Saturday, September 2, 2017

தர மற்ற கல்வி முறையால் தான் விரும்பிய படிப்பை படிக்க முடியாததாலும் கேவலமான தரங்கெட்ட தலைவர்களாலும்தான் இது மாதிரி சாவுகள் நிகழ்கின்றன அது மாறாதவரையில் இப்படிப்பட்ட சாவுகள் தொடரத்தான் செய்யும்


அனிதாவிற்கு அஞ்ச்லி செலுத்துவதை தவிர இப்போது வேறு ஏதும் என்னால்   சொல்ல இயலாத நிலையில் இருக்கிறேன்

அனிதாவின் ஆத்மா சாந்தியடையட்டும்

ப்ளஸ்டூவில் அதிக  மதிப்பெண் எடுத்த பெண் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாமல் தோல்வி அடைந்திருக்கிறாள் என்றால் ஒன்று பள்ஸ்டு கல்வி முறை தவறாக இருந்திருக்க வேண்டும் அல்லது ப்ள்ஸ்டூவில் கற்று கொடுக்கப்பட்ட கல்வி முறைக்கு ஏற்றவாறு நீட் தேர்வு வடிவமைக்கப்பட்ட முறை சரியில்லாமல் இருந்திருக்க வேண்டும். இதற்கு முக்கிய காரணம் கல்வி திட்டத்தை வடிவமைத்தவர்களும் அதற்கு உறுதுணையாக இருக்கும் தலைவர்களும்தான் பொறுப்பாக இருக்க முடியுமே தவிர இந்த பெண் இருக்க முடியாது..


இப்படி நம்மால் தரங்க்கெட்ட தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்ப்பட்டால் இப்படிதான் நடக்கும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments:

  1. வடிவமைத்த தலைவர்கள், அரசுகளோடு சொல்வதற்கு வேறொன்றும் இருக்கிறது. ஒரு தன்னம்பிக்கை இல்லாத இளைய சமுதாயம் உருவாகிக் கொண்டிருப்பது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. மருத்துவப்படிப்பு மட்டும்தான் வாழ்க்கையா? அவரை இழந்து வாடும் அவரது உறவினர்களை நினைத்தால் கண்ணீர் வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் நாங்கள் சொல்ல வந்தக் கருத்தை இங்கு சொல்லிவிட்டீர்கள்! வழி மொழிகிறோம்....நிச்சயமாக மன உறுதி வேண்டும். கல்வி முறை தவறான முறைதான். அப்படியென்றால் மருத்துவக் கனவு கண்டு அது நிறைவேறாத எல்லா மாணவ மாணவிகளும் தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டுமே! தற்கொலை என்பதே தவறு! பெற்றோர்களும் இதற்குக் காரணம் என்பேன். அக்குழந்தைக்கு நல்ல மன உறுதி அளித்து மனம் விட்டுப் பேசி அவளை ஊக்கப்படுத்தியிருக்கலாம். வாழ நினைத்தால் வாழலாம். பள்ளி மற்றும் பெற்றோர் கவுன்சலிங்க் மிக மிக அவசியம்.

      Delete
  2. நானும் உங்களோடு எனது கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன். நாடு வல்லரசாக ஆகுமோ என்னவோ, ஆட்சியாளர்கள் வல் ஆட்சியாளர்களாக மாறி விட்டனர்.

    ReplyDelete
  3. கல்விமுறை மிகவும் மோசமாகவே போய்க்கொண்டிருக்கிறதே அங்கு.. கெட்டித்தனம் இருந்தாலும் பணம் இல்லையெனில் எதுவும் நடக்காது எனும் நிலைமை வந்துகொண்டிருக்கு..

    இருப்பினும் இப்படி அறிவுடைய பிள்ளைகளுக்கு எப்படி இவ்வாறு முடிவெடுக்கும் எண்ணம் வருகிறது.. படிச்சும் அறிவில்லாமல் போச்சே இந்தப் பிள்ளைக்கு...:(.

    ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  4. இப்போதான் நியூஸ் படித்தேன் ..மிகவும் வேதனையான விஷயம் ..மாணவர்களை மன ரீதியாக தயார்படுத்தட்டும் ஆசிரியட்களும் பெற்றோரும் ..பிறகு என்ன மேற்படிப்புன்னு முடிவு செய்யலாமே ..
    மெடிசின் இன்ஜினீரிங் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதையும் உணர்த்தவேண்டும் பிள்ளைகளுக்கு :(
    இதில் பெரியவர்களை தான் குற்றம் சொல்லணும் மார்க் சீட் வந்ததும் டாக்டர் ஆகத்தான் போகிறாய் என்று ஆசையை விதைத்து விடுகிறார்கள் :(

    ஆழ்ந்த அஞ்சலிகள் அந்த மலருக்கு :(

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சலின் உங்கள் கருத்தை அப்படியே வழி மொழிகிறோம். நாங்கள் சொல்ல வந்ததை ஸ்ரீராம், நீங்கள் அதிரா சொல்லிவிட்டீர்கள்! மீடியா நிச்சயமாக இதற்குக் காரணம். அதைப் போட்டு போட்டு உணர்ச்சிகளைத் தூண்டுவது கேவலம். கேரளத்திலும் நீட் தேர்விற்கு எதிர்ப்பு இருந்தாலும் தமிழ்நாடு அளவிற்கு அரசியலாக்கபப்டுவதில்லை...

      தற்கொலை செய்து கொள்பவர்களை ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது!

      Delete
  5. தற்செயலாக அப்பெண்ணின் காணொளி இப்போ பார்த்தேன் :( ..இந்த அளவுக்கு ஸ்ட்ரெஸ் வர தூண்டியது யார்? அவளுக்கு ..ஆறுதல் சொல்ல ஒருவர் கூட இல்லையா பிள்ளைகளுக்கு அவர்கள் தடுமாறும்போது .
    ரொம்ப வேதனையா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. என்னம்மோ தெரில :( இந்த மீடியாக்கள் வேற அந்த குழந்தை வீடியொல்லாம் போட்டு சே :( நம்மெல்லார் கையிலும் பாவத்தின் கறை ஒட்டினாற்போலிருக்கு ..எல்லாத்துக்கும் தலையாட்டி பொம்மைகளாகவோ அல்லது நமக்கேன் வம்புன்னு ஒதுங்குவதாலோ தானே இந்த பிள்ளைக்கு இப்டியாச்சு :(

      Delete
  6. அறமற்ற அரசியல் வாரிக் குடித்ததே எம் மகளின் உயிரை. அவர்கள்
    வருந்த வேண்டாம். அறிந்து உணர்ந்து
    திருந்த வேண்டும்.

    ReplyDelete
  7. மதுரை சகோ இதற்கு என்னால் பல கருத்துகளை முன் வைக்க முடியும். எங்கள் வீடு கல்வி சார்ந்தது. அதாவது வீட்டு உறுப்பினர்கள் பலர். என் மகனின் கற்றல் குறைபாட்டிற்காக நான் எஜுகேஷனல் சைக்காலஜி புத்தகங்கள் பல வாசித்திருக்கிறேன். இதைப் பற்றி அதிகம் பேசுவதால் இந்தத் தற்கொலையை நியாயப்படுத்துவதாக எனக்குத் தெரிகிறது... கல்வி மிகவும் தாழ்ந்த தரத்தில் போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் எழுத நினைத்தேன்...வேண்டாம் என்று இங்கு முடித்துக் கொள்கிறேன். என்னால் இதைக் குறித்தும், நீட் தேர்வு குறித்தும் எழுத முடியும். ஆனால் எழுதவில்லை. எழுத விரும்பவும் இல்லை. ஏனென்றால் எழுதினால் முத்திரை குத்தப்படுவேன்.

    கீதா

    ReplyDelete
  8. அகம் டிரஸ்டில் ஆரம்பித்து , எத்தனையோ நல்லவர்கள் - படிப்பதற்கு ஆர்வம் இருந்தால் போதும் எங்களிடம் வாருங்கள் , நாங்கள் படிக்க வைக்கறோம் என்று நிறைய செய்திகள் வந்தது , பலவற்றில் உண்மையும் இருந்தது . இவ்வளவு தனியார் கல்லூரிகளில் , அவர்களின் தனி கோட்டாவில் ஒரு இடம் கூடவா இல்லாமல் போய் விட்டது . யாரும் அவர்களை கேள்வி கூட கேட்கவில்லையே .

    முக்கியமாக , இந்த மார்க்குகள் , அட்மிஷன் ..எல்லாம் ஓரளவுக்கு முக்கியம் , அதாவது படிக்கற காலத்தில் கதை, சினிமா , டிராமா , அது இதுன்னு இல்லாம படிப்பில் கவனம் செலுத்துவது முக்கியம் . அது மாதிரி தான் இந்த மாணவியும் நன்கு படித்து நல்ல மார்க்ஸ் வாங்கி இருக்கிறார். ஆனால் அவரால் , இந்த நீட் தேர்வில் அத்தனை மார்க் வாங்க இயலவில்லை . அந்த தோல்வியை பெரிதாக எடுத்து கொள்ளாமல் , வேறு எந்த படிப்பானாலும் சேர்ந்து , முயற்சி செய்யும் பொழுது , இந்த மருத்துவர் படிப்பு படிக்காமல் போனது கூட நல்லது என முடிவு செய்ய கூடும் . ஏனென்றால் , MBBS நான்கு வருடம் , பின் ஹவுஸ் ட்ரைனிங் , அதற்க்கு பின் MD ( சாதா MBBS க்கு மதிப்பு இல்லை ) ..கிட்ட தட்ட இது எல்லாம் முடிக்க நிறைய காலம் வேண்டும் , பணமும் வேண்டும் .

    இப்படி உயிரை எடுத்து கொள்வது ஏற்புடையதே இல்லை .

    நீட் (தேர்வு முறையை ) அறிமுக படுத்தியது UPA சர்க்கார் . DMK அதிலில் ஒரு முக்கிய அங்கம் . பின் சுப்ரீம் கோர்ட் மிக கடுமையாக இதை அமல்படுத்த இப்போ உள்ள அரசாங்கத்தை வற்புறுத்தியது . நளினி சிதம்பரம் தான் எதிர் தரப்பில் வாதாடினார் .

    இப்போ நடந்த தேர்வில் நிஜமாகவே எதனை கிராம புற மாணவர்கள் சேர்ந்தார்கள் , ( முன்பு எத்தனை )..போன்ற புள்ளி விவரங்கள் வெளியிடலாம் , இணை அவர்களை தயார் செய்ய எப்படி பட்ட கோச்சிங் தேவை என்று ஆராய்ந்து , ஏற்பாடு செய்யலாம் , நல்ல மனமுள்ளவர்கள் இந்த கோச்சிங் புக்ஸ் மற்றும் சாப்ட்வேர் ஸ்பான்சர் செய்யலாம் . பணக்காரர்கள் என்ன தான் தங்கள் பிள்ளைகளை கோச்சிங் அனுப்பினாலும் , ஏழை குழந்தைகள் , தனக்கு நல்ல வாய்ப்பும் , புஸ்தகங்களும் . ஆசிரியர்களும் கிடைத்தால் நன்றாக பிரகாசிப்பார்கள் . சரஸ்வதி கடாட்சம் எப்போதுமே ஏழைகளுக்கு உண்டு ,

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.