நாகரீகம் தெரியாத லூசா ராஜேந்தர்
பொது இடத்தில் ஒரு பெண்ணை எப்படி நடத்தனும் என்று தெரியாத ஒரு மூதேவி " மேடையில ஒரு நாகரீகம் என்று ஒன்று இருக்கு என்று" ஒரு பெண்ணுக்கு நாகரிகம் பற்றி சொல்லி தருகிறானாம்.
விழித்திரு’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (28-09-2017) நடைப்பெற்றது. அப்பொழுது பேசிய நடிகை தன்ஷிகா தற்செயலாக ஏற்பட்ட பதட்டத்தின் காரணமாக பேசும் போது டி. ராஜேந்தருக்கு நன்றி தெரிவிக்க மறந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து பேசிய டி. ராஜேந்தர், விழித்திரு படத்தில் தன்ஷிகா நடித்த பிறகு தான் கபாலி படத்தில் நடிக்க தன்ஷிகாவிற்கு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் சூப்பர் ஸ்டாருடன் நடித்தவுடன் தன்னை மறந்துவிட்டதாக டி. ராஜேந்தர் தெரிவித்தார். மேலும் இது தான் உலகம் எனவும் தெரிவித்தார்.
அதற்கு மேடையிலேயே நடிகை தன்ஷிகா மன்னிப்புகேட்டார். ஆனால் அதற்கு டி.ராஜேந்தரோ, “நீ Sareeயே கட்டிட்டு வரல அப்றம் என்ன Sorry கேக்குறனு” சொல்லி அவரை கடுமையாக விமர்சித்தார். மேலும் நடிகை தன்ஷிகாவிற்கு மேடை நாகரீகம் என்பது இல்லை எனவும் கூறினார். இதனால் மேடையிலேயே நடிகை தன்ஷிகா கண்கலங்கினார்.
Saree கட்டாமல் Sorry கேட்டததுதான் தப்பா டி.ஆர்.
தன்ஷிகா தன் பெயரை சொல்லி மரியாதை செய்யவில்லை என்று சொல்லி புலம்பிவிட்டு, தன்ஷிகா தான் அவர் மீது ஏகப்பட்ட மரியாதை வைத்திருப்பதாக சொன்னதும் "உன் மரியாதையை வச்சு நான் என்ன எலக்சன்ல ஓட்டா கேட்கப் போறேன்?" என்கிறார் டி.ஆர்.
சரி ராஜேந்தர்தான் லூசுதனமாக பேசுகிறார் என்றால் அப்படி அவர் பேசும் போது அதை தடுக்க கூட செய்யாமல் அல்லது சமாதானம் கூட செய்யாமல் சிரித்து கொண்டிருக்கும் வெங்க்ட் பிரபு மற்றும் அருகில் உட்கார்ந்து கை தட்டும் ஆண்களுக்கும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன் ஏண்டா ஒரு பெண் அதுவும் சக நடிகையை ஒருவர் தாக்கி பேசும் போது உங்களால் எப்படி சும்மா பார்த்து கொண்டு இருக்க முடிகிறது. உங்கள் வீட்டு பெண்ணை அப்படி யாராவது இன்சல்ட் பண்ணி இருந்தால் நீங்கள் இப்படிதான் பார்த்து கொண்டிருபீர்களா என்ன?
இந்த படத்தில் ராஜேந்தர் தன்சிகா கூட எந்த காட்சியிலும் நடிக்கவில்லை அந்த படத்தில் ஒரு பாடலை மட்டும் பாடியோ அல்லது எழுதியோ இருக்கிறார். அதனால்தான் என்னவோ தன்சிகாவிற்கு அவர் பெயரை குறிப்பிட்டு சொல்லனும் என்று தோன்றி இருக்காது அதுதான் உண்மை
பல்லாயிரக் கணக்கான மைலுக்கு அப்பால் இருந்து வீடியோவை பார்த்த எனக்கு மனது கொதிக்கிறதே... அருகில் இருந்து பார்த்து கொண்டிருந்த உங்களுக்கு கொஞ்சம் கூட சுரணை இல்லையா என்ன?
விழித்திரு #தன்ஷிகா #டி_ஆர்
#DhanshikaArmy
t-rajendar-condemns-dhanshika-for-her-stage-behavior
T.Rajendar VS Actress Dhanshika heavy Argument in Vizhithiru
நடிகைகளை அழ வைப்பதில் அப்பனும் மகனும் ஒண்ணுபோல இருக்காங்க :)
ReplyDeleteஎப்படி பகவான் ஜி.. ஒரு வாசம்னாலும் திருவாசகம்..
Deleteஐயோ மதுர... இதுல இவர் பாடலை.. அவரு என்ன பண்ணாரு சொன்னா.. உனக்கு நாலு நாளைக்கு சாப்பாடு இறங்காது.
Deleteஐட்டம் டான்ஸ் ஆடி இருக்காராம்.
இந்த ஆள் தன்னம்பிக்கை என்ற பெயரில் அடிக்கும் தற்பெருமை கூத்து.. சகிக்கல போங்க..
நீங்க சொன்ன மாதிரி.. அங்கே உக்காந்து கை தட்டி சிரிச்சின்னு இருந்தார்களே.. அவங்கள பார்த்தா தான்..
நெஞ்சு பொறுக்குதில்லையே..
மதுர தலைப்பில் ஒரு தவறு..
Deleteலூசா என்ற கேள்வியை எடுத்துவிட்டு லூசு என்று வைக்கவும்.
தலைப்பில் தவறு இல்லை நண்பரே லூசா என்று கேள்வி கேட்பது போல இருந்தால்தான் படிக்கிறாவர்கள் ஆமாம் அவர் லூசு என்று பதில் சொல்லுவார்கள் அதனால்தான் அப்படி வைத்தேன்
Deleteஏம்மா இவரை போய் ஐட்டம் டான்ஸ் ஆட சொல்லுவதற்கு பதிலாக ஒரு குரங்கை ஆட சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே
பேரில் பகவான் என்பதால் அவர் திருவாசகத்தை ஒரு வரியில் சொல்லி சென்று இருக்கிறார் நம்ம பகவான் ஜி
வர வர இவன் லூசா ? இல்லை லூசு ஆகிட்டானா ? அப்படினு புரியவில்லை
ReplyDeleteத.ம.2
ஒரு லூசு மேலும் லூசாகிவிட்டது அவ்வளவுதான் கில்லர்ஜி
Deleteஒருவேளை மேடை நாகரிகம் கருதி உடனிருந்தோர் வாளா விருந்தனரோ
ReplyDeleteஉங்களின் கருத்திற்கு பதிலை இந்த லிங்கில் போய் படியுங்கள் http://vishcornelius.blogspot.com/2017/09/i-mean-you-are-fine-gentleman.html
Deleteஅசிங்கம். எப்படி இப்படி நடந்து கொள்ள முடிகிறதோ... நாகரீகம் பற்றி இவர் பேசுவதும் வேடிக்கை.
ReplyDeleteஅவரின் பேச்சை கேட்டு கைதட்டுவதால்தான் அவர் அப்படி நாகரிகமில்லாமல் தான் பேசுவது எல்லாம் சரி என்று பேசுகிறார். அவரின் பேச்சிற்கு கைதட்டுவதற்கு பதிலாக அவரின் தலையில் இரண்டு தட்டு தட்டி இருந்தால் நாகரிகமாக பேச கற்றுக் கொண்டிருப்பார்
Deleteஅருகிலிருப்பவர்கள் சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்தால் படத்துக்கு ஏதும் மறைமுக விளம்பரமாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது.
ReplyDeleteஅப்படியும் இருக்கலாம் ஆனால் அப்படி இருந்தால் அது ஒரு மோசமான ஒரு முன்னுதாரணம்
Deleteஎக்ஸாக்டா எனக்கு தோன்றிய கருத்தை சொல்லி இருக்கீங்க
ReplyDeleteநியாமானவர்களுக்கு தோன்றும் எண்ணங்கள் உங்களுக்கும் எனக்கும் தோன்றி இருக்கிறது போல
Deleteஉண்மை. உங்களுக்கு வந்த கோபம் எனக்கும் வந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவே எழுத வைத்து விட்டது அவரது பேச்சு.
ReplyDeleteநியாமானவர்களுக்கு கோபம் வருவது இயல்பே... எது எப்படியோ அவரின் செயல் வலைப்பக்கம் எழுதாமல் இருந்த உங்களையும் எழுத வைத்துவிட்டதே
Deleteவீடியோவும் நியூஸுமே இப்பத்தான் உங்க பதிவு பார்த்துத்தான் தெரியும் மதுரை சகோ. அசிங்கம்....அநாகரீகம்! அப்பாவும் சரி பிள்ளையும் சரி சரியான லூசுங்கதான்...மேடையில் இருப்பவர்களின் ரியாக்ஷன் ச்சே என்று சொல்ல வைக்கிறது...
ReplyDeleteகீதா
பொதுவாக ஒரு பதிவு இடும் பொது அது சம்பந்தமான செய்திகளை சொல்லி அல்லது அதற்கான லிங்கை கொடுத்து பதில் எழுதுவது வழக்கம். அப்போதுதான் எதற்காக அந்த பதிவு என்ரு பலருக்கும் புரியும் அதனால்தான் அந்த வீடியோ இணைப்பு
Deleteவேடிக்கைப் பார்த்தவர்கள் கண்டிக்கத் தக்கவர்களே தங்கள் பதிவு நன்று
ReplyDeleteத ம 6
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்
Deleteஎப்போதே முழுக்குடும்பமும் லூசே
ReplyDeleteஉண்மைதான்
Deleteமேடை நாகரிகம் பேணுவது அவசியம்.
ReplyDeleteஉங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்
Deleteரொம்ப அசிங்கமா இருந்தது அவரின் செய்கை. அவர் பேசுகையில் அவ்வளவு எரிச்சல் வந்தது. தரங்கெட்ட மனுசன் மாதிரியான பாவனை. ச்சீ
ReplyDelete