வலிகள் ஆண்களுக்கு வருமா?
நான் படித்த பதிவில் நண்பர் ஒருவர் இந்த கேள்வியை கேட்டிருந்தார். அதைபற்றி சற்று யோசித்த போது ...
நல்ல இதயமுள்ளவர்களுக்கு வலிகள் வரும் அது ஆண் பெண் என்று வித்தியாசம் பார்ப்பதில்லை. ஆனால் பெண்கள் வலியை வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் வெளிப்படுத்துவதில்லை. சினிமாவில் வந்த இந்த பாடல் வரிகள் ஆண்களுக்கு பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். வெளியில் சிரிக்கிறேன் உள்ளே அழுகுறேன் நல்ல வேஷம்தான் இருந்து வெளுத்து வாங்குறேன்.
ஆண்களுக்கு எப்போது எல்லாம் வலி வரும் என்பதை யாராவது கவனித்து இருக்கிறீர்களா?
ஆண்களுக்கு சிறுவயது முதலே வலி வர ஆரம்பிகின்றன. சிறு வயதில் தன் அம்மாவை தன் அப்பா காரணமில்லாமல் திட்டும் போது, பதிலுக்கு அப்பாவை எதிர்த்து கேட்க முடியாமல் அமைதியாக இருக்கும் போது முதலில் வலி தோன்றுகிறது.. அதன் பிறகு பள்ளிக்கு போகும் தன் தங்கையை அல்லது அக்காவை யாராவது கேலி செய்தால் வலி வருகிறது. அதன் பின் தன் தங்கை அல்லது அக்கா யாரையாவது காதலிக்கிறாள் என்று தெரியவரும் போது அந்த பையன் நல்லவனா கெட்டவனா என்று தெரியாமல் இருக்கும் போது வலி வருகிறது. பின் அந்த சகோதரிகள் காதலித்தவனை விட்டுவிட்டு வேறு ஒருவனை கல்யாணம் செய்து கொண்டு கணவரின் வீட்டுக்கு செல்லும் போது மீண்டும் வலி வருகிறது.
இதற்கிடையில் அவனுக்கு தான் விரும்பும் பெண் தன்னை கவனிக்காமல் அலட்சியப்படுத்தும் போதும். அதன் பின் ஒருவழியாக ஒரு பெண்னை காதலித்து அவளின் பிறந்த நாளுக்கும் , வேலண்டைன்ஸ் டே பரிசு வாங்க கையில் காசு இல்ல்லாமல் தவிக்கும் போதும் ,அதற்காக அம்மாவிடம் பொய் சொல்லி பணம் வாங்கும் போதும், அவன் காதலி அத்தனையும் வாங்கி கொண்டு சில ஆண்டுகள் கழித்து நாம் நண்பர்களாக இருப்போம் என்று சொல்லிவிட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணும் போதும் வலி வரும்.
உடன் படிக்கும் நண்பர்கள் நம் கூட சேர்ந்து சினிமா, பார் என்று ஆட்டம் போட்டுவிட்டு நமக்கு தெரியாமல் படித்து விட்டு ,ஒன்றுமே படிக்கவில்லை இந்த தடவை எக்ஸாமில் அவுட்டுதான் என்று சொல்லிவிட்டு ஃப்ர்ஸ்ட் க்ளாஸில் பாஸ் ஆகும் போதும், சிபாரிசில் வேலைக்கு சேர்ந்துவிட்டு நாம் எந்த வித சிபாரிசுமில்லாமல் நம் திறமையை நம்பி வேலை தேடி வேலை கிடைக்காமல் இருக்கும் போது மச்சி ரொம்ப கடினமா முயற்சி செய்யவேண்டும் என்று நமக்கு அட்வைஸ் பண்ணும் போதும் வலி வரும்.
ஒரு வழியாக வேலை கிடைத்து கல்யாணம் பண்ணு நேரம் வரும் போது நமக்கு பிடித்த பெண்ணைவிட அவர்களுக்கு பிடித்த பெண்ணை நம் தலையில் கட்டும் போதும்,கல்யாணம் ஆன புதிதில் நம் மனைவியின் பெற்றோர்களையும் உறவினர்களையும் இழிவாக பேசும் போதும். கல்யாணத்திற்கு அப்புறம் நமக்கு பிடித்த அம்மாவும் மனைவியும் ஒருவரை ஒருவர் குறை சொல்லி சண்டை போடும் போதும், இதற்காக உள்ளுர் வேலையை விட்டு வெளிநாட்டில் வேலை தேடி பெற்றோர்களையும் , உறவினர்களையும், நண்பர்களையும் பிரியும் போதும் வலி வரும்.
வெளிநாட்டிற்கு நம்முடன் வந்த மனைவி போன் முலமாக அவளின் அம்மாவிடம் சமையல் செய்வது எப்படி என்று அரை குறையாக கற்றுக் கொண்டு அதற்க்காக வரும் போன் பில்லை பார்த்ததும் வலி கண்டிப்பாக வரும்.. அப்படி கற்று மனைவி சமைத்ததை சாப்பிட்டால் கண்டிப்பாக அடுத்த நாள் வயிற்று வலி வரும். கோபத்தில் பூரி கட்டையால் மனைவி அடிக்கும் போதும் வலிக்கும்.
இப்படி அப்படினு இருந்து விட்டு உண்மையிலேயே நாம் நமது மனைவியை காதலிக்கும் போது குளிர்காலத்தில் இங்கே ரொம்ம போர் அடிக்குது அம்மாவையும் தேடுது என்று நம்மை விட்டு இரண்டு மாதங்கள் பிரியும் போதும் வலி வரும். இந்த நேரத்தில் நீயூயார்க்கிற்கு ரயிலில் செல்லும் போது நமக்கு எதிரே உள்ள சின்னம் சிறியதுகள் கொஞ்சி குழாவுவதை பார்க்கும் போது நாம் ஏதையோ இழந்த உணர்வு வரும் போது வலி வரும்.
பிரிந்த மனைவி வந்தவுடன் கொஞ்சிய கொஞ்சலால் கருவுற்ற மனைவி 10 மாதம் படும் கஷ்டத்தை நினைத்து நம்மால் அந்த வலியை பகிர்ந்து கொள்ளமுடியவில்லை என்று நினைக்கும் போது வலி வரும். மருத்துவமனையில் பிரசவத்தின் போது மனைவியின் கையை பிடித்து நிற்கும் போது அவள் வலியினால் நம் கையை பிடித்து அமுக்கும் போதும் நமக்கு வலி வருமுடோய்ய்ய்ய்...
தாய்ப்பால் கொடுக்க கஷ்டப்படும் மனைவியை பார்க்கும் போது வலி வரும். அந்த கஷ்டத்தை பார்த்து போதும் தாய்பால் கொடுப்பதை நிறுத்திவிடு என்று சொல்லிய பின் குழந்தை எதிர்காலத்தில் பாதிக்கப்படும் என்று நினைக்கும் போது வலி வரும். இருவரும் வேலைக்கு போகும் போது ஆசை குழந்தையை Day Care ல் விட்டு செல்லும் போது வலி வரும். குளிர் நேரத்தில் ஸ்கூல் பஸ் ஸ்டாப்பில் குளிரில் பஸ்ஸுக்காக காத்திருப்பதை பார்க்கும் போதும், அதன் பின் சிறிது வளர்ந்த குழந்தை காரத்தே ஸ்கூலில் மற்ற குழந்தைகளுடன் பயிற்சியின் போது அடி வாங்கும் போது மனதில் வலி தோன்றும். வளர்ந்த குழந்தை காலேஜுக்காக வெளி ஊருக்கு பிரிந்து செல்லும் போது வலி வரும். தன் மகள் விரும்பிய பையன் அவளை ஏமாற்றி செல்லும் போது அதனை சொல்லி அழுகும் போதும் வலி வரும். அதை ஒருவழியாக மறந்து நல்ல பையனை கல்யாணம் செய்து பிரிந்து போகும் போது வலி வரும். வளர்ந்த பொண்னை அவள் கணவன் நம் முன்னால் திட்டும் போது வலி வரும்.பேரக் குழந்தை பிறந்த போது அதை மற்றவர்கள் கொஞ்சிக் கொண்டிருக்கும் போது குழந்தைக்காக வெயிட் பண்ணும் போது வலி வரும்......
வயதான காலத்தில் பாசமுள்ள மனைவி நோய்வாய் பட்டு கஷ்டப்படும் போதும், மனைவி தன்னைவிட்டு மறைந்து போகும் போதும் வலி வரும். ஆண்களுக்கும் இதயமிருப்பதால் அவர்களுக்கும் வலியும் வேதனைகளும் அழுகைகளும் வரும். ஆனால் அதை வெளிக்காட்டாமல் வெளியே சிரித்து கொண்டும் உள்ளே அழுது கொண்டும் இருப்பவர்கள்தான் ஆண்கள். இதில் சில ஆண்கள் விதி விலக்கு அவர்களைப் பற்றி இங்கே கூறவில்லை.
வலிகள் இல்லாமல் வாழ்க்கையில்லை. இந்த பதிவை நீங்கள் படித்தும் கமெண்ட்ஸ் ஏதுவும் போடாமல் போனாலும் வலிக்கும்..
ஏகப்பட்ட வலிகளைப் பற்றி படித்து உங்களுக்கு வலி வந்தாலும் வந்திருக்கும். அதனால் உங்கள் வலியை போக்க ஒரு நல்ல ஜோக் படித்து சிரித்து செல்லுங்கள்.
ஏண்டா.......அம்மா அடித்ததுக்கு போய் இப்படி அழுகுற?
போங்கப்பா உங்களை மாதிரி எல்லாம் என்னால் வலி (அடி) தாங்க முடியாது.
உங்களுக்கு வந்த வலிகளையும் பின்னுட்டமாக இங்கே சொல்லலாம்.
ஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி: பதிவு எழுத ஆரம்பித்த காலங்களில் 2010 ல் இப்படி எல்லாம் எழுதினேன்...
கருத்துரை நீளமாக எழுதத்தான் நினைக்கிறேன் ஆனால் கை வலிக்கிறது.
ReplyDelete
Deleteஹாஹாஹஹா
தாலி கட்டும் போது கையில் சுளுக்கு வந்து நான் பட்ட வலி.
ReplyDeleteJokes apart, one of your best.. You really did a awesome job..
பாராட்டிற்கு நன்றி
Deleteவலிகளை, வலியுள்ளோர் மனதின் சுமை குறையும் அளவில் எழுதியுள்ள விதம் பாராட்டத்தக்கது. அனைவருமே பெரும்பாலும் பலவிதமான வலிகளை எதிர்கொள்கின்றனர். இவை தவிர்க்கமுடியாதவை.
ReplyDelete
Deleteஒருவர் ஆண்களுக்கு வலி வருமா என்று கேட்டிருந்த போது என் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட வலிகளையும் சில வலிகளை யோசித்தும் எழுதி இருந்தேன்... வலிகள் பலருக்கு பலவிதமாக ஏற்பட்டு கொண்டே இருக்கிறது ஆனால் ஆண்கள் அதை வெளிப்படுத்துவதில்லை....அதுவும் நான் சொன்ன வரிகள் ஆண்களின் மனதிற்குள்ளே புதைக்கப்படுகின்றன
சீரியஸாக பாதியும், நகைச்சுவையாக பாதியும் வலிகள்! சொல்லி இருப்பவை நன்று.
ReplyDeleteஅப்பாம்மா தன்னை விட தன சகோதர சகோதரிகளை அதிகம் கவனிப்பதாய் நினைக்கும் போதும் வலி வரும்.. வயதான காலத்தில் தங்கள் மகன்/மகள்கள் தங்கள் மேல் இதே குற்றச்சாட்டை வைக்கும்போதும் வலி வரும்!
நான் அமெரிக்க வந்த பின் கற்றுக் கொண்டது ஒன்று அதில் என்ன விஷயம் பேசினாலும் அதில் நமக்கு தெரிந்த நகைச்சுவையை கலந்து சொல்ல வேண்டும் என்பதுதான்.. ஆபிஸில் நடக்கும் மீட்டீங்கில் இருந்து அமெரிக்க தலைவர்கள் பேசும் பேச்சானலும் அதில் சிறிது நகைச்சுவை இருக்கும்
Deleteநீங்கள் சொன்ன வலிகள் எல்லாம் குடும்ப்ங்களிலும் ஏற்படும் வலிகள் அதை சுட்டி காட்டியது அருமை
இப்படியே பதிவுகள் தொடர்ந்து எழுதி இருந்தால்... ம்ஹிம்... எனது சிந்தனை பதிவுகள் எல்லாம் ஜுஜுபி... பாதையை நீங்கள் மாற்றிக் கொண்டதால் தப்பித்தேன்...!
ReplyDeleteநான் அப்படியே பதிவு தொடரந்து எழுதி இருந்தால் என் பெயர் திண்டுக்கல் தனபாலன் என்று மாறி இருக்கும் .இப்ப பாருங்க எனக்கு வர வேண்டிய பெயரை நீங்க தட்டி பறித்துவீட்டீர்கள் அதனால் திண்டுக்கல் வந்தால் தலாப்பா கட்டு பிரியாணியும் பூட்டும் நீங்கள் எனக்கு தர வேண்டும்
Deleteநாம் நல்ல எழுத்து என்று எழுதி அதை மற்றவர் கண்டுகொள்ளாமல் போகும்போதுவலிக்கும்
ReplyDeleteஇது பதிவர்களுக்கு ஏற்படும் உண்மையான வலிதான்
Deleteமனம் அல்லது உள்ளம் இருபாலாருக்கும் ஒன்றே
ReplyDeleteவலிகளை உணரும் உடலமைப்பும் இருபாலாருக்கும் ஒன்றே
வலிகளை வெளிப்படுத்தும் உளப்பாங்கும் இருபாலாருக்கும் ஒன்றே
ஆனால், ஆண்கள் ஆறுதலாக வலிகளை வெளிப்படுத்துவர்
பெண்கள் உடனுக்குடன் வலிகளை வெளிப்படுத்துவது உண்மையே!
வளைச்சி வளைச்சி வலியை பற்றி .......சொந்த கதை, சோகத்தையை
ReplyDeleteசரி மேல பெண்ணுங்க விட்டு போவாங்க சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன் மைலார்ட் நிலைமையை அவ்வ்ளவு மோசகிடமா ஆகியிருப்பாங்க வேலண்டைன்ட்ஸ் டேக்கு பூரி கட்டையை பரிசா கொடுத்திருப்பாங்க என்னடா வாழ்க முழுசா இவனுக்கு பூரி செஞ்சி போடறதா இல்லை பூரிக்கட்டையை வேப்பன்சா யூஸ் பண்ணியே காலத்தை ஓட்டுவதா என்று குழப்பம் வந்திருக்கும்.......... பாருங்க நான் சொன்னதை சரினு சொல்ல அதிராவும், அஞ்சுவும் வருவாங்க இப்ப :-D
ஆமா ஆமா 100 % உண்மை ஹாஹா :)
Deleteஆஹா ஒருத்தர் வந்திட்டாங்க... எங்கே இன்னொருத்தரை காணவில்லை ஒரு வேளை தேம்ஸ் நதியில் குதிக்கப் போயிட்டாரோ?
Deleteவாவ்வ் !! அட்டகாசமான அழகான பதிவு ..போனில் படிச்சதும் பாராட்டாம இருக்கு முடில ..பிறகு வந்து விரிவா பின்னூட்டமிடறேன்
ReplyDeleteஎன்னடா பாராட்டி வைர மோதிரம் போடுவாங்கன்ணு பார்த்தா பிரகு வந்து பின்னுட்டம் போடுறேன்னு சொல்லிட்டு போயிட்டாங்களே...ஹும்ம்ம்
Deleteம்ம்ம். என்ன செய்ய எல்லாம் விதி .படிச்சு தொலைச்சி கமெண்டு போடாம போனா இந்த ஓனரு அழுதுருவாரு போல. அதுனால "சூப்பர்" ன்னு கமெண்டு போட வேண்டியதா போச்சு.
ReplyDelete"சூப்பர்"
மதுரைத்தமிழன் அழுக கூடாது என்று நினைச்ச நீங்க மிக பெரியவருங்க.....ஆனால் இங்கே பலர் எனக்கு வலி அதிகரிக்க பூரிக்கட்டையை அதிகமாக பரிசாக வாங்கி அனுப்புறாங்க
Deleteபட்ட அடிகளும் வலிகளும்
ReplyDeleteமீண்டும் ஒருமுறை நினைவின் விளிம்பிக்கு
வந்து போகச் செய்தது தங்கள் பதிவு
அன்று நாம் பட்ட வலிகளை நாம் நினைத்துப்பார்த்தால் பெருமையாக இன்று தோன்றுகிறது காரணம் இது சுயநலமற்ர வலிகள் மற்றவர்களுக்காக நாம் பெற்ற வலிகள்
Deleteஇந்தப் பதிவில் மைனஸ் ஓட்டுக்கள்
ReplyDeleteஎதனால் ?
ஒன்றும் புரியவில்லை
ரமணி சார் இந்த மைனஸ் வோட்டு போடுபவர் சென்னையை சார்ந்த நகைச்சுவை பதிவர்தான் அவர் பிஜேபியை சார்ந்தவர். நான் மோடியை பற்றிய எழுதும் பதிவுகள் அவருக்கு பிடிக்கவில்லை என்றும் நான் அவதூறாக மோடியை பற்றி எழுதுகின்றேன் என்றும் அப்படி நான் எழுது பதிவுகளுக்கு நீங்கள் எல்லாம் ஆதரவு தருகிறீர்கள் என்றும் அதனால் எல்லோருக்கும் மைனஸ் வோட்டு போட்டு தமிழ் மணத்தில் இருந்து அவர்களை விரட்டுவேன் என்று சொல்லி செய்தும் வருகிறார்.. நான் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்மே இருந்து மோடியை பற்றி எழுதி வருகிறேன் ஆனால் நம்ம பதிவருக்கு தீடிரென்று தேசபக்தி கொப்பளித்து இப்படி செய்து வருகிறார். இப்படி அவர் செய்வதால் நீங்கள் எல்லாம் எனக்கு ஆதரவு தர் மாட்டீர்கள் என்று நினைக்கிறார். அவருக்கு என் மீது கோபம் இருந்தால் என் பதிவுகளுக்கு நெகடிவ் வோட்டு போடலாம் ஆனால் உங்களைப் போல உள்ளவர்கள் மோடியை பற்றி எதும் எழுதாமல் நல்ல பதிவுகள் இட்டாலும் கிழ்தரமாக செயல்பட்டு உங்களை போல உள்ள அனைத்து பதிவர்களுக்கும் நெகடிவ் வோட்டு போடுகிறார். இதில் இருந்தே அவருக்கு எவ்வளவு கீழ்தரமான எண்ணம் இருக்கிறது என்பது தெரிகிறது...
Deleteஇதுதான் விஷயம்....அவர் நம்ம பதிவர்கள் 10 பேர் எனக்கு வந்து கருத்துக்கள் சொல்வதால்தான் என் தளம் பலரையும் சென்று அடைகிறது என்று நினைக்கிறார் ... ஹும்ம் அவருக்கு தெரிந்த வலைத்தள அறிவு அவ்வளவுதான்.
என் தளத்தில் இருக்கும் வோட்டு பட்டை எனக்கு தெரிவதில்லை அதனால் எத்தனை ப்ளஸ் மைனஸ் வோட்டுகள் வருகின்றன என்பது பற்றி எனக்கு தெரியாது & கவலையும் இல்லை.. நான் எழுதும் ரிசிப்பி பதிவுகளுக்கு 1800க்கும்மேல் பார்வையாளர்கள் வருகிறார்கள் அப்படி இருக்கையில் மோடி பற்றி பதிவுகள் போட்டால் எவ்வளவு வருகிறார்கள் என்று உங்கள்து யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்
மோடி தமிழகத்திற்குள் நேர்மையாக நுழையவே முடியாது ஆட்சியை பிடிக்க முடியாது அப்படி அவர் பிடித்தாலும் தொடர்ந்து என் கருத்துக்கள் வெளி வந்து கொண்டே இருக்கும் அதில் எந்த வித மாற்றமும் ஏற்பட போவதில்லை ஏனென்றால் நான் காசு வாங்கி கொண்ட்டோ அல்லது எதையாவது ஆட்சியாளர்களிடம் இருந்துஎதிர்பார்த்தோதான் என் குடும்பத்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை அதனால் நான் போலி தேச பக்தி என்ற முகமுடியை அணியத்தேவையில்லை
ஆண் வலியை தாங்கனும் தம்பி
ReplyDeleteஅதற்காக இரும்பால் செய்த பூரிக்கட்டையை கொண்டு அடிக்க கூடாதம்மா...வலிச்சா பரவாயில்லைம்மா ஆனால் எலும்பு அல்ல முறியுது
Deleteமறைந்த தந்தை உயிருடன் இருக்கும் நாளில் மகனுக்கு அனுப்பிய கடிதங்களை பல வருடம் கழித்து பிரித்து பார்க்கும்போதும் ஒரு வலி ஆண்களுக்கு வரும் .. பேச முடியாமல் படுத்த படுக்கையாய் இருக்கும் தந்தையை கடல்கடந்து சென்று பார்த்த மகனின் கண்ணிலும் வலி அழுகையுடன் வெளிப்படும் ..
ReplyDeleteஎவ்ளோ வயசானாலும் ஆணோ பெண்ணோ பெற்றோரை மிஸ் பண்றோம் அதுவும் வலி தான் .
ஆண்களுக்கும் வலி உண்டு ஆனா ஒவ்வொரு நொடியும் எல்லாத்தையும் நினைவில் வச்சிருப்பதால் பொண்ணுங்களுக்கு வலியின் தீவிரம் அதிகமாகுது
நீங்கள் சொன்ன ஒவ்வொரு வரியும் உண்மைதான் தோழி
Delete///........ பாருங்க நான் சொன்னதை சரினு சொல்ல அதிராவும், அஞ்சுவும் வருவாங்க இப்ப :)///
ReplyDeleteஆமா ஆமா...:) தாய்க்குலத்துக்குச் டப்போர்ட் பண்ண ஓடி வந்தேன்:)..
எனக்கு இங்கு ரிப்ளை பட்டின் வேர்க் ஆகுதில்ல... ஆரோ அதிராக்கு யூனியம்:) வச்சிட்டாங்கோ:)
என்ன தேம்ஸ் நதியில குதிக்கிற முடிவை மாற்றி கொண்டு இங்கே வந்துட்டீங்களா? ரிப்பளை பட்டன் ஒழுங்காக வேலை செய்யுது. அதனால உங்க போனை தேம்ஸ் நதியில் துக்கி ஏறிஞ்சிட்டு புது போன் வாங்குங்க
Deleteஅப்பப்பா ஆண்கள் இவ்ளோ நல்லவர்களா எத்தனை வலிகளைத்தான் தாங்குறீங்க:) அதுவும் அழாமல்:)))... ஹா ஹா ஹா இதுக்கொரு எசப்பாட்டுப் போஸ்ட் இப்பவே போடோணும் போல இருக்கே எனக்கு:)..
ReplyDeleteஆஹா எனக்கு ஒரு புது பதிவு போட ஐடியா கொடுத்த உங்களுக்கு நன்றி ஹீஹீ நீங்க எசப்பாட்டு போடறதுக்கு முன்னால நானனே எசப்பாட்டு போட்டுடுவேன் ஹீஹீ
Deleteஎன்ன இருந்தாலும் எழுதிய விதம் மிகவும் ரசிக்க வைக்குது ட்றுத்:)... பூரிக்கட்டை வலியைத் தாங்கும் உங்களுக்கு இதெல்லாம் சூசூபி:).. ஹா ஹா ஹா...
ReplyDeleteநீங்கள் இப்படி கருத்து சொன்ன பிறகு அந்த வலியெல்லாம் வலியாகத்தெரியவில்லை
Deleteஉண்மைதான் வலிகள் பொதுவானதுதான் அருமையா விவரிச்சி இருக்கீங்க பெண்கள் அதை கண்ணீராலும் புலம்பலாகவும் தனியாக கூட வெளிப்படுத்திவிடுவார்கள் முக்காவாசி ஆண்கள் அதை எரிச்சலாய் மௌனமாய் மட்டுமே காட்டுகிறார்கள் ஏன் என்று புரியவில்லை
ReplyDeleteஆண்கள் என்றால் அழக் கூடாது என்று சொல்லிதானே வளர்க்கிறீங்க அதனாலதான் என்னவோ
Deleteஅதையும் மீறி அழுதால் அதை பார்க்கும் பெண்களுக்கு ( அம்மா, மனைவி,சகோதரி,தோழி ) வலி வந்திடுமே என்றுதான் அழுகாமல் இருக்கிறார்களோ என்னவோ
DeleteSorry thamizhan for the delayed comment. Valiyai yum valikkaamal nagaichuvaiyum kalanthu sonnathu super. Yes there are pains for gents too. Typing from the mobile....No tamil font. That's why in english.dont mistake me.
ReplyDeleteஅட எதுக்குங்க சாரி அது இதுன்னு பெரிய வார்ததையெல்லாம் சொல்லுறீங்க...
DeleteSuper அவா்கள் உண்மைகள் - அழகு. பாராட்டுகள் - சே.ரவி - கோவில்பட்டி - தூத்துக்குடி மாவட்டம்.
ReplyDelete