Monday, September 18, 2017

எப்படிபட்ட பெண்னை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க வேண்டுமென்று உங்களுக்கு தெரியுமா ?


@avargal_unmaigal


@avargalunmaigal @avargal_unmaigal

கோபப்படும் போது அழகாக இருக்கும் பெண்களை உங்கள் வாழ்க்கை துணைவியாக தேர்ந்தெடுங்கள் ஏனென்றால் கல்யாணத்திற்கு அப்புறம் 90% அவங்களை கோப முகத்தோடதான் நாம் பார்க்க வேண்டியிருக்கும்..#அனுபவஸ்தன் சொன்னா கேட்டுக்கணும்



@avargal_unmaigal
உங்க மனைவி குண்டாக இருக்கிறார்கள் என்று கவலைப்பட வேண்டாம் அவர்கள்  குண்டாக இருப்பது நல்லதுதான் அவர்களால் வேகமாக ஒடி வர முடியாது எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவர்கள் இருப்பது நமக்கு தெரியும்


@avargal_unmaigal

  ஆண்களே கல்யாணத்திற்கு அப்புறம் நீங்கள் செய்யும் தவறுகளை ஞாபகத்தில் வைத்து கஷ்டப்பட வேண்டாம். அதையெல்லாம் உங்க மனைவி ,நீங்கள் சாகும் வரை ஞாபகத்தில் வைத்து கஷ்டப்படுவார்கள்.. நாம ஜாலியாக இருக்கலாம் # என்ன நான் சொல்லுறது சரிதானே



@avargal_unmaigal
ஒரு பெண் 90% உடம்பை காட்டிக் கொண்டு 10 சதவிகிதம் உடம்பை மறைத்து கொண்டு வந்தால் என்னைப் போல உள்ள ஆண்கள் வெளியே தெரியும் உடம்பை பார்க்காமல் ஆடையால் மறைத்த பகுதிகளை மட்டும் பார்ப்போம். ஏன்னா நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க... ஆனால் அதே நேரத்தில் பெண்கள் அதற்கு எதிர்மறை நிர்வாண பகுதியை பார்த்து பெருமூச்சுவிடுவார்கள் காரணம் இந்த மாதி¡¢ உடல் நமக்கு இல்லை என்று..# இப்ப சொல்லுங்க யாரு நல்லவங்க என்று



@avargal_unmaigal
அன்புடன்

மதுரைத்தமிழன்

டிஸ்கி : எப்ப பாரு அரசியல் பதிவா போடுறீங்க என்று சில பேர் கேட்டுக் கொண்டதால்  இந்த மாதிரி 'நல்ல' பதிவை வெளியிட்டு இருக்கிறேன். படிச்சு எஞ்சாய் பண்ணுங்க ......ஆனால் இதை என் மனைவியின் கண்ணில் மட்டும் காட்டிவிடாதீங்க

11 comments:

  1. மதுரைத் தமிழனின் தத்துவங்களும் ஆலோசனைகளுள் எல்லாக் காலத்துக்கும் பொருந்துபவை. இந்தக் கடிதம் உங்க மனைவுக்கு கிடைச்த்தான் என்ன? ஏதையும் எதிர்கொள்ளும் வீரம் மதுரைத் தமிழனுக்குத் தானே உண்டு.

    ReplyDelete
    Replies
    1. அனுபவம் என்பதால் எந்த காலத்திற்கும் மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்தும் ஹீஹீ

      Delete
  2. ஹா ஹா ஹா எப்பூடி இவ்ளோ கரீட்டாக் கண்டு பிடிச்சுச் சொல்லிட்டீங்க... நீங்க உண்மையிலேயே அனுபவஸ்தர் தான்.... இப்போ அனுபவத்தில் தெரியுதில்ல பெண்கள் எப்படிப்பட்டவர்கள் என:) தெரிந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபடாதீங்க:) சரண்டராகிடுங்கோ:)...

    ReplyDelete
    Replies
    1. இப்பாவது நான் அனுபவஸ்தன் என்பதை ஒத்து கொண்டீர்களே....ஹீஹீ இனிமே இந்த அனுபவஸ்தான் என்ன சொன்னாலும் தட்டாமல் கேட்கணுமாக்கும் குறுக்கு கேள்வி எல்லாம் கேட்கப்படாது

      Delete
  3. உங்கள் அனுபவமே உங்கள் ஆத்துமாமியிடமிருந்துதானே கிடைச்சிருக்கு... பின்ன என்ன பக்கத்து வீட்டாத்து மாமியிடமிருந்தோ?:) ஹா ஹா ஹா அதனால டிஸ்கி கரீட்டுத்தான்:)

    ReplyDelete
    Replies
    1. அனுபவம் மாமியிடம் இருந்தா அல்லது பக்கத்துவீட்டு அம்மணியிடம் இருந்தா என்று கேள்வி கேட்டு வாயை கிளறக் கூடாதும்மா

      Delete
  4. அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்

    ReplyDelete
  5. நீங்க இவ்வளவு நல்லவரா இருப்பீங்கன்னு இப்போதான் தெரியுது :)
    த ம 1

    ReplyDelete
  6. நல்லாவே அனுபவஸ்தர்னு தெரியுது...அதுவும் இப்படி போற வர பொண்னு ஃபோட்டோ போட்ட அனுபவம்...அந்தப் பொண்ணு ஓடி உங்க வீட்டு மாமிகிட்ட புகார் கொடுத்து..அங்க கொஞ்சம் பின்னாடி பாருங்க போஸ்ட் கார்டெல்லாம் யாருக்குப் போகனுமோ அவங்களுக்குப் போயி உங்களுக்காக வாசல்ல காத்திருக்காங்க பாருங்க வரவேற்க உலக்கையோட...

    துளசி, கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.