குழந்தைகளிடம் இருந்து பெரியவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்
இந்த கால குழந்தைகள் செல்போனும் கையுமாக இருந்தாலும் வாழ்க்கையை அவர்கள் நுணுக்கமாக பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அது தெரியாமல் நாம்தான் அவர்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அறிவுரை அறிவுரை என்று கிளி பிள்ளை போல நமக்கு தெரிந்த அனுபவத்தை கொண்டு அறிவுரைகளை அள்ளித் தெளித்து கொண்டிருக்கிறோம்.....
ஆனால் உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் நம் பார்வையோடு ஒப்பிட்டு பார்க்கும் போது அவர்களின் பார்வைகள் மிகவும் தீர்க்க மாகவே இருக்கிறது. இதை சொல்ல காரணம் நான் என் குழந்தையிடம் இருந்து கற்றுக் கொண்டது அனுபவம்தான்...
சில தினங்களுக்கு முன் என் மகளும் மனைவியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர். நான் வழக்கம் போல பதிவு எழுதி கொண்டிருந்தேன். அந்த வாக்குவாதத்தில் நான் தலையிட்டால் என் தலைக்கு பலத்த சேதாரம் வந்துவிடும் என்பதால் அதை காது கொடுத்து கூட கேட்காமல் கடமையே கண்ணாக பதிவு எழுதி கொண்டிருந்தேன்
ஒரு வழியாக வாக்குவாதம் முடிந்த சிறிது நேரத்திற்கு பின் என்னிடம் வந்த என் குழந்தையிடம் என்ன நடந்தது என்று நான் கேட்கவில்லை ஆனால் அவளாக சொன்ன வார்த்தைகள் இதுதான் டாடி அம்மாவிற்கு Disagree க்கும்Disrespect க்க்கும் வித்தியாசம் தெரியலை டாடி
அம்மாவின் கருத்துகளுடன் என் கருத்துக்கள் ஒற்றுப் போகவில்லை அது முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது அதை நான் சொன்னால் அதை புரிந்து கொள்ளாமல் நான் அவர்களை மதிக்கவில்லை என்று நினைத்து கொள்கிறார்கள் என்று சொன்னாள்..
Disagree க்கும் Disrespect க்கும் வித்தியாசம் என்ற வரிகள் என் மனதில் பதிந்தது கொஞ்சம் அது பற்றி யோசித்து பார்க்கும் போது நாம் இணையதளங்களில் ஏதாவது ஒரு விஷயம் பற்றி விவாதிக்கும் போது அவர்கள் கருத்துகளுக்கு மாற்று கருத்து சொல்லும் போது அதை அவர்கள் மிகவும் பெர்ஷனலாக எடுத்து கொண்டு தங்களுக்கு ரெஸ்பெக்ட் தரவில்லை என்று கோபத்துடன் நட்பை முறித்து கொள்கிறார்கள் அது போலத்தான் நம் தலைவர்களின் கருத்துகளுக்கு எதிரான கருத்து சொன்னாலும் அதை டிஸ்ரெஸ்பெக்டாகவே எடுத்து கொள்கிறார்கள் தலைவர்களைப் போலவே தொண்டர்களும் இருக்கிறார்கள்.
உதாரணமாக அனிதா இறப்பு சம்பந்தமாக இருக்கட்டும் ,மோடியின் டிமானிசேசன் திட்டமாக இருக்கட்டும், இது போல வேறு எந்த விஷயமாக இருக்கட்டும். அதைபற்றி மாற்று கருத்து சொன்னால் அந்த கருத்தில் உள்ள விஷயத்தை பார்க்காமல் , கருத்து சொல்பவர்கள்தங்களை மதிக்கவில்லை என்று கருதி கருத்து சொன்னவர்களை எதிரிகளாக பாவிக்க தொடங்குகிறார்கள்,
அப்படி செய்பவர்கள் Disagree க்கும்Disrespect கும் உள்ள உண்மையான அர்தத்தை புரிந்து கொண்டால் பிரச்சனைகளே இல்லைதானே
இதை மட்டும் கடந்த வாரத்தில் நான் என் குழந்தையிடம் கற்று கொள்ளவில்லை வேறு ஒரு விஷயத்தையும் கற்றுக் கொண்டேன்.
கடந்த வாரத்தில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாநிலத்தில் ஹார்வி என்ற புயலின் காரணமாக மழை அதிகம் பெய்ந்து ஊரே வெள்ளக்காடாக ஆகியது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது... இங்கு வீடுகள் நதிகளை அழித்து அதன் மேல் வீடுகள் சென்னையை போல கட்டப்படவில்லை... அதுமட்டுமல்லாமல் நீர் வடிகால்கள் பகுதிகளில் குப்பைகள் தண்ணீர் போகாமல் தடுக்கப்படவில்லை ஆனால் மிக அதிகப் மழை பொழிவின் காரணமாக வீடுகள் தண்ணிரால் மூழ்கியதும் அல்லாமல் 6 லைன் கொண்ட பிஸியான ஹைவே ரோடு ஒரு நதி போல காட்சி அளித்தது. முப்பாதியிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு ஷெல்டர்களில் தங்க வைக்கப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் அருகாமையில் உள்ள் நகரங்களுக்கு சென்றனர் இருந்த போதிலும் ஷெல்டர்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருந்தது. அதை டிவியில் பார்த்து கொண்டு இருந்த போது கண்களில் கண்ணீர் வந்தது.
அதை பார்த்த என் பெண் சொன்னது டாடி இதை பார்க்க கஷ்டமாகத்தான் இருக்கிறது ஆனால் அதற்காக கவலைப்படாதிர்கள் இந்த மாதிரி நிகழ்வுகளால் கஷ்டம் வந்தாலும் மக்கள் அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள அதனால் நாம் கவலைப்பட வேண்டாம் என்று சொன்னாள். நான் உடனே என்ன மாதிரியான பாடங்களை அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள் என்று கேட்ட போது அவள் சொன்னது. டாடி இங்கு பல மதத்தை சார்ந்தவர்கள் அது மட்டுமல்லாமல் பல இனத்தவர்கள் மற்றும் தேசத்தை சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள் இப்போது அவர்களை பாருங்கள் ஒருவொருக்கொருவர் உதவி கொண்டு எல்லோரும் ஒரே கூரையின் கீழ் அமர்ந்து பேசி மகிழ்ந்து ஒருவரை ஒருவர் மதம் இனம் தேசம் கடந்து புரிந்து கொள்கிறார்கள் இந்த மாதிரி வரும் கஷ்டங்கள்தான் வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாக இருக்க உதவுகிறது என்றாள்,
வாவ் எந்த மாதிரியான எண்ணம் அவளுக்குள் இருக்கிறது என்று வியந்துதான் போனேன்
வளர்ந்த பெரியவர்களாகிய நாம் பார்க்கும் பார்வை வேறுமாதியாக இருக்க எப்போதும் செல்போனுடன் விளையாடி பொறுப்பேதும் இல்லாது மாதிரி இருக்கும் நம் குழந்தைகள் எப்படி இவ்வளவு அழகாக சிந்திக்கிறார்கள் என்று நினைக்கும் போது இந்த கால குழந்தைகளை எண்ணி பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை,
என் குழந்தைக்கு இப்போது 15 வயதுதான் ஆகிறது அவளின் ஸ்மார்ட்தனம் எனக்கு உண்மையிலே ஒருவித பெருமையை தருகிறது.
அன்புடன்
மதுரைத்தமிழன்
இதுபோன்ற நிகழ்வுகளிலிருந்து அவர்கள் பாடம் கற்கிறார்கள்...இந்த சொற்றொடரைக் கூறிய குழந்தையைக் கண்டு வியந்தேன். உண்மையில் நீங்கள் சொல்வது சரிதான். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. பாராட்டுகள்.
ReplyDeleteஉங்கள் கருத்துக்கள் பாராட்டுக்கு உரியது. குழந்தைகளின் ஆக்க பூர்வமான எந்த முயற்சிக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கவேண்டும் அவர்களுக்கு. நன்றி.
Deleteம.கி..சுப்ரமணியன்
Asst. Registrar (Retd.),Anna University, Chennai.
இந்த மாதிரியான வார்த்தைலாம்கூட இருக்கா?!
ReplyDeleteஆஹா..... ஸூப்பர். நானும் பாடம் படித்துக் கொள்கிறேன். தகப்பன் சாமிகள்.
ReplyDeleteநிஜமாகவே ஸ்ரீராம் தகப்பன் சாமிகள் தாம் குழந்தைகள்!!!
Deleteகீதா
I truly respect your daughter's views and I totally agree with her .
ReplyDeleteBest wishes to her.
ko
நானும் ஒரு பதிவு எழுதி இருந்தேன் தகப்பன் சாமி அல்ல தாத்தா சாமி என்று அது எழுதுவதைப் பற்றியது பேரனிடமிருந்து கற்றது
ReplyDeleteமதுரை உங்கள் குழந்தைக்கு எங்கள் இருவரின் மனமார்ந்த வாழ்த்துகள்! வெரி மெச்சூர்!! ரொம்ப அறிவாளியாகவும் இருக்கிறார். நுணுக்கமாகத் தெரிந்து வைத்திருக்கிறார். MAY GOD BLESS HER!
ReplyDeleteகீதா: ஆம் நாம் நம் குழந்தைகளிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கிறோம். அவர்கள் இன்னும் மெச்சூராகவே கையாள்கிறார்கள் என்று சொல்லலாம். குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ளதிலிருந்தும், நிகழ்வுகளிலிருந்தும் கற்றுக் கொள்கிறார்கள் ஆராய்ந்து யோசிக்கிறார்கள்...சிந்தனைகளை வளர்த்தும் கொள்கிறார்கள்.
நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் முதல் வார்த்தைகள் எனக்கு என் மகனுக்கும் எனக்கும் நடந்த பழைய உரையாடலை நினைவுபடுத்தியது. என் மகன் அப்பொது மிகவும் சிறியவன். 3 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஏதோ அறிவுரை சொல்லிய போது... அப்போது அவன் "அம்மா உனக்கு என்னைப் பிடிக்கலையா?" என்றான்...அப்போது நான் சொன்னது இதுதான்..நீ செய்தது.தான் சரியில்லை..உன்னைப் பிடிப்பதால்தானே உன்னை சரி செய்ய இதைச் சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தையும், இதே சொற்களையும் சொல்லிப் புரியய் வைத்தேன்...ஒருவரது கருத்தை நாம் திருத்தவோ அல்லது எதிர்கருத்தாக நாம் சொல்வதையீ பெர்சனலாக எடுத்துக் கொள்லக் கூடாதுஎன்று...நீங்கள் சொல்லியிருப்பது போல் பெர்சனலாகத்தான் எடுத்துக் கொள்கிறார்கள் அதனால் தான் இந்த அடிதடி எல்லாம்..சண்டை எல்லம் அநாவசியாமான விவாதங்கள் காழ்ப்புணர்ச்சி எல்லாம்..
அது போல் மகன் மூன்று வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் போது அவன் அப்பா அவனிடம் சுவர்க்கடிகாரத்தைக் காட்டி இது என்ன என்றார்? அவன் பதில் சொல்ல யோசித்துக் கொண்டிருந்தான்...அப்போது அவன் நல்ல அறிவுடையவன் ஆனால் அவனது அறிவுத் திறனின் ஸ்லோனெஸ் எனக்குப் பிடிபடவில்லை....அவனது அப்பா சொன்னார் "வாட்ச்" என்று. உடனே அவன் தன் கையின் மணிக்கட்டைக் காட்டி வாட்ச் என்றான். சுவர்க்கடிகாரத்தைக் காட்டி க்ளாக் என்றான். பேச்சு முழுவதும் வரவில்லை அப்போது அவனுக்கு. இப்படி நிறைய வார்த்தைகளின் பயன்பாட்டில் அவனது திறமை எனக்குத் தெரியத் தொடங்கியது. வளர்ந்து வரும் போது நாம் பேசும் போது நிறைய சுட்டிக் காட்டுவன். BOSS, LEADER இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்...அவன் அப்பா சொல்லுவார் எங்க டீம் பாஸ் என்று உடன் அவன் கேட்பான் பாஸா லீடரா? என்று விளக்கமும் அளித்தான்.
இப்படி ஒவ்வொரு குழந்தையும் மிக மிக அறிவாளி! அவர்களிடமிருந்து நாம் நிறைய கற்கிறோம்...கற்றல் என்பதற்கும் படிப்பதற்கும் உள்ள வித்தியாசம்...இதுதான்...உங்கள் மகள் மிக மிக அறிவாளி மெச்சூர்...நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்..கற்றிருக்கிறார்...கற்கிறார்..கற்றுக் கொள்வார்...(இங்கு நான் படித்தலைச்சொல்லவில்லை!!!) நம்மூர் பல குழந்தைகள் மார்க் நன்றாக வாங்குகிறார்கள் நன்றாகப் படிக்கிறார்கள் என்று சொல்லுவோம்...ஆனால் நன்றாகக் கற்கிறார்களா?!! ஏனென்றால் இந்தக் கற்றல்தான் வாழ்க்கை முழுவதும் வர வேண்டும்!! எல்லாக் குழந்தைகளுமே அறிவாளிகள் தான் அவர்கள் கற்றல் திறனைத்தான் வளர்க்க வேண்டும் நாம்...
நல்ல பதிவு சகோ...மிகவும் ரசித்தேன்...நானும் நிறையக் கற்றுக் கொண்டிருக்கின்றேன் மகனிடமிருந்துமட்டுமல்ல...பல குழந்தைகளிடமிருந்தும்...!!!!
இன்றைய இளைய தலைமுறையினர் நம்மை விட பல மடங்கு புத்திசாலிகள்,திறமையானவர்கள்.அவர்களுக்கு அறிவுரைகள் தேவைகள் இல்லை.ஆலோசனைகள் மட்டும் போதும்.உங்கள் பெண்ணுக்கு வாழ்த்துகள்
ReplyDelete