Thursday, September 7, 2017

அனிதாவின் சாவும் அம்பியின் சாபமும்


அம்பி என்னடா படிக்கிறே?


மாமி நான் திராவிட நாடும் தேசிய இன விடுதலையும் படிச்சுண்டு இருக்கேன்


அம்பி இந்த காலத்துல அவா அவா மகாபாரதம் படிச்சுண்டு அதில் வர அபிமன்யு வதம் பீமன் வதம கர்ணன் வதம் என்று  இந்த காலத்துல எல்லோரையும் வதம் பண்ணிண்டு இருக்காள் நீ என்னடான்னா இன்னும் திராவிடம் அது  இதுன்னு ஒன்றுக்கும் உதவாததை படிச்சுண்டு இருக்கிறாய்


நோக்கு தெரியுமோ திராவிடம் பேசிண்டு இருந்த ஒருத்தர் கடைசி காலத்துல ராமானுஜர் பற்றி எழுதிண்டு இருந்தா அவாளே அப்படி ஆயிட்டா  சரி அது இப்போ எதுக்கு  நாம்மாத்து விஷயத்துக்கு வருவோம்


நோக்கு தெரியுமே  நம்மாத்து அனிதாவை  சாகடிச்சுட்டான்னு  .....சாகடிச்சாவாளை கண்டு பிடிச்சு துவேஷம் பண்ணாமல் இப்படி அமைதியா இருந்தா எப்படி அம்மி

மாமி அவாள் எல்லாம் அக்கிரமம் அநியாயம் பண்ணிண்டு இருக்காள் அவாளை எல்லாம் அந்த பகவான் ஒரு நாள் வந்து அழிச்சு ஒழிப்பார் மாமி பார்த்துண்டே இருங்கோ அவாள் எல்லாம் கழிச்சாலே போவாள் பகவான் துஷ்டாளை எல்லாம் ஒன்றுமில்லாமல் பண்ணிடுவாள் பாருங்களேன்

அம்பி இப்படி அப்பாவியா இருந்தா இந்த காலத்துல ஒன்னும் நடக்காதுடா போய் அந்த அக்கிரமகாரர்களை ஒரு வழி பண்ணிண்டு வாடா


சரி மாமி நீங்க சொல்லிட்டேள் அதுனால நான்  நம்ம சீனு மாமா பையன் கோபு மாமா பையன் மேலும் இரண்டு பேரை கூப்பிட்டு காவேரிக்கரையோராம போய் நின்று அந்த அக்கிரமகாரர்களை நன்னா சபிச்சுண்டு வந்துடுறேன் மாமி


அதன் பின் பகவான் எல்லாவாற்ரையும் பார்த்துகுவான் மாமி

----------------------------------------------------------------------------------------



ஐ ரியலி மிஸ்ஸிங் கலைஞர்

@avargalUnmaigal

தேர்தல் நேரம் வந்துவிட்டால் போதும் அல்லது போராட்டாம் என்று வந்துவிட்டால் போது அந்த காலத்தில்  தமிழகத்தின் மூலை முடுக்குகளில், பட்டி தொட்டிகளில்,  ஒலிபெருக்கிகளில் திமுகவின் கொள்கை முழக்கப் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கி விடும் தி.மு.கழக மேடைகளில் கட்டாயம் சிம்மக்குரலோன் நாகூர் ஹனீபாவின் வெண்கலத் தொனி முழக்கம் அதிரடியாய் முழங்கும். அதிலும் மிக முக்கியமாக ஒரு பாடல்; அது ஒலிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியை போற்றி புகழக்கூடிய பாடல் அது. அந்த பாடலைக் கேட்டு விட்டு ழகத் தொண்டர்கள் நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கேற, உடன்பிறப்புகள் ஓடிஓடி போஸ்டர் ஒட்டுவார்கள்; தோரணம் கட்டுவார்கள்; தேர்தல் பிரச்சாரத்தில் அல்லது போராட்டத்தில் ஊன் உறக்கம் மறப்பார்கள்.அடிவாங்குவார்கள் சிறைசெல்வார்கள்

அதுமட்டுமல்ல ஒடி வருகிறான் உதய சூரியன் என்ற பாடலும் முழங்காத நாளும் இல்லை எனலாம்... ஆனால் இப்போதோ உதய சூரியன் காவிகளை கண்டு ஒடி ஒழிகிறான்


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. அம்பியை எங்கோ பார்த்த மாதிரியிருக்கே :)

    ReplyDelete
    Replies

    1. எனக்கும்தான் இந்த அம்பியை எங்கோ பார்த்தமாதிரி ஞாபகம் ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை

      Delete
  2. ஊரில் பலபேர் அம்பி மாதிரிதான் இருக்கிறார்கள்
    சாபமிட்டுக் கொண்டு

    ReplyDelete
    Replies
    1. இவர்கள் அந்த கால அம்பிகளாக இருக்கிறார்கள்.... இந்த கால அம்பிகள் சாபமிடுவதில்லை புத்திசாலியாக களத்தில் இறங்கி விளையாடுகிறார்கள்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.