும்....(என் கட்சிக்கும் ஒரு தொண்டர் கிடைத்திருக்கார்)
எப்படி உங்களுக்கே இப்படியெல்லாம் நடக்குது?
ReplyDeleteவடை பதிவு ஒரு கதைதான் ஆனால் உண்மையில் நடந்த சம்பவம் சரக்கை நாம் வாங்கி வைத்து இரவு நேரத்தில் வந்து குடிக்கலாம் என்று நினைத்து இரவில் வந்தால் நம்ம ரும் மேட் அதை குடித்துவிட்டு இந்த வடை கதையில் வருவது போல சொல்வான்... வடை போன பரவாயில்லை ஆனா சரக்கு போனா?
Deleteஅடடா..வடை போச்சே..
ReplyDeleteபிரபல பதிவர்கள் சங்கமிக்கும் சென்னை பதிவர் சந்திப்பு
அட வடை போனா ஒகே ஆனா உங்களை போல உள்ள பிரபலங்கள் நமது வலைதளம் வருவதே மிக சந்தோஷம் சார்
Deleteரொம்ப பழைய கதை மாதிரி இருக்கே! (இந்தப் பெருசுகளே இப்படித்தான் ... என்ன சொன்னாலும் ‘அந்தக் காலத்திலேயே இதெல்லாம் உண்டு’ன்னு சொல்லுங்க!!!)
ReplyDeleteOld Wine in New Bottle என்று சொல்வார்களே அதுதான். எனது மாமியார் என் குழந்தைக்கு சொன்ன கதை இது. இதை என் குழந்தை 2 நாட்களுக்கு முன் என்னிடம் பேசிய போது சொன்னாள். ஆகா வடை உண்மையில் நமக்கு கிடைச்சிடுச்சு இதை வைச்சு ஒரு மொக்கை பதிவை போடலாம் என்று எண்ணி வடை எங்கே போச்சு என்ற தலைப்பில் போட்டேன். அவ்வளவுதாங்க நான் செய்தது
DeleteOld Wine in New Bottle என்று சொல்வார்களே அதுதான். எனது மாமியார் என் குழந்தைக்கு சொன்ன கதை இது. இதை என் குழந்தை 2 நாட்களுக்கு முன் என்னிடம் பேசிய போது சொன்னாள். ஆகா வடை உண்மையில் நமக்கு கிடைச்சிடுச்சு இதை வைச்சு ஒரு மொக்கை பதிவை போடலாம் என்று எண்ணி வடை எங்கே போச்சு என்ற தலைப்பில் போட்டேன். அவ்வளவுதாங்க நான் செய்தது
ReplyDeleteஆஹா பிந்தி வந்தது எவ்வளவு நல்லதாய் போச்சு!..விசயத்தை வாசித்தவுடன் ஐயோ பாவம் என்று தோன்றியது .கீழே உங்கள் கருத்தைக் கண்டதும் இப்போ மேலே கருத்துப் போட்டவர்கள் பாவம் என்றாகி விட்டது சார் :) வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கும் அருமையான பகிர்வுக்கும் .
எல்லாரும் கருத்து சொல்லி முடித்துவிட்டார்கள் என்றல்லவா நினைத்து பதில் சொல்ல ஆரம்பிதேன்...நீங்கள் வருவது தெரிந்திருந்தால் இன்னும் சிறிது நேரம் கழித்து அல்லவா பதில் சொல்லி இருப்பேன்... ஆகா வடை போனதை விட இதல்லாவா அதிர்ச்சியாக இருக்கு...நெக்ஸ்ட் டைம் இப்படி எல்லாம் லேட்டா வந்து பதிவு படிக்க கூடாது ஆமாம் சொல்லிட்டேன் இல்லைன்னா எனக்கு ரொம்ப கோவம் வந்துட்டும் அப்புறம் நான் பாட்டுக்கு ரொம்ப மொக்கை பதிவெல்லாம் போட ஆரம்பிச்சுடுவேன்
Deleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நான் மிகவும் தாமதம் என்ன செய்ய போறீங்க சொல்லிட்டு .........?
ReplyDeleteலேட்டாக வந்ததற்கு தண்டனையா நீங்கள் நூறு வடை சுட்டு நீங்கள் எனக்கு வடை மாலை சூட்ட வேண்டும்
Delete