Thursday, September 28, 2017

@avargal unmaigal
காற்றில் பறக்கும் மோடியின் வாக்குறுதிகள்

மோடிமட்டுமல்ல அவரது வாக்குறுதிகளும் வானில்(காற்றில்) பறக்கின்றன.

தேர்தல் நேரத்தில் மோடியின்  வாக்குறுதிகளை பாஜக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு இருந்தது அதில் வாக்குறுதிகளை அள்ளி தெளித்தார்.... தமிழகத்தை தவிர மற்ற அனைத்து பகுதியிலும் வெற்றியும் பெற்று ஆட்சியிலும் அமர்ந்தார் ஐந்தாண்டு கால ஆட்சியில் மூன்று ஆண்டுகள் ஒடிவிட்டன...ஆனால் திட்டங்கள் என்னவோ காற்றில் கறைவது போல கரைந்து கொண்டு இருக்கின்றன

தேர்தல் நேரத்தில் அப்படி என்ன வாக்குறுதிகள் தந்தார் என்பதை அவர்களின் கட்சி தளமான இங்கே சென்று பார்க்கலாம்


2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியர்களின் மக்கள்தொகையில் 1.25 பில்லியனானர் 25 வயதில் இருந்து 30 வயதிற்குள் உள்ளனர்...அவர்களுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கியத்துவம் மிகைப்படுத்தப்பட முடியாதது. நாட்டில் ஆண்டுக்கு  ஒரு கோடி வேலைவாய்ப்புகள் (ஒரு தேர்தல் பேரணியில்)உருவாக்குவதாக மோடி வாக்குறுதி அளித்திருந்தாலும், பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் மிக  மோசமாக தவறிவிட்டது என்று சொல்லலாம்.2013-14ஆம் ஆண்டில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேலைவாய்ப்பு விகிதத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் மோடி அரசாங்கம் படுபயங்கரமாக் தோல்வியுற்று இருக்கிறது.

ஜூலை 2014 மற்றும் டிசம்பர் 2016 க்கு இடையில் இந்திய பொருளாதாரம் எட்டு முக்கிய துறைகளில் (உற்பத்தி, வர்த்தகம், கட்டுமானம், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, மற்றும் விடுதி மற்றும் உணவகம்) 6.41 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதை நான் சொல்லவில்லை  கவர்மெண்ட் ஆப் இண்டியா மினிஸ்டரி ஆப் லேபர் & எம்பளாய்மெண்ட் தெரிவிக்கிறது .  http://labourbureaunew.gov.in/UserContent/Report_QES_4th_Round_F.pdf அதோடு ஒப்பிடுகையில்.ஜூலை 2011 மற்றும் டிசம்பர் 2013 இடையே அதே துறைகளில்  12.8 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன .இதில்ருந்தே தெரிகிறது மோடியின் வாக்குகள் வெற்று வெட்டு என்று.



அடுத்தாக கல்விதுறையை பார்ப்போம்


2014 பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக பி.ஜே.பி யின் அறிக்கையில் முக்கியமாக இளைஞர்களுக்கான கல்வி மற்றும் திறன் மேம்பாடு இடம்பெற்றது. மோடி அரசாங்கம், 21-வது நூற்றாண்டில் வேலைவாய்ப்புத் திறனுக்கான வேலைத் திறன்களைப் பெறுவதற்கு உதவுவதில், Skill India போன்ற  முக்கிய திட்டங்களைப் பற்றி தண்டோரா அடிக்காத குறையாக அடித்து  சொல்லி வந்ததது.


அப்படி இருப்பினும், பாஜக  அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து கல்வி செலவினங்கள் சீராக சரிந்து வருகின்றன, இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் வரை 2017-18 கல்வியில் மொத்த செலவில் 3.71% செலவிட திட்டமிட்டுள்ளது. 2013-14ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் இந்த  கல்வி செலவினம் 4.57%  இருந்தது



கட்டப்பட்ட கழிப்பறைகளின் எண்ணிக்கை

மோடி அரசாங்கத்தின் மற்றொரு முக்கிய திட்டம், ஸ்வாக் பாரத், அந்த திட்டமும் படுமோசமாகவே அவரது ஆட்சியில் செயல்படுகிறது . 2015-ம் ஆண்டு இந்தியாவின் செலவின அறிக்கையின் படி, 2008-ல்  இருந்து 2011 வரை ஆண்டுக்கு ஒரு கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டன,  அதோடு ஒப்பிடுகையில் 2015 லிருந்து 2016ல் நாடு முழுவதும் 80 லட்சம் கழிப்பறைகள்மட்டுமே  கட்டப்பட்டுள்ளன.



Source: Lok Sabha 1, 2, 3, 4; *according to 2014-15 government report card

2015-16 ஆம் ஆண்டில் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (NSSO) நடத்திய ஆய்வில், சுவாசி பாரத் அபியனுக்கு(Swachh Bharat Abhiyaan )கீழ் கட்டப்பட்ட ஒவ்வொரு பத்து கழிப்பறைகளில் 6 கழிப்பரைகளில்  தண்ணீர் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது



ஜவுளித்துறையும் படுமோசமாக சென்ரு கொண்டிருக்கிறது

பா.ஜ.க. தேர்தல் தேர்தல் அறிக்கையின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக, ஜவுளித் துறையின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது  100 மில்லியன் தொழிலாளர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றும் உழைக்கும் தீவிர தொழில்துறை அது 2015-16ல் பொருளாதாரத்தில் 40 பில்லியன் டாலர் பங்களிப்பை அளித்துள்ளது.

demonetisation செயல்பாடு களின் காரணமாக  ஜவுளித்துறை தடுமாறி ஏற்றுமதியும் பாதித்துள்ளது விலைகள் அதிகரித்ததினால் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.demonetisation செயல்பாடு களின் காரணமாக , 2016-17ல் வருவாய் பெருமளவில் குறைந்தது. 2016-17 ஆண்டிற்கு அரசாங்கம் 45 பில்லியன் டாலர் இலக்கு வைத்துள்ள நிலையில், அது 38.6 பில்லியன் டாலர் சம்பாதிக்க முடிந்தது இருக்கிறது.  


லோக்பால் திறம்பட அமைப்பது" பி.ஜே.பி அளித்த வாக்குறுதிகளில் ஒன்றாகும். மூன்று ஆண்டுகளுக்குப் முன் 2013 டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்த மோடி அரசாங்கம் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை.


பா.ஜ.க. அறிக்கையில் இந்திய மக்கள்  "அமைதியான மற்றும் பாதுகாப்பாக  வாழ சூழலை ஏற்படுத்தப் போவதாக வாக்கு அளித்திருந்தது  ஆனால் நடப்பதென்னவோ அதற்கு நேர்மாறகத்தான் இருக்கிறது , மக்களை அச்சுறுத்தும் love jihad to gau goons to lynching to anti-Romeo என்று பட்டியல்கள் தொடர்கின்றன


மனித உரிமைகள் குழுவான   அம்னஸ்டி இன்டர்நேஷனல்  2016-17 வருடாந்த அறிக்கையில்  மோடி அரசாங்கத்தின் கீழ் தலித்துகளுக்கு எதிரான மாடுவெறியர்கள், வகுப்புவாத மற்றும் சாதி அடிப்படையிலான வன்முறைகளால் அதிக அளவில் நிகழ்கின்றன சுட்டிக் காட்டப்படுகின்றன.ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி,  Scheduled Castes எதிரான 45,000 க்கும் அதிகமான குற்றங்கள் மற்றும் Scheduled Tribes எதிராக கிட்டத்தட்ட 11,000 குற்றங்கள் நிகழ்த்தப்படு இருக்கின்றது என்று 2015 ல் அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது


கருப்புபணம்

கருப்புபணத்தை கைப்பற்றி ஒவ்வொரு குடிமகனுக்கும் 15 லட்சம் தருவதாக சொன்ன வாக்குறுதியும் குழி தோண்டி புதைத்துவிட்டது மோடி அரசு.  குடிமக்கள் RTI application மூலம் தங்களுக்கு தருவதாக சொன்ன 15 லட்ட்சம் எப்போது கிடைக்கும் என்று பிரதம மந்திரி அலுவலகத்தில்  கேட்டும் இதுவரை பதில் இல்லை


நாட்டை முன்னேற்றப் போவதாக சொல்லிய மோடி அவர் கொண்டு வந்த திட்டங்களினால் பொருளாதாரம் பின் தங்க ஆரம்பித்து சரிவை நோக்கி போய்க் கொண்டிருப்பதாக அவரது கட்சியின் முக்கிய தலைவர்களே பேச ஆரம்பித்து இருக்கின்றனர். ஆனாலும் இன்னும் பல தேச பக்தாஸ்க்கள் மோடிக்கு இன்னும் சொம்பு தூக்கி கொண்டிருக்கிறார்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்


இன்னும் பலவற்றை சொல்லிக் கொண்டே போனால் பதிவு மிகவும் நீண்டு விடும் என்பதால் இதோடு நிறுத்தி கொள்கிறேன்..



14 comments:

  1. இன்னாது ஜவுளி துறை மோசமான நிலையா? அந்த யேல் பல்கலைகழகத்தில் ஒரே வாரத்தில் டிகிரி வாங்கினங்களே... அந்த அம்மணி.. அவங்க ரொம்ப சமத்துன்னு சொன்னாங்க..

    BTW ... நீங்க Anti இந்தியனா?

    ReplyDelete
    Replies
    1. யோவ் உங்கள் அபிமானி அம்மனியை விட மாட்டீங்க போலிருக்கே ஹீஹீ

      Delete
  2. தேர்தல் வாக்குறுதின்னாலே அது காப்பாத்தக்கூடாதுன்னு எழுதப்படாத விதி இருக்கு

    ReplyDelete
  3. இதைதான் புதிய இந்தியா பிறந்து விட்டது என்று சொல்கிறார்களா :)

    ReplyDelete
  4. இந்தியாவில் தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவார்கள் என்று நம்பும் அளவுக்குக் குழந்தையாய் இருக்கிறீர்களே மதுரை!

    ReplyDelete
    Replies
    1. குடிகாரணின் பேச்சும் அரசியல் வாதிகளின் வாக்குறுதியும் ஒன்றாகிவிட்டது போல

      Delete
  5. சொன்னது சில இன்னும் சொல்ல வேண்டியது பல!த ம 3

    ReplyDelete
    Replies
    1. பதிவு மிகவும் நீண்டு விடும் என்பதால் சொல்லவில்லை

      Delete
  6. இந்தியாவின் எகானமி உலகில் சிறந்திருக்கிறது இல்லை படுமோசமாய் இருக்கிறது இரு தரப்பினரும் கூறும் வாதங்களை எப்படி நம்புவது சாமான்யன் குழம்புகிறான் எல்லாமே ஒரு பெர்செப்ஷன் தானோ

    ReplyDelete
    Replies
    1. வாதம் என்றாலே இரண்டு தரப்பட்ட வாதங்கள்தான் ஆனால் அதில் இருந்து உண்மை எது என்பதை நாம் அறிந்து கொள்ளலாமே

      Delete
  7. வாக்குறுதி என்பது வாக்கு பெறும் வரை தான் !

    ReplyDelete
    Replies
    1. மிக எளிமையாக விளக்கிவிட்டீர்கள் ஐ லைக் ட்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.