Monday, September 4, 2017

@avargalunmaigal
நிர்மலா சீத்தாராமன் பாதுகாப்பு அமைச்சராகியும் தமிழகத்தில் இருந்து ஒருவரும் அவரை வாழ்த்தி பாராட்டதது
 ஏன்?

மத்திய அமைச்சரவை மாற்றத்தில், , மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராணுவ அமைச்சர் பதவி, தமிழகத்தின் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திராவுக்கு பின், ராணுவ அமைச்சராகும் பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.அப்படிபட்ட பெருமை அவருக்கு கிடைத்த போதிலும் அவருக்கு பாராட்டுக்கள் ஒருவரும் சொல்லவில்லை ஏன் இந்த பதிவு எழுதும் வரை அவர் கட்சியை சார்ந்தவர்கள் கூட வாழ்த்து சொல்லவில்லை..அப்படி ஏன் சொல்லவில்லை என்று பார்த்து கொண்டிருந்த போது ஒரு முகநூல் பதிவு கண்ணில் தென்பட்டது. அந்த் ஒரு பதிவில்தான் நிர்மலா சீதாராமனின் ஊரை சேர்ந்தவர் அவருக்கு வாழ்த்து சொல்லி தமிழர்களை ஜாதி வெறியர்கள் என்று சொல்லி சென்று இருக்கிறார். இங்கு அவர் முகனூலில் பகிர்ந்த பதிவை கிழே தந்து அதற்கு என் மனதில் பட்ட கருத்துக்களை சிவப்பு எழுத்தில் சொல்லி இருக்கிறேன். அவர் சொன்ன கருத்துகள் கருப்பு எழுத்தில் உள்ளவை...


இதை படித்து உங்களுக்கு மனதில் ஏதாவது தோன்றினால் அதை கிழே பதிவு செய்யுங்கள் நன்றி



தமிழ் நாட்டில் ஜாதி வெறியோ துவேஷமோ இல்லை. தமிழர்கள் அந்தச் சாக்கடையை விட்டெல்லாம் வெளியே வந்து விட்டார்கள் என்று நான் மிகவும் பெருமையாக நினைத்துக்கொண்டிருந்தேன் இன்று வரை. ஆனால் தமிழனின் ரத்தத்தில் ஜாதி வெறி எவ்வளவு தூரம் புரையோடிப்போயிருக்கிறதென்று இன்றுதான் அறிந்து கொண்டேன்.

///நிச்சயம் இதை எழுதியவர் கோமாவில் இருந்துதான் மீண்டு வெளி வந்திருக்க வேண்டும்//

தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், மதுரைக்காரப் பெண் திருச்சி சீதாலட்சுமி ராமசாமி மகளிர் கல்லூரியில் படித்த நம்ம ஊர்ப் பெண் முதல் முறையாக இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சராக ஆகியிருக்கிறார். இதற்கு முன்பு எந்த ஒரு தமிழருக்கும் கிடைக்காத கெளரவம் இது. கேபினட் அமைச்சர்களில் நான்காவது இடம் இது உள்துறை, நிதி, வெளியுறவுத் துறை, பாதுகாப்பு என பிரதமருக்கு அடுத்த படியாக நான்காவது இடத்தில் வைத்து மதிக்கப்படும் மத்திய அமைச்சரவைப் பதவி.

ஆனால் முகநூலில் ஒரு வாழ்த்துச் செய்தியில்லை வரவேற்று ஒரு பதிவில்லை.

///மிக மிக உண்மை தமிழர் மாற்றுகட்சியை சேர்ந்தராக இருந்தாலும் தமிழராக இருப்பதால் சில பேராவது வாழ்த்து சொல்லி இருப்பார்கள்  என்று பார்த்தால் ஒருவரும் வாழ்த்து சொல்லவில்லை ஏன் தமிழகத்தில் வாழும் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கூட வாழ்த்து சொன்னதாக ஒரு சிறு செய்தி கூட என் கண்ணில் இந்த பதிவு எழுதும் வரை படவே இல்லை.//

ஏன் என்று யோசித்துப் பார்த்தேன்.

அவர் பிராமணப் பெண் என்பதால் ஏற்பட்ட துவேஷமா?
///நிச்சயம் இல்லை.....பிராமணர் ஒருவர்தான் கடந்த ஆண்டு இறுதிவரை அதாவது சாகும் வரை தமிழக முதல்வராக இருந்து ஆட்சி செய்து வந்தார் அதுமட்டுமல்லாமல் அனைவரி பாராட்டுதலை பெற்றும் ஆட்சி புரிந்துதான் வந்து இருக்கிறார் அனிதாவின் மரணத்தின் போது கூட ஜெயலலிதா என்ற தைரியமான பிராமணப் பெண் இருந்திருந்தால் நீட்டுக்கு தமிழகத்தில் இடம் இருந்திருக்காது என்றுதான் நடுநிலையாளர்கள் பேசி கொண்டிருக்கிறார்கள் அதனால் நல்லது செய்தால் பிராமனர் என்ற துவேஷம் இங்கு தமிழகத்தில் இல்லை///

இல்லை பாஜக மீதுள்ள துவேஷத்தால் அவரை வாழ்த்தி யாரும் பதிவு போடவில்லையா?

//பாஜக மீது மக்களுக்கு துவேஷம் நிச்சயம் இல்லை///

என்ன காரணம்?

//நிச்சயம் மோடியும் அமித்ஷாவும்தான் காரணம் இந்த அயோக்கியர்களால் ஒரு பெண் தேர்தெடுக்கப்பட்டு பதவி வகிக்கும் போது அந்த பெண்ணின் குணமும் இங்கே சந்தேகத்திற்குரியதாக ஆவதால் அவருக்கு சிறிதளவு பாராட்டுக் கூட இல்லை.ஒரு வேளை பிரதமர் வாஜ்பாயாக இருந்து அவர் தேர்ந்தெடுத்து இருந்தால் நிச்சயம் பாராட்டு மற்றும் வாழ்த்து மழையில் நனைந்து இருப்பார் என்பது நிச்சயம்


பாஜக கட்சியில் இல்லாமல் தனியாக நின்று இருந்தாலும் பொன்.இராதா அவர் தொகுதியில் எளிதாக ஜெயித்து வரக் கூடியவர் அதுமட்டுமல்ல அந்த தொகுதிக்கு நல்லதும் செய்து இருக்கிறார் அவருக்கு துணை அமைச்சர் பதவிதான் கொடுத்து கெளரவித்திருக்கிரது ஆனால் அதே நேரத்தில் எந்த வித தேர்தலிலும் நிக்காமல் இவர் தமிழாரா என்று கூட தமிழக மக்களுக்கு கொஞ்சம் கூட தெரியாதவர் ஏன் அறிமுகம் கூடாத ஒருவருக்கு நாட்டின் நான்காவது பெரிய அமைச்சர் பதவி கிடைடித்திருக்கிறது என்றால் அது அவருக்கு எப்படி கிடைத்திருக்கிறது  எதற்காக கிடைத்திருக்கிறது என்ற கேள்வியெல்லாம் எழுகிறது அப்படி ஒரு சந்தேகம் எழுவதால்தான் ஒருவரும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.//



தமிழன் எப்போது இவ்வளவு கேவலமான ஜாதிய உணர்வுக்கும் துவேஷத்துக்கும் அடிமையாகிப் போனான்?

என்ன கேவலமான மனோபாவம் இது?

////தமிழன் தகுதியான ஒருவருக்கு பதவி கிடைத்திருந்தால் தலை வணங்கி வாழ்த்து தெரிவித்து இருப்பான் ஆனால் அவனை பொருத்தவரை நிர்மலா சீதாராமன் அந்த பதவிக்கு தகுதி இல்லாதவராகவே காட்சி அளிக்கிறார் தமிழர் மீது ஜெயலலிதா விற்கு இருந்த பற்றுக் கூட இவருக்கு துளி அளவும் கிடையாது . தகுதியாவனர்களுக்கு  உரிய  மரியாதையை தமிழர்கள் என்றும் தருவர்கள்.//

எது எப்படியாகினும் பரவாயில்லை. யார் வாழ்த்தினாலும் வாழ்த்தா விட்டாலும் பரவாயில்லை.

எங்க ஊர்ப் பொண்ணு அமைச்சராகியிருக்கிறார்.
///அவர் எங்கள் ஊர் பொண்ணுதான்///

வாழ்த்துக்கள் மேடம்.

//அவருக்கு வாழ்த்துக்கள் இப்போது சொல்ல விரும்பவில்லை... ஆனால் உயர்ந்த பதவியை பெற்ற அவர் நிச்சயம் தமிழகத்திற்கு உண்மையாகவே நல்லது செய்தார் என்ற செய்தி மட்டும்  என் காதில் விழுந்தால் நிச்சயம் அவரை வணங்கி வாழ்த்துவேன்///


மூன்றே ஆண்டுகளுக்குள் கேபினட் அமைச்சராகியிருக்கிறீர்கள். அதுவும் நான்காவது இடத்தில்

//மதுரையில் பிறந்தவர் நிர்மலா சீதாராமன், 58. திருச்சி சீதாலட்சுமி கல்லுாரியில் பி.ஏ., படித் தார், டில்லி ஜவஹர்லால் நேரு பல் கலையில் எம்.ஏ., (பொருளாதாரம்) பயின்றார். பா.ஜ., செய்தித் தொடர்பாளராக இருந்தார். 2014ல் வர்த்தகத் துறை இணை அமைச்சரானார்.


தமிழராக இருந்தாலும் தமிழகத்தில் சிறிதும் செல்வாக்கு இல்லாததால் 2016ல் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி. ஆனார். தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையை பெற்றார். இந்த துறையை மறைந்த பிரதமர் இந்திரா கூடுதல் பொறுப்பாக மட்டுமே கவனித்தார்.

அன்புடன்
மதுரைத்தமிழன்



10 comments:

  1. பதவியில் அவரது பணியாற்றல் நிலையைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  2. மக்கள் நலமில்லா மாமியை வாழ்த்த எம் தமிழை இனி தட்டச்சிடாதே.

    ReplyDelete
  3. ட்றுத்.. தலைப்பிலே எழுத்துப்பிழை வந்திருக்குது.. டக்கெனப்பார்க்கும்போது பாராட்டாதது என்பதுபோல வாசிக்க வைக்குது.. கவனிக்கவும்... இப்படிக்கு “தமிழைப் பாதுகாக்கும் சங்கத் தலைவி”:).

    ReplyDelete
  4. தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து இந்தாண்டு விலக்கு அளிக்கப் படும் என்று நம்ப வைத்து கழுத்தை அறுத்தவருக்கு பதவி உயர்வு என்றால் ,யார் பாராட்டுவார்கள் :)

    ReplyDelete
  5. தமிழர் என்ற பெருமையுடன் என்னுடைய வாழ்த்துக்களை அவருக்கு தயவாக தெரிவியுங்கள்.

    யார் எந்த பதவியை வகித்தாலும் உண்மையாக நேர்மையாக நடந்துகொண்டால் போதும்.
    தமிழகத்திற்கென்றோ அல்லது அவர்கள் சார்த்த எந்த மாநிலத்திற்கென்றோ தனிப்பட்ட கரிசனை கவனம் கவனிப்பு போன்ற பாரபட்சம் இன்றி, கொடுக்கப்பட்ட பதவியை துஷ்பிரயோக படுத்தாமல் பதவியின் கண்ணியத்தையும் மேன்மையினையும் காத்தாலே போதும்.

    இதில், இவர்கள் வகிக்கும் பதவி உள் நாட்டு சம்பத்தமட்டுமின்றி வெளி நாட்டு சம்பந்தமும் வெகுவாக கொண்டிருப்பதால், நம் நாட்டின் பாதுகாப்பும் , மானமும் மரியாதையும் காப்பாற்றும் பொறுப்பு உள்ளதை பொறுப்புடன் சிந்தையில் கொண்டு செயல் படவேண்டும்.

    மாநில அமைச்சராக இருந்தாலோ, அல்லது மத்திய அமைச்சராக இருந்தாலோ, தலைமைக்கு கட்டுப்பட்டு கை கால்களை அசைக்கவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் பொம்மைகள் தானே இவர்களெல்லோரும்.
    பதிவிட்டு அவரை நினைவுபடுத்தியமைக்கு நன்றிகள்.


    கோ

    ReplyDelete
  6. போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும் அவருக்குப் பதவி கிடைத்தாயிற்று

    ReplyDelete
  7. தமிழ் நாட்டு பெண் ஒருவருக்கு இவ்வளவு பெரிய பதவி கிடைத்தற்கு கண்டிப்பாக வாழ்த்து தெரிவித்தாகவேண்டும். அது தான் பண்பு. நம் பண்பை காற்றில் பறக்க விடலாமா?

    "பாரதீயன்"

    ReplyDelete
  8. வாழ்த்துதற்க்கு ஒன்றும் இல்ல...கடலில் தமிழளை காப்பாற்றுவரா பார்க்கலாம்...

    ReplyDelete
  9. மற்ற மாநிலங்களில் இருந்து டெல்லிக்குச் செல்பவர்கள் கடைசி வரைக்கும் அந்த மாநில நலனுக்கு மட்டுமே செயல்பாடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு எந்தப் பதவிக்குச் சென்றாலும் திடீரென்று இந்தியராக மாறிவிடுகின்றார்கள். இதனால் தான் பாராளுமன்ற உறுப்பினர் குறித்து இங்கு எவரும் கண்டுகொள்வதே இல்லை. அவர்களும் கிடைத்தவரைக்கும் லாபம் என்று கிடைத்த சுகத்தை அனுபவித்து விட்டு பதவியில் இருந்து வெளியே வந்து அனாதையாகிவிடுகின்றார்கள். சிலருக்கு மட்டும் தொடர்ந்து அதை தக்கவைத்துக் கொள்ளும் லாபி அரசியல் கைகூடி வருகின்றது.

    ReplyDelete
  10. do not worry ...all peoples admir her

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.