Thursday, September 28, 2017

கமல்ஹாசனின் அரசியல் பிரவேசமும் பாஜகவின் தந்திரமும்

@avargal Unmaigal
@avargalunmaigal


கமலுக்கு முதல்வாரகும் ஆசை வந்துவிட்டது என்று சொல்லி சொல்லியே அவருக்கு ஒரு ஆசையை தூண்டிவிட்டு  இருக்கிறார்கள். அவருக்கே நன்றாக தெரியும் தம்மால்  முதல்வராக மட்டுமல்ல விஜயகாந்து போல ஒரு கட்சிதலைவராக கூட ஆக முடியாது என்று.

அதுமட்டுமல்ல கமல் அரசியலுக்கு வர ஆசைப்பட்டு அவர் வரவில்லை... ஆனால் அவரை அரசியலுக்கு இழுத்து வந்து இருக்கிறது பாஜக என்றுதான் சொல்ல வேண்டும். பாஜக என்னதான் தலைகிழ் தொங்கினாலும் தமிழகத்தில் அதற்கு துளி கூட இடம் இல்லை என்று பாஜக தலைமைக்கு மட்டுமல்ல  படிக்காத பாமரனுக்கு கூட நன்றாக தெரியும்  (ஆனால் தமிழக தேச பக்தாஸ்களுக்கு மட்டும் இது புரியவே புரியாது....என்னா அவர்கள் படித்த தேசபக்தாஸ்க்கள்)

அதனால் கமலை ஒரு கட்சி ஆரம்பிக்கவைத்து அதற்கு பின்புலமாக இருந்து செயலபடுவதுதான் பாஜக தலைமையின் எண்ணம்..இப்படி அவர்கள் செயல்பட காரணம் இந்துத்துவா பெயரை சொல்லி தமிழகத்தில் ஒன்றும் புடுங்க முடியாது என்று அவர்களுக்கு நன்றாக புரிந்ததுதான் அதனால் அவர்களுக்கு திராவிடம் என்ற போர்வை போத்திகொண்டுவந்தால் மக்களை கவர்ந்துவிடலாம் என்று நினைத்து அதற்கு தகுந்த ஆள் யார் என்று தேடிய போது அவர்களுக்கு கிடைத்தவர்தான் இந்த கமலஹாசன்


சரி இப்படி இறக்கிவிட்டாலும் கமலஹாசன் முதல்வாராக மாட்டார் என்று பாஜக தலைமைக்கு நன்றாக தெரியும். அப்படி இருந்தும் இவர்கள் இப்படி செயல்பட காரணம் ஒருவேளை எங்கே திமுக தலைமையில் ஸ்டாலின் முதல்வாராகிவிடுவரோ என்று சிறு அச்சம் இருக்கிறது அவர்களுக்கு..


ஆனால் இப்போது தமிழகத்தில் இருக்கும் சூழ்நிலையை பார்க்கும் போது ஒரு வேளை தேர்தல் வந்தால் திமுக மற்ற கட்சிகளைவிட  அதிக இடங்களை பிடிக்க வாய்ய்பு இருந்தாலும் அவர்களால் ஆட்சி அமைக்கும் அளவிற்கு புல் மெஜாரிட்டி கிடைக்குமா என்பது சிறிது சந்தேகமாகவே இருக்கிறது இப்படி இருக்கும் சூழ்நிலையில் அதிமுக தலைவர்களை வளைத்து போட்ட பாஜவிற்கு அந்த கட்சி தொண்டர்களை கவர்ந்து இழுக்க முடியவில்லை. மேலும் அதிமுக உண்மையான தொண்டர்களில் ஒரு பகுதியினருக்கு இப்போது இருக்கும் தலைவர்களான எடப்பாடி  மட்டும் பன்னீரின் செயல்பாடுகள் சுத்தமாக பிடிக்கவில்லை. ஒருவேளை இந்த உறுப்பினர்களின் வோட்டுக்களும் ஜெயலலிதாவிற்கு வாக்குஅளித்த நடுநிலை மக்களும் எங்கே சற்று திரும்பி திமுகவிற்கு வாக்கு அளித்துவிட்டால் வருங்காலத்தில் திமுக கொஞ்சம் வலுவானதாக மாறிவிடும் அப்படி நடந்தால் பாஜக கனவில் கூட தமிழகத்தில் காலை ஊன்ற முடியாது. அதனால்தான் கமலை போன்ற ஆட்களை இறக்கி அந்த வோட்டுக்கள் திமுக பக்கம் போகவிடாமல் தடுக்கும் முயற்சியில்தான் இறங்கி இருக்கிறது ..

தமிழகத்தில் தேர்தல் வந்தால் அதிமுக பாஜக பாமக தேமுதிக போன்றவைகள் ஒரு கூட்டணியிலும் மற்றவை திமுக கூட்டணியிலு வரலாம்  ஒருவேளை பாஜக கூட்டணி புல் மெஜாரிட்டி இல்லாமல சற்று அதிகம் சீட்டுகளை வென்றால் அப்படி நிச்சயம் நடக்க வாய்ப்பு இல்லை ஒரு வேளை அப்படி நடந்தால் குதிரை பேரம் மூலம் திமுக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை பிடிக்கலாம் அல்லது திமுக அதிக இடங்களை பிடித்து ஆட்சி அமைக்க கொஞ்ச இடங்கள் தேவை என்றால் ஒரு வேளை கமல் ஆரம்பித்த பாஜக 2 கட்சி சில இடங்களில் வந்தால் அந்த சீட்டை வெளியில் இருந்து ஆதரவு தருவதன் மூலம் ஆட்சி அமைக்க பாஜக நிச்சயம் உதவும் அதற்கு கமல் மூலம் நிபந்தனைகளை விதிக்கலாம்...


அன்புடன்
மதுரைத்தமிழன்

கொசுறு: நான் அரசியலுக்கு வந்த பின் சினிமாவில் நடிக்க மாட்டேன்-கமல்

மிஸ்டர் கமல் இப்ப நீங்க எத்தனை படங்களில் நடித்து கொண்டிருக்கிறீர்கள் என்ற உண்மையை கொஞ்சம் உரக்கத்தான் சொல்லுங்களேன்



என் கட்சிக்கு வேண்டிய நிதியை மக்களிடம் இருந்து திரட்டுவேன்-கமல்

திரட்டுவீங்களா அல்லது திருடுவீங்களா மிஸ்டர் கமல்

தேவைப்பட்டால் பாஜகவுடன் இணைந்து செயல்படுவேன்-கமல்

வாங்கின காசுக்கு நல்லாவே குரைக்கிறீங்க மிஸ்டர் கமல்

14 comments:

  1. மக்கள் தெளிவாக இருந்தால் இப்படி அவனவன் திட்டம் தீட்ட முடியுமா ?
    த.ம.1

    ReplyDelete
  2. நம்பர் ஒன்னாக வருவார்ன்னு நினைச்சேன் ,தேவைப்பட்டால் பிஜேபி இணைந்து செயல்படுவேன் என்று சொன்னதால் பத்தோடு ஒன்னாக மாறிவிட்டார் :)

    ReplyDelete
  3. See you can not write anything without blaming MODI. Whether Bakthas get moksha or not you will, if you don't understand the logic , research jaya vijayan stories in bhagavatham.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு மோடியை குறை சொல்ல வேண்டும் என்று எந்த அவசியமும் இல்ல ஆனால் மோடி குறை சொல்லுகிறபடி நடக்கும் போது அதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை அவ்வளவுதான்மேலும் மோடி இப்ப ஆளும் பொறுப்பில் இருப்பதால் அவரின் செயல்களை விமர்சிப்பது தவ்று இல்லையே..

      Delete
  4. ச்டினிமா விசிறிகள் அரசியல் கொள்கைகளுக்கும் துணை நிற்பார்கள் என்று நம்புகிறாரோ

    ReplyDelete
  5. எப்படி வேண்டுமானாலும் யுகம் செய்யலாம். தி.மு.க. வலுவான காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது. அதுவும் காமராஜ் போன்ற பெரிய அரசியல் தலைவர்கள் தோற்றுவிடுவார் என்று நினைத்து இருக்க மாட்டார்கள். வியூகம் அமைப்பது அரசியல் கட்சிகளின் கடமை. ஆனாலும் ஜெயலலிதா மறைவுக்கு பின் மக்களின் எண்ணம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. சிலர் முடியாது என்று சொன்னது முடியும் முடியும் என்பது முடியாமல் போகும். படித்த இளைஞர்கள், சிந்திக்க தெரிந்த தமிழக மக்கள். அரசியல்வாதிகளின் நாடகம். முடிவு எதுவாக இருந்தாலும் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. தமிழகத்தின் தலையெழுத்து மாறட்டும்.

      Delete
  6. வைட் ஆங்கிள் சிந்தனை! ஆனால் ஒன்று. அரசியல் ரொம்ப 'சீப்பா'கி விட்டது!

    ReplyDelete
  7. உங்க அலசல் விரிவு...ஆனா பாருங்க கமல் மாதிரி ஊர்ல உள்ளவரெல்லாம் அரசியலுக்கு வர அளவுக்கு அரசியல் ரொம்பவே அசிங்கமாயிருச்சு...நடப்பது எதுவும் சரியாகப்படலை. அதுதான் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் சோதனை...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அரசியலுக்கு யாரும் வரலாம் அதில் தப்பே இல்லை ஆனால் வந்தால் இந்த சமுகத்திற்கு என்ன நல்லது செய்யப் போகிறோம் என்பதுதான் முக்கியம்

      Delete
  8. தமிழ் நாட்டில் துளிர்க்க முடியாது; ஜெயிக்க முடியாது என்று தினசரி பாராயணம் மாதிரி எழுதுகிறவர்கள் எல்லோரும், எது நடந்தாலும் அது 'பா.ஜ.க வின் அரசியல் தந்திரம்' என்று சந்தேகப்பட வைத்திருப்பதுதான் பா.ஜ.க வின் வளர்ச்சியின் அறிகுறி. :-)

    ReplyDelete
    Replies
    1. நண்பரே பாஜகவின் வளர்ச்சி என்பது கேன்ஸரின் வளர்ச்சி போன்றது அதை நினைத்து நாம் பெருமை கொள்ளலாகாது

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.