கமலஹாசன் அரசியலுக்கு வருவதை அவர் ரசிகர்கள் வரவேற்கவில்லை ஏன்?
சமுக இணைய தளங்களில் நாம் பரவலாக பார்ப்பது கமலஹாசன் அரசியலுக்கு வருவதை அவர் ரசிகர்கள் அவ்வளவாக வரவேற்கவில்லை என்பதைத்தான் அதை ஏன் என்று பார்த்தால்..
அவரின் ரசிகர்களில் பாதிக்கும் மேலனாவர்கள்அநேகமானோர் பிராமணர்களாக இருக்கிறார்கள். அந்த பிராமணர்களில் பாதிக்கு பாதி ஐயர் மற்றும் ஐயங்காரர்களாக இருக்கிறார்கள் இந்த இரண்டு பிரிவினர்களில் ஐயங்கார் தாங்கள் உசத்தி என்றும், இல்லை இல்லை தாங்கள்தான் உசத்தி என்று ஐயரும் சொல்லி சண்டை இட்டுக் கொள்வார்கள். அப்படி இருக்கையில் ஐயங்காரான கமலஹாசனுக்கு ஐயர்கள் ஆதரவு தரவிரும்பவில்லை. அப்படியானல் ஐயங்காரர்கள் வரிந்து கட்டிக் கொண்டு கமலஹாசனுக்கு ஆதரவு தருவார்கள் என்று பார்த்தால் அவர்களும் தரவில்லை அதற்கான காரணத்தை பார்த்தால் பகவான் பெயரை சொல்லி பஜனை பண்ண வேண்டிய கமலஹாசன அப்படி செய்யாமல் பகுத்தறிவு பஜனை செய்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை...
சரி இவர்கள் இருவரை தவிர மற்ற ரசிகர்கள் ஏன் ஆதரவு தரவில்லை என்று பார்த்தால் அவர்களின் கண்ணுக்கு கமலஹாசன் அணிந்து இருக்கும் கருப்பு சட்டை காவி சட்டையாகவே தெரிகிறது..
சரி இந்த ரசிகர்களை விட்டுவிடலாம் ஏன் பொது மக்களிடம் அதிக ஆதரவு இல்லையென்று பார்த்தால் தமிழர்களிடையே தற்போது காணப்படும் ஒரு பொதுக் குணம்தான் காரணமாக தெரிகிறது.. அந்த பொதுக்குணம் என்னவென்று பார்த்தால் தமிழகத்தில் யாரவது ஒரு கட்சி ஆரம்பித்தால் அல்லது தலைவராக வர முயற்சித்தால் அவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்று பார்ப்பதை விட்டுவிட்டு அவர் நம் மதத்தை சார்ந்தவார அல்லது தன் சாதியை சார்ந்தவரா அல்லது தன் இயக்கத்தை அல்லது குழுவை சார்ந்தவரா என்று பார்க்கும் கேவலமான ஒரு புத்தியிருக்கிறது. அப்படிப்பட்வர் வந்தால் நாமும் குறுக்கு வழியில் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம்தான்.
ஆனால் இப்படிபட்ட புத்தி கொண்ட தமிழர்கள் பொதுவெளியில் பேசும் போது நாட்டில் ஒரு நல்ல தலைவர்களே இல்லை அப்படி ஒருவர் வந்தால் நாடு நல்லா இருக்குமே என்று பேசுவார்கள் அப்படி பேசுபவர்கள் சகாயம் போன்ற நல்லவர்களை சிலர் முன்னிருத்தும் போது தங்கள் ஆதரவை தரமாட்டார்கள் ஏனென்றால் சாகயம் போன்ற ஆட்கள் வந்தால் தவறான வழியில் சம்பாதிப்பவர்களுக்கு ஆப்பு வைத்துவிடுவார் என்று நன்றாக தெரிந்திருப்பதுதான் அதனால் அவரை போன்றவர்களை ஆதரிக்காமல் நல்லவர் வரணும் என்று பேசிக் கொண்டிருப்பார்கள்
அப்படி செய்தால் எடப்பாடி பன்னீர் செல்வம் போன்றவர்கள் நாட்டை ஆள்வார்கள் அவர்கள் தாங்கள் சம்பாதிக்க அடுத்தவன் காலை கழுவியாவது அல்லது முத்தமிட்டாவது பதவியில் வந்து தங்கள் பரம்பரை நன்றாக இருக்க சொத்து சேர்ப்பார்கள் இதுதான் நடக்கிறது இப்படித்தான் நடக்கும்
டாட்
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : தமிழகத்தில் கமலஹாசனுக்கு பெரிய வரவேற்பு இருப்பது போல மீடியாவால் தோற்றுவிக்கப்படுகிறதே தவிர உண்மையான வரவேற்பு இல்லையென்றுதான் சொல்ல வேண்டும் அந்த பெரிய வரவேற்பு மோடியின் இணைய தள ஆதரவு கம்பெனிகளால் உருவாக்கப்படுகிறது.. அவர்கள் தான் மோடி அலை இருப்பதாக சொல்லிய்வர்கள் அவர்கள்தான் கமலஹாசனுக்கும் அலை இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள் அவ்வளவுதான்....
நல்ல அலசல். இந்த தமிழ்நாடு இன்னும் அப்படியே இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த ஜாதி அபிமானம்தான். அதனால்தான் இந்த அரசியல்வாதிகள் பார்த்தேன் என்றும் பார்க்கவில்லை என்றும் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார்கள். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் வீரர்கள்கூட, தங்கள் ஊர், ஜாதி அரசியல்வாதிகள் வீட்டில் ரெய்டு என்றால் அதனைப் பற்றி ஒருவரிகூட எழுதுவதில்லை.
ReplyDeleteசற்றே கூர்ந்து நோக்கினால், வெளிப்படையாகச் சொல்வதானால் எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.க இப்போது கவுண்டர் குரூப், முக்குலத்தோர் குரூப் என்று பிரிந்தே இருக்கிறது. எல்லாம் அந்த சதாசிவக் கடவுளின் திருவிளையாடல்தான்.
இந்த ஜாதியை மற்றும் ஒதுக்கி வைத்துவிட்டு நாம் தலைவரை தேர்ந்தெடுத்தால் இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே சிறந்த இடமாக தமிழகம் விளங்கும் என்பது உண்மை .ஹும்ம்ம் இப்படி நினைப்பது எல்லாம வீண் கனவோ என்றுதான் தோன்றுகிறது
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
மிகத்தெளிவான அலசல் நண்பரே மறுக்க இயலாத உண்மைகள்.
ReplyDelete
Deleteமிக தெளிவு என்று சொல்ல முடியாது என் மனதில் பட்டது சிலரிடம் பேசியதால் தோன்றிய எண்ணங்களும்தான் இந்த பதிவு
ரஜினி வலையில் சிக்காததால் கமலை இழுக்கிறார்களோ மோடி குருப் ?கமல் அலை இருப்பதாக சொன்னால் வெற்றி பெற வாய்ப்புண்டுதானே ,மோடியின் வெற்றியை போல் :)
ReplyDeleteரஜினி மோடியின் வலையில்தான் இருக்கிறார் வெளியே தெரியாமல்......மோடிக்கு அலை இருப்பதாக சொன்னாலும் அவருக்கு தமிழகத்தில் தோல்வியைத்தான் தழுவினார் தமிழர்களிடம் இந்த மோடி அலை ஒன்ரும் செல்லுபடியாகது
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Correctly analyzed. Even I am a hardcore fan of Kamal, but that is only for movies. To me his political moves are just passing clouds and if he is really serious he won't shine even upto Vijayakanth level.
ReplyDeleteமிக சரியாக சொல்லி இருக்க்கீங்க.... விஜயகாந்த் லெவலுக்கு எல்லாம் கமலஹாசனை கொண்டு போக முடியாது வேண்டுமென்றால் கரகாட்டகார் ராமராஜன் அளவிற்கு சொல்லலாம்
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
இணையத்தை நம்பிலாம் அரசியல்ல இறங்கக்கூடாது. களத்துல இறங்கி முழுமூச்சாய் செந்ய்லபட்டா வெற்றி கிட்டும். அதும் இப்பவேன்னா அதும் கஷ்டம்.
ReplyDelete
Deleteஅடிமட்ட மக்களை அதுவும் கிராமப்புற மக்களை யார் கவர்ந்து இழுக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் இந்த இணையம் எல்லாம் வெற்று அலப்பறைதான்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
த+ம=4
ReplyDeleteநல்லாருக்கு மதுரை சகோ! ஆனா கமலுக்கு நீங்க சொல்லியிருக்கற சாதி வாரியா சப்போர்ட்டோ இல்லை எதிர்ப்போ இருக்கற மாதிரித் தெரியலையே...அவங்க யாரும் அவரைக் கண்டுக்கறதாகத் தெரியலையே...என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரை நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் இரு வகையினருமே இருப்பதாகத் தெரியவில்லை...முதலில் கமலுக்கு அத்தனை சப்போர்ட் இருக்கானு தெரியலை...அப்படியே சப்போர்ட் என்றால் திரையுலகம் அவரது சினிமா ரசிகர்கள் சங்கம் எல்லாம் கூட ஆரம்பித்தாரே அப்படியான க்ரூப்களிலிருந்து இருக்கலாமே அல்லாமல் இரு வகையினருமே கண்டு கொள்வதாகத் தெரியவில்லை...
ReplyDeleteகீதா
//நீங்கள் இங்கு சொல்லி இருக்கும் இருவகையினரும் இருப்பதாக தெரியவில்லை//
Deleteஎனது பிராமின் நண்பர்களிடம் பேசிய போது இருவகையினர் இன்னும் இருப்பதாக சொல்லுகிறார்கள். நான் பொதுவாக பிராமின் என்றுதான் கருத்து சொல்ல நினைத்தேன் அவர்கலிடம் பேசிய போதுதான் அவர்கள்தான் இந்த இருவகையினரை சுட்டிக்காட்டினர்,
கமலுக்கு இப்பொது இருப்பது ஆதரவு அல்ல ஆதரவு இருப்பதாக காட்டி கொள்ளும் விளம்பரம்மட்டும்தான்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
முழு நிலவாக வளர வாழ்த்து.! மூன்றாம்
ReplyDeleteபி(ழை)றை முடிவு ஆகி விடக் கூடாது.
வளர வாய்ப்பே இல்லே
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
இப்போதெல்லாம் சினிமாக் காரர்கள் மீது நம்பிக்கை போய் விட்டது அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மைதான்.
Deleteகூலியை அதிகமாக கருப்பு பணத்தில் வாங்கி கொண்டு சமுகம் சீர்திருத்தம் பற்றி பேசினால் இவர்களை நம்புவது யார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
jaathi..matham panam are the only requirement to enter politic
Deleteஅன்புமணி செயல்பாடு சிறப்பாகவும் ஆக்கபூர்மாகவும் இருக்கிறது ,எதிர்க்கட்சிகளின் +ஆளும் கட்சிகளின் குறைகளை தெளிவாகவும் மக்களுக்கு புரியும் படியும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்திக்கொண்டு இருக்கிறாறே
ReplyDelete65 தொகுதிகளின் திமுக+ஆதிமுக கட்சிகளின் வெற்றி பதம் பார்த்தது பா.ம.க தான் எனவே இவர்களை வீழ்த்துக்கிற வளிமை பா.ம.க வுக்கு தான் உள்ளது