சண்டே ஸ்பெஷல்... சின்ன சின்ன செய்திகள் ப்ளீஸ் ஒரு மீஸ்ட் கால் கொடுங்களேன்
ஒரு மிஸ்ட்கால் கொடுத்தால் நான் இணைத்து காட்டுகிறேன்..உங்களால் மிஸ்ட் கால் கொடுக்க முடியுமா?
மிஸ்ட்கால் கொடுத்தால் நதி நீரை இணைக்கலாம் என்று சொன்னதை நம்பி மிஸ்டு கால் கொடுத்த லூசுங்களே.
எனக்கும் ஒரு மிஸ்ட் கால் கொடுத்தால் மோடியையும் அவர் மனைவியையும் இணைத்து காட்டுகிறேன் #செய்வீங்களா?
இளையராஜா உணர்வாரா?
அந்த காலத்தில் காப்பிரைட் எல்லாம் கிடையாது அதுமட்டும் இருந்திருந்தால் இசை வாத்தியங்களை தயாரித்தவர்கள் அதை காப்பி ரைட் பண்ணி வைத்திருந்தால் இளையராஜா இவ்வளவு பெரிய இசை அமைப்பாளராக வந்து இருக்க முடியாது. காரணம் சிறு வயதில் கஷ்டப்பட்ட நிலையில் இருந்தவருக்கு இசை கருவிகளை வைத்து கற்றுக் கொள்ள, அதற்கு காப்பிரைட்படி பணம் கொடுக்க முடிந்து இருக்காது. இதை அவர் உணர்ந்தால் நல்லது.
டாட்
இவர்களும் டி ராஜேந்தர்களே
பொது மேடையில் டி.ராஜேந்தர் தன்சிகாவை நாகரீகம் இல்லாமல் பேசியதற்கு கடும் எதிர்ப்பை பலரும் சமுக இணைய தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.. ராஜேந்தர் செய்தது மிக அநாகரிகமாம்தான். அதை கண்டிக்க வேண்டிய மிக அவசியம். ஆனால் அப்படி வேளையில் நாமும் நம் முதுகை பார்க்கவேண்டும் அவர் மட்டுமா பொதுவிடத்தில் அநாகரிகமாக நடக்கிறார் பல ஆணகளும் அப்படித்தான் நடக்கிறார்கள். ஏன் சமுக வலைத்தளங்களிலும் பெண்களிடமும் பலர் அநாகரிமாகத்தான் நடக்கிறார்கள்.பெரிய அலுவலங்களில் அரசு நிறுவனங்களில், போலீஸ் துறையில்.நீதி துறையில் இருக்கும் உயர் அதிகாரிகள் இப்படி பலரை சொல்லலாம். அவர்களில் எத்தனை பேர் தங்களுக்கு கிழ் வேலை செய்யும் பல பெண்களை எப்படி எல்லாம் பொது இடத்தில் நாலுபேர் முன்னிலையில் இப்படி திட்டி இருப்பார்கள். அவர்களில் பலர் இங்கே இணையதளங்களில் டி,ராஜேந்தருக்கு எதிராக பதிவிடுகிறார்கள் .இப்படி செய்பவர்கள் ராஜேந்தரை திட்டுவதில் அர்த்தமில்லை காரணம் நீங்களும் டி.ராஜேந்தரே
மிகப் பெரிய பிரபலங்களுடன் தொடர்பு கொண்டு
அவர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டு
தன்னை பிரபலமாக காண்பித்து கொண்டு
தமிழக பிரபலங்கள் மற்றும் தமிழர்களுக்கு அல்வா கொடுக்கும்
அமெரிக்க தமிழர் பற்றிய விபரம் இன்னும் சில தினங்களில்
எனது வலைத்தளமான
https://avargal-unmaigal.blogspot.com/
வெளியிடப்படும்
இவரிடம் ஏமாந்தவர்களில்
விஜய் டிவி கோபிநாத், லேனா தமிழ்வாணன்,
பாடலாசிரியர் முத்துகுமார் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்
மற்றும் பல பல்கலைகழக வேந்தர்கள்
அவர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டு
தன்னை பிரபலமாக காண்பித்து கொண்டு
தமிழக பிரபலங்கள் மற்றும் தமிழர்களுக்கு அல்வா கொடுக்கும்
அமெரிக்க தமிழர் பற்றிய விபரம் இன்னும் சில தினங்களில்
எனது வலைத்தளமான
https://avargal-unmaigal.blogspot.com/
வெளியிடப்படும்
இவரிடம் ஏமாந்தவர்களில்
விஜய் டிவி கோபிநாத், லேனா தமிழ்வாணன்,
பாடலாசிரியர் முத்துகுமார் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்
மற்றும் பல பல்கலைகழக வேந்தர்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
நான் எதற்குமே மிஸ்ட்கால் கொடுக்கும் வழக்கம் இல்லாதவன் நண்பரே...
ReplyDeleteமேலும் தகவல் அறிய ஆவல்.
த.ம.1
அப்ப நீங்க ஆண்டி இண்டியன்
Deleteநம்பரைச் சொல்லுங்க ஜி !
ReplyDeleteமிஸ்ட் கால் கொடுத்தாலே கட்சியில் சேர்த்துக்கிற நாட்டிலே இதெல்லாம் சகஜமையா :)
புது நம்பருக்கு (லேண்ட் லையன்) அப்பளை பண்ணி இருக்கேன் ஆனால் மோடி அதை அப்ப்ருவ் பண்ணாமல் இழுத்து அடிக்கிறார்
Deleteபிரகாஷ் ஸ்வாமியை பற்றி படிக்க ஆவலோடு இருக்கின்றோம்.
ReplyDeleteஎன்னது இன்னொரு ப்ராடு தமிழரும் அமெரிக்காவில் இருக்கிறாரா? நீங்கள் சொல்லும் வரை பிராகஷ் ஸ்வாமி யாரு என்று எனக்கு தெரியாது. அவரை பற்றி நீங்க எழுதுங்க .....
Deleteஇளையராஜா செய்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.
ReplyDeleteடி ராஜேந்தர் செய்த அநாகரீகத்திற்கு இது பதில் ஆகாது.
இளையராஜா செய்வதில் தப்பு இல்லைதான் ஆனால் இணைய தளங்களில் பாடும் சாரசரி மனிதர்களுக்கும் தடை விதிப்பது என்னவோ அவ்வளவாக சரி என்ரு என் மனதிற்கு தோன்றவில்லை. அவரிடம் வசதி இல்லையென்றால் பரவாயில்லை ஆனால் அவருக்கு ஒரளவிற்கு வசதி இருக்கிறதே இன்னும் அவர் அதிகம் சம்பாதிப்பதால் அவர் ஆயூள் என்ன நீண்டுவிடவா போகிறது
Deleteஅடுத்தாக டி ராஜேந்திரரை போலவே சமுதாயத்தில் பல பெரிய மனிதர்கள் தினம் தோறும் பெண்களை இழிவுபடுத்தி கொண்டிருக்கிறார்கள் அவர்களும் டி ராஜேந்திரர் போல உள்ள இழிவான பிறவிகளே என்றுதான் சொல்ல முயற்சித்திருக்கிறேன்
வித்தியாசமாக உள்ள இதழை தொடர்ந்து வாசிக்கிறேன். சில செய்திகளை அனைவரும் உணரும் வகையில் எழுதும் விதம் அருமையாக உள்ளது.
ReplyDeleteஉங்களிடம் இருந்து பாராட்டை பெற நான் தகுதியுள்ளவனா என்று எனக்கு தெரியவில்லை... நன்றி
Deleteஅந்தச் சிவப்பு எழுத்துக்களில் உள்ளதை அறிய ஆவல்!! அது யாரப்பா?
ReplyDeleteகூடிய விரைவில்
Deleteடி ராஜேந்தர் அந்த ஆள் பற்றிப் பேசுவது விடுங்க.....எனக்குத் தோன்றியது இதுவும்... மேடையில் இருந்தவர்கள்தான் லூசுங்க எதிர்ப்பு காட்டலைனா பார்வையாளர்ளும் எதிர்ப்புக் காட்டாதது வியப்பு. பொதுவாகப் பார்வையாளர்கள் மேடையில் பேசுபவர்களின் பேச்சு சரியில்லை என்றால் கூச்சல் போடுவது வழக்கம் தானே. கூச்சல் போட வேண்டாம். ஆனால் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கலாம் இல்லைஆ? அந்தப் பார்வையாளர்களில் ஒரு பெண் கூடவா இல்லை? கத்தி ஆர்பாட்டம் செய்யாமல், பொலட்டாக ஆனால் அழுத்தமாகத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வெளி நடப்பு செய்திருக்கலாம்தானே? ஏன் செய்யவில்லை? சபை நாகரீகம் என்பது பொதுதானே மதுரை சகோ. ஆண்களில் பெரும்பான்மையோர் செய்தாலும், பெண்களும் இருக்கிறார்களே சகோ. மறைந்த ஜெஜெ யை எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை ஆண்களைக் காலில் விழ வைத்திருக்கிறார் அதுவும் மேடைகளில்...விழாதவற்கு என்னா ஆச்சு என்பதும் தெரியும்தானே...அப்புறம் மம்தா, மாயாவதி என்று சொல்லிக் கொண்டே போகலாம் தான்...
ReplyDeleteசபை நாகரீகம் தெரியாமல் பேசுபவர்கள். அதுவும் பெண்களில் பெரும்பான்மையோர். அதை நான் கண்கூடாகப் பார்த்து வருகிறேன்...ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணை அவளுக்குக் குழந்தை இல்லை என்றால் அதை எல்லோர் முன்னிலையிலும் சொல்லிக் காட்டுவது, சிலவற்றை ஒப்பிட்டுப் பார்த்து மனம் நோகப் பேசுவது, ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணை அழ வைப்பது என்று பொதுவெளி நாகரீகம் என்று பேச வந்தால் நிறைய அடுக்கலாம் இல்லையா சகோ...
கீதா
Deleteசபை நாகரிகத்தை தமிழ் மக்களுக்கு கற்று கொடுக்க தவறியது யார் பெற்றோர்களா அல்லது ஆசியர்களா யார் என மனம் எண்ணுகிறது. இதில் உள்ள யாரோ செய்த தவறினால்தான் சபை நாகரிகம் இல்லாமல் ஆண் பெண் இருபாலரும் பேசுகிறார்கள் போல
உண்மை.பெண்களை இழிவாக நடத்துவது எல்லாத் துறைகளிலும் உள்ளது.
ReplyDeleteஸ்மூல் ஆப் நிறுவனத்தின் டேட்டா பேசில் இருந்து இளையராஜா பாடல்களை நீக்கக் இளையராஜா சார்பாக கூறப்பட்டுள்ளது. ஏனெனில் அவர்கள் ஆப் பயன்படுத்துவோரிடம் 1100 ரூபாய் வசூலிப்பதாகக் கூறப் படுகிறது.அவர்கள் இலவசமாக வழங்கினால் இளையராஜா ஆட்சேபிக்க மாட்டார் .மற்ற இசை அமைப்பாளர்களும் இதனால் நன்மை அடைவார்கள் ரஹ்மான் சந்தடி இல்லாமல் ராயல்டி பெற்றிருப்பார். ராயல்டி பற்றி ஒருமுறை கேட்டபோது அதெல்லாம் தனக்கு தெரியாது தன் மனைவி பார்த்துக் கொள்வதாகக் கூறினார்.
இசைக் கருவிகள் மட்டுமல்ல எந்த ஒரு பொருளையும் பயன்படுத்துவோர் ராயல்டி கொடுக்கத் தேவை இல்லை. தயாரித்து விற்பவர்கள்தான் ராயல்டி கொடுக்க வேண்டும்.
/ஏமாற்றாதே முதலில் வருது
ReplyDeleteஏமாறாதே பின்னாடிதான் வருது/
ரகசியமா .... தெரிஞ்சுக்கணுமே இல்லைனா மண்டை வெடிச்சிடும்
சில காரியங்களை மிஸ்ட் கால் கொடுத்து சாதித்துக் கொள்ள முடியும் என்றால் ஐயோ ......
ReplyDelete//அல்வா கொடுக்கும் அமெரிக்க தமிழர்//
ReplyDeleteஒங்களை பத்தியே ஒங்க வலைத்தளத்தில் எழுதப்போறிங்களா?