Monday, October 30, 2017

@avargal unmaigal
சென்னையில் உயர்நீதிமன்ற துப்புரவு பணிக்கு  விண்ணப்பித்த பட்டதாரிகள் : படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைதானோ?



நான் படித்த செய்தியை கிழே கருப்பு கலரிலும் அதற்கான என் கருத்தை சிவப்பு கலரிலும் தந்து இருக்கிறேன்.. உங்களுக்கும் கருத்து ஏதும் இருக்குமானல் கிழே பதிந்து செல்லுங்கள்'

சென்னை உயர்நீதிமன்றத்தில் துப்புரவு பணி : அதிகளவில் விண்ணப்பித்த பட்டதாரிகளால் அதிர்ச்சி


சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் துப்புரவு பணி செய்யும் வேலைக்கு, பொறியியல் பட்டதாரிகள் அதிக அளவு விண்ணப்பித்திருப்பது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விண்ணப்பித்த 3,000 பேரில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,500 பேரில் பெரும்பாலானவர்கள், பிஇ, எம்.ஏ, எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.பில் பட்டதாரிகள் என்பது தெரிய வந்துள்ளது. வரும் ஞாயிறன்று நடைபெற உள்ள நேர்முகத் தோவில் இவர்கள் பங்கேற்கின்றனர்.

இது குறித்து பேசிய வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்தவர்கள் பொறியியல் பட்டதாரிகள் உள்ளிட்ட பலர் துப்புரவு வேலைக்கு விண்ணப்பித்துள்ளது வேதனை தர கூடிய விஷயமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் படித்த படிப்பிற்குரிய வேலை வாய்ப்பு இல்லை என்பதையே இச்சம்பவம் படம் பிடித்து காட்டுவதாக குறிப்பிட்டனர். மொத்தமுள்ள 140 பணிகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். இந்த பணிகளுக்கு மொத்தம் 3,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஒரு சிலரே 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள். துப்புரவு பணிக்கு பட்டதாரிகள் அதிகளவில் விண்ணப்பித்து உள்ளது உயர்நீதிமன்ற வட்டாரத்தில் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




இந்த செய்தி நீதிபகளுக்கும் வக்கில்களுக்கும் சில பொதுமக்களுக்கு வேண்டுமானல் அதிர்ச்சியாக இருக்கலாம் ஆனால் நாட்டின் நிலைமையை தெரிந்தவர்களுக்கு இதில் அதிர்ச்சி இல்லை. இதில் அதிர்ச்சி அடைய ஆச்சிரியம் இல்லை இது போன்ற வேலைக்கு 19000 (19,000 graduates, postgraduates, MBAs, BTechs apply for 114 sweepers’ jobs in UP town ) பேர்கள் உபி மாநிலத்தைல் விண்ணபித்த செய்தியும் வந்து இருக்கிறது .


இதற்கு பல காரணங்களை சொல்லலாம்.. நம் நாட்டிற்கு தேவையான துறையில் ஆட்கள் கிடைக்க அதற்கு ஏற்ப  கல்வி படிப்ப்பில் கவனம் செலுத்த தவறியதுதான் முக்கிய காரணம் நம் அரசு செய்வது என்ன மேலை நாடுகளுக்கு அடிமைகளை அனுப்ப அதற்கேற்ற கல்வி படிப்பை புரொமோட் செய்கிறது . அந்த நாடுகளுக்கு ஆட்கள் தேவை இல்ல என்ற போது அதற்கு மாற்று வழியில்லை..காங்கிரஸ்தான் மக்களை சுரண்டுகிறது நாங்கள் அப்படி இல்லை என்று சொல்லி ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என்று சொல்லி வந்த மோடி அரசும் சொன்ன மாதிரி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவில்லை ஒரு வேளை இன்னொரு முறை அவர்களுக்கு வாய்ப்பு அளித்தால் சொன்னதை செய்து காட்டுவோம் என்று அவர்கள் வாக்கு அளிக்கலாம்.

மேலைநாடுகளில் அடுத்த 10 ஆண்டுகளில் என்ன மாதிரியான வேலைக்கு டிமாண்ட் என்று ஆராய்ந்து அதற்கு ஏற்ப புதிய பாத்திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள். அப்படி அவர்கள் செய்த போதிலும் அவர்களுக்கே சருக்கல் ஏற்படுகிறது.ஆனால் நாமோ அதற்கு எதிர்மாறாக செயல்படுகிறோம்.அப்படி இருக்கும் போது படித்த பட்டதாரிகள் இப்படிபட்ட வேலைக்கு விண்ணப்பிப்பது அதிசயம் ஒன்றுமில்லையே


அடுத்தாக நம் நாட்டில் உள்ள எஞ்சினியரிங்க கல்லூரிகளின் தரம் பற்றி பார்த்தால் ஒரு சில கல்லூரிகளை தவிர மற்ற கல்லூரிகளின் தரம் அடிமட்டத்திற்கும் கிழாகத்தான் இருக்கிறது. இங்கு எஞ்சினியரிங்க என்ற பெயரில் ஏனோ தானோ என்று ஏதோ சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அங்கு படித்தவர்கள் எஞ்சினியரிங்க் பட்டம் பெற்று இருந்தாலும் அவர்கள் துப்பரவு பணிக்கு கூட தகுதியில்லாதவர்களாக்தான் இருக்கிறார்கள் அதனால் துப்புரவு தொழிலாளி வேலைக்கு அப்ளை செய்வதில் வருத்தப்பட தேவையில்லை



என்னமோ இந்த மாதிரி இந்தியாவில் மட்டும்தான் நடை பெறுகிறது என்று நினைக்க வேண்டாம் வளர்ந்த நாடான அமெரிக்காவிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்து இருக்கின்றன. அதுவும் எனக்கு தெரிந்து நான் வசிக்கும் நீயூஜெர்ஸியில் உள்ள எடிசன் என்ற ஊரில் உள்ள பப்ளிக் ஸ்கூலில் இது போன்று துப்பரவு தொழிலாளி வேலைக்கு ஆட்கள் தேவை என்று வெளியிடப்பட்ட போது படித்த மற்றும் ஐடி துறையில் வேலை பார்த்து வேலை இழந்த பலரும் ஆயிரக்கணக்கில் விண்ணபித்து  இருந்தனர்..இங்கு தேவைப்பட்டவர்கள் என்னவோ 10க்கும் குறைவானவர்களே. இதற்கு இவ்வளவு பொட்டி வந்ததற்கு காரணம் சம்பளம் குறைவாக இருந்தாலும் அங்கு கிடைக்கும் பெனிபிட் ( மருத்துவ இன்சுரன்ஸ்) மிக அருமையானது என்பதால்தான் இந்த போட்டியாம் மேலும் இந்த வேலையில் டென்ஷன் இல்லை என்பதாலும் இந்த வேலைக்கு கூட்டம் குவிந்தது இங்கு நம் இந்தியர்களை தவிர மற்றவர்களிடம் இந்த வேலைதான் உயர்ந்தது தாழ்ந்தது என்ற எண்ணம் இவர்களிடையே கிடையாது.

இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் அதனால் இங்கு மார்கெட்டும் மிக அதிகம் இதனால்தான் மேலை நாடுகள் இந்தியாவின் மீது கண் வைத்து தங்களது பிஸினஸ்களை ஆரம்பித்து தங்களைது பொருட்களை கொண்டு வந்து கடை விரிக்கிறார்கள் ஆனால் நாமோ நம்மின் பலம் அறியாமல் இங்குள்ள சிறு தொழில்களை ஊக்குவித்து நம் நாட்டின் தேவைகளை நம் ஆட்களை கொண்டு பூர்த்தி செய்தால் நாடும் வளரும் மக்களும் வளர்வார்கள் ஆனால் நாம் செய்வது மேலை நாட்டிற்கு தேவையை நிறைவேற்ற நம் ஆட்களை தயார் செய்து அங்கு அனுப்பவ்துதான் பொருட்களை அல்ல . மேலும் நம் இயற்கை வளங்களை அழித்து மேலை நாட்டிற்கு கொடுத்து அதில் அவர்கள் பொருட்களை தயாரித்து அதிக விலை வைத்து அதை மீண்டும் நம் மார்க்கெட்டில் வைத்து விற்று அதிகலாபம் சம்பாதித்து செல்கிறார்கள். இதனால் இங்குள்ள ஒரு சிலர் லாபம் அடைகிறார்கள் அவ்வளவுதான்.அதனால்தான் இங்கு படித்தவர்கள் வேலை இல்லாமல் அலைகிறார்கள்..


எந்த கட்சியாக இருந்தாலும் சரி நமக்கு உண்மையாகவே நாட்டை நாட்டு மக்களை நேசிக்கும் தலைவர்கள் கிடைக்காத வரை நிலமை மாறப் போவதில்லை.

அதனால் நாட்டில் நடக்கும் எந்த விஷ்யங்களுக்கும் அதிர்ச்சியோ வருத்தமோ பட தேவையில்லை




அன்புடன்
மதுரைத்தமிழன்

Pic Courtesy : Times Of India. Thanks
 டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த படத்தை ரீமேக் பண்ணியது மட்டுமே நான்,

11 comments:

  1. நான் அண்மையில் கலந்து கொண்ட, ஒரு புத்தக வெளியீட்டு விழாவிலும் இதே செய்தியை வேறு விதமாக பேசினார்கள்.

    காலம் காலமாகவும், இப்போதும் துப்புரவு தொழிலை செய்து வருவது தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களில் சில பிரிவினர் மட்டுமே. –இப்போது அந்த வேலையிலும், மற்ற ஜாதியினர் வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொண்டு சம்பளம் சலுகைகளை அனுபவித்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்த துப்புரவு பணியை செய்வதில்லை. அதற்குப் பதிலாக, குறைந்த கூலியில் ஒரு துப்புரவு தொழிலாளியை அந்த வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். சில இடங்களில் காண்ட்ராக்ட் முறையும் உண்டு. எந்த அரசியல்வாதியும் இதுபற்றி பேசுவதில்லை. சென்னையில் மட்டுமல்ல பல இடங்களிலும் இதுபோல் நடப்பதாகத் தெரிய வருகிறது. இதுவும் ஒருவகை சுரண்டல்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மையாக இருக்க வாய்ப்புண்டு. 25 வருடங்களுக்கு முன்னால் என் அப்பாவிற்கு தெரிந்த ரயில்வேயில் மற்றொரு பிரிவில் வேலை பார்த்த ஒருவர். அவர் தமிழகத்தில் உள்ள உயர் சாதி பிரிவை சார்ந்தவர்.. அவர் ரயில்வே துப்பரவு தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அவர் துப்பரவு வேலையை செய்யாமல் அதற்கு ஒரு ஆளை வைத்து வேலையை முடித்து கொண்டார். அவர் நன் கு படித்தவர் அதனால் ரயில்வேயில் உள்ளே நடக்கும் எக்ஸாம் எழுதி 1 ஆண்டு முடிவதற்குள் மதுரை டிவிசனல் ஆபிஸில் கிளர்க்காக சேர்ந்து பின்னர் பதவி உயர்வு பெற்று அங்கு மேனேஜராகவும் ஆகினார்..


      ஒன்ரும் மட்டும் உறுதி படிச்சிருந்தால் மட்டும் போதாது சட்டத்தின் நெளிவு சுளிவுகளை அறிந்தாலே போதும் நல்ல நிலமைக்கு வரலாம்

      Delete
  2. செய்தியில் படித்து நானும் நொந்து போனேன்.

    ReplyDelete
  3. படிப்பிற்கான மதிப்பு அந்த அளவிற்குச் சென்றுவிட்டது.

    ReplyDelete
  4. ஏன் எதற்கு நடந்து என்பதயும் சரியா படம் பிடித்து காண்பித்துவிட்டீர்கள் எதுவும் மாற போவதில்லை மனிதர்களின் ஆசையும் வேலை வாய்ப்பு என்பது இல்லை என்பதுவும் குற்றங்கள் நடக்க காரணம் சால்ஜாப்பாவும் ஆகிறது

    ReplyDelete
  5. படிப்புக்கேத்த அறிவை வளர்த்துக்கொள்ளாததும்,. அறிவை கற்பிக்காததும், அதுக்குண்டான வேலை வாய்ப்பை ஏற்படுத்தாமைன்னு பல பேரை குத்தம் சொல்லனும்

    ReplyDelete
  6. படிப்பின் மதிப்பு கேள்விக்குறியாய்...

    ReplyDelete
  7. கடைசியில் சொன்னது செம கருத்து //நாட்டு மக்களின் நலனையு ம் மக்களையும் நேசிக்காதோர் கிடைக்காத வரை // கஷ்டம்தான் .

    ஆனா மேலே இளங்கோ அண்ணா கமெண்ட் படிச்சி ஷாக்காகிட்டேன் :(ஆக மொத்தம் எளியோர் எப்பவும் அமுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் ..

    இங்கேயும் துப்புரவு வேலை க்கு டிமாண்ட்தான் .இதில் விண்டோ க்ளீனிங் தனியா கான்டராக்ட் எடுத்து செய்வங்க .ரோட் சாலை தெருக்கள் எல்லாம் கவுன்சில் வேலை நிறைய சாலரி ..
    எங்க ஏரியாவில் நகைக்கடை ஓனர் அம்மா ஈவ்னிங் கிளீனர் வேலை செய்றாங்க ஸ்கூல் டைம் முடிஞ்சதும் பிள்ளைகள் வெளியேறியதும் க்ளாஸ் ரூம் க்ளீனிங் ஆபிஸ் க்ளீனிங் செய்வாங்க .இங்கே படிச்சவங்களும் பார்ட் டைமா க்ளீனிங் செய்வாங்க

    ReplyDelete
  8. பட்டம் பெற்றவர்களில் பலரும் இந்த துப்புரவு பணிக்கும் லாயக்கற்றவர்கள் தான் எந்த வேலையானால் என்ன அதில் ஒரு ஈடுபாடு வேண்டும் படித்தவர்கள் படிப்புக்கேற்ற வேலைக்கு லாயக்கில்லாமல்தானே வேறு வேலை நாடுகிறார்கள்

    ReplyDelete
  9. மதுரைத் தமிழன் இது எனக்கு அதிர்ச்சியாகத் தெரியலை. ஆனா வேதனை வந்தது. ஏன்னா நம்ம கல்வித் திட்டத்திலேயே பல குறைகள். எஞ்சினியரிங்க், எம்பிஏ என்று பட்டம் பெற்று விடுகிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு அடிப்படை விஷயங்கள் தெரிவதில்லை அடிப்படை தகுதியோ இல்லை என்பதுதான் உண்மை. எங்கள் வீட்டில் கல்வித் துறையில் பலர் இருப்பதால் இதைப் பற்றி நன்றாகவே தெரியும். நானும் சில பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் சந்தேகம் கேட்டு வரும் போது சொல்லிக் கொடுத்ததுண்டு முன்பு. பாண்டியில் இருந்த போது. வெளிநாட்டிலிருந்து என் உறவினர் அங்கு அவர் பேராசிரியராக இருக்கிறார். அவர் இங்கு வந்த போது எஞ்சினியரிங்க் படித்த மாணவர்கள் மாணவிகள் சிலரைச் சந்தித்து வேதனைப்பட்டார். இங்கு அடிப்படையே சரியாக இல்லையே எப்படி இவர்கள் படித்து டிகிரி வாங்கிவிடுகிறார்கள் என்ரு. நீங்கள் சொல்லியிருக்கும் இந்தக் கருத்திற்கு "நாட்டு மக்களின் நலனையும், மக்களையும் நேசிப்போர் கிடைக்காதவரை" நு சொல்லியிருக்கீங்க பாருங்க அதுக்கு ஷொட்டு. உன்மை அதுதான்!

    கீதா

    ReplyDelete
  10. நான் 1971-73 இல் கணிதத்தில் எம்.எஸ்ஸி. பட்டம் பெற்றேன். மேற்கொண்டு Phd வரை படிக்க வாய்ப்பு கிடைத்தது. (அப்போது M.Phil கிடையாது. நேராக Phd வரை போகலாம்). ஆனால் குடும்பச் சூழ்நிலையைக் கருதி, வேலைக்குப் போகவேண்டியதாயிற்று. 1998-2000 ஆண்டுகளில் தமிழகப் பல்கலைக் கழகம் ஒன்று, M Phil -Maths through Distance Education where even non-teachers can study- தொடங்கியது. இதற்குத்தானே காத்திருந்தேன்! உடனே சேர்ந்தேன். ஆனால் தேர்வில் வந்த கேள்விகளைப் பார்க்கவேண்டுமே! பத்தாம் வகுப்பிலிருந்து நாம் பார்க்கும் அதே format தான். அதாவது, புத்தகத்தில் உள்ள நேரடிக் கேள்விதான் தேர்விலும் வந்தது. (அதாவது, 'பிதகோரஸ் தேற்றத்தை எழுதி நிரூபி' மாதிரியான கேள்விகள்). வேறு வார்த்தையில் சொன்னால், மனப்பாடம் செய்தால் போதும். M Phil கூட எளிதாக பாஸ் செய்துவிடலாம்! அத்துடன் எனக்கு M Phil மற்றும் நமது கல்வி முறையின் மீதே வெறுப்பு வந்துவிட்டது. மேற்கொண்டு தேர்வுகள் எழுதவில்லை. யாருக்காக இம்மாதிரி கல்வி முறை? வெறும் பட்டம் என்ற சில எழுத்துக்களுக்காவா?

    இதற்காகத்தானா ஜாதிகள், இட ஒதுக்கீடு, உதவித்தொகை, இன்ன பிற ?

    முப்பதாண்டுகளில் நான் படித்த கல்விமுறை மாற்றம் காணவே இல்லை என்னும்போது, இனி எப்போதாவது மாறுமா என்று கவலைப்படவேண்டியிருக்கிறது. உஸ்பெகிஸ்தான் போன்ற சிறிய நாடுகளுக்குச் சென்று மருத்துவம் படித்து வருகிற நம் மாணவர்கள், இங்குள்ள சிறந்த மருத்துவக் கல்லூரியில் பயின்றவர்களை விட மேதமை கொண்டிருப்பதில் வியப்பென்ன?

    மேலும், ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் நூற்றுக்கு பதினெட்டு சதம் பேர்தான் நாற்பதுக்கு மேல் மதிப்பெண் பெற்றார்கள் என்றால், இவர்களிடம் பயிலும் இன்றைய மாணவர்களின் கதி என்னவாக இருக்க முடியும்? துப்புரவுப் பணியாளர் வேலை இவர்களுக்குக் கிடைத்தாலே அதிகம் என்று கூடச் சொல்லலாம். மனம் வலிக்கிறது. காசு கொடுத்துப் படிக்கவைத்த பெற்றோர்கள் கண்கலங்குவார்களே என்று வேதனை உண்டாகிறது. ஆனால் சொல்லாமல் இருக்க முடியவில்லையே!

    கல்வி வியாபாரிகளாக அரசியல்வாதிகள் மாறிவிட்ட நிலையில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பாக அவர்கள அனைவரும் குரல் கொடுக்கும் நிலையில், தமிழகத்து மாணவர்களின் எதிர்காலம் நிச்சயம் கேளிவிக்குறியாகவே இருக்கிறது என்றால் மிகையில்லை.

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.