அப்பாவி அதிராவும் அறிவு கொளுந்து மதுரைத்தமிழனும்
மதுரைத்தமிழன்: தம்பி அந்த காலத்தில எல்லோரும் நன்றாக உழைத்து இயற்கை உணவுகளை உண்டு மிக ஆரோக்கியமாக இருந்தார்கள்/
அண்ணே நீங்கள் சொல்வது மிகவும் சரின்னே...நானும் இதைப் பற்றி நிறைய தெரிஞ்சு வைச்சிருக்கேன் இனிமே அந்த காலத்தில் நம் வீட்டுபெரியவர்கள் சாப்பிட்ட மாதிரி சாப்பிட்டு உழைத்து ஆரோக்கியமாக இருக்க போறேண்னே
மதுரைத்தமிழன்: தம்பி அந்த காலத்தில் எல்லோரும் ஒருவரை ஒருவர் சந்தித்து மனம்விட்டு பேசி ஆரோக்கியமான மனநிலையில் இருந்தனர். அவர்கள் அந்த காலத்தில் ஸ்மார்ட் போனை எல்லாம் உபயோகிக்கலை...இருந்தாலும் அவர்கள் மிகவும் ஸ்மார்ட்டாக இருந்தார்கள். அதனால் நாம் இந்த எலக்ட்ரானிக் சாதனங்களை தூக்கி போட்டுட்டு அந்த கால மனிதர்கள் வாழ்ந்தது மாதிரி வாழனும்..
யோவ் மதுரைத்தமிழா நீ சொன்ன அறிவுரைகளை இது வரை கேட்டுகிட்டு இருந்தேன் பாரு அதற்கு என்னை நானனே செருப்பாலா அடிச்சிகிடனும்..
மதுரைத்தமிழன் : அப்படி நாம் என்ன தப்பா சொல்லிட்டோம் தம்பி ஏன் இப்படி கோபப்படுது?
இந்த தம்பி ஏன் கோபப்படுத்து என்று உங்களுக்கு தெரிந்தால் இங்கே சொல்லிட்டு போங்கள் மக்களே
அன்புடன்
மதுரைத்தமிழன்